PDA

View Full Version : மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!mgandhi
17-11-2007, 05:54 PM
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.
ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

எந்த நோய் வராது?

* ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

* கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

* கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

* இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

எப்படி சாப்பிடணும்?
மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.


நன்றி தினமலர்

யவனிகா
17-11-2007, 06:05 PM
அப்ப மீன் சாப்பிட ஆரம்பிச்சிட வேண்டியது தான்...தகவல் திரட்டி அளித்தமைக்கு நன்றி மோகன் அவர்களே!

அத்தோடு இன்னொரு விசயமும் கூட.

சரும அழகைப் பராமரிக்க மீன் அருமையான உணவு.பளபளக்கும் சருமம் வேண்டுமா? கண்டிப்பாக மீன் சாப்பிடவும்.தலை முடியும் உதிராது பளபளப்புடன் வளரும்.

மீன் உணவு மட்டும்தான் கொழுப்பே இல்லாத புரதத்தையும் தரவல்லது(அசைவத்தில்)இறால்கள் விதி விலக்கு. மீன் மற்றும் நண்டு போன்றவற்றை அதிக நாட்கள் பதப்படுத்தி உண்பதால் அதிலுள்ள முழுமையான புரதச் சத்தை இழக்கிறோம்.

சுறாமீன்கள், கருவாடுகள் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கான உணவில் சேர்த்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

நேசம்
17-11-2007, 06:11 PM
அருமையான தகவல்.பகரிதலுக்கு காந்தி அண்ணாவுக்கு நன்றி.
சகோதரி யவனிகாக்கும் சேர்த்து தான்.

lolluvathiyar
18-11-2007, 07:17 AM
ஆகா நாக்கில் எச்சில் ஊறவைத்து விட்டீர்களே (இன்னிக்கு ஞாயிற்று கிழமை) மீன் பற்றி பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி

மீன் உணவு பற்றிய ஒரு எச்சரிகை
1. தற்பொழுது ஆறு குளங்களில் சாக்கடை கலப்பதால் இந்த வகை மீன்களை தவிர்த்து விடுங்கள்
2. மீன் கெட்டு போய் விட்டது என்பதை கண்டுபிடிப்பது மிக கஸ்டம், அதனால் தெரிந்த கடைகளில் மட்டுமே வாங்குகள்
3. மீன் உணவு நல்லது ஆனால் பிஸ் பிரை செய்ய எக்கசக்க மசாலா பொருட்களை கலகிறோம், அந்த மசாலா பொருட்கள் கெடுதலானது. அடிகடி பிரை சாப்பிடுவதற்க்கு பதில் மீன் குழம்பு வைத்து சாப்பிடுங்கள்

பூமகள்
18-11-2007, 07:23 AM
மீனின் மகிமை புரியவைத்த காந்தி அண்ணாவுக்கு நன்றிகள்..!

இனி அதிகம் மீன் தான் உணவாகும் வீட்டில்..! :D:D

சுட்டிபையன்
18-11-2007, 07:48 AM
ஆமா மீன் சாப்பிடுங்க மீன் சாப்பிடுங்க என்று சொல்லுறீங்களே, எப்படி சமைக்கிறதுனு கொஞ்சம் சொல்லிக்கொடுங்க சாமி உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

ஓவியன்
18-11-2007, 07:52 AM
ஆகா எனக்கும் மீன் என்றால் நிரம்பவே பிடிக்கும், இனி இன்னும் நிறைய சாப்பிடலாம்...!! :)

தகவல் பரிமாற்றத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா..!!

ஹீ,ஹீ!!

