PDA

View Full Version : கைக்குட்டையா?



சூரியன்
17-11-2007, 01:21 PM
பாவையின் கண்ணீர் துடைக்க
பணம் தான் கைக்குட்டையா?
அறியாத அனுவத்தை
அழகாய் சொன்னாயடி!!

ஓவியன்
20-11-2007, 04:21 AM
பாவையின் கண்ணீர்
துடைக்க என் அன்பு
போதுமென்றிருந்தேன்
சூரியனின் கவி பார்கும் வரை...

பாராட்டுக்கள் சூரியன்...!!

praveen
20-11-2007, 05:00 AM
பாவையின் கண்ணீர்
துடைக்க என் அன்பு
போதுமென்றிருந்தேன்
சூரியனின் கவி பார்கும் வரை...

பாராட்டுக்கள் சூரியன்...!!

பதிலுக்கு கவிதையா?. ஒவியன் எப்படி இப்படி கலக்குகிறீங்க. இரண்டு பேர் கவிதையும் நல்லாயிருக்கு. ஆனால் அன்பு தான் நிரந்தரமானது, எல்லா இடத்திலும் செல்லுபடியாவது.

ஓவியன்
20-11-2007, 05:04 AM
உண்மைதான் பிரவின்..!!

அன்பு என்ற சாவியால் எல்லாப் பூட்டையும் திறந்திடலாம்...

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல....!!

praveen
20-11-2007, 05:19 AM
உண்மைதான் பிரவின்..!!

அன்பு என்ற சாவியால் எல்லாப் பூட்டையும் திறந்திடலாம்...

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல....!!

மக்களே இந்த ஓவியன் பார்ட்டைமா என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள். :). அவர்ர் வேலைக்கு உதவியா இருக்க ஒரு மாஸ்டர் கீ தேடிட்டு இருக்கார் பாருங்க.

ஓவியன்
20-11-2007, 05:26 AM
அடடா...!!

சமர்த்து பிள்ளை பிரவின்...!! :D
அப்படியே எனக்கு ஒரு பார்ட்னரும் தேடிட்டு இருக்கேனே..!! :)

அக்னி
20-11-2007, 05:34 AM
பணம் பார்த்து காதல் வரும்
என்றால்...
அந்தக் காதல் குட்டை
எட்டாமல்
என் கை குட்டையாகவே இருக்கட்டும்...

சிறு கவியானாலும் அழகுக் கவிதை...
பாராட்டுக்கள் சூரியன்...

கஜினி
21-11-2007, 05:52 AM
பார்வையின்
கண்ணீர் துடைக்க
பணம்தான் கைக்குட்டையோ

அழகிய குறுங்கவிதை.

அமரன்
21-11-2007, 11:26 AM
கண்ணீர் துடைக்க
கைக்குட்டை தேவையில்லை
கை குட்டையின்மை போதும்..

வேகம் குன்றமுன்னர்-இரத்த
வேகம் குன்றாதிருக்க
குட்டையாக பணம் வேண்டும்..

பாசமும் பணமும் தண்டவாளங்கள்
அதில் பயணிக்கும் ரயிலே வாழ்க்கை..

தொடருங்கள் சூரியன். பாராட்டுகள்.

நேசம்
21-11-2007, 07:12 PM
பாவையின் கண்ணிரை துடைக்க அன்பா இல்லை பணமா.
அன்புக்கு தான் முதலிடம் கொடுப்போம்.ஆனால் பாவைகள்....

சிறு அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள் சூரியன்