PDA

View Full Version : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...மதி
18-11-2007, 07:18 AM
சில விஷயங்கள் சில வேளைகளில் நமக்கு பல நினைவுகளை கிளறும். அதே தான் இன்றும் நடந்தது... டி.வி.யில் இன்று "League of Extra-Ordinary Gentlemen" படம் போட்டார்கள். பார்க்கையில் இதை எங்கே முதன்முதலில் பார்த்தேன் என்று நினைவு சுழன்றது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்....

உங்களுக்கு முன்னால் ஒரு சக்கரமோ இல்லை ஒரு கொசுவர்த்தி சுருளோ சுத்துவதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். சும்மா கொஞ்ச நேரத்துக்கு தான்.
அந்த படத்தை முதன்முதலில் பார்த்தது மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில். இப்போ சொல்லவந்தது படத்தை பத்தி இல்லை.. கோச்சுக்காதீங்க.

கல்லூரி முடித்தவுடன் வேலை கிடைத்தது மதுரையில் தான். ட்ரெயினியாக இருந்தேன். அதே கல்லூரி போன்ற வாழ்க்கை. செலவழிக்க கொஞ்சம் பணம். வீட்டிலிருந்து முதல் முறையாக வெளியுலக வாசம். எந்நேரமும் வேலையிலிருந்து தூக்கியெறியப் படக்கூடிய அபாயம். இப்படி பல விஷயங்களும் அந்த 6 மாத கால மதுரை வாழ்க்கை எங்களை அரற்றியிருந்தது. நெருக்கடி என்றால் என்ன என்று முதன் முறையாக அங்கு தான் கண்டோம். எப்போது யாரை கூப்பிட்டு வெளியே அனுப்புவார்கள் என்று தெரியாது. அந்த பயத்துடனே வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. இப்போ அதைப் பத்தியும் சொல்லப் போறதில்லை.. அடிக்க வராதீங்க... சொல்றேன்.

இந்த வாழ்க்கையில் எங்கள் வசந்தம்னு சொன்னால் தியேட்டர்கள் தான். மதுரை ஊர் முழுக்க தியேட்டர்கள். அதுக்குன்னே பேர் பெற்ற ஊர். எங்க பொழுதுபோக்கே படம் பாக்கறது தான். ராத்திரி பத்து மணி வரைக்கும் ஆபிஸிலே இருப்போம். எவனாவது கிளப்பிவிடுவான். பத்தேகாலுக்கு ஏதாவது ஒரு தியேட்டர்ல இருப்போம். அப்படி தான் ஒருநாள் ஏதோ ஒரு புதுப்படம் வெளியாகி இருந்தது. அந்தவாரம் தேர்வு இருந்ததால யாருக்கும் படம் போகணும்னு எண்ணம் இல்லை. எல்லோரும் சாப்பிடாம கூட வேலை பாத்துகிட்டு இருந்தோம். அதுல ஒருத்தன் ரொம்ப நொந்து போய் 'டேய் எல்லோரும் வாங்கடா..படத்துக்கு போலாம். என்ன படிச்சாலும் நடக்கறது தான் நடக்கும்னு' கிளப்பிவிட்டுட்டான். முதல்ல யாரும் கிளம்பல. வாழ்க்கைய பத்தின பயம் தான். கடைசியா அஞ்சு பேர் மட்டும் கிளம்பினோம். அந்த அளவு விரக்தி. சாப்பிட கூட இல்லை. தியேட்டர் போய் அவசர அவசரமா டிக்கெட் எடுத்தாச்சு. இன்னும் 10 நிமிஷத்துல படம் போட்டுடுவான். பசி வயித்தை கிள்ள ஆரம்பிச்சுது. அந்த ஏரியால சுத்தமா கடைகளே இல்ல. கொஞ்சம் நடந்தா ஒரு பொட்டிக் கடை இருந்துச்சு. அங்க ஒரு பாட்டி இருந்தாங்க. லாந்தர் விளக்கு மட்டும் தான்.