மன்றத்திலே மீன் என்றால் எனக்கு எப்பவும் இந்த திரி தான் ஞாபகத்துக்கு வரும்...!! :D:D:D

அயிரை மீன் குழம்பு வைப்பது எப்படி? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10589)

சுட்டிபையன்
18-11-2007, 08:01 AM
இந்திய முறையில் மீன்கறி வைப்பதற்க்கு இங்கே அளுத்துங்கள். (http://www.indobase.com/recipes/category/fish.php)

வச்சு சாப்பிட்ட பின்னர் நீங்க எல்லாம் உயிரோட இருந்தா எனக்கும் மறக்காம அனுப்பிடுங்க

அமரன்
18-11-2007, 08:13 AM
அருமையான தகவல்கள்.. மன்றத்தின் சாப்பாட்டுப்பிரியர்களையும் அடையாளம்காட்டியுள்ளது இச்சுடர். நன்றி காந்தி அண்ணா..

நேசம்
18-11-2007, 08:18 AM
அருமையான தகவல்கள்.. மன்றத்தின் சாப்பாட்டுப்பிரியர்களையும் அடையாளம்காட்டியுள்ளது இச்சுடர். நன்றி காந்தி அண்ணா..


சாப்பாட்டுபிரிய*ர்க*ளைதானே ! சாப்பாட்டுராம*ர்க*ள் இல்லையே !!

அமரன்
18-11-2007, 08:22 AM
சாப்பாட்டுபிரிய*ர்க*ளைதானே ! சாப்பாட்டுராம*ர்க*ள் இல்லையே !!
சேச்சே..உங்களை சொல்வேனா நேசம்..

நேசம்
18-11-2007, 08:25 AM
சேச்சே..உங்களை சொல்வேனா நேசம்..

நான் சொன்னது சாப்பாட்டுராமர்கள்.அப்புறம் எப்படி உங்களை விட்டுட்டு சொல்வேன்:wuerg019:

அமரன்
18-11-2007, 08:30 AM
நான் சொன்னது சாப்பாட்டுராமர்கள்.:wuerg019:
உங்களை சப்பாட்டுராமன்னு சொல்லி உங்களை குறைத்து சொல்ல உங்களாலேயே முடியல்லயா... கள் சேர்த்து உங்கள் சாப்"பிட்"டின் அளவை வெளிச்சம்போட்டுக்காட்டி விட்டீர்களே..:wuerg019::wuerg019:

இதயம்
18-11-2007, 08:36 AM
சரும அழகைப் பராமரிக்க மீன் அருமையான உணவு.பளபளக்கும் சருமம் வேண்டுமா? கண்டிப்பாக மீன் சாப்பிடவும்.

இது நிதர்சன உண்மை. மீன் அதிகம் சாப்பிடும் நாட்டவரிடம் இந்த கூற்று நிரூபணம் ஆகும். மீனை அதிகம் உண்ணும் கேரள மக்கள், பிலிப்பைன்ஸ் மக்களின் சருமம் பள பளப்பதை காண முடியும்.!

அன்புரசிகன்
18-11-2007, 09:00 AM
இது நிதர்சன உண்மை. மீன் அதிகம் சாப்பிடும் நாட்டவரிடம் இந்த கூற்று நிரூபணம் ஆகும். மீனை அதிகம் உண்ணும் கேரள மக்கள், பிலிப்பைன்ஸ் மக்களின் சருமம் பள பளப்பதை காண முடியும்.!

அதுதான் நம்ம ஊரு பெண்களிடம்............ :redface::frown::icon_p:

இதயம்
18-11-2007, 09:26 AM
நான் மீன் ஓரளவுக்கு சாப்பிடுவேன். இதயத்தின் ஃபோட்டோ அனுப்பச்சொல்லி நிறைய பேர் தொல்லை. அவர்களுக்காக இங்கே...! இதயத்தின் சருமம் எப்படி, நிறம் எப்படி என்று பார்க்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பை சுட்டினால் காணலாம். பார்த்துட்டு கன்னாபின்னான்னு கமெண்ட் பண்ணாதீங்க.. நான் பாவம்..!!

http://img3.freeimagehosting.net/image.php?9a8ce6a8f9.jpg

அன்புரசிகன்
18-11-2007, 09:36 AM
ஆமா.. அந்த படத்துதுல என்ன இருக்கு??? உங்க பெருங்குடலா????

