PDA

View Full Version : வேர்ச்சொல் விளக்கங்கள்ஆதி
16-11-2007, 05:03 PM
இந்த இழையில் ஒரு சொல்லின் வேர்ச்சொல் அதாவது சொல் எப்படி பிறந்தது.. சொல்லின் மூலம் எது என இடலாம்.. எனக்கு தெரிந்த சொற்களையும் அதன் மூலங்களையும் நான் இடுகிறேன், உங்களுக்கு தெரிந்த சொல் அதன் மூலங்களை நீங்கள் இட பணிக்கிறேன்..


கட்டாயம்..

ஆயம் என்பது வரி, கட்ட வேண்டிய ஆயம் என்பதே.. கட்டாயம் என மாறிற்று..

சம்பளம்..

சம்பா - நெல் வகையை சேர்ந்தது..
அளம் - உப்பு

பழங்காலத்தில் நிலத்தில் உழைத்தவற்கு ஊதியமாய் சம்பும் அளமும் கொடுப்பராம் அதுவே சம்பளம் என்று ஆனது..

வரலாறு..

வரல் - வருவது
ஆறு - நதி

வரலாறு ஆனது

mgandhi
16-11-2007, 05:17 PM
நன்றி தொடருங்கள்..........

அமரன்
16-11-2007, 05:50 PM
நல்லமுயற்சி ஆதி.. பாராட்டுக்கள்..சக அன்பர்களும் நெய்யூற்ற எனது தாழ்மையான வேண்டுகோள்..சுடர்விட்டுப் பொலிய வாழ்த்துக்கள்..

ஆதி
16-11-2007, 05:55 PM
உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி அமரன்..

ஓவியன்
16-11-2007, 06:47 PM
ஆகா ஆதி...!!

அருமையான முயற்சியாக உளதே...!!
தொடரட்டும் உங்கள் பணி...!!

தொடர்ந்து வருவார்கள் மன்ற உறவுகளும்....!!:)

நேசம்
16-11-2007, 06:48 PM
நல்ல முயற்சி ஆதி.கற்று கொள்ளும் நிலையில் இருப்பவர்களூக்கு(என்னை மாதிரி) நல்ல பகுதி.வாழ்த்துக்கள்

அமரன் சொல்வது போல் மற்றவர்களும் தங்களுடைய பங்களிப்பை தரவேண்டும்.

அக்னி
16-11-2007, 11:09 PM
வார்த்தைகளின் ஆதி.., அருமை ஆதி...
மிகுந்த பாராட்டுக்கள்...

சிவா.ஜி
17-11-2007, 03:43 AM
மன்றம் ஒரு இலக்கியச்சுரங்கம் என்பதை நிரூபிக்க இன்னுமோர் திரி.அள்ள அள்ள குறையாத ஆழிப்பெருங்கடல் என் அன்னைத்தமிழ்.அதில் மூழ்கி முத்தெடுக்கும் இதைப்போன்ற முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவை.பாராட்டுக்கள் ஆதி.

ஆதி
17-11-2007, 05:09 AM
ஊக்கதிற்கு நன்றி..

கால்

கால் ஒரு உடல் உறுப்பு.. நகர்வதற்கு உதவி செய்வது.. கால் என்பது யாதெனின் காற்று.. காற்றும் நகர்வது.. காற்றுபோல் நகர்வதால்தான் கால் என அழைக்க ஆரம்பித்தனர் கால் என்னும் உறுப்பை..

கோடு

கோடு போல் இருந்ததால் கிளையையும் கோடு என்றுதான் அழைத்தனர்..

கோட்டான் - கோடு + ஆன்

கோடு - கிளை
ஆன் - பறவை

கோட்டில் அமர்ந்துள்ள பறவை கோட்டான் ஆனது..

அழுத்தி

அமரன் எழுதிய ஒரு கவிதையின் தலைப்பு..

