PDA

View Full Version : உறைந்த நிமிடம்..!



பூமகள்
16-11-2007, 12:32 PM
அன்பு உறவுகளே..!

நண்பர் ஷீ-நிசியின் உயிர் (அற்ற) எழுத்து! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13336) குறுங்கவிதையின் தாக்கத்தில் எழுத நினைத்து கணநேரத்தில் உதித்தது இக்கவி..!


https://i.ibb.co/Z1rnZn1/13654-10200201427899137-1192850450-n.jpg
உறைந்த நிமிடம்..!


வெயில் பொழுது
துயில் கொள்ள
சாய்வுநாற்காலி தேடி
தோய்ந்து இருந்தது
கடலின் அருகில்..!

தூரத்து வானின்
கருத்த சீலையால்
மறைக்காத இடங்கள்
சிவந்த மேனியாய்
சித்திரம் காட்டியது!

எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!

சிறுத்தையின் வேகத்தில்
சீறி வந்தாய் என் முன்..!
சிருங்கார பார்வையில்லை..!
சிரிப்பூட்டும் இதழில்லை..!

புரியாமல் பார்க்கின்றேன்..!
புரிந்தே நீ காண மறுக்கும்
என் விழியோர நேர்பார்வை..!
புரியத்துவங்கியது ஏதேதோ என்னுள்..!

"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தை சொல்லி
விலகி நின்றாய்..!

இரு வார்த்தையில் மரணம் வருமோ?
இதயத் துடிப்பு நின்று போனது..!
உள்ளம் உடைந்து, விழி வெடித்து
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!

மேகத்துக்கு எப்படிக் கேட்டது??
முட்டிக் கொண்டு அதுவும் அழுதது..!

என் உயிர் பிய்த்து
உடல் மட்டும் சவமாய்
உறைய வைத்து
விட்டுச் சென்றாய்..!

சிதறிய கண்ணீர் மழைநீரோடு
மெல்ல உரையாடியது..!
வெகு நேரம் நின்று மழையோடு
விவரம் சொன்னேன்..!

வெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்
இதயத்து வலியோடு..!

சாலைகள் புதிதாய்..!
மழை மட்டும் என்னோடு
மருளாமல் துணையாய்..!

யாருமில்லை.. எவருமில்லை..!
இருட்டத் துவங்கும் தூரம் வரை
இரு காலும் இலக்கின்றி
நடந்து சோர்ந்தது..!

ஏதோ ஒரு கடை..!
உள்ளும் புறமும்
ஈரத்தோடு நுழைகிறேன்..!

உள்ளே அழுதாலும்
வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்..
"நக வெட்டி" வேண்டுமென்றேன்..!
வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!

மனம் கேட்டது!
உன் "நினைவு வெட்டி" கருவி!

வானம் வாஞ்சையோடு
வன்மழை மள்கி
மெல்லிய தூறலாக்கி
மனம் லேசாக்கியது..!

தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!

யவனிகா
16-11-2007, 02:39 PM
அழகான கவிதை. மொத்தக் காதலையும், குப்பைக் காகிதமாய் இறுதியில் கசக்கி எறிபவர்களும் இருக்கிறார்கள் தானே!

"நினைவு வெட்டிக் கருவி" ஒன்று இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். அது இல்லாததால் தான் தற்காலிக "நினைவு மறப்புப் பானத்தில் "தஞ்சம் புகுகிறார்கள் தேவதாசர்கள்.
புயலாக அவள், இதயத்தைக் கரை கடந்து சென்றதால் தான் கனமழை அவன் கண்களில்.
காதலின் முடிவில் கவிதை பிறக்கிறது. கூடவே தாடியும்.

காதலை வார்த்தைகளில் சிறைப் பிடித்து...சோகத்தை சுகமான வரிகளில் தந்த பூவுக்கு வாழ்த்துக்கள்.

அமரன்
16-11-2007, 03:24 PM
நகக்கூர்மை-நினைவன்மை
முகக்கீறல்-அகக்கீறல்
அழியும்வடு-அழியாவடு

வெட்டவெட்ட வளர்கிறது நகம்..
அல்லது
கலங்கள் இறக்கின்றன நிதம்..
அதனால் இருக்கிறது நகவெட்டி..

நகங்கள் தேவை அற்ற ஒன்று..!

வெட்டவே முடியாதது நினைவு
மண்வெட்டியே அதன் முடிவு..
அதனால் இல்லை நினைவுவெட்டி..

நினைவுகளே பலருக்கு வழிகாட்டி

மண்வெட்டி
காலம்தந்தால் அதுபெருமை
வருந்தி அழைத்தால் சிறுமை..

சிறுமையின் போது
உனக்குள் வெட்டபடலாம் நினைவுகள்
உன் குடும்ப உறவுகளின் கனவுகள்?????
==============================
அந்திவானம்
காட்டுவதுமழகு காட்டியதுமழகு..
ஆதிமுதல் அந்தம்வரை அழகு
மலைபோல குவிந்து கிடக்கு...!

துணை விலகும் நேரம்
திரைபோட்ட கருமுகில் வெளுக்க
திரைபோடும் நீர் விழியோரம்
சடுதியான முரண்..!கனதியான பரண்..!

மழைக்காலம் குறுகிய காலத்தில்-இம்
'மழை' நீண்டநேரம் பொழியுமாதலால்
மெலியவில்லையோ உறைந்த நிமிடம்.
நலிந்துபோகட்டும் உறையும் நிமிடங்கள்.

பாராட்டுக்கள் பூமகள்..!

பூமகள்
18-11-2007, 06:31 AM
அழியா வடு..
நகத்தின் கீறலல்ல..
அகநினைவின் கீறல்..!

மண்வெட்டி தேடி போவது
மடையர்கள் செயல்..!
மண்வெட்டி வரும் திசையறியா
வாழ்வு மையல்..!

புரிய வைத்த வரிகள்..!
புரிந்தால் பலர் பரிகள்..!
_____________________
அந்திவானில் அழகில்
அர்த்தம் பொதிந்த
நினைவலைகள்
அழியாத நிஜச்சுவடாய்..!

நிழலும் நிஜமும்
சந்திக்கும் போது
கவி பிரசவிக்கும்
கவிஞர் மனத்தில்..!

இங்கே கவியின்
முரண் சொல்லி
நலியும் நிமிடங்கள்
நாடிப்பாடும் மாண்பு
நல்லிதயத்திற்கு தெம்பு..!

பின்னூட்டம் அபாரம்..!

மிக மிக நன்றிகள் அமரன் அண்ணா.

பூமகள்
18-11-2007, 06:33 AM
அழகான கவிதை. மொத்தக் காதலையும், குப்பைக் காகிதமாய் இறுதியில் கசக்கி எறிபவர்களும் இருக்கிறார்கள் தானே!
"நினைவு வெட்டிக் கருவி" ஒன்று இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். காதலை வார்த்தைகளில் சிறைப் பிடித்து...சோகத்தை சுகமான வரிகளில் தந்த பூவுக்கு வாழ்த்துக்கள்.
முதல் பின்னூட்டமே என் அருமை யவனி அக்காவிடமிருந்து வந்தது கண்டு ஆனந்தம்.
ரொம்ப நன்றிகள் யவனி அக்கா.

இளசு
18-11-2007, 09:09 AM
இப்படி ஒரு நல்ல கவிதைக்கு ஊக்கியாய் இருந்த ஷீயின் உயிர்த்துடிப்பான கவிதைக்கு முதல் பாராட்டுகள்!

கடற்புரம்.... வரப்போகும் சோகத்துக்குப் பின்புலம்.
இருண்ட வானம் இடியாய் இறங்கப்போகும் துயரக் கட்டியம்..

வெட்டவெளியில் அழும்போதும்போது
கொட்டும் மழை பெய்தால் வசதி.
மறைக்கும்.. கழுவும்... தணிக்கும்!

விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு...

வாலி சொன்ன வரிகளை '' மறுபடியும்'' நினைக்கவைத்த
குறியீட்டு இறுதிக் காட்சி!

கவிதையைக் '' காண'' வைத்த பாமகளின் எழுத்துவன்மை
அசரவைக்கிறது!

காலில் செருப்பின்றி குடையோடு ஓடும் படப்பெண் பதறவைக்கிறாள்.

அமரனின் அசத்தல் பின்னூட்டம் மயங்கவைக்கிறது..

நல்ல படைப்பு.. நல்ல திரி.. நன்றி அனைவருக்கும்!

பூமகள்
18-11-2007, 09:24 AM
மிகுந்த நன்றிகள் இளசு அண்ணா.

