PDA

View Full Version : ஜன்னலோரம்...............



meera
17-11-2007, 05:08 AM
ஜன்னலோரம் சத்தம்
கேட்டு திரும்பிபார்த்தேன்
கம்பிகளுக்கிடையில்
கலங்கிய விழிகள்...

அந்த
கலங்கிய விழிகளில்
கருணைமனு
வாசித்தேன்
வருத்தமடைந்தேன்...

மனுவின் விவரம் இதுதான்
விடுதலை என்பது
மனிதனுக்கு மட்டும் தானோ?
அவன் வளர்க்கும்
எங்களுக்கில்லையா???????????

மதி
17-11-2007, 05:13 AM
அட..மீராவிடமிருந்து மற்றொரு அழகிய கவிதை..
கலங்கிய விழிகள் கொண்டிருந்தது கிளியா..??
வாழ்த்துக்கள் தோழி..

அக்னி
17-11-2007, 05:24 AM
செல்லப் பிராணிகள்...
உரிமை பறிக்கப்பட்ட, வளர்ப்புக்கள்...
அனுமதிக்கப்பட்ட மிருகவதை...

பாதுகாப்பெனவும், பராமரிப்பெனவும்
அடைத்தும் கட்டியும் சிறைப்படுத்தப்படும்
விலங்குகள்...

உச்ச கொடுமை என்னவென்றால்,
இன்று வளர்ப்புக்கென்றே பிறப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் விலங்குகள்,
இயற்கைச் சூழ்நிலையில் வாழமுடியாமல் மரணித்துவிடும் இயல்பை கொண்டவையாக்கப்பட்டு வருவதே...

அழகுக் கவிக்குப் பாராட்டுக்கள் மீரா அவர்களே...

ஷீ-நிசி
17-11-2007, 05:33 AM
யே! எக்ஸலன்ட்யா!

கூண்டுக்கிளி போலிருப்பது
பறவைகள் மட்டும்தானா?!

சில மருமகள்களும்தானே!

அக்னி
17-11-2007, 05:53 AM
கூண்டுக்கிளி போலிருப்பது
பறவைகள் மட்டும்தானா?!

சில மருமகள்களும்தானே!
இதுவும் சூப்பருங்கோ...

எத்தனையோ மருமகள்களுக்கு ஜன்னல்கள் சிறைக்கம்பிகளாக உள்ளது வேதனைப்படவேண்டிய, வெட்கப்படவேண்டிய விடயமே...

meera
17-11-2007, 06:30 AM
அட..மீராவிடமிருந்து மற்றொரு அழகிய கவிதை..
கலங்கிய விழிகள் கொண்டிருந்தது கிளியா..??
வாழ்த்துக்கள் தோழி..

மதி, இது கிளிக்கு அல்ல.நாயின் சோகம்.:mini023::mini023:

meera
17-11-2007, 06:33 AM
செல்லப் பிராணிகள்...
உரிமை பறிக்கப்பட்ட, வளர்ப்புக்கள்...
அனுமதிக்கப்பட்ட மிருகவதை...

பாதுகாப்பெனவும், பராமரிப்பெனவும்
அடைத்தும் கட்டியும் சிறைப்படுத்தப்படும்
விலங்குகள்...

உச்ச கொடுமை என்னவென்றால்,
இன்று வளர்ப்புக்கென்றே பிறப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் விலங்குகள்,
இயற்கைச் சூழ்நிலையில் வாழமுடியாமல் மரணித்துவிடும் இயல்பை கொண்டவையாக்கப்பட்டு வருவதே...

அழகுக் கவிக்குப் பாராட்டுக்கள் மீரா அவர்களே...

பாராட்டுக்கு நன்றி அக்னி.

உங்களின் கருத்து நிதர்சன உண்மை.

அமரன்
17-11-2007, 06:36 AM
செல்லப் பிராணிகள்
கூண்டுதாண்டிச் செல்லாப்பிராணிகள்..
உணவு, உறையுள் ஏன் உடையும் கொடுத்து
உயிரைப்பறிக்கும் நோக்கு.. காக்கும் நோக்கும் இருக்கு..
பாராடுக்கள் மீரா.

meera
17-11-2007, 06:36 AM
யே! எக்ஸலன்ட்யா!

கூண்டுக்கிளி போலிருப்பது
பறவைகள் மட்டும்தானா?!

சில மருமகள்களும்தானே!

நிஷி, இப்போ இந்த நிலை கொஞ்சம் மாறி வருவதாய் நினைக்கிறேன்.

அமரன்
17-11-2007, 06:39 AM
விடுதலை என்பது
மனிதனுக்கு மட்டும் தானோ?
அவன் வளர்க்கும்
எங்களுக்கில்லையா???????????
வளர்ந்த மனிதர்க்கே
விடுதலைக்குப் பஞ்சம்.
அவர்களும் எமக்கு
தருகிறார்களாம் தஞ்சம்..

