PDA

View Full Version : குப்பை மெயில்கள் - குறைக்கும் வழி



நேசம்
16-11-2007, 02:25 PM
குப்பை மெயில்கள் - குறைக்கும் வழி

1.நமது ஈமெயில் முகவரிகளை பொதுவான இடங்களில் உபயோகிப்பதை குறைக்க வேண்டும்.
உதாரணமாக செய்திகள் வெளியிடும் போது(News Group) அல்லது உரையாடல் செய்யும் போது,மேலும் சில வலைத்தளங்களை பார்வையிடும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

2.சில சமயங்களில் நமது ஈமெயில்களை பொதுவான இணையதளங்களில் கொடுக்க வேண்டாம்.

3.ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஈமெயில் முகவரிகளை பயன் படுத்தலாம்.ஒரு ஈமெயிலை தனிப்பட்ட விஷயத்திற்கும்,மற்றவை அலுவல விசயங்களை பொறுத்து பயன் படுத்தலாம்.

4.ஈமெயில்களை பொதுவான பெயர்களில் உருவாக்கமால்,தனித்தன்மையான பெயரில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

5.ஈமெயில் வடிகட்டி(filter) பயன்படுத்தலாம்.அதன் முலம் நமக்கு வரும் மெயிலகளை ஆராய்ந்து,தேவையற்றதை அழித்து மற்றவை நம்முடைய மெயில் பாக்ஸ்க்கு அனுப்பும்.பில்டர் க்கான சாப்ட்வேர்கள் சந்தையில் உள்ளன.

இதன் முலம் குப்பை மெயிலகளை பெருமளவில் குறைக்கலாம்.

நன்றி : மாலைமலர்

யவனிகா
16-11-2007, 02:28 PM
உபயோகமான செய்திகள். பகிர்ந்தமைக்கு நன்றி.

அன்புரசிகன்
16-11-2007, 03:27 PM
மின்னஞ்சல்கள் நாம் பெறும் போது தேவையற்றதாக நாம் கருதினால் அவற்றை உடனடியாக spam or junk என்று முறையிட்டுவிட்டால் மீண்டும் அவை தொந்தரவு செய்யாது. நேசம் கூறுவது போல் 2 அஞ்சலை பாவித்தலும் நன்மையே... தற்காலத்தில் நண்பர்களின் FWD அஞ்சல்கள் கூட தொந்தரவுதான். சிலர் வாசிக்காதே அனுப்பிவிடுவர். இவ்வாறு சிலர் பெண்களுக்கு அனுப்பி அவற்றை நினைத்து நாம் சிரித்த பல சுவையான சம்பவங்களும் உள்ளன... :D

mgandhi
16-11-2007, 04:30 PM
நன்றி நேசம்

மனோஜ்
17-11-2007, 12:11 PM
நல்ல தகவலுக்கு நன்றி நேசம்:)

சூரியன்
17-11-2007, 01:51 PM
நல்ல தகவல்.

leomohan
17-11-2007, 07:12 PM
நன்றி நண்பரே.

ஆனால் புத்தம் புதியதாக துவக்கிய கணக்கிலும் ஸ்பாம் வருகிறதே?

நேசம்
18-11-2007, 02:03 AM
நன்பர் லியோமோகன் அவர்களுக்கு தெரியாதா?இருந்தும் கேள்வி கேட்கிறார்.நமக்கு கணக்கு(ஈமெயில்) கொடுத்த நிறுவனம் அதை தனது சக நிறுவனங்களோடு அல்லது மற்றவர்களோடு பகிர்ந்து அளிக்கலாம்.அதனால் தான் புதிய கணக்குக்கு குப்பை மெயில்கள் வருகிறது(சரியா மோகன்)