சின்ன வயசில பார்த்திருந்த ஐட்டங்களான கமட்கட்டு, கடலமிட்டாய், வத்தல், இலந்தவடை, தேன்குழல்..இத்யாதி இத்யாதின்னு ஏகப்பட்டது இருந்தது. இதெல்லாம் இன்னுமா இருக்கு நம்ப முடியல. பசிக்கு எல்லோரும் பாக்கெட் எடுத்து காலி பண்ண ஆரம்பிச்சுட்டோம். ரொம்ப வருஷம் கழிச்சு இப்படி சாப்பிட்டது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது. ஒரு வழியா எல்லோரும் அவசர அவசரமா சாப்பிட்டு வயித்தை நல்லா ரொப்பிகிட்டு அந்த பாட்டிகிட்ட தண்ணி வாங்கி குடிச்சிட்டு எவ்ளோன்னு கேட்டோம். அப்படியே ஷாக்காயிட்டோம்.
மூணு நாலு அயிட்டம் அஞ்சு காசு, பத்து காசுனு விலை சொன்னாங்க. அஞ்சு காசுக்கும் பத்து காசுக்கும் உண்மையிலேயே அந்த இடத்தில் தான் மதிப்பைக் கண்டோம். மொத்தமா நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து வயிறு நிறைய சாப்பிட்டிருந்தது 12 ரூபாயோ என்னவோ. மொத்தமா 20 ரூபா குடுத்துட்டு கிளம்பினோம்.

இன்னிக்கு பெங்களூரில் என்ன வாங்கினாலும் அஞ்சு ரூபாய் பத்து ரூபாய்க்கே மதிப்பில்லை. இதுல அஞ்சு காசை எங்க போய் தேடுறது. அதுலேயும் அந்த கமர்கட், தேன்குழல்..ம்ஹூம்.. எங்கியாவது கிடைக்கும்னு தோணல. என்ன தான் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட்டாலும் அன்னிக்கு கிடைச்ச திருப்தி கிடைக்கறதில்லை.. ஏதோ இன்னிக்கு ஞாபகம் வந்தது.. அதான் சொன்னேன்..வர்ட்டா..:icon_b:

leomohan
18-11-2007, 07:42 AM
மலரும் நினைவுகள் அருமை மதி.

அந்த தேன் மிட்டாய் ஹா ஹா. சூப்பரா இருக்கும்.

அதைவிட இந்த மாங்காய் துண்டுகளை அழகாக நறுக்கி மசாலா போட்டு கொடுப்பார்கள்.

சினிமாவின் நடுவில் குடும்பத்தோட சென்றால் ஒன்றும் கிடைக்காது. இது உடம்புக்கு நல்லாயில்லை அதுல தூசி என்று தட்டி கழித்துவிடுவார்கள்.

ஆனால் தனியாக போனால் கொண்டாட்டம் தான். தெருக்கோடியில் மசாலாவடை 35 காசு. சும்மா வாயில் கரைந்து போகும்.

மீண்டும் அந்த நினைவுகளை புதுப்பித்த மதிக்கு நன்றி.

பூமகள்
18-11-2007, 07:48 AM
மதி அண்ணா..!
கம்பர்கட், தேன் மிட்டாயின் சுவை இன்னும் நாவில் இனிக்குது..!
பள்ளிக் காலத்தில் இவற்றை வாங்கிச் சாப்பிட்ட அனுபவம் நிறைய இருக்கு..!
எனது பழைய ஞாபகத்தையும் கிளறி விட்டுட்டீங்களே..!

நல்ல பதிவு..! கடைசியில் அந்த தேர்வில் பாஸ் ஆனீங்களா?? இல்லையான்னு சொல்லவேயில்லையே...!!
பாராட்டுகள் மதி அண்ணா.