அழுவது நஷ்டமா?
கொட்டும் மழையில்
அழுவது லாபம்..!
கண்ணீரும் தூரலும் வித்தியாசமின்றி
காண்பதால்..!

குடையில்லா கவிதை..!
குடை பிடித்த படம்
முரண் தான்..!

மனத்தின் பாரத்தை
மழை வந்து குறைக்குமோ?

எப்போதுமே இளசு அண்ணாவின் பின்னூட்டம்... ஒரு தனி முத்திரையைப் பதிக்கும்..! அவ்வண்ணம் இந்த கவிதைக்கும் அப்பேறு கிடைத்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..!

நன்றிகள் இளசு அண்ணா.

அறிஞர்
19-11-2007, 04:49 PM
உள்ளே அழுதாலும்
வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்..
"நக வெட்டி" வேண்டுமென்றேன்..!
வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!

மனம் கேட்டது!
உன் "நினைவு வெட்டி" கருவி!

வானம் வாஞ்சையோடு
வன்மழை மள்கி
மெல்லிய தூரலாக்கி
மனம் லேசாக்கியது..!

தூரலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!

அருமையான சோக கீதம்....
ஒவ்வொருத்தரின்... பின்னூட்டங்களால் கவிதை இன்னும் அழகு பெறுகிறது...
வாழ்த்துக்கள் பூமகளே..

ஷீ-நிசி... ஆதவா இன்னும் சிலரின் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

பூமகள்
19-11-2007, 04:52 PM
மிகுந்த நன்றிகள் அறிஞர் அண்ணா.
பின்னுட்ட ஊக்கம் கொடுத்து வாழ்த்தியமை கண்டு மட்டற்ற ஆனந்தம். :)
இன்னமும் பலரது கண்களுக்கு இக்கவி தட்டுப்படவில்லையோ??

ஆதி
19-11-2007, 05:25 PM
கொதித்து வழிந்து
இதயத்தின் அடிவாரத்தில்
தேங்கிய உணர்ச்சி சுனையில்
இன்னும்
வெடிக்கிறது வெப்ப குமிழிகள்..

ஞாபக தளத்தில்
அடிமண் கூட்
கனன்று சிவக்கிறது..

உதிரும் மேக
நீர்மங்களில் ஆற்றாமையின்
நிறமிழந்த வர்ணங்கள்..

வலிகளின்
பிழிசாறு விழிகளில்..

விழுகிற
மழையால் மண்மணக்கும்
இந்த விழிகளின்
துளியால்
மழையும் கண்ணீராய்
உறைந்த நிமிடமோ
இக்கவிதை பிறந்த நிமிடம் ?

வாழ்த்துகள்.. பாரட்டுக்கள்.. பூமகள்

-ஆதி

பூமகள்
19-11-2007, 05:36 PM
கொதித்து வழிந்து
இதயத்தின் அடிவாரத்தில்
தேங்கிய உணர்ச்சி சுனையில்
இன்னும்
வெடிக்கிறது வெப்ப குமிழிகள்..

வெப்ப வெடிகள் வெடித்து
வெந்த இதயத்தில்
துடிப்பு தணிக்கைசெய்தது..!


ஞாபக தளத்தில்
அடிமண் கூட்
கனன்று சிவக்கிறது..
நினைவுப்பரணில்
தூசுமண்டிய
துடித்த கணங்கள்..!


உதிரும் மேக
நீர்மங்களில் ஆற்றாமையின்
நிறமிழந்த வர்ணங்கள்..
முகிலுக்கும் நீருக்குமான
விவாகரத்து மோதல்..!


வலிகளின்
பிழிசாறு விழிகளில்..

வென்றது பிரிவு..!
அழுதது பரிவு..!


விழுகிற
மழையால் மண்மணக்கும்
இந்த விழிகளின்
துளியால்
மழையே மணந்தது
கண்ணீராய்..
மணக்கும் காலம்
மடைதிறந்து வரும்
மகிழ்ச்சி வெள்ளமாய்..!
மாண்புடன் காப்பது
மங்கா தமிழ்ப்பாங்கு..!


வாழ்த்துகள்.. பாரட்டுக்கள்.. பூமகள்ஆதியின் பின்னூட்டகவி அருமையோ அருமை..!
அழகான கவிதை..! மிக மிக நன்றிகள் ஆதி..!! :)

அக்னி
20-11-2007, 01:57 AM
காதல் சொல்லும் போது,
மழை..,
சிலிர்க்கும் பன்னீர்த்துளிகள்...
காதல் கொல்லும் போது,
மழை..,
துடைக்கும் கண்ணீர்த்துளிகள்...

வானவில் வர்ணம் தொலைத்து,
என்மேல்
ரணம் தொடுக்கும் வில்லானது...

காதலித்து காத்திருந்தால்,
காதல் அழித்து இடித்தாய்.
இடிந்தேன் நான்.
இதயம் இடிதாங்கி... தாங்கியது...
சோகம் சுமக்க தந்தாய்.
சுமந்தேன் நான்.
மனம் சுமைதாங்கி... தங்கியது...

ஈரலிப்பாய் இருந்தாலும்,
எரிகிறது.., உள்ளும் புறமும்...
புரிகிறது.., கண்ணீரின் எரிசக்தி...

வலிக்கிறது உயிர்வரை...
உயிருள்ளவரை வலிக்கும்,
இந்த..,
காதல் கருக்கலைப்பு...

பூமகளின் கவிதை, நெஞ்சைத் துஞ்ச வைக்கின்றது...
வரிகளிலும் நிகழக்கூடாத சோகம்... எவர் வாழ்விலும் நிழலிடவும் கூடாது...

அனைவர் பின்னூட்டங்களும் உணர்ச்சிக் குவியல்...

IDEALEYE
20-11-2007, 07:01 AM
[/COLOR][/FONT]இரு வார்த்தையில் மரணம் வருமோ?
இதயத் துடிப்பு நின்று போனது..!
உள்ளம் உடைந்து, விழி வெடித்து[FONT=TSC_Paranar][COLOR=DarkOrchid]
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!

இந்த வார்த்தைகளில் உயிர் தகிக்கின்றது.....
காதல்- உயிர்
காதல்- மெய்
உயிரற்ற வார்த்தைகள் கண்டு வந்த
இக்கவிவரிகள்
உயிர் உள்ள வரிகள்
மெய்யான வரிகள்

வாழ்த்துகள் பூமகளுக்கு
ஐஐ

பூமகள்
21-11-2007, 11:32 AM
காதல் சொல்லும் போது,
மழை..,
சிலிர்க்கும் பன்னீர்த்துளிகள்...
காதல் கொல்லும் போது,
மழை..,
துடைக்கும் கண்ணீர்த்துளிகள்...
அக்னிச்சொற்கள் படப்பட
அக்னித்துளிகளானது
மழையும் மலைத்து..!

வானவில் வர்ணம் தொலைத்து,
என்மேல்
ரணம் தொடுக்கும் வில்லானது...வண்ணம் கொண்ட வானவில்..
வண்ணமிழந்த என்னைப் பார்த்து
வெடித்துச் சிரித்தது.. இடியாய்
இறங்கியது இதயத்தில்..!

காதலித்து காத்திருந்தால்,
காதல் அழித்து இடித்தாய்.
இடிந்தேன் நான்.
இதயம் இடிதாங்கி... தாங்கியது...
சோகம் சுமக்க தந்தாய்.
சுமந்தேன் நான்.
மனம் சுமைதாங்கி... தங்கியது...உன்னையே சுமந்த
என் இதயம்..
உன் பிரிவுச்சுமையை
சுமக்க மறுப்பதேன்..??

ஈரலிப்பாய் இருந்தாலும்,
எரிகிறது.., உள்ளும் புறமும்...
புரிகிறது.., கண்ணீரின் எரிசக்தி...கண்ணீர் பெட்ரோல் எரிந்தது
மழைநீர் மெட்ரோ (மெட்ரோ வாட்டர்*)
ஆகி குளிர்த்தது..

வலிக்கிறது உயிர்வரை...
உயிருள்ளவரை வலிக்கும்,
இந்த..,
காதல் கருக்கலைப்பு...உன் வரை,
கலைந்து போகும் மேகம்
போல் கலைக்கப்பட்டது
காதல்..!
என் வரை,
முளைத்து விட்ட வேரை
பிடிங்கி எறியப்பட்டது
காதல்..!


அக்னித் துளிகள் ஒவ்வொரு வரிகளும் சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்.
பின்னூட்டக் கவி கொடுத்து அசத்தியதுக்கு மிக்க நன்றிகள் அண்ணா.

குறிப்பு:
* மெட்ரோ வாட்டர் - சென்னை வாழ் மக்களுக்கு கிடைக்கும் குடிநீர்.

