PDA

View Full Version : காதலைப் பற்றி மேதைகள்



mgandhi
17-11-2007, 06:43 AM
காதலைப் பற்றி மேதைகள்

மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும்
பொழுதும் மாறாதிருப்பதுதான் காதல்
-ஷேக்ஸ்பியர்

என்றும் மாறாத காதல்
பார்த்ததும் வருவதில்லை
-கிறிஸ்டோபர் மார்லோவ்

காதல் பேய் மாதிரி எல்லாரும் அதைப் பற்றிப்
பைசுவார்கள் ஆனால் சிலருக்குதான் அது தேரியும்
-லே ரோச்சிஃபோகாலட்

நம்மை இன்னொருவரிடம்
கண்டுபிடிப்பதுதான் காதல்
-அலெக்ஸாண்டர் ஸ்மித்

காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை
அந்தக் காரணம்தான் தெரிவதில்லை
-பாஸ்கல்

மனதால் இருவர் ஓன்றாக இனைவதல்ல காதல்
இணைகின்ற இருவரும் இந்த உலகம்
ஒன்றாகத் தெரிந்தால்தான் காதல்
-செயின் எக்ஸ்யூபெரி

கடுகளவு நம்பிக்கையே
காதல் பிறப்பதற்குப் போதுமானது
-ஸ்டென்தால்

காதல் எங்கு இருக்கிறதோ
அங்குதான் வாழ்க்கை இருக்கிறது
-மகாத்மா காந்தி

காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை தங்கள்
காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால் இருக்களாம்
-ஷேக்ஸ்பியர்

அக்னி
17-11-2007, 06:59 AM
பகிர்தலுக்கு மிக்க நன்றி...
இவர்கள் கருத்துக்களைப் பார்த்தால், இவர்கள் காதலிலும் பெரிய மேதாவிகள் தான்...

நம்ம மன்ற உறவுகளின் காதல் பற்றிய கவிக்கருத்துக்கள்
காதல்!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12809)
இங்கே...

நேசம்
17-11-2007, 08:09 AM
காதலை பற்றி மேதைகளீன் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

இளசு
17-11-2007, 08:40 PM
எத்தனை பேர் செய்தபிறகும்
இன்று தொடங்குபவருக்கு
இதுவரை இவ்வுலகில் இல்லாத
புத்தம்புதிதாய்,
வேறு எதையும் விட மிகப்பெரிதாய் தோன்றி
ஆகர்ஷிக்கும் அதிசய காதலைப்பற்றி
இத்தனை மேதைகள் சொல்லியதைப்படித்தும்
இன்னும் இன்னும் என ஏங்கித் தேடவைக்கும்
தேன் தேவதைதான் காதலோ?

பகிர்தலுக்கு நன்றி காந்தி அவர்களே!

lolluvathiyar
18-11-2007, 05:02 AM
காதலை பற்றி இன்னொரு மாமேதை ஒரு சொல்லி இருகிறார் அதை விட்டு விட்டீர்களே.
இதோ
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8985

சிவா.ஜி
18-11-2007, 12:00 PM
அதானே அந்த மேதைகள் சொன்னதெல்லாம் லொள்ளுவார்த்தைக்குப் பக்கத்தில் வரமுடியுமா...?
அழகான காதலைப் பற்றி மேதைகள் உரைத்தவை அத்தனையும் தேன்.பகிர்தலுக்கு நன்றி மோகன் காந்தி.

யவனிகா
18-11-2007, 12:50 PM
மேதைகளும் காதலாக் கொஞ்சூண்டு பாதிக்கப் பட்டு இருப்பார்கள் போலும்...தொகுத்து வழங்கியமைக்கு நன்றி காந்தி அவர்களே..

kavitha
19-11-2007, 08:04 AM
சொல்றாங்கப்பா சொல்றாங்க..
கொல்றாங்கப்பா கொல்றாங்க..

ஆதி
19-11-2007, 08:49 AM
மேதைகளும் காதலாக் கொஞ்சூண்டு பாதிக்கப் பட்டு இருப்பார்கள் போலும்...தொகுத்து வழங்கியமைக்கு நன்றி காந்தி அவர்களே..

காதலில் விழுந்தவன் பேதை..
கடந்தவன் மேதை..

alaguraj
19-11-2007, 08:50 AM
காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்

mgandhi
19-11-2007, 09:30 AM
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

arun
19-11-2007, 09:37 PM
மேதைகளின் கருத்துக்களை கொடுத்தமைக்கு நன்றி

இந்த திரியில் இன்னும் பல மேதைகள் உருவாகுவது போல இருக்கிறதே? :D:D:D

நுரையீரல்
20-11-2007, 04:51 AM
காதலில் விழுந்தவன் பேதை..
கடந்தவன் மேதை..
உன்னை நீ காதலித்தால் மேதை
பெண்ணை காதலித்தால் போதை
போதை மதி மயங்கச் செய்யும்
காதலும் மதி மயங்கச் செய்யும்
(இதுக்கு மேல எப்படி சொல்றதுனு தெரியலைங்கோ)

நுரையீரல்
20-11-2007, 04:54 AM
காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்
டீக்கடையில் வேலை பார்த்த அனுபவமோ?

எனக்கு காபியை நல்லா சூடாற்றி நுரைபொங்க குடிச்சாத் தான் பிடிக்கும். இதுக்கு ஒரு தத்துவத்தை துப்புங்களேன்.

தேவிப்ரியா
11-12-2007, 09:54 AM
மேதைகளின் கருத்துக்களை கொடுத்தமைக்கு நன்றி