PDA

View Full Version : அழுத்தி.



அமரன்
16-11-2007, 05:56 PM
வாழ்வினில் நேர்த்தி.
கசிவுகளின் உயர்ச்சி.
இரண்டும் தருவதால்
சொல்வேன் காதல் 'அழுத்தி'.

ஓவியன்
16-11-2007, 06:29 PM
வாழ்வின்
வளைவு நெளிவை
அழுத்தி நேராக்கிய
காதல்,
வளைந்து நெளிந்ததால்
மீள
வளைந்து நெளிந்தது
வாழ்க்கை..!!

......................................................................................................

வித்தியாசமான கற்பனை -பாராட்டுகள் அமரன்..!!

பூமகள்
19-07-2008, 01:12 PM
வாழ்வில் நேர்த்தி
கண்டோர்க்கு நெகிழ்ச்சி..

காணாதோர்க்கு..
அழுத்தாமலே
வலித் தீ..!

காதலின் ஒரு முகம்... உங்கள் கவிதை..!!

பாராட்டுகள் அமரன் அண்ணா..

இன்னும் காதல் மிதிவண்டியை 'அழுத்தி' மேலே முன்னேறுங்கள்..!! ;)

இளசு
19-07-2008, 01:23 PM
கசிவுகளின் உயர்ச்சி?

விளக்குவாயா அமரா?

rose_2007
19-07-2008, 01:25 PM
தாங்களது அருமையான கவிதை என்னை ஈர்த்துவிட்டது

Keelai Naadaan
19-07-2008, 01:38 PM
கசிவுகளின் உயர்ச்சி?

விளக்குவாயா அமரா?
எனக்கும் விளங்கவில்லை. விளக்குங்கள் அமரன்

அமரன்
19-07-2008, 02:36 PM
எந்த நேரத்தில் எழுதினேன் என்பது நினைவிலில்லை அண்ணா. ஏதோ ஒன்று பாதித்த கணத்தில் இந்தக்கவிதை எழுதினேன் என்பது மட்டும் நினைவில் இருக்கு. யோசித்துப் பார்த்தபோது சிக்கியதை தருகிறேன்.

.
தன்னை காதலிக்கத்தெரிந்தவன்தான் காதல் இராசாங்கத்தின் உண்மையான பிரஜை ஆகிறான்.
தன் உண்மையான பிரஜைக்கு மற்றவர் மன அழுத்தத்தை இடம்மாற்றி மனங்கசிய வைக்கும் காதல். பிறர் மனவழுத்தத்தை தன் மனவழுத்தமாக நினைப்பவன் வாழ்வில் அழையா விருந்தாளியாக வந்துவிடுகிறது நேர்த்தி.

இதுதான் அண்ணா தோன்றுகிறது. பிழையாயின் திருத்துங்கள்.

ஓவியன்
19-07-2008, 04:41 PM
கசிவுகளின் உயர்ச்சி?

விளக்குவாயா அமரா?

”காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி”
என்றொரு பாசுரம் வருமே அண்ணா..

மனதைக் கசிந்து...
அன்பைக் கசிந்து...
வாழ்வை உயர்த்தும்
காதலும் ஒரு
அழுத்திதானே அண்ணா..??

பென்ஸ்
19-07-2008, 05:15 PM
தன் உண்மையான பிரஜைக்கு மற்றவர் மன அழுத்தத்தை இடம்மாற்றி மனங்கசிய வைக்கும் காதல். பிறர் மனவழுத்தத்தை தன் மனவழுத்தமாக நினைப்பவன் வாழ்வில் அழையா விருந்தாளியாக வந்துவிடுகிறது நேர்த்தி.

இதுதான் அண்ணா தோன்றுகிறது. பிழையாயின் திருத்துங்கள்.

ஹஹஹஹா அமரா....

நான் ஒவ்வொரு முறையும் உங்கள் கவிதைகள் புரியாது வெளியேறிவிடுவேன்....
உங்கள் கவிதையின் வார்த்தைகள் எனக்கு கடினமாக தெரியும்.