அழுத்தி - அழுத்து - அழுந்து - ஆழ்

ஆழ் - ஆழம்

ஆழ் - ஆழி (கடல்)


இந்த ஆழ் தான் இந்த அழுத்தி என்னும் சொல்லின் வேர்


நன்றி.. நீங்களும் பங்குகொள்வீர் என்ற நம்பிக்கையுடன் ஆதி

lolluvathiyar
17-11-2007, 05:46 AM
அருமையா திரி தற்பொழுது இதில் வார்த்தைகள் தரமுஅளவுக்கு அடியேனுக்கு தமிழ் அறிவு இல்லை. மற்றவர்கள் கொடுப்பதை கண்டு களிகிறேன். நன்றி

அக்னி
17-11-2007, 05:58 AM
கால் ஒரு உடல் உருபு.. நகர்வதற்கு உதவி செய்வது.. கால் என்பது யாதெனின் காற்று.. காற்றும் நகர்வது.. காற்றுபோல் நகர்வதால்தான் கால் என அழைக்க ஆரம்பித்தனர் கால் என்னும் உருபை..

உறுப்பு என்பதற்கு உருபு என்னும் சொல்லும் வழக்கில் உள்ளதா..?
அல்லது எழுத்துப் பிழையா?

நிச்சயம் மன்ற உறவுகளும் உங்களோடு இணைந்து சிறப்பிப்பார்கள் என்று நம்புகின்றேன்...
மிக்க நன்றி ஆதி...

ஆதி
17-11-2007, 06:13 AM
உறுப்பு என்பதற்கு உருபு என்னும் சொல்லும் வழக்கில் உள்ளதா..?
அல்லது எழுத்துப் பிழையா?இது எழுத்துப் பிழைதான்..

உறுப்பு என்பதே சரி..

உறு - உறுதல் -- பொருந்துதல், தங்குதல், அடைதல், பெறுதல்

உறு - உறுப்பு -- பொருந்திய பாகம்..

உறு - உறவு, உறவினன், உறவாளி

எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.. பிழை களைந்தமைக்கு நன்றி அக்னி ஐய்யா..

-ஆதி

இளசு
17-11-2007, 06:21 AM
நல்ல திரி. ஆதி = மூலம் கண்டறியும் ஆதிக்கு வாழ்த்துகள்.

ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் இருக்கும் ...

ஆறு - நதி, வழி..தணி, 6,

வரலாறு - வரும் நதி? வந்த வழி?

சிந்தனை கூராக்கும் தொடர்.. தொடர்க ஆதி!

ஆதி
17-11-2007, 06:34 AM
ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் இருக்கும் ...

ஆறு - நதி, வழி..தணி, 6,

வரலாறு - வரும் நதி? வந்த வழி?வரலாறு இன்னும் சிறப்பு பெற்றுவிட்டது, இந்த விளக்கம் இன்னும் எளிமையாய் இருக்கும்..

நன்றி இளசு அவர்கட்கு..

பூமகள்
17-11-2007, 08:30 AM
அருமையான பயனுள்ள திரி துவங்கிய ஆதிக்கு எமது நன்றிகள்..!
கொடுக்குமளவு தமிழறிவு இல்லை..!
படித்து தெளியுமளவு கற்றிருக்கிறேன்..!
படித்து பயனுறுகிறேன்..!
வாழ்த்துகள் ஆதி..! தொடருங்கள் உங்களின் சேவையை..!
இளசு அண்ணாவின் விளக்கங்களுக்கு நன்றிகள்.
இன்னும் தாமரை அண்ணா, சாம்பவி அக்கா ஆகியோரின் பார்வையும் இதில் பட வேண்டும்.
அப்போ தான் இன்னும் வைரச் சுரங்கத்திலிருந்து வைரங்கள் கிடைக்கும்.

ஆதி
20-11-2007, 07:50 AM
ஞாலம்

ஞாலம் - உலகம் எல்லாரும் அறிந்ததே..

ஞாலத்தின் வேர்ச்சொல் ஞாலுதல் ஆகும்..

ஞாலுதல் - தொங்குதல்

பூமி பேரண்டத்தில் அந்தரமாய் ஞாலுவதால் ஞாலம் என பெயர்க்கொண்டது..

