PDA

View Full Version : திரைப்படங்கள் முடிவை மாற்ற



பகுருதீன்
18-11-2007, 04:47 AM
எல்லா திரைப்பட ரசிகர்களுமே ஏதாவது ஒரு சில படங்களை பார்க்கும்போது அவற்றின் முடிவால் வெறுத்துப் போயிருப்பார்கள். இந்த படம் மட்டும் வேறு விதமான முடிந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.

.
ஒரு சில திரைப்படங்கள் இப்படி ரசிகர்களின் கருத்தை புரிந்துகொண்டு அவற்றின் முடிவு மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் இவை வெகு அரிதானவை. நீங்கள் தீவிர திரைப்பட ரசிகராக இருந்து உங்களுக்கு பல படங்களின் முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை என்றால் கவலையே பட வேண்டாம்.

http://www.howitshouldhaveended.com

இந்த தளத்துக்கு வந்தால் போதும். அந்த படத்தின் முடிவுகளை மாற்றி விடலாம்.

திரைப்பட ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசித்த படங்களுக்குஅவர்களுக்கு விருப்பமான முடிவுகளை எழுதி இடம்பெற வைப்பதற்கான இணையதளம் இது.

ரசிகர்கள் எப்படியெல்லாம் படங்களின் முடிவுகளில் விளையாடி இருக்கிறார்கள் என்று பார்த்து ரசிப்பதற்காகவேனும் இந்த தளத்துக்கு விஜயம் செய்யலாம்.

நன்றி: மாலைச்சுடர்.காம்

மதி
18-11-2007, 05:40 AM
அட நல்ல விஷயமா இருக்கே..
தகவலுக்கு நன்றி...

இளசு
18-11-2007, 08:28 AM
நன்றி நண்பரே

ஆனால் பல படங்களைப் பார்க்கும்போது,
''இப்படி ஒரு படம் எடுக்கணும்'' என்ற முடிவையே
படக்குழுவினர் மாற்றிக்கொண்டிருக்கணும் எனத் தோணுதே!

அக்னி
18-11-2007, 01:08 PM
ரசித்த ஒரு துணுக்கு நினைவுக்கு வருகிறது...

ரசிகர்:
உங்க படம் பார்த்து, என் பழக்கம் ஒன்றையே விட்டுட்டன்...
திரைப்பட துறையில் ஒருவர்:
அப்பிடியா? ரொம்ப சந்தோஷம்... என்ன பழக்கத்த விட்டீங்க..?
ரசிகர்:
படம் பார்க்கற பழக்கத்தைத்தான்...

நகைச்சுவையாக இருந்தாலும் ஓரளவு உண்மைநிலையும் இதுதான்.
ஒப்பீட்டளவில், தரம் இல்லாத படங்கள் வருவதே, (தமிழ் சினிமாவில்) அதிகமாயுள்ளது.

பகிர்தலுக்கு மிக்க நன்றி பகுருதீன் அவர்களே...

சிவா.ஜி
18-11-2007, 01:39 PM
நன்றி நண்பரே

ஆனால் பல படங்களைப் பார்க்கும்போது,
\'\'இப்படி ஒரு படம் எடுக்கணும்\'\' என்ற முடிவையே
படக்குழுவினர் மாற்றிக்கொண்டிருக்கணும் எனத் தோணுதே!

சூப்பர் இளசு....ஒண்ணு சொன்னாலும் நல்லா சொன்னீங்க..ஹா..ஹா...ஹா