பூமகள்
21-11-2007, 11:36 AM
உயிரற்ற வார்த்தைகள் கண்டு வந்த
இக்கவிவரிகள்
உயிர் உள்ள வரிகள்
மெய்யான வரிகள்
வாழ்த்துகள் பூமகளுக்கு
உங்களின் பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றிகள் ஐடியல் ஐ..! :)

பென்ஸ்
21-11-2007, 11:58 AM
சிறந்த கவி...
மிக அருமையான பின்னூட்டம்...
இதற்கு மேல் என்னிடம் இருந்து "இந்த கவிதையை ஒட்டி வைக்கிறேன்".....

பூமகள்
21-11-2007, 12:18 PM
சிறந்த கவி...
மிக அருமையான பின்னூட்டம்...
இதற்கு மேல் என்னிடம் இருந்து "இந்த கவிதையை ஒட்டி வைக்கிறேன்".....
மிக்க நன்றிகள் பென்ஸ் அண்ணா. :)
ஆனால் இந்த வரிகள் என் மரமண்டைக்கு புரியவில்லையே..! :confused::confused:
கோபிக்காமல் விளக்கமளிப்பீர்களா??:frown:

சிவா.ஜி
21-11-2007, 12:24 PM
மிக்க நன்றிகள் பென்ஸ் அண்ணா. :)
ஆனால் இந்த வரிகள் என் மரமண்டைக்கு புரியவில்லையே..! :confused::confused:
கோபிக்காமல் விளக்கமளிப்பீர்களா??:frown:

அதுவா...இனி இந்தக் கவிதை முகப்பிலேயே இருக்கும்.புதிய கவிதைகள் பதியும்போது பழையகவிதைகள் பின்னுக்குத்தள்ளப்பட்டு மறந்திருக்கும்.தேடிப்பி(ப)டிக்க வேண்டும் ஆனால் இப்படி ஒட்டினால் அங்கேயே இருக்கும்.இந்த கௌரவத்தை அடைந்ததற்கு வாழ்த்துகள் தங்கையே.

பூமகள்
21-11-2007, 12:27 PM
ஆஹா.. இப்பத்தான் Sticky என்று இருப்பதைப் பார்த்துட்டு வந்தேன் சிவா அண்ணா. உங்களின் விளக்கத்துக்கு மிக்க நன்றிகள்.

ஒட்டி வைக்கும் அளவு என் கவி மன்றத்தில் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது கண்டு மகிழ்கிறேன்.

இந்த பாக்கியம் பெற காரணமான பென்ஸ் அண்ணாவுக்கு நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன். :)

ஆதவா
21-11-2007, 02:07 PM
அபாரம்.. அபாரம். சொல்ல வார்த்தை ஏதுமில்லை

வெயில் பொழுதின் கடலருகே தூக்கமும்,
கவர்ச்சி காட்டும் சிவந்த வானமும்
கவிதையில் கற்பனையை முட்டி நிற்கிறது என்றால்

கொடியில் மாட்டிய பட்டம், முட்டி நிற்கும் யதார்த்தம்..
ஹாட்ஸ் ஆஃப்...

மீண்டுமொரு சிறப்பு, "நினைவு வெட்டி."

அப்படி ஒன்று இருந்திருந்தால், நான் திடகாத்திரமாய் இருந்திருக்கக் கூடும்...

கவிதை அழகாக கனமழையாய் கொட்டி தீர்த்துவிட்டது....

நனைந்த சலதோஷத்தில் நான்

வாழ்த்துகள்

வசீகரன்
21-11-2007, 02:24 PM
..கவிதை போன்று இல்லாமல் ஒரு சிறுகதை
படித்த உணர்வை ஏற்படுத்தியது... இந்த பதிவு.... சற்று நேரம்
உணர்வுகள் அந்த நிகழ்வுடன் கலந்திருந்தது....!
எழுத்துக்களில் உள்ள ஜீவன் அவ்வளவிற்க்கு காரணியாகிறது....!

வியக்க வைத்தீர்கள் பூமகள்....!

அருகில் நீ தானே புன்னகையே..!
வசீகரன்

பூமகள்
21-11-2007, 03:13 PM
அபாரம்.. அபாரம். சொல்ல வார்த்தை ஏதுமில்லை

வெயில் பொழுதின் கடலருகே தூக்கமும்,
கவர்ச்சி காட்டும் சிவந்த வானமும்
கவிதையில் கற்பனையை முட்டி நிற்கிறது என்றால்

கொடியில் மாட்டிய பட்டம், முட்டி நிற்கும் யதார்த்தம்..
ஹாட்ஸ் ஆஃப்...

மீண்டுமொரு சிறப்பு, "நினைவு வெட்டி."

அப்படி ஒன்று இருந்திருந்தால், நான் திடகாத்திரமாய் இருந்திருக்கக் கூடும்...

கவிதை அழகாக கனமழையாய் கொட்டி தீர்த்துவிட்டது....
நனைந்த சலதோஷத்தில் நான்
வாழ்த்துகள்
நான் சொற்ப நேரத்தில் எழுதி.. பதிவிட்ட இக்கவி, நானே எதிர்பாராத வகையில் இத்தனை பாராட்டு பெற்றிருப்பது கண்டு உண்மையில் ஆச்சர்யம் அடைகிறேன்.

அதில் இருக்கும் எதார்த்தமும் கற்பனையும் எனக்கு இப்போது தான் பலர் சொல்லப்புலப்படுகிறது.

நான் கண்டுகொள்ள மறந்த கற்பனையும் எதார்த்தமும் கையாண்ட விதத்தை அழகாய் அடையாளப்படுத்திக் காட்டிய ஆதவாவுக்கு மிக்க நன்றிகள்.

வைரமுத்து பாணியில் எழுத வேண்டுமென்று எழுதி இறுதில் நீளமாகிவிட்ட கவிதை.

உண்மையில் இந்தக் கவி மன்றத்து வைரங்களின் குட்டு பெற்றதால் தான் அழகாய் ஜொலிக்கிறது.

பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஆதவா. :)

பூமகள்
21-11-2007, 03:29 PM
..கவிதை போன்று இல்லாமல் ஒரு சிறுகதை
படித்த உணர்வை ஏற்படுத்தியது... இந்த பதிவு.... சற்று நேரம்
உணர்வுகள் அந்த நிகழ்வுடன் கலந்திருந்தது....!
எழுத்துக்களில் உள்ள ஜீவன் அவ்வளவிற்க்கு காரணியாகிறது....!
உண்மை தாங்க வசீ..!
நான் எழுதி முடித்து பார்த்ததும் எனக்கும் இப்படித்தான் தோன்றியது.
அதனால் தானோ என்னவோ,

வடிவம் சிறுக்க,
வார்த்தைகள்
வெட்ட நினைத்தாலும்
வெட்ட மறுத்து
விட்டுச் சென்றது
கணினி கர்சர்..!

மிக்க நன்றிகள் வசீகரன்.


வியக்க வைத்தீர்கள் பூமகள்....!
அருகில் நீ தானே புன்னகையே..!
வசீகரன்
"ஆமாம் வசீ"
சொல்லிச் செல்கிறது
சிரிப்பூ...!! :)

ஷீ-நிசி
21-11-2007, 04:41 PM
தினமும் அவனும் அவளும் சந்திக்கின்ற இடம்....
அவனுக்காய் அவள் காத்திருக்கிறாள்... அழத்தயாராய் வானம்.. இவளின் நிலையை முன்பே உணர்ந்திருக்ககூடுமோ!!


எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!

ஆசையாய் ஓடிவருவான் அவளைக்கான எப்பொழுதும். இன்றோ அவன் கண்களில் காதலில்லை. கனிவு இல்லை.

மேலே மேகம் மட்டும் கருத்திருக்கவில்லை..
இங்கே இவனின் முகமும் கூடத்தான் கருத்திருக்கிறது.

நேர் பார்வை காண இயலாமல் இருவார்த்தையில் அவளை மரணத்தின் விளிம்பிற்கு அழைத்து சென்றான்..

அன்று மூன்று வார்த்தையில் காதலை உரைத்தவன்,
இன்று இரண்டு வார்த்தையில் காதலை மறைத்தான்!

சொல்லிவிட்டு சென்றவனை மழைகோடுகளின் வழியே பார்த்துக்கொண்டிருந்தவள், நினைவுகள் பின்னோக்கியபடி நடக்கிறாள், அவள் கால்கள் முன்னோக்கியபடி செல்கின்றன...

என்ன சொல்றது!! வெகுவாய் மனதைக் கவர்ந்துவிட்டது இந்த கவிதை!