இதயம்
18-11-2007, 09:41 AM
ஆமா.. அந்த படத்துதுல என்ன இருக்கு??? உங்க பெருங்குடலா????

அன்பு பேருல மட்டும் இருந்தா பத்தாது..? மனசிலயும் இருக்கணும்..! ஃபோட்டோ பார்த்துட்டு இப்படித்தான் என்னை கிண்டல் பண்ணுறதா..??

ஆதவா
18-11-2007, 09:49 AM
இதென்ன மீன் வியாபாரத் தந்திரமா? :D

மற்ற மாமிசங்களை விட எனக்கு அதிகம் பிடிப்பது, கிடைப்பது, தின்பது எல்லாமே மீன் தான். திகட்டத் திகட்டத் தின்பேன் என்றால் அது மீன் மட்டுமே...

உடலுக்கும் நல்லது....

நன்றி மோகன்!! செய்திக்கு

மன்மதன்
18-11-2007, 10:08 AM
எனக்கும் மீன் பிடிக்கும்...எனக்கு ரொம்ப பிடித்தது கிங்ஃபிஷ்..(கிங்ஃபிஷர் அல்ல..:D :D)

அன்புரசிகன்
18-11-2007, 10:44 AM
இதென்ன மீன் வியாபாரத் தந்திரமா? :D
மற்ற மாமிசங்களை விட எனக்கு அதிகம் பிடிப்பது, கிடைப்பது, தின்பது எல்லாமே மீன் தான். திகட்டத் திகட்டத் தின்பேன் என்றால் அது மீன் மட்டுமே...
உடலுக்கும் நல்லது....எனக்கும் மீன் பிடிக்கும்...எனக்கு ரொம்ப பிடித்தது கிங்ஃபிஷ்..(கிங்ஃபிஷர் அல்ல..:D :D)

இதயத்தின் கூற்றுப்படி நீங்கள் இருவரும் கேரளத்து பெண்குட்டிகள் போல் இருப்பீர்களா???? :D :D :D

ஆதவா
18-11-2007, 10:50 AM
இதயத்தின் கூற்றுப்படி நீங்கள் இருவரும் கேரளத்து பெண்குட்டிகள் போல் இருப்பீர்களா???? :D :D :D

பெண்குட்டிகளா? என்ன ரசிகரே! நாங்க மீசை முளைச்ச/முளைச்சு சேவ் பண்ணிய ஆம்பிளைங்க.... (நான் எப்பவுமே மீசையை ஷேவ் ப*ண்றதில்லை.)

அன்புரசிகன்
18-11-2007, 10:56 AM
நீங்கள் வயதானவர் என்று எனக்கு புரிகிறது ஆதவா.. ஆனால் நான் கூறியது இதயத்தின் கூற்றை அடிப்படையாகக்கொண்டது.

இதயம்
18-11-2007, 11:08 AM
நீங்கள் வயதானவர் என்று எனக்கு புரிகிறது ஆதவா.. ஆனால் நான் கூறியது இதயத்தின் கூற்றை அடிப்படையாகக்கொண்டது.

அடப்பாவி... அவனா நீயி...????!!!!

இதயம்
18-11-2007, 11:10 AM
பெண்குட்டிகளா? என்ன ரசிகரே! நாங்க மீசை முளைச்ச/முளைச்சு சேவ் பண்ணிய ஆம்பிளைங்க.... (நான் எப்பவுமே மீசையை ஷேவ் ப*ண்றதில்லை.)

அன்பு \"ஜொள்\"ளிய கருத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று அன்(வம்)போடு தெரிவித்துக்கொள்கிறேன்..!!

மலர்
18-11-2007, 12:16 PM
இன்னைக்கு மன்றமே மீனா மணக்குதே....

எங்க திரும்பினாலும் மீனைபத்தியே பேச்சு..

அடபோங்கப்பா

அன்புரசிகன்
18-11-2007, 12:27 PM
அடபோங்கப்பா
எங்கே????
எதுக்கு?