சிவா.ஜி
18-11-2007, 07:56 AM
அட அட அட...எப்படிப்பட்ட விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார் மதி.பெருச்ங்களைப்போல அதெல்லாம் அந்தக் காலம்ன்னு புலம்பல....உண்மையிலேயே ஒரு நல்ல வாழக்கையை நாம் வாழ்ந்திருக்கிறோம் என்ற பெருமையில் பேசுகிறேன்.
பள்ளிக்கு போகுமுன் கெஞிக் கூத்தாடி 10 பைசா வாங்கிக்கொண்டு போய் ரீஸஸில் நமக்காவே சாக்குப் பை விரித்து கடை பரப்பியிருக்கும் பாட்டிகளிடமிருந்து இலந்தைவடையும்,கமர்கெட்டும்,விளாங்காய் தொக்கும்,தேன் மிட்டாயும் வாங்கி சாப்பிடும் சுகம் இருக்கிறதே...இப்போ ஒரு BMW காரைக் கொடுத்தாலும் கிடைக்காது.
மதி சொல்வதைப்போல அஞ்சு பைசாவுக்கும்,பத்து பைசாவுக்கும் இப்போது எந்த மதிப்புமில்லை.ஆனால் இப்போதும் எங்கள் ஊரில் 50 காசுக்கு இட்லி மூணு வித சட்னியோடு கிடைக்கிறதென்று சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாகத்தானிருக்கும்.ஆனால் உண்மை.வீட்டில் காலை சிற்றுண்டி தயார்செய்ய முடியாத சூழ்நிலையில் அங்கிருந்துதான் வாங்கி வருவேன்.அம்சமாய் இருக்கும்.20 ரூபாயில் நாங்கள் நாலு பேரும் வயிறார உண்போம்.இப்போதும் இலந்தைவடைக் கிடைக்கிறது...என் மகளுக்கு அது பிடிக்காதென்றாலும் அவளுக்குக் கொடுக்கும் பாக்கெட் மணியில்(பெருசா இல்லீங்க..ரெண்டு ரூபாதான்)அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் பிடிக்குமே என்று வாங்கி வருவாள்.இதெல்லாம்தான் வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்கள்.மலரும் நினைவுகளைத் தட்டி எழுப்பிய மதிக்கு மிக்க நன்றி அருமையான பதிவு.

அன்புரசிகன்
18-11-2007, 07:56 AM
நான் திரையரங்கில் படம் பார்க்கத்தொடங்கியது 2002 ற்கு பிறகுதான். அதுக்குமுன்னர் எப்பவாவது வீட்டில் பார்ப்பதுதான்.... திரையரங்கில் பொருட்க்களின் விலை டபிள் றிபிள்...

ஆனால் கோயில் திருவிழாக்களில் நீங்கள் கூறியவற்றை நன்றாக சாப்பிட்டிருக்கிறென். முன்பெல்லாம் கோயிலுக்கு போவதே கச்சான் ஐஸ்கிறீம் பீடா முறுக்கு பஞ்சு மிட்டாய் தண்ணீர்ப்பந்தலில் மோர் சக்கரத்தண்ணி குடிக்கத்தான்... :D :D :D .

கடைசியில் பஞ்சாமிர்தம் வாங்குவதற்கும் இரண்டு கைகளையும் மாறி மாறி பாவித்திருக்கிறேன்.

மதி
18-11-2007, 08:03 AM
மதி அண்ணா..!
கம்பர்கட், தேன் மிட்டாயின் சுவை இன்னும் நாவில் இனிக்குது..!
பள்ளிக் காலத்தில் இவற்றை வாங்கிச் சாப்பிட்ட அனுபவம் நிறைய இருக்கு..!
எனது பழைய ஞாபகத்தையும் கிளறி விட்டுட்டீங்களே..!

நல்ல பதிவு..! கடைசியில் அந்த தேர்வில் பாஸ் ஆனீங்களா?? இல்லையான்னு சொல்லவேயில்லையே...!!
பாராட்டுகள் மதி அண்ணா.

நன்றி பூமகள்..
தேர்வில் பாஸாகாமலா? அந்த ஆறுமாதகாலம் ரொம்பவே வித்தியாசமான அனுபவம்.. ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்து இன்று எனக்கு நல்லதொரு அஸ்திவாரமாகவே அமைந்து விட்டது மதுரை வாழ்க்கை..

lolluvathiyar
18-11-2007, 08:11 AM
அனைவருடை மலரும் நினைவுகளை கிளரி விட்டீர்கள். அருமையாக இருந்தது. இப்ப எனக்கு பஞ்சு மிட்டாய் எங்க கிடைக்கும்னு கூட தெரியல.
தேன் மிட்டாய் சில கடைகளில் விற்கபடுகிறது. இப்பவும் அதெல்லாம் சாப்பிடனும் ஆசையா இருக்கு. என்ன பன்னரது கிடைக்கரதில்லை.