வாழ்த்துக்கள் பூமகள்!

இ.பணம் 1000

அறிஞர்
21-11-2007, 04:57 PM
பல கவிஞர்களை கவர்ந்ததால்.. ஒரு சிறிய அன்பளிப்பு.. இபணம் 2500

பூமகள்
21-11-2007, 04:59 PM
பல கவிஞர்களை கவர்ந்ததால்.. ஒரு சிறிய அன்பளிப்பு.. இபணம் 2500
மிக மிக மிக மிக.................................. நன்றிகள் அறிஞர் அண்ணா. :)

ஆதவா
22-11-2007, 03:14 AM
பல கவிஞர்களை கவர்ந்ததால்.. ஒரு சிறிய அன்பளிப்பு.. இபணம் 2500

ஆளாளுக்குப் பணம் கொடுக்கறீங்க. என்கிட்டதான் ஒண்ணுமே இல்லையே!!! :)

வெகு நாட்களுக்குப் பிறகு ஷி−நிசியின் விமர்சனம்......

அப்படியே அமுக்கிப் போடுங்க கவிஞர்களே!!

பென்ஸ்
23-11-2007, 03:17 AM
மன்றத்தில் நான் வந்த காலங்களில் விமர்சணக்களும், கவிதை அலசலும் கொடி கட்டி பறக்கும்... நண்பன், ப்ரியன், கவிதா இவர்களின் ஆரோக்கியமான, ஆளமான கவிதை அலசல்கள் என்னை என்றுமே பொறாமை பட செய்யும்....
பணிபளு, மற்றும் தனிபட்ட காரணக்களுக்காக மன்றம் வரமுடியாமல் இவர்கள் இருக்கையில் இந்த திரியில் இத்தனை அருமையான கவிதைகளையும், அடக்ற்க்கு பாசிடிவான அலைவரிசை பின்னூட்டங்களும்... இதை விட அழகான விமர்சனக்கள் கொடுக்க சுஜாதா, மதன் போன்றவர்களால் முடியுமா என்பது சந்தேகமாக்கும் அளவிற்கு.....
நன்றி நண்பர்களே.....

தாமரை
26-11-2007, 06:56 PM
அப்பப்ப கடிக்க வேண்டியது அப்புறம் சித்தெறும்புன்னு சொல்லிக்க வேண்டியது. அம்மிணி, நடுராத்திரியாயிடுச்சி, நெசமாவே செந்தாமரை கணக்கா கண்ணு செவ செவன்னு இருக்கு. நாளைக்கு படிக்கிறேன்.. ஆனா என்ன அம்மிணி சொகமா ஆரம்பிச்சி சோகமா கொண்டு போயிட்டீங்க அம்மிணி..

என்ன பிரச்சனைன்னு கோடி கூட காட்டலீங்க அம்மிணி.. என்னமோ ஒரு பாறங்கல்லு நங்குன்னு நெத்தியில விழுந்திட்ட மாதிரி ரெண்டு வார்த்தையைப் போட்டு ஒலகத்தையே பொரட்டி போட்டு வச்சிருக்கீங்க அம்மிணி.

பொண்ணுங்கன்னாவே இப்புடித்தான் அம்மிணி.. பட்டுன்னு மனசில கொஞ்சம் உண்ர்ச்சி மாறினாலும் பொங்கி வழிஞ்சதுக்கப்புறம் தான் நிதானமாவாங்க அம்மிணி, அந்த உணர்ச்சி வெள்ளத்தில எதையும் சொல்லக்கூடாது அம்மிணி.. கொஞ்சம் வேகம் கொறைஞ்சிடுச்சின்னா, அதுக்குப் பின்னாடி சொன்னாதான் அம்மிணி யோசிக்கவே தோணும்.

ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கணும் அம்மிணி.. சோகத்தில கூட சில சமயம் சுகமிருக்கும், அப்போ அழகா கவிதை வரும். ஆனா சிலசமயம் நாம கோபத்தை சோகம்னு எடுத்துக்கிறோம் அம்மிணி. அந்தக் கோபம் இருக்கே, ஆத்தாமையினானால, நம்மளை வெடிக்க வச்சுரும் அம்மிணி.. அந்த ஆத்தாமை தான் வெடிக்கும். .ஏன்னா அது அழுத்தி அடக்கி வச்சிருக்கிற ஒண்ணு அம்மிணி. அதனால அது வெடிச்சுதான் அடங்கும்..

உன்னோட கவிதையில உணர்ச்சி இருந்த அளவிற்கு உண்மை இல்ல அம்மிணி. உண்மை இருந்திருந்தா கவிதை அழகா இருக்காது. இந்த சூழ்நிலையில அந்த வெடிப்பு இருக்கும்.. கவிதை அழகா இருக்கே அம்மிணி,, அது தப்பா சரியா?

பூமகள்
27-11-2007, 07:49 AM
அப்பப்ப கடிக்க வேண்டியது அப்புறம் சித்தெறும்புன்னு சொல்லிக்க வேண்டியது. அம்மிணி, நடுராத்திரியாயிடுச்சி, நெசமாவே செந்தாமரை கணக்கா கண்ணு செவ செவன்னு இருக்கு. நாளைக்கு படிக்கிறேன்.. ஆனா என்ன அம்மிணி சொகமா ஆரம்பிச்சி சோகமா கொண்டு போயிட்டீங்க அம்மிணி..

என்ன பிரச்சனைன்னு கோடி கூட காட்டலீங்க அம்மிணி.. என்னமோ ஒரு பாறங்கல்லு நங்குன்னு நெத்தியில விழுந்திட்ட மாதிரி ரெண்டு வார்த்தையைப் போட்டு ஒலகத்தையே பொரட்டி போட்டு வச்சிருக்கீங்க அம்மிணி.
உன்னோட கவிதையில உணர்ச்சி இருந்த அளவிற்கு உண்மை இல்ல அம்மிணி. உண்மை இருந்திருந்தா கவிதை அழகா இருக்காது. இந்த சூழ்நிலையில அந்த வெடிப்பு இருக்கும்.. கவிதை அழகா இருக்கே அம்மிணி,, அது தப்பா சரியா?
என் கவிதைய வச்சி.. இந்தன பெரிய கருத்து சொன்ன நம்ம குரு தாமரை அண்ணாவுக்கு ரொம்ப நன்றிங்க..!!
உண்மையோ, பொய்யோ... கற்பனைகள் நிஜமாவதும், நிஜம் கற்பனையாவதும் யாரால் சொல்ல முடியுமுங்கண்ணா??
இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா..!:D

தாமரை
27-11-2007, 08:42 AM
நான் கவிதைகளை வெறுமனே விமர்சனம் செய்வதில்லை என அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு எசகுபிசகான வார்த்தையை விமர்சனத்தில போட்டதனால, கொஞ்சம் விளக்கிடலாம்னுதான் இந்த மறுபதிப்பு. கவிதையில் பல நல்ல விஷயங்கள் இல்லாட்டி இப்படி விரிவான அலசல் பண்ண வேண்டிய அவசியமே இருக்காது.

நம்ம விமர்சனர்களுக்கு எப்படி நல்ல விஷயங்கள் கண்ணுக்கு பளீர்னு தெரியுதோ அதே மாதிரி எந்த ஒரு கவிதையைப் படிக்கும்போதும் அது ஒரு படமா அதில நான் ஹீரோவா, ஹீரொயினா ஜோக்கரா என் மனதில ஓடும். ஓட்டிப்பாக்கிறேன். மக்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தே பழக்கப்பட்ட மனசுக்கு இதை இப்படி மாத்தலாமே! இது இப்படி அழகா இருக்குமேன்னுதான் தோணுதே ஒழிய இது சூப்பர் அது சூப்பர்னு சொல்லி நல்ல பெயர் எடுக்க தோணுவதில்லை. நண்பர்கள் கூட்டமும் அதையே என் கேரக்டரா ஏத்துக்கறதினால பிரச்சனை இல்லை.

இதை பூமகளுக்கு தனிமடல்ல அனுப்பலாம். ஆனா இங்க எல்லாத்துக்கும் தனித்தனியாவா டியூஷன் எடுக்க முடியும். படிக்கற எல்லாத்துக்கும் பொதுவில வச்சா, கவிதையை உள்வாங்கி கண்மூடி அனுபவித்துப் பார்க்கிற அலசல் வளரும்கற ஒரே நோக்கத்தில் இங்கே பதிகிறேன்.

1. எந்த உண்மைக் காதலனும் இருவார்த்தைகளில் காதலை முறிப்பதில்லை. அதுவும் நேரில் வந்து.