மலர்
18-11-2007, 12:35 PM
எங்கே????
எதுக்கு?

எங்கே : கடலுக்கு

எதுக்கு : மீன் பிடிக்க தான்

உதயா
18-11-2007, 12:54 PM
மீன் குழம்பு செய்யும் பக்குவம் ஒன்று சொல்லவா?

ஓவியன்
18-11-2007, 01:14 PM
இன்னைக்கு மன்றமே மீனா மணக்குதே....

ஹீ,ஹீ!!

நீங்க மதியம் மீன் சாப்பிட்டுட்டு கைகழுவாம மன்றம் வந்ததிலே இருந்து அப்படித்தானிருக்கு...!! :icon_wink1:

ஓவியன்
18-11-2007, 01:16 PM
மீன் குழம்பு செய்யும் பக்குவம் ஒன்று சொல்லவா?

தாரளமாக, ஆனால் இங்கல்ல சமையல் பகுதியில் ஒரு தனித் திரியாகத் தொடாங்கலாம்...!

lolluvathiyar
19-11-2007, 07:03 AM
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் பிராமணர்கள் எல்லாரும் எப்படிங்க நல்ல சுகதேகியா இருக்கிறாங்க? அவங்களும் மீன் சாப்பிடுறாங்களா?


நாம் எல்லாம் அசைவம் சாப்பிடரோம், ஹெல்த்தியா இருக்கோம். அதுக்காக வெறும் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் சத்தா இருக்க மாட்டாங்கனு சொல்ல முடியாது. அவுங்க சைவத்திலேயே நல்ல சத்தான காய்கறிகள், பழவகைகள் சாப்பிட்டா போதும்.

என் நன்பர் ஒருவர் (அசைவம் சாப்பிடும் சாதிதான்) தன்னி போட மாட்டார் அசைவம் சாப்பிடமாட்டார், உப்பு என்னை மசாலா ஐட்டங்களை தொட மாட்டார். டீ காபு கூட கிடையாது.
சமைக்காத காய்கறிகளை பழங்களை மட்டுமே சாப்பிடுவார், ஆனா நல்ல ஆக்டிவா இருப்பார் ஒரு பிரச்சனையும் இல்லாம இருக்கார். வெறும் 5 மனி நேரம் தான் தூங்கரார்.
சில விசயங்கள் மர்மா தான் இருக்கு. நம்மால கறி சாப்பிடாம இருக்க முடியாது. எனக்கு மீன விட சிக்கன் மட்டன் தான் பிரியம்

ஓவியன்
19-11-2007, 07:07 AM
இயற்கையின் உணவுச் சாக்கிலித் தொடரில் எப்போதும் முதலாம் படியில் இருப்பவை சைவ உணவுகளான தாவரங்கள், இரண்டாம் மூன்றாம் படியில் இருப்பன அசைவ உணவுகளான விலங்குகள்...

எப்பவுமே உணவுச் சங்கிலியின் முதலாம் படி உணவுகள், இரண்டாம் படி உணவுகளிலும் சிறந்தவை ஆரோக்கியமானவை...

இந்தக் காரணம் பற்றியே சைவ உணவு உண்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்...!! :)

இதயம்
19-11-2007, 07:53 AM
நாம் எல்லாம் அசைவம் சாப்பிடரோம், ஹெல்த்தியா இருக்கோம். அதுக்காக வெறும் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் சத்தா இருக்க மாட்டாங்கனு சொல்ல முடியாது. அவுங்க சைவத்திலேயே நல்ல சத்தான காய்கறிகள், பழவகைகள் சாப்பிட்டா போதும்.