விடுதலை..விடு தலை..!

meera
17-11-2007, 06:40 AM
செல்லப் பிராணிகள்
கூண்டுதாண்டிச் செல்லாப்பிராணிகள்..
உணவு, உறையுள் ஏன் உடையும் கொடுத்து
உயிரைப்பறிக்கும் நோக்கு.. காக்கும் நோக்கும் இருக்கு..
பாராடுக்கள் மீரா.


பாராட்டுக்கு நன்றி.

காக்கும் நோக்கமாய் இருக்கலாம்.ஆயினும் அடைத்து வைப்பது பாவம் இல்லையா????

அக்னி
17-11-2007, 06:45 AM
நிஷி, இப்போ இந்த நிலை கொஞ்சம் மாறி வருவதாய் நினைக்கிறேன்.
மாறி வருகின்றதுதான்...
ஆனால், இன்னமும் மாறவேண்டி உள்ளதே...
100% முழுமையான மாற்றம் வரவேண்டும்...

அமரன்
17-11-2007, 06:47 AM
பாராட்டுக்கு நன்றி.

காக்கும் நோக்கமாய் இருக்கலாம்.ஆயினும் அடைத்து வைப்பது பாவம் இல்லையா????

அடைபடுவது சாபம்
அடைகாக்கபடுதல் வரம்...
என்ன செய்வது
சாபங்கள்தானே அதிகம் கிடைக்கின்றன..

சிவா.ஜி
17-11-2007, 06:55 AM
விடுதலை வேண்டும் இந்த உயிரின் மௌனமொழி மனிதருக்குப் புரிய வேண்டுமே...?கதறிச் சொல்லும் வேண்டுதலுக்கே காது கொடுக்காத இயந்திரங்கள் மனிதப்போர்வையில் உலவும் உலகில்...குரைத்து கேட்கும் இவைகளின் குரல் குறைத்தாவது அவன் காதுகளில் விழவேண்டுமென்பதே விருப்பம்.
அழகிய கவிதைக்கு அன்பார்ந்த வாழ்த்துகள் மீரா.

meera
17-11-2007, 06:56 AM
அடைபடுவது சாபம்
அடைகாக்கபடுதல் வரம்...
என்ன செய்வது
சாபங்கள்தானே அதிகம் கிடைக்கின்றன..

அழகான வரிகள் அமரன்.எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

பூமகள்
17-11-2007, 06:57 AM
செல்லப்பிராணி
செல்லமாய் தான் இருக்கிறது..!
விடுதலை செய்தால்..
வெளியே ஆபத்து காத்திருக்கும்..!

ரணப்படுத்தும் அந்நிய விலங்குகள் - அதனிடம்
ரவுத்திரம் அறியா அப்பாவி ஜீவன்கள்..!

தங்களின் கவிக்கு உவமானமாய்
சிறகுகளின் சிந்தையை எடுக்கலாம்..!

நான்கு கால் நாய்க்கு
வீடே பாதுக்காப்பு..!


அழகான கவி..! வெளிக்கருத்து இதைச் சொல்ல... உள்கருத்தோ ஷீ சொன்னது போல் கருத்துகளையும் சொல்லத் தவறவில்லை..!

வாழ்த்துகள் சகோதரி மீரா.

meera
17-11-2007, 06:59 AM
விடுதலை வேண்டும் இந்த உயிரின் மௌனமொழி மனிதருக்குப் புரிய வேண்டுமே...?கதறிச் சொல்லும் வேண்டுதலுக்கே காது கொடுக்காத இயந்திரங்கள் மனிதப்போர்வையில் உலவும் உலகில்...குரைத்து கேட்கும் இவைகளின் குரல் குறைத்தாவது அவன் காதுகளில் விழவேண்டுமென்பதே விருப்பம்.அழகிய கவிதைக்கு அன்பார்ந்த வாழ்த்துகள் மீரா.

வார்த்தைகளை அழகாய் கையாலுகிறீர்கள் சிவாஜி.நன்றி

ஓவியன்
20-11-2007, 04:05 AM
சின்ன சின்ன விடயங்கள்...
ஆனாலும்
ஆழமான உள்ளர்த்தங்கள் கிடைக்கும்
அதைக் கிளறிப் பார்பின்....

சமாதானம் பற்றிப் வாய்கிழிய
நாம் பேசினாலும்
வீட்டுக்குள் கூட்டுக்குள்
கிடக்கும் நாய் அதற்கு
ஒரு முரண்கரு..!!

நல்ல கவிதை மீரா...!!
இன்னும் இன்னும் நிறைய தருங்கள்..!! :)