2. எந்த உண்மைக் காதலியும் மறந்துவிடு என்று இரு சொல்லில் வெட்டி ஓடும் காதலனின் அந்த இரு சொற்களை நம்பி விடுவதில்லை.

3. ஏமாற்றங்களை கவிதையாய் கருவுற்று, பிரசவிக்க ஆகும் வலிமிகுந்த காலங்கள் அந்த அதிர்வை அந்த உணர்வை மந்தப் படுத்தி விடுகின்றன.

இரு வார்த்தையில் மரணம் வருமோ?
இதயத் துடிப்பு நின்று போனது..!
உள்ளம் உடைந்து, விழி வெடித்து
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!

இதை அனுபவித்தவர் இவ்வரிகளை எழுத முடியாது. இவ்வரிகள் ஒரு உணர்வு. இதில் வெளிவந்த என்பதை தெரித்த என்று மாற்றிப்பாருங்கள். உணர்வு புரியும். இது போன்ற சில வார்த்தைத் தேர்வுகள்

வெளிவந்த கண்ணீர் மழைநீரோடு
மெல்ல உரையாடியது..!
வெகு நேரம் நின்று மழையோடு
விவரம் சொன்னேன்..!

உணர்வுகளுக்கு இந்த வரிகளும் பொருந்தவில்லை. இது இரண்டு நாட்கள் கழித்தோ வீட்டிற்கு வந்தபின்போ கூட நடக்கும். ஆனால் இந்த சுயவிரக்கம் என்பது சூறாவளிப் புயல் கடந்த பின்னே வரும் பெருமழை..

வானம் வாஞ்சையோடு
வன்மழை மள்கி
மெல்லிய தூரலாக்கி
மனம் லேசாக்கியது..!

இதுவும் அதுபோலத்தான்.. வீட்டில் பெருங்குரலெடுத்து அழுது அரற்றி தெளிந்த பின் வரவேண்டிய தூறல் முன்னமே வந்து விட்டிருக்கிறது.

இப்போ மற்றுபடி கவிதையை படிங்க.. பத்தி பத்தியா.. படத்தை பார்க்காதீங்க கண்மூடி பூமகள் சொன்ன சம்பவங்களை உங்களுக்கு நடந்ததா யொசிங்க..

அப்புறம் மறுபடியும் விமர்சனம் பண்ணுங்க, ஏன்னா ஒவ்வொரு கவிஞனும் அனுபவிக்க வேண்டிய ஒரு உணர்வு இதில ஒளிஞ்சிருக்கு,

பூமகள்
27-11-2007, 10:29 AM
நீண்ட ஆழமான விமர்சனத்துக்கு மிகுந்த நன்றிகள் தாமரை அண்ணா.
உங்களின் விமர்சனத்துக்கு மன்றத்து வைரங்கள் வந்து பதில் விமர்சனம் தருவார்கள் என்று காத்திருக்கிறேன்.

பணிவுடன்,

பென்ஸ்
27-11-2007, 01:18 PM
தாமரை....
எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை...
எல்லா விரல்களும் ஒரே பணியை செய்வதும் இல்லை...
மனிதனிலும் அப்படியே தாமரை... ஒரு நிகழ்வுக்கான செயலை இதே போல்தான் எல்லோரும் ஒன்று போல் உணர இயலாது.... ஆனால் இந்த மனிதர்களாகிய நாம் எப்போதும் நாம் உணர்வது போல் அடுத்தவரும் உணர வேண்டும் என்று நினைக்கிறோம்....
கவிதையை படிக்கும் போது அந்த கதாபாத்திரமாக நீங்கள் மாறுவது மகிழ்ச்சியே.. ஆனால் அனைத்து மனங்களையும் பிரதிபலிக்க கூடிய ஒரு கதாபாத்திரமாக மாறுவது கடினமே.... அது நடக்கவில்லையோ என்ற ஒரு ஐயம்....


1. எந்த உண்மைக் காதலனும் இருவார்த்தைகளில் காதலை முறிப்பதில்லை. அதுவும் நேரில் வந்து.


பேர்பேக்ட்... ஆனால் எத்தனையோ பேசியிருந்தாலும் "அந்த" இரண்டு வார்த்தை மட்டும் தானே நியாபகம் இருக்கும்... மனதை குத்தும்...
"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தைகள் பின்னே புள்ளிகள்... நிரப்பி கொள்ளும் தேவையானால் (சப்பை கட்டுதான்)

2. எந்த உண்மைக் காதலியும் மறந்துவிடு என்று இரு சொல்லில் வெட்டி ஓடும் காதலனின் அந்த இரு சொற்களை நம்பி விடுவதில்லை.

நம்பிவிடுவதில்லை ... ஆனால்... காயபட்டு நியாயபடுத்த முயற்சிக்கிறான்...


3. ஏமாற்றங்களை கவிதையாய் கருவுற்று, பிரசவிக்க ஆகும் வலிமிகுந்த காலங்கள் அந்த அதிர்வை அந்த உணர்வை மந்தப் படுத்தி விடுகின்றன.


ஒது கொஞ்சம் ஓவரா தெரியலை உமக்கு....
குழந்தை பிறக்கும் வலியை எழுதுபவள் குழந்தை பிறக்கும் போதா எழுதுவாள்.... காலம் தாழ்த்தி எழுதிய உடன் அந்த நிமிட விலிதான் இல்லாமல் போய்விடுமா....

படம், கவிதையை படிக்கும் போது பாதித்திருக்கலாம்...
ஆனால் ....
........
............
... சிறு புன்னகையுடன்...

பென்ஸ்
27-11-2007, 01:28 PM
உங்களின் விமர்சனத்துக்கு மன்றத்து வைரங்கள் வந்து பதில் விமர்சனம் தருவார்கள் என்று காத்திருக்கிறேன்.
பணிவுடன்,

பூ...
இப்படி ஜகா வாங்குவது சரியாகபடவில்லை... உங்கள் கருத்தை சொல்லலாம்.... ஆரோக்கியமான விவாதங்களுக்கு இதுதான் அவசியம்....

பூமகள்
27-11-2007, 01:34 PM
பூ...
இப்படி ஜகா வாங்குவது சரியாகபடவில்லை... உங்கள் கருத்தை சொல்லலாம்.... ஆரோக்கியமான விவாதங்களுக்கு இதுதான் அவசியம்....
நன்றிகள் அண்ணா.
கருத்துடன் வருகிறேன். :)

தாமரை
27-11-2007, 01:49 PM
தாமரை....
எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை...
எல்லா விரல்களும் ஒரே பணியை செய்வதும் இல்லை...
மனிதனிலும் அப்படியே தாமரை... ஒரு நிகழ்வுக்கான செயலை இதே போல்தான் எல்லோரும் ஒன்று போல் உணர இயலாது.... ஆனால் இந்த மனிதர்களாகிய நாம் எப்போதும் நாம் உணர்வது போல் அடுத்தவரும் உணர வேண்டும் என்று நினைக்கிறோம்....
கவிதையை படிக்கும் போது அந்த கதாபாத்திரமாக நீங்கள் மாறுவது மகிழ்ச்சியே.. ஆனால் அனைத்து மனங்களையும் பிரதிபலிக்க கூடிய ஒரு கதாபாத்திரமாக மாறுவது கடினமே.... அது நடக்கவில்லையோ என்ற ஒரு ஐயம்....



பேர்பேக்ட்... ஆனால் எத்தனையோ பேசியிருந்தாலும் "அந்த" இரண்டு வார்த்தை மட்டும் தானே நியாபகம் இருக்கும்... மனதை குத்தும்...
"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தைகள் பின்னே புள்ளிகள்... நிரப்பி கொள்ளும் தேவையானால் (சப்பை கட்டுதான்)


நம்பிவிடுவதில்லை ... ஆனால்... காயபட்டு நியாயபடுத்த முயற்சிக்கிறான்...



ஒது கொஞ்சம் ஓவரா தெரியலை உமக்கு....
குழந்தை பிறக்கும் வலியை எழுதுபவள் குழந்தை பிறக்கும் போதா எழுதுவாள்.... காலம் தாழ்த்தி எழுதிய உடன் அந்த நிமிட விலிதான் இல்லாமல் போய்விடுமா....

படம், கவிதையை படிக்கும் போது பாதித்திருக்கலாம்...
ஆனால் ....
........
............
... சிறு புன்னகையுடன்...

உங்கள் எழுத்துக்களை விட புள்ளிகள் அதிகம் பேசுகின்றன பென்ஸ்

அந்தப் புள்ளிகளையே கேட்கிறேன். நான் சொன்னது சரியா இல்லையா?

ஆனால், பல வித சூழ்நிலைகளில் காதலர்கள் பிரிந்ததைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு வகை உணர்வு.

