PDA

View Full Version : இளநகை



ஆதி
16-11-2007, 04:24 PM
உன் புன்னகையால்
புதர் விரிந்து பூத்தது
மனதினுள்..


இன்புற்று மகிழ்ந்து
பறவைகளாய் பறந்த
என் பிரியங்களை..


பாம்பாய் நெளியும்
உன் உதாசீனங்கள்
உயிர் கொத்திவிடுகின்றன..


-ஆதி

ஓவியன்
16-11-2007, 06:54 PM
இதயத்தின் ஊற்று
காதலென்பதால் தான்
காதலின் உதாசீனங்கள்
இதயத்தை அறுத்து
ரணமாக்கி விடுகின்றனவோ..!!

வழமான, வித்தியாசமான
சிந்தனையும் வரிகளும்
வாழ்த்துக்களும் பாரட்டுக்களும் ஆதி..!!

ஆதி
17-11-2007, 04:03 AM
ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி ஓவியன்

mgandhi
17-11-2007, 04:18 AM
வாழ்த்துக்கள் ஆதி

அக்னி
17-11-2007, 04:23 AM
ஆழமான பார்வையில் ஒரு கவிதை...

பறக்கும் பறவையைத்
தீண்டமுடியாது பாம்பினால்...

பறக்கும் என்னைக் கவர்ந்தாய்...
உன்னை நாடி வர...
அன்பைத் தேடி வர...
தீண்டி விட்டி,
துடிப்பை அழகு பார்க்கின்றாய்...

உன் நடிப்பில் மனதைத் தொலைத்தேன்...
இப்போ உயிரையும் தொலைத்துக்கொண்டிருக்கின்றேன்...

அபாராட்டுக்கள் ஆதி...

ஆதி
17-11-2007, 03:09 PM
நன்றி காந்தி அவர்கட்கு..

மனோஜ்
17-11-2007, 03:45 PM
பறவயாய் மனம் அருமை கவிதை நன்றி ஆதி

ஆதி
28-11-2007, 07:55 AM
பறவயாய் மனம் அருமை கவிதை நன்றி ஆதி

நன்றி மனோஜ் அவர்கட்கு..

ஆதி
28-11-2007, 07:57 AM
ஆழமான பார்வையில் ஒரு கவிதை...

பறக்கும் பறவையைத்
தீண்டமுடியாது பாம்பினால்...

பறக்கும் என்னைக் கவர்ந்தாய்...
உன்னை நாடி வர...
அன்பைத் தேடி வர...
தீண்டி விட்டி,
துடிப்பை அழகு பார்க்கின்றாய்...

உன் நடிப்பில் மனதைத் தொலைத்தேன்...
இப்போ உயிரையும் தொலைத்துக்கொண்டிருக்கின்றேன்...

அபாராட்டுக்கள் ஆதி...


கவிதைப் பின்னூட்டதுடன் வந்த பாராட்டுக்கு நன்றி அக்னி அவர்கட்கு..

-ஆதி

பென்ஸ்
30-11-2007, 01:58 PM
நல்ல கவி...
கடைசி வரி அதிகமாக இருப்பதாய் தெரிகிறது... :)

ஆதி
02-12-2007, 03:55 AM
நல்ல கவி...
கடைசி வரி அதிகமாக இருப்பதாய் தெரிகிறது... :)

ஒப்புக்கொள்கிறேன், எனக்கும் கடைசி வரிக்கும் முந்தைய வரியிலே கவிதை முடிந்ததாகதான் மனதில் தோன்றியது.. கடைசி வரியை நீக்கிவிடுகிறேன்..

பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள்..

-ஆதி