மலர்
18-11-2007, 08:41 AM
உங்களுக்கு முன்னால் ஒரு சக்கரமோ இல்லை ஒரு கொசுவர்த்தி சுருளோ சுத்துவதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். சும்மா கொஞ்ச நேரத்துக்கு தான்.
இல்லைன்னா தலைக்கு பின்னால கையை வச்சி ஒரு பிளாஷ்பேக் ஸ்டில் அடிச்சிக்கோங்க..

அந்த படத்தை முதன்முதலில் பார்த்தது மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில். இப்போ சொல்லவந்தது படத்தை பத்தி இல்லை..
கோச்சுக்காதீங்க..

இப்போ அதைப் பத்தியும் சொல்லப் போறதில்லை.. அடிக்க வராதீங்க... சொல்றேன்.

அப்படின்னா
இப்போ என்னது தான் சொல்ல வாரீங்க......???

மதி...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு உண்மையிலே எங்களையும்
பழைய ஞாபகத்துக்கு கொண்டு போயிட்டீங்க....

தேன்மிட்டாய்,பழ ஐஸ்,பஞ்சு மிட்டாய்,பம்ளிமோஸ்ன்னு நினைக்கும் போதே பள்ளிகூடத்துக்கு முன்னாடி நிக்கிற மாதிரி ஒரு எபெக்ட் இருக்கு...

யவனிகா
18-11-2007, 10:02 AM
எல்லோரையும் கடந்த காலத்திற்குள் அழைத்துச் சென்று விட்டது உங்கள் பதிப்பு. கலர் ஃபுல்லான...ருசிகரமான தேன் முட்டாய்ப் பதிப்பு.

சிவாஜி அண்ணா ...உங்க ஊரு தேவலாம்...கோயமுத்தூரில 50 காசுக்கு இட்லிய கண்ணில கூட காட்ட மாட்டாங்க....

சிவா.ஜி
18-11-2007, 10:04 AM
ஆமாம்மா..யவனிகா...கோவையில இருந்தாலும் அநியாய விலை.ஹோட்டல்ல சாப்பிடப்போனா ஏதாவது சொத்து பத்திரத்தையும் கூடவே கொண்டு போகனும்.

நேசம்
18-11-2007, 10:26 AM
மலரும் நினைவுகளை அனைவருக்கும் தூண்டி சந்தோஷத்தை கொடுத்த மதி க்கு வாழ்த்துக்கள்

ஓவியன்
18-11-2007, 10:31 AM
ஏதோ இன்னிக்கு ஞாபகம் வந்தது.. அதான் சொன்னேன்..வர்ட்டா..:icon_b:

ஆமா எதோ ஞாபகம் வந்ததுனு சொல்லி எங்கள் ஞாபகத்தையும் கிளறிவிட்டுட்டு இப்படி ஓடிப் போவது உங்களுக்கே நியாயமா இருக்கா மதி..? :)

அன்புரசிகன்
18-11-2007, 10:39 AM
ஆமா எதோ ஞாபகம் வந்ததுனு சொல்லி எங்கள் ஞாபகத்தையும் கிளறிவிட்டுட்டு இப்படி ஓடிப் போவது உங்களுக்கே நியாயமா இருக்கா மதி..? :)

இல்லத்தான். என்ன பண்ண???

பூமகள்
18-11-2007, 11:06 AM
ஆமா எதோ ஞாபகம் வந்ததுனு சொல்லி எங்கள் ஞாபகத்தையும் கிளறிவிட்டுட்டு இப்படி ஓடிப் போவது உங்களுக்கே நியாயமா இருக்கா மதி..? :)
ஏங்க மதி அண்ணா....!! :icon_ush::icon_ush:

இது உங்களுக்கே நியாயமா?? :confused::confused::fragend005::icon_rollout:

ஏற்கனவே ஓவியன் அண்ணாவின் ஞாபகம் இங்க இல்ல.... :traurig001:

இப்ப இப்படி வேற திரி துவங்கி இன்னும் அவரது ஞாபகத்தை பல ஆண்டுகள் பின்னாடி அனுப்பிட்டீங்கன்னா எப்படி??:rolleyes: :frown:

மன்மதன்
18-11-2007, 11:19 AM
வர்ட்டா என்று சென்று விடாமல் அப்பப்ப இது மாதிரி மலரும் நினைவுகளை எடுத்து விடுங்க மதி.. எல்லோரும் மனதில் 'ஞாபகம் வருதே' என்று அவர்களின் மலரும் நினைவுகளை எடுத்து விட இது மாதிரியான திரிகள் வேண்டுமே..