இங்கு பூமகள் வடித்த சம்பவம் போலவும் கண்டிருக்கிறேன்.. கல்லூரிக் காலத்தில்..

அந்த நிமிடத்தில் இருந்த உணர்வுகள் சில காலத்திலேயே மாறிப்போனதையும் கண் கூடாக கண்டிருக்கிறேன்.. நான் பதித்த அந்த நிமிடங்கள் அந்த உணர்வுகளைக் காட்டியவளுக்கே மறந்து போயிருந்தது உள்வாங்கிய கவிஞனுக்கு வார்த்தைகளில் வடித்த கவிஞனுக்கு மறக்கவில்லை. 1987 களில் எழுதிய கவிதை வரிகளை உமக்கு வரி பிசகாமல் சுருதி மாறாமல் ஒப்பித்து இருக்கிறேன். நினைவிருக்கிறதா?


நான் சொன்னது புரியவில்லையா? இந்தக் கவிதையில் அழகு இருக்கிறது. இதைக் கற்பனையில் கண்டு எழுதிய திறமை இருக்கிறது. ஆனால் அதன் வலி இன்னும் மிக அதிகம்.

பூமகள்
27-11-2007, 01:56 PM
இதை பூமகளுக்கு தனிமடல்ல அனுப்பலாம். ஆனா இங்க எல்லாத்துக்கும் தனித்தனியாவா டியூஷன் எடுக்க முடியும். படிக்கற எல்லாத்துக்கும் பொதுவில வச்சா, கவிதையை உள்வாங்கி கண்மூடி அனுபவித்துப் பார்க்கிற அலசல் வளரும்கற ஒரே நோக்கத்தில் இங்கே பதிகிறேன்.
அது தான் எங்க குரு தாமரை அண்ணா.:icon_b:
எல்லாருக்கும் பயன்படும்படி விவாதிப்பது உங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. நன்றிகள் அண்ணா.

1. எந்த உண்மைக் காதலனும் இருவார்த்தைகளில் காதலை முறிப்பதில்லை. அதுவும் நேரில் வந்து.
இருவரியில் முறிப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்த கவிதை இறுதிக்கட்ட சம்பவ நிகழ்வின் விவரிப்பு தான்.
இதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவையை இங்கு விவரிக்காததால் கூட இப்படி உங்களுக்கு தோன்றியிருக்க கூடும்.
பிரச்சனைகள் வராமல் பிரிவு வருமா அண்ணா?
எடுத்தவுடன் யாரும் இப்படி சொல்லி பிரிவதில்லையே..!!

2. எந்த உண்மைக் காதலியும் மறந்துவிடு என்று இரு சொல்லில் வெட்டி ஓடும் காதலனின் அந்த இரு சொற்களை நம்பி விடுவதில்லை.

உண்மை. யாரும் நம்புவதில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டு, இறுதியில் அது ஜெயிப்பதை பார்க்கும் போது நம்பாமல் இருக்க முடியாதே..!

3. ஏமாற்றங்களை கவிதையாய் கருவுற்று, பிரசவிக்க ஆகும் வலிமிகுந்த காலங்கள் அந்த அதிர்வை அந்த உணர்வை மந்தப் படுத்தி விடுகின்றன.
மனத்தின் காயத்தில் எப்போது அதை கிளறினாலும் மனம் அதே வலியைத்தான் கொடுக்கும்.
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு" என்ற வள்ளுவர் கூற்று ஒன்றே போதுமே... வார்த்தைகளின் வலி சொல்ல...!!

இதை அனுபவித்தவர் இவ்வரிகளை எழுத முடியாது. இவ்வரிகள் ஒரு உணர்வு. இதில் வெளிவந்த என்பதை தெரித்த என்று மாற்றிப்பாருங்கள். உணர்வு புரியும். இது போன்ற சில வார்த்தைத் தேர்வுகள்
இங்கே சொல்ல வந்த கருதானே அண்ணா முக்கியம். மோனை காரணமாக வெளிவந்த என்று போட்டேன்.

பென்ஸ்
27-11-2007, 02:05 PM
உங்கள் எழுத்துக்களை விட புள்ளிகள் அதிகம் பேசுகின்றன பென்ஸ்
.
பெரும்புள்ளிகள் பேசும்போது அப்படிதான்,,, தாமரை...:rolleyes:

பூமகள்
27-11-2007, 02:11 PM
அந்த நிமிடத்தில் இருந்த உணர்வுகள் சில காலத்திலேயே மாறிப்போனதையும் கண் கூடாக கண்டிருக்கிறேன்..

மாறிப்போனது போல் நடித்திருக்கலாம் அல்லது ஒரு தோற்றத்தை(Illusion) ஏற்படுத்தியிருக்கலாம். எந்த மனிதருக்குள்ளும் ஆறாத வடுக்கள் நிச்சயம் இருக்கும். அவை காலத்தாலும் அழிக்க முடியாதவை.
வாழ்வு அந்த நிகழ்வோடு நின்றுவிடுவதில்லை. அடுத்தடுத்த கட்டத்துக்கு நம்மை எடுத்துச் செல்கையில் வலுக்கட்டாயமாகவே அவற்றை மறந்தாக வேண்டிய நிலைக்கு மனிதம் தள்ளப்படும். அப்போது தான் வாழ்வு இனிக்கும் என்ற நிலை உருவாகும்.
இப்படி மறக்க முடியாதவர்கள் தான் தற்கொலைக்கும், குடிபோதைக்கும் அடிமையாகி வாழ்வை வீணாக்குகிறார்கள்.

நான் பதித்த அந்த நிமிடங்கள் அந்த உணர்வுகளைக் காட்டியவளுக்கே மறந்து போயிருந்தது உள்வாங்கிய கவிஞனுக்கு வார்த்தைகளில் வடித்த கவிஞனுக்கு மறக்கவில்லை. 1987 களில் எழுதிய கவிதை வரிகளை உமக்கு வரி பிசகாமல் சுருதி மாறாமல் ஒப்பித்து இருக்கிறேன். நினைவிருக்கிறதா?
என் கூற்றுப் படி, உணர்வு மறந்திருக்காது. மறைக்கப்பட்டிருக்கும்... மறத்துப்போகப்பட்டிருக்கும். அது காலத்தின் கட்டாயமாக இருக்கலாம்.

நான் சொன்னது புரியவில்லையா? இந்தக் கவிதையில் அழகு இருக்கிறது. இதைக் கற்பனையில் கண்டு எழுதிய திறமை இருக்கிறது. ஆனால் அதன் வலி இன்னும் மிக அதிகம்.
உண்மை அழகாய் இருக்காது என்பது உங்களின் வாதம். அதற்கு முரணாய் பதிவுகள் வந்தால்??

தாமரை
27-11-2007, 02:14 PM
சோகத்தில கூட சில சமயம் சுகமிருக்கும், அப்போ அழகா கவிதை வரும். ஆனா சிலசமயம் நாம கோபத்தை சோகம்னு எடுத்துக்கிறோம் அம்மிணி. அந்தக் கோபம் இருக்கே, ஆத்தாமையினானால, நம்மளை வெடிக்க வச்சுரும் அம்மிணி.. அந்த ஆத்தாமை தான் வெடிக்கும். .ஏன்னா அது அழுத்தி அடக்கி வச்சிருக்கிற ஒண்ணு அம்மிணி. அதனால அது வெடிச்சுதான் அடங்கும்

-------------------------------------------------------------
பென்ஸூ! நீங்களும் பார்த்திருப்பீங்களே இதை.
உங்களால் எழுத முடியுமா முழு உணர்வுகளையும் வெளிப்படுத்தி..?
காமெடியாய் உங்களைப் பார்த்து நீங்களே சிரித்துக் கொள்கிறீர்கள் அல்லவா?

இலக்கியன்
09-12-2007, 10:22 AM
அழகான சொல் அலங்காரம் அத்துடன் உவமான உவமேயங்களுடன் அழகான கவிதை வாழ்த்துக்கள் பூமகள்

ஆர்.ஈஸ்வரன்
13-12-2007, 08:46 AM
உங்கள் கவிதையை கண நேரத்தில் கன மழையாய் பொழிந்துவிட்டீர்கள்

RRaja
21-12-2007, 02:46 AM
இப்போது கனமழை
என் வீட்டில்..!
மனது கனக்கிறது. கவிதை தானே எனும்போது லேசாகிறது. பாராட்டுக்கள் இருவருக்கும்.