உங்களுக்குமா...!!!!

பாலகன்
19-07-2008, 05:26 PM
வாழ்வினில் நேர்த்தி.
கசிவுகளின் உயர்ச்சி.
இரண்டும் தருவதால்
சொல்வேன் காதல் 'அழுத்தி'.

அப்புறம் கொஞ்சம் நிறுத்தி
போடுங்க கல்யாண முடிச்சி
டும் டும் பீ பீ எழுச்சி
எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி

அன்புடன்

அமரன்
19-07-2008, 05:27 PM
ஹஹஹஹா அமரா....

நான் ஒவ்வொரு முறையும் உங்கள் கவிதைகள் புரியாது வேளியேறிவிடுவேன்....
உங்கள் கவிதையின் வார்த்தைகள் எனக்கு கடினமாக தெரியும்.

உங்களுக்குமா...!!!!

அஃதே அண்ணா...
கடினமாக எழுதவேண்டுமென நினைத்து எழுதுவதில்லை. ஏதோ ஒரு வேகத்தில் எழுதிவிடுவேன். எழுதிய காரணத்தை மனக்குறிப்பெடுத்து வைப்பேன். அதையொட்டிப்பார்க்கும் போது கவிதையின் அர்த்தம் எனக்குத் தெரிந்துவிடும். குறிப்பை மறந்தால் அதோ கதிதான்.. இந்தக்கவிதை பிறந்த நேரத்தை குறித்து வைக்க மறந்துவிட்டேன். இப்பதான் தெரிகிறது எனது கவிதை நிலை. நான் முன்னேற வேண்டும்.

இளசு
19-07-2008, 05:36 PM
எந்த நேரத்தில் எழுதினேன் என்பது நினைவிலில்லை அண்ணா. ஏதோ ஒன்று பாதித்த கணத்தில் இந்தக்கவிதை எழுதினேன் என்பது மட்டும் நினைவில் இருக்கு. யோசித்துப் பார்த்தபோது சிக்கியதை தருகிறேன்.

.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=367763#post367763


அருமை அமரா உன் விளக்கம்..

உன் கருத்தைக் கண்டதும் சட்டென இன்று யவனிகா பதித்த
கவிச்சமர் தெறிப்பு நினைவுக்கு வந்தது..



எழுதிக்குவித்த
சில மணி நேரத்தின் பின்
அந்நியப்பட்டு நிற்கின்றன
எழுதியவை...
நானல்ல உன் பிரம்மா
என்பது போல
சத்தமின்றி விலகிவிடுகிறேன்...
கிலேசமின்றி
தாங்கி நிற்கின்றன
எழுத்துகளை....
காகிதங்கள்!


--------------------------

அமரா, ஓவி ---

கசிந்த உங்கள் கருத்துகள் கண்டு நானும் கனிந்தேன்!

காதலினால் மானிடர்க்கு உய்வு உண்டாம்! ஒப்பினேன்!

Keelai Naadaan
19-07-2008, 06:08 PM
கவிதைகள் எழுதுகிற போது வார்த்தைகளை செதுக்க நினைப்பதால் சில சமயம் இது போன்று நிகழ்வது உண்டு. பல கவிஞர்களுக்கும் இது ஏற்பட கூடியது தான். மேலும் நம் தமிழில் ஒரே சொல்லுக்கு இரண்டு பொருள் கூட உண்டு. அதனாலும் எழுதுபவரின் எண்ணத்தை சில சமயம் படிப்பவரால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. உங்கள் விளக்கம் ஏற்புடையதே.
நீங்களும் ஓவியன் அவர்களும் சுட்டிக்காட்டியிருப்பது போல் மனம் கசிந்து என அர்த்தப்படுத்தி படிக்கும் போது புரிகிறது.

காதல் ஒரு அழுத்தி தான் மாற்றுக் கருத்தில்லை.

அமரன்
25-07-2008, 12:23 PM
கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி ..
மன்றத்தின் நன்மனப்பாங்கு மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.