ஆதவா
18-11-2007, 11:29 AM
அட,, மதியண்ணே! என்னா இது? நான் கூட ஏதோ அந்த படத்தில வரமாதிரி பயில்வானாவோ (உடம்பை வெச்சு சொல்றதுதானே இதெல்லாம்??) இல்ல இன்விசிப்ள் மேனாகவோ கனவு கண்டுருப்பீங்கன்னு எதிர்பார்த்தா,,,,,

அதுசரி, கமர் கட்டு முட்டாயெல்லாம் பெங்களூர்ல எதிர்பார்க்கலாமா? எங்க ஊட்டுக்குப் பக்கத்திலயே பொட்டிக் கடை இருக்கு, வாங்கி அனுப்பவா?

என்ன* ஒரு முட்டாய் அஞ்சுரூபாய் + கொரிய*ர் சார்ஜ்.... வேணும்னா சொல்லுங்க*,.,.

ந*ல்ல* ஞாபக*ங்க*ள்.... தொட*ர்ந்து எழுதுங்க*..

ஆதவா
18-11-2007, 11:34 AM
அட அட அட...எப்படிப்பட்ட விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார் மதி.பெருச்ங்களைப்போல அதெல்லாம் அந்தக் காலம்ன்னு புலம்பல....உண்மையிலேயே ஒரு நல்ல வாழக்கையை நாம் வாழ்ந்திருக்கிறோம் என்ற பெருமையில் பேசுகிறேன்.
பள்ளிக்கு போகுமுன் கெஞிக் கூத்தாடி 10 பைசா வாங்கிக்கொண்டு போய் ரீஸஸில் நமக்காவே சாக்குப் பை விரித்து கடை பரப்பியிருக்கும் பாட்டிகளிடமிருந்து இலந்தைவடையும்,கமர்கெட்டும்,விளாங்காய் தொக்கும்,தேன் மிட்டாயும் வாங்கி சாப்பிடும் சுகம் இருக்கிறதே...இப்போ ஒரு BMW காரைக் கொடுத்தாலும் கிடைக்காது.
மதி சொல்வதைப்போல அஞ்சு பைசாவுக்கும்,பத்து பைசாவுக்கும் இப்போது எந்த மதிப்புமில்லை.ஆனால் இப்போதும் எங்கள் ஊரில் 50 காசுக்கு இட்லி மூணு வித சட்னியோடு கிடைக்கிறதென்று சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாகத்தானிருக்கும்.ஆனால் உண்மை.வீட்டில் காலை சிற்றுண்டி தயார்செய்ய முடியாத சூழ்நிலையில் அங்கிருந்துதான் வாங்கி வருவேன்.அம்சமாய் இருக்கும்.20 ரூபாயில் நாங்கள் நாலு பேரும் வயிறார உண்போம்.இப்போதும் இலந்தைவடைக் கிடைக்கிறது...என் மகளுக்கு அது பிடிக்காதென்றாலும் அவளுக்குக் கொடுக்கும் பாக்கெட் மணியில்(பெருசா இல்லீங்க..ரெண்டு ரூபாதான்)அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் பிடிக்குமே என்று வாங்கி வருவாள்.இதெல்லாம்தான் வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்கள்.மலரும் நினைவுகளைத் தட்டி எழுப்பிய மதிக்கு மிக்க நன்றி அருமையான பதிவு.

அட,.,, அருமை அண்ணா.. அம்பது காசுக்கு இட்லி கிடைக்குதுன்ணா ரொம்பவே ஆச்சரியம்தான்... இருந்தாலும் பாக்கெட் ம*ணி ரொம்ப*வே அதிக*மா கொடுக்க*றீங்க*ண்ணே! :D

மதி
18-11-2007, 01:54 PM
ஆமா எதோ ஞாபகம் வந்ததுனு சொல்லி எங்கள் ஞாபகத்தையும் கிளறிவிட்டுட்டு இப்படி ஓடிப் போவது உங்களுக்கே நியாயமா இருக்கா மதி..? :)
என்னங்க பண்றது..ஏதோ ஞாபகம் வந்தது..ஆனா எல்லோருடைய ஞாபகங்களையும் இது கிளறிவிடும்னு எதிர்பார்க்கல..