செந்தமிழரசி
12-03-2008, 05:01 PM
முன்பே இந்த திரியை கவனித்தேன் படிக்கவில்லை, இன்றே படிக்க வாய்ப்புகிட்டியது, சொற்களின் மூலம் ஆழம் சொல்லும் திரி பிரமாதம் ஆதி, ஏன் தொடராமல் விட்டுவிட்டீர்கள் மீண்டும் தொடர்ந்து வேர்சொற்களை விளக்குங்கள் ஆதி, கற்க ஆவலாய் காத்திருக்கிறோம்.

செல்வா
12-03-2008, 05:51 PM
அருமையான முயற்சி ஆதி.... வாழ்த்துக்கள். பல நேரங்களில் நானும் சிந்தித்திருக்கிறேன் வியந்திருக்கிறேன். இப்படி இருப்பதால் இத்தகைய வார்த்தைகள் வந்துள்ளதோ என?
புத்தகங்களைப் பார்த்து சிந்தித்ததை உறுதி செய்யும் வசதி எனக்கில்லை... மனதில் இப்படி இருக்கலாமோ எனத் தோன்றுவதை கொடுக்கலாமெனத் தோன்றுகிறது. மன்ற உறவுகள் தவறாயிருப்பின் திருத்துவர் என்ற நம்பிக்கையில்..

செந்தமிழரசி
13-03-2008, 07:43 AM
பல நேரங்களில் நானும் சிந்தித்திருக்கிறேன் வியந்திருக்கிறேன். இப்படி இருப்பதால் இத்தகைய வார்த்தைகள் வந்துள்ளதோ என?
புத்தகங்களைப் பார்த்து சிந்தித்ததை உறுதி செய்யும் வசதி எனக்கில்லை... மனதில் இப்படி இருக்கலாமோ எனத் தோன்றுவதை கொடுக்கலாமெனத் தோன்றுகிறது. மன்ற உறவுகள் தவறாயிருப்பின் திருத்துவர் என்ற நம்பிக்கையில்..

வேர்களை நூல்கள் படித்த அறியவேண்டியதில்லை அன்பரே சிந்தித்தாலே சிந்தையில் சிக்கிவிடும். உங்கள் மனதுக்கு அகபட்ட வார்த்தைகளின் வேர்களையும் கொடுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்.

அனுராகவன்
13-03-2008, 07:47 AM
ஆகா நல்லதொரு வேர்ச்சொல் விளக்கங்கள் ...
நன்றி ஆதி..
மிகவும் பயன்படக்கூடிய தகவல்கள்..
தொடர்ந்து தாங்க..

க.கமலக்கண்ணன்
13-03-2008, 07:50 AM
அருமையான செய்தி
ஆதி
இனியும் தாமதம் வேண்டாம்
ஈடில்லா வேலையை தொடங்குங்கள்...

ஆதி
14-03-2008, 03:24 PM
இந்த திரியை மேலெழுப்பிய அக்கா செந்தமிழரசிக்கு என் நன்றிகள். தமிழறிக திரியில் உங்கள் தமிழறிவும் அறிந்தேன். சொல்லின் வேரளந்து நீங்களும் விளக்கம் தரலாமே அக்கா.

அன்புடன் ஆதி

ஆதி
25-03-2008, 10:17 AM
இந்த திரியின் உறக்கத்தை களைக்கிறேன்..

ஒரு கேள்வியின் துனையுடன்..

உச்சிமுகர்தல் என்று பாரத்தியாரிடம் படித்திருக்கிறோம், பலமுறை பயன் படுதியும் இருக்கிறோம்..

இந்த வார்த்தை சரிதானா ?

முகர்தல் என்றால் என்ன ?

மோந்து என்றால் என்ன ?

உச்சிமுகர்தல் சரியானச் சொற்பயன்பாடா ?

உச்சிமோந்து என்பது சரியானச் சொற்பயன்பாடா ?

மன்ற உறவுகள் யாராவது வந்து விளக்கம் தரலாமே ?

அன்புடன் ஆதி