வாத்தியாரின் கருத்தை ஏற்க இயலாது. வெறும் சைவம் மட்டும் உண்பவர்கள் அசைவ உணவிலிருந்து உடல் ஆரோக்கியத்திற்கும், திடத்திற்கும் தேவையான பயனுள்ள பொருட்களை நிச்சயம் இழக்கிறார்கள். குறிப்பாக மீன் உணவு. சைவ உணவு உண்பவர் சுறுசுறுப்பாக இருப்பதாலும், நோய் நொடி இப்போதைக்கு இல்லை என்பதாலும் சைவ உணவு உண்பவர்கள் ஆரோக்கியமாக திடமாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. உணவில் சமச்சீர் உணவு முறை (Balanced diet) என்பது மிக முக்கியம். அதை நாம் பேண அசைவ உணவு மிக அவசியம்.

எந்த தடகள விளையாட்டு வீரராவது சுத்த சைவமாக இருக்கிறார் என்று காட்டுங்கள் பார்க்கலாம். இருக்க வாய்ப்பில்லை. காரணம், உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் அசைவ உணவு மிக, மிக அவசியம்.

க.கமலக்கண்ணன்
19-11-2007, 10:51 AM
அருமையான திரி மீனை பற்றி

அழகாக கருத்து சொன்னதோடு மட்டும் அல்லாமல்

அற்புதமான செய்முறையையும் (ரெசிப்பி) தந்ததற்கு

அன்பான நன்றி மோகன் காந்தி

அக்னி
20-11-2007, 11:28 AM
சுவை மீன் பற்றிய தகவல்களும் சுவையே...
பகிர்தலுக்கு நன்றி மோகன் காந்தி அவர்களே...

மீன் திரி என்றாலே, வெற்றித்திரிதான் போலிருக்கே...

ஜெயாஸ்தா
20-11-2007, 12:42 PM
அசைவ உணவுகளிலேயே தலைசிறந்தது மீன்தான். முக்கியமாக எலும்பும்பின் வலிமைக்கு தேவையான சத்துப் பொருள்கள் மீனில் நிறையவே உண்டு. ஆமாம் சுறா மீனையும் சாப்பிடுவார்களா? என்ன?. நான் ஒரு கருவாடு பிரியன். பழையகஞ்சியையும் பொறித்த கருவாடு வைத்து ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்....! எழுதும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது. ஆனால் கருவாடு தயாரிக்கும் முறையை நேரில் பார்த்தால் பலபேர் கருவாடு சாப்பிடுவதையே விட்டுவிடுவார்கள்.

தமிழ்ச்சூரியன்
30-11-2007, 06:19 PM
மீன் உணவின் மருத்துவ குணங்களை அனைவரும் அறியத் தந்த காந்தி அவர்களுக்கு மிக்க நன்றி.

sarcharan
01-12-2007, 07:19 AM
போச்சுடா!!!! இன்னிலருந்து மீன் வம்சமே அழியப்போகுது ஏன்னா நம்ம
மன்ற மக்கள் எல்லோரும் மீன் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க...:)

sarcharan
01-12-2007, 07:19 AM
பை தி பை மீனாவுக்கு மீன் சமைக்க தெரியுமா?? ஹி ஹி

பூமகள்
01-12-2007, 07:34 AM
பை தி பை மீனாவுக்கு மீன் சமைக்க தெரியுமா?? ஹி ஹி
ஏன்... :rolleyes:
அவங்க வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டிருக்காங்களா சரண்ஜி? ;):p:lachen001:
பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய ஆள் தான் நீங்க!!! :D:D

செல்வா
02-12-2007, 08:53 AM
ஐயா மற்றும் அம்மா மார்களே.... என்னனோட பணிவான வேண்டுகோள்... மீன் சாப்பிட்டா புற்று நோய் வராதுண்ணு சாவகாசமா இருக்காதீங்க... அப்படிப்பார்த்தால் தினசரி புதிய புதிய மீன் சாப்பிடும் கடற்கரை வாழ் மக்கள யாருக்கும் புற்றுநோயே வரக்கூடாது .. இல்லையா...? அதனால மீன் சாப்பிட்டா எந்த கவலையும் வேண்டம்ணு தயவு செஞ்சு யாரும் இருக்காதீங்க...