மதி
18-11-2007, 01:55 PM
ஏங்க மதி அண்ணா....!! :icon_ush::icon_ush:

இது உங்களுக்கே நியாயமா?? :confused::confused::fragend005::icon_rollout:

ஏற்கனவே ஓவியன் அண்ணாவின் ஞாபகம் இங்க இல்ல.... :traurig001:

இப்ப இப்படி வேற திரி துவங்கி இன்னும் அவரது ஞாபகத்தை பல ஆண்டுகள் பின்னாடி அனுப்பிட்டீங்கன்னா எப்படி??:rolleyes: :frown:

ஆமாம் தப்பு தான் பண்ணிட்டேன்..:D:D:D

மதி
18-11-2007, 01:56 PM
வர்ட்டா என்று சென்று விடாமல் அப்பப்ப இது மாதிரி மலரும் நினைவுகளை எடுத்து விடுங்க மதி.. எல்லோரும் மனதில் 'ஞாபகம் வருதே' என்று அவர்களின் மலரும் நினைவுகளை எடுத்து விட இது மாதிரியான திரிகள் வேண்டுமே..

அப்படியே ஆகட்டும் மன்மதன்..

மதி
18-11-2007, 01:58 PM
அட,, மதியண்ணே! என்னா இது? நான் கூட ஏதோ அந்த படத்தில வரமாதிரி பயில்வானாவோ (உடம்பை வெச்சு சொல்றதுதானே இதெல்லாம்??) இல்ல இன்விசிப்ள் மேனாகவோ கனவு கண்டுருப்பீங்கன்னு எதிர்பார்த்தா,,,,,

அதுசரி, கமர் கட்டு முட்டாயெல்லாம் பெங்களூர்ல எதிர்பார்க்கலாமா? எங்க ஊட்டுக்குப் பக்கத்திலயே பொட்டிக் கடை இருக்கு, வாங்கி அனுப்பவா?

என்ன* ஒரு முட்டாய் அஞ்சுரூபாய் + கொரிய*ர் சார்ஜ்.... வேணும்னா சொல்லுங்க*,.,.

ந*ல்ல* ஞாபக*ங்க*ள்.... தொட*ர்ந்து எழுதுங்க*..

இதுக்கு நான் பஸ் புடிச்சு போய் மதுரையிலேயே வாங்கிக்குவே... அந்த கொரியர் சார்ஜ் தான் பயமுறுத்துது..

சிவா.ஜி
18-11-2007, 02:35 PM
அட,.,, அருமை அண்ணா.. அம்பது காசுக்கு இட்லி கிடைக்குதுன்ணா ரொம்பவே ஆச்சரியம்தான்... இருந்தாலும் பாக்கெட் ம*ணி ரொம்ப*வே அதிக*மா கொடுக்க*றீங்க*ண்ணே! :D

அதைவிட அதிகாமா கொடுத்தா ஒண்ணும் புரியாம என்னையே மேலையும் கீழயும் பாக்குறா என் பொண்ணு ஆதவா.என்னை என்ன செய்யச் சொல்றீங்க?

ஓவியன்
18-11-2007, 03:05 PM
என்னங்க பண்றது..ஏதோ ஞாபகம் வந்தது..ஆனா எல்லோருடைய ஞாபகங்களையும் இது கிளறிவிடும்னு எதிர்பார்க்கல..

உண்மைதான் மதி...

நாமெல்லாம் பாடசாலையில் படித்த காலத்தில் இடைவேளை சமயத்தில் கையில் ஒரு பத்து ரூபா இருந்தாலே போதும் சிற்றுண்டிச்சாலையில் ஒரு கட்டு கட்டி வரலாம்...

ஆனால்,
இப்போது இலங்கையில் ஒரு "சிங்கள் டீ" குடிப்பதற்கே குறைந்த பட்சம் இருபது இலங்கை ரூபா தேவைப்படுகிறது. ஆதலால் இது போன்ற நினைவுகள் ஞாபகங்களாக மட்டுமே இருக்கும். இனி ஒரு போதும் நடைபெறப் போவதில்லை எனும் போதே மனசு கனக்கிறது...!!

மதி இதுபோன்ற நினைவலைகள் தொடர்ந்து இந்த மன்றத்திலடிக்கட்டுமே...!! :)