பூமகள்
21-12-2007, 05:42 AM
அழகான சொல் அலங்காரம் அத்துடன் உவமான உவமேயங்களுடன் அழகான கவிதை வாழ்த்துக்கள் பூமகள்
மிகுந்த நன்றிகள் இலக்கியன். :icon_rollout:
உங்கள் பாராட்டு கண்டு மகிழ்ச்சி. :)

உங்கள் கவிதையை கண நேரத்தில் கன மழையாய் பொழிந்துவிட்டீர்கள்
நன்றிகள் ஈஸ்வரன். :)

மனது கனக்கிறது. கவிதை தானே எனும்போது லேசாகிறது. பாராட்டுக்கள் இருவருக்கும்.
நன்றிகள் ராஜா.
உங்களைப் பற்றி அறிமுகப்பகுதியில் அறிமுகம் தரலாமே..!!
உங்களின் பாராட்டு கண்டு மகிழ்ச்சி. :)

lolluvathiyar
01-02-2008, 11:37 AM
கவிதை அருமையாக இருந்தது. வார்த்தைகள் மிக அழகாக கையாளபட்டிருகின்றன. காதல் கவிதை அவ்வளவாக ரசிக்க தெரியான் எனக்கு உங்கள் கவிதை பிடித்தது. அதுமட்டுமல்ல இந்த தலைப்பு மிக அருமை. கவிதை மட்டுமிரு ந்தால் படிக்காமல் சென்றிருப்பேன், ஆனால் பொருத்தமாக நீங்கள் தந்த படம் நிறுத்தியது என்னை.
படத்துக்கு சபாஸ்

பூமகள்
01-02-2008, 03:01 PM
மிக்க நன்றிகள் வாத்தியார் அண்ணா. :)

எளிய நடையில் எழுதிய கவி என்றுமே மக்களைச் சென்றடையும் என்று பா.விஜய் சொல்லியிருக்கிறார்.

இன்று அது மிகச் சரி என்று புரிந்துவிட்டது.

உங்களை நிப்பாட்டி, பின்னூட்டமும் போட வைத்துவிட்டதே..!

உங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றிகள் வாத்தியார் அண்ணா. :)

aren
01-02-2008, 03:40 PM
ஒரு படைப்பின் வெற்றியே அதை படிப்பவர்களும் புரிந்துகொண்டு பாராட்டப்பட்டாலே. பாரதியார் வெற்றி பெற்றது அவர் எழுதிய கவிதைகள் மக்களிடம் சென்றடைந்ததால்.

நீங்கள் இங்கே வெற்றி பெற்றுள்ளீர்கள் பூமகள். எங்களை மாதிரியான சாமானியர்களும் புரிந்துகொண்டதால். பாராட்டுக்கள்.

பூமகள்
01-02-2008, 04:03 PM
உங்களின் அன்பான பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி ஆரென் அண்ணா.

பாராட்டுக்கும் பின்னூட்ட ஊக்கத்துக்கும் மிகுந்த நன்றிகள். :)

விகடன்
07-02-2008, 10:04 AM
அடுக்கடுக்காய் வரிகளமைத்து உருவகிக்கப்பட்ட கவிதை.
படித்து முடித்ததும் பின்னூட்டத்தை பார்த்தேன். தவறவிடப்பட்ட பலவற்றை பின்னூட்டத்தினால் பிடித்துவிடலாமென்று. ஆனால் நடந்ததென்னவோ வேறொன்று.
கிட்டத்தட்ட என்னிலை ஆங்கிலந்தெரியாத் ஒருவன் ஆங்கிலத்திற்கு ஆங்கிலத்தில் விளக்கும் ஆங்கில அகராதியை பார்த்ததுபோல, அனைவரும் (கூடுதலாக) கவிதையில் பின்னூட்டமிட அந்தக்கவிதைகளில் தவற விடப்பட்டனவற்றையும் பிடிக்க முயற்சித்த கதையாகிவிட்டது.

எது எப்படியோ. ஆக்கங்கள் அனைத்தும் அழகே.

பூமகள்
07-02-2008, 10:34 AM
நன்றிகள் விராடன் அண்ணா.
எனது கவிதை புரிந்ததா இல்லையா??

குழப்பத்தில்,

விகடன்
07-02-2008, 10:46 AM
எனக்கு புரிந்ததா? இல்லையா?
நல்லதொரு கேள்விதான்.
ஆனால்,உங்கள் சந்தேகத்திற்கான தீர்வைக்கூட என் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டேன்.

பூமகள்
07-02-2008, 10:49 AM
மின்னிதழில் வந்த கவி.. புரியாதது வருத்தமளிக்கிறது.
இன்னும் எளிமையாய் எழுத முயல்கிறேன் விராடன் அண்ணா.

பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றிகள்.

ஜெயாஸ்தா
29-02-2008, 06:12 AM
சோகம்னாலே மழைபெய்யெனுங்கிறது திரைப்படத்தில் எழுதப்படாத விதி இப்போது பூமகளின் கவிதையிலும் கையாளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கவிதையை ரசிக்க முடிகிறது. ஆனால் தாமரை அண்ணாவின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன். எதுகை மோனை கவிதையை மேலும் உணர்சியுடன் விளங்கச் செய்வதற்காகவே இருக்க வேண்டுமேயொழிய, கவிதையின் உணர்ச்சியை குறைத்து உயிரோட்டமில்லாமல் செய்யக்கூடாது.

மன்றத்தவரை திரும்பிப்பார்க்க வைக்கும் படி, நல்ல கவிதைகளை தரும் சகோதரி பூமகளிற்கு என்றும் என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உண்டு.

shanthija
27-03-2008, 01:08 AM
பூமகள் உங்கள் கவி பூக்கள் போல் அளகாகவும் அருமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்

அன்புடன்
தீபா

தமிழ் மகன்
01-06-2008, 12:54 AM
நெஞ்சத்தை கொள்ளை கொண்டது பூமகளின் கவிதை. அருமையான வரிகள். சாதாரணமாக கவிதைவரிகள் எனக்கு கஷ்டமாக இருந்தால் பொறுமையாக நான் படிக்கமாட்டேன் தாவிவிடுவேன். ஆனால் உங்கள் கவிதை ஒரு முறைக்கு பல முறை படித்து ரசித்தேன். வாழ்த்துக்கள்.

பூமகள்
01-06-2008, 05:16 AM
பாராட்டிப் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த சகோதரர்கள் ஜெயாஸ்தா, தமிழ்மகன் மற்றும் சகோதரி தீபாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

சூரியன்
01-06-2008, 05:27 AM
அழகான கவிதை பூ அக்கா.
இத்தனை நாள் கண்ணில் படாமல் போய்விட்டது.

shibly591
01-06-2008, 05:41 AM
கண நேரத்தில் உதித்த கவிதையா?கவிதையின் படிமவியலும் நேரிடைத்தன்னையும் அதி அற்புதம்.வாசகனை வாசகனாய் அணுகாமல் தோழமையுடன் அழைக்கிறத இக்கவிதை.கவிதயை படித்து நானும் சில நிமிடங்கள் உறைந்துதான் போனன்..வாழ்த்தக்கள் பூ

பூமகள்
01-06-2008, 05:42 AM
நன்றி தம்பி சூரியன்...
தேடல் இருந்தால் பல பெரியோர்கள் எழுதிய நிறைய வைரங்கள் காணக் கிடைக்கும் தம்பி..!! :rolleyes:

தேடினார் முத்தெடுக்காமல் விட்டதில்லையன்றோ.. மன்றத்தில்??!!:icon_b::icon_b:

பூமகள்
01-06-2008, 05:52 AM
கண நேரத்தில் உதித்த கவிதையா?கவிதையின் படிமவியலும் நேரிடைத்தன்னையும் அதி அற்புதம்.வாசகனை வாசகனாய் அணுகாமல் தோழமையுடன் அழைக்கிறத இக்கவிதை.கவிதயை படித்து நானும் சில நிமிடங்கள் உறைந்துதான் போனன்..வாழ்த்தக்கள் பூ
சில கவிதைகளில்.. எதார்த்தமும் சொல்லாடலும் மிகுந்து இருப்பின்... நீங்கள் சொல்வது போன்ற தோற்பாடை ஏற்படுத்த தவறாது என்று புரிகிறது..
ஒரு நல்ல படைப்பு.... படிப்பவரை பாதிக்க வைக்க வேண்டும்..அவ்வகையில்.. உங்களை உறைய வைத்ததில் எனது கவி வெற்றிபெற்றுவிட்டதாகவே உணருகிறேன்.
மிகுந்த நன்றிகள் ஷிப்லி அண்ணா.

shibly591
01-06-2008, 05:54 AM
இந்த அற்புத படைப்புக்கு ஐகேஷ் 500 வரங்கவா????????????

பூமகள்
01-06-2008, 06:05 AM
ஷிப்லி அண்ணா... பொதுவாக... பரிசளிப்பது அவரவரின் சொந்த விருப்பம்.. இதில் கேள்வி கேட்பது அவசியமற்றதே..!!:icon_ush::icon_ush:

உங்களின் விருப்பம் போல் செய்யுங்கள்..!

சூரியன்
01-06-2008, 06:26 AM
மன்றத்து பொக்கிசங்களை வெளி கொண்டுவரும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன்.
விரைவில் பல வைரங்கள் வெளியே வரும்.

"பொத்தனூர்"பிரபு
29-06-2008, 08:05 PM
..............................................
எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!
...................................................
கார்மேகங்கள் மழைபொழிய காத்திருப்பதை காட்சி படுத்தியிருப்பது மிக அற்புதம்

கா.ரமேஷ்
06-01-2009, 04:19 AM
ஒருவேளை நினைவுவெட்டிகள் இருந்தால்கூட வெட்ட வெட்ட வளரத்தான் செய்யும்....
நல்ல கவிதையை தந்துள்ளீர்கள் ......
உறைந்த நிமிடம்....மனதில் உறங்கா நிமிடம்...

muthuvel
17-01-2010, 08:12 AM
உறைந்த நிமிடம்..!


வெயில் பொழுது
துயில் கொள்ள
சாய்வுநாற்காலி தேடி
தோய்ந்து இருந்தது
கடலின் அருகில்..!...............................

தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!



மழை எழுதும் மடல் ..உன் பாதம் நோகாமல் இருக்க ,
உனக்காக வீதியை என் கண்ணீரால் சுத்தம் செய்கிறேன் ...
உன்னை தழுவத்தான் ஆசை ,
என்ன செய்ய ,
எனக்கு எதிரியாய் ,
உன் குடையும் உடையும் ...
என் பிறந்த வீடான மேகத்திலிருந்து ,
இடி இடிக்க ,மின்னல் பாதையில் ,
புறப்பட்டுவிட்டேன் ,
வழியில் நீ , பேசலாம் என்றால் ,
முடியவில்லை ,
என் புகுந்த வீடான பூமியின் தாகத்தை தீர்கவேண்டும், ஆகையால் இப்பொழுது வீடைபெருகிறேன்

govindh
05-03-2010, 04:21 PM
உறைந்த நிமிடம்...மனதை ஓங்கி
அறைந்த வரிகள்....இன்னும் வலிக்கிறது...!

பூமகள்
04-10-2010, 02:13 PM
பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த சூரியன் தம்பிக்கும்..

ரசித்து பதிலிட்ட பிரபு அவர்களுக்கும்,

வெட்ட வெட்ட வளரும் என ஆற்றாமையை உணர்த்திய கா.ரமேஷ் அவர்களுக்கும்..

மழை சொன்ன பதில் போல் எழுதி விடையளித்த முத்துவேல் அவர்களுக்கும்..

வலியை உணர்ந்து வலிக்கும் இதயத்தோடு பின்னூட்டமிட்ட கோவிந்த் அவர்களுக்கும்..

மனம் நிறைந்த நன்றிகள். :)

ரசிகன்
20-11-2010, 09:53 AM
உறைய வைத்த கவிதை...

ஒரு தூண்டுதலில் எழுதப்பட்ட கவிதையில்... இவ்வளவு உணர்வுகளை உள்ளடக்குதல் சாத்தியமா ? நீங்கள் செய்து விட்டீர்கள்...
///
தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!
///

அப்ப்லாஸ்!

நன்றி!

ஆன்டனி ஜானி
23-11-2010, 02:18 PM
கவிதைகள் ரெம்ப நல்லா இருந்து ஆனால் கவிதைகளை படித்து விட்டு அதர்க்கு

பதில் தந்த நம்ம மன்றதின் தூண்கள் ரெம்ப அருமையான கவிதைகலும் வளங்கி

இருக்கிறார்கள் எல்லாம் கலக்கலோ,, கலக்கல் ,,,,,அப்பபா,,,,,,,,,!!!!!!!!!!

mathan sundar
12-12-2010, 02:59 PM
காதலின் மாறுபட்ட பக்கங்கள்.... அருமையான படைப்பு....:icon_rollout:

ஆன்டனி ஜானி
17-12-2010, 08:47 AM
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தைகள் வர வில்லை என்னிடத்தில்
இது தானா காதல் ?

எப்ப போ என்னா கவிதைகள் பதித்து இருக்கிறார்கள்
ச,ச,ச எல்லாம் பார்க்காமலே போய்ட்டே
ரெம்ப
வாழ்த்துக்கள் .
பூமகள்

கௌதமன்
17-12-2010, 12:39 PM
விலகிவிடு என்றுநீ தொலைதூரம் சென்றாலும்
விலகாத உன்னுருவம் கண்ணுக்குள் நிலைத்திருக்கும்
பயணம் முடிந்து விடைசொல்லிப் பிரிவதற்கு
புகைவண்டி பழ்க்கமா நம்பழக்கம்

உறைந்த நிமிடங்கள் அல்ல நெஞ்சை
உறைய வைத்த நிமிடங்கள்; உன்கவிதை
என்னைக் கரைய வைத்தக் கலவரங்கள்

கவிதாயினியே உன் கவிதைகள் ஊர்வலத்தில்
கற்பனையின் கைகோர்த்து கருத்துக்கள் நடக்கட்டும்
புதுவுணர்ச்சிகள் பூக்கட்டும்
பொன்மகளே, தமிழ்ப் பூமகளே வாழ்க

vasanth30
29-12-2010, 07:23 PM
அசத்திவிட்டீர் நண்பரே மழை பிரமாதம்

CEN Mark
30-12-2010, 03:58 AM
உறைந்த நிமிடம்..!

என்றோ மேய்ந்து பார்த்த கவிதையை இன்று ஒருமுறை உற்றுப்பார்க்கத் தோன்றியது. தாமரையின் கருத்துக்களோடு நானும் ஒத்துப்போகிறேன் காதலித்துத் திருமணம் செய்தவன் என்ற அளவில்...

ஜானகி
30-12-2010, 05:30 AM
சின்னத் தூறலாக ஆரம்பித்த கவிதை, , இடியுடன் கூடிய பின்னூட்டங்களால் கனமழையானதே ?

கவிமழை ஆனந்ததைத்தான் தந்தது. பாராட்டுக்கள் அனைவருக்கும் !

ரசிப்பது எப்படி என்றும், என் போன்ற புதியவர்கள் கற்றுக்கொள்ளலாம்.

இது போன்ற தூறல்களும், கனமழையும் தொடரட்டும், எங்கள் உள்ளத்தை நனைக்க, திக்குமுக்காடவைக்க !

muthuvel
21-11-2011, 08:22 AM
என் அருகே, இடி விழுந்தாலும் ,
உறக்கம் கலையாது, உறங்கிகொண்டிருந்த நான் ,
இன்று, பதறியடித்து விழித்துக்கொண்டேன் ,
உன் கால் கொலுசு கேட்ட உடன் !

பெண்ணே ,
உன் இமையை திறக்காதே ,
நானும் ,உண்ணா விரத போராட்டம் நடத்த வேண்டிருக்கும் ,
உன் இமை என்னும் காதல் கதிர்வீச்சு என்னை தாக்கிகொண்டிருப்பதால்.!.........

பூக்கும் ,பூவருகே நீ நிற்காதே ,
உன் உதடுகளை தேன் என்று நினைத்து ,
வண்டுகள் கடித்துவிடும் !

என் வீட்டு தீபத்திருநாளில்,
காற்று மாசுபடவில்லை ,
உன் புன்னகை என்னும் மத்தாப்பு சிரிப்பால் !

maniajith007
05-03-2013, 03:18 PM
:aktion033::aktion033::aktion033::icon_good::icon_good::icon_good: superb

ஆர்.ஈஸ்வரன்
28-09-2013, 02:21 PM
நன்று

Royals Ram
07-11-2013, 09:55 AM
கண்களால் அவளை பார்க்க முடியாமல் தவிக்கும் எனக்கு... இந்த கவிதைகளின் வரிகளால் என் மனம் ஆருதல் அடைகிறது..

Brawin Jack
01-09-2015, 11:28 AM
வாழ்த்துக்கள்

ravisekar
02-09-2015, 10:47 AM
கௌதமன், முத்துவேல் அசத்திவிட்டீர்கள் பாராட்டுக்கள்

Mano60
23-11-2016, 04:37 AM
இந்த கவிதையை படித்ததும் "நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியதா?" (நினைவு வெட்டி கருவி) என்ற பழைய திரைப்பட பாடல் நினைவுக்கு வந்தது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.