PDA

View Full Version : உயிர் (அற்ற) எழுத்து!



ஷீ-நிசி
16-11-2007, 06:41 AM
"உன்னை எனக்கு பிடிக்கவில்லை"

என்று நீ கூறியபோதே......

அந்த "உயிர்மெய்"
எழுத்துக்கள் யாவும்..

உயிர் அற்ற எழுத்துக்களாய் ஆகிவிட்டன...

சாம்பவி
16-11-2007, 06:58 AM
உயிர்மெய்யின் உயிர் தானே விலகியது
உயிரின் உயிர் விலவில்லையே... !

உயிரழந்து.,
"உன்ன் என்க்க் ப்ட்க்க்வ்ல்ல்" ஆனாலும்
"என் உன்" அழியவில்லையே..... !
என் ஊனும் உனை மறப்பதில்லையே.... !

கஜினி
16-11-2007, 07:26 AM
உயிர் எழுத்துக்களுக்கு உயிர் போய்விட்டதா?!... ஹிஹி. நன்று.

சிவா.ஜி
16-11-2007, 07:29 AM
அவள் மெய் மட்டுமே பார்த்ததால்...அந்த வார்த்தைகளுக்கும்,அவளின் காதலுக்கும் உயிரில்லாமல் போய்விட்டது.அழகிய குறுங்கவி.வாழ்த்துகள் ஷீ.

அமரன்
16-11-2007, 07:33 AM
காதலர்கள் பிரியலாம் காதல் பிரிவதில்லை என்பதை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள் ஷீ..

ஷீ-நிசி
16-11-2007, 08:13 AM
நன்றி நண்பர்களே!

வசீகரன்
16-11-2007, 10:53 AM
அந்த "உயிர்மெய்"
எழுத்துக்கள் யாவும்..

உயிர் அற்ற எழுத்துக்களாய் ஆகிவிட்டன...


நிராகரிப்பின் நிஜத்தை சொன்ன எழுத்துகளுக்கே உயிர் இல்லையோ.... !

புதுமை + புலமை.....!

அருமை நிஷி...

வசீகரன்

பூமகள்
16-11-2007, 11:49 AM
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
சேர்ந்திருந்தால்... உயிர்த்திருக்கும் காதல்..!
அவளின் ஒற்றை வரியால்
உயிரற்று போனதோ காதல்..!

இதே கவியை படித்து அதன் தாக்கத்தில் ஒரு கவிதை படைத்தேன்..! "உறைந்த நிமிடம்" (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13339) என்ற தலைப்பில்.

அழகான கற்பனை..!
வாழ்த்துகள் ஷீ.

ஷீ-நிசி
16-11-2007, 11:46 PM
நன்றி வசீகரன். நன்றி பூ!

gans5001
17-11-2007, 06:23 AM
உங்கள் காதல் உயிறற்றதாக ஆகி இருக்கலாம்.. ஆனால் உங்கள் கவிதைக்கு உயிரும் இருக்கிறது, மெய்யும் இருக்கிறது

ஷீ-நிசி
17-11-2007, 06:29 AM
உங்கள் காதல் உயிறற்றதாக ஆகி இருக்கலாம்.. ஆனால் உங்கள் கவிதைக்கு உயிரும் இருக்கிறது, மெய்யும் இருக்கிறது

நன்றி நண்பரே!

அறிஞர்
19-11-2007, 04:44 PM
சிறிய வரிகளில் அழுத்தமான தாக்கம்...

வாழ்த்துக்கள் ஷீ-நிசி..

இளசு
19-11-2007, 07:29 PM
உங்கள் காதல் உயிறற்றதாக ஆகி இருக்கலாம்.. ஆனால் உங்கள் கவிதைக்கு உயிரும் இருக்கிறது, மெய்யும் இருக்கிறது

நண்பன் கண்ஸ் சொன்னதே எனக்கும் தோன்றியது!

சிறிய வீரியக் கவிதைக்கு வாழ்த்துகள் ஷீ!

அக்னி
20-11-2007, 01:18 AM
"உன்னை எனக்குப் பிடிக்கவில்லை"
என்பது மெய்யானாதால்,
அற்றுப் போனதோ உயிர்...
உயிரின்றி வாடுதோ மெய்...

பாராட்டுக்கள் ஷீ-நிசி...

அக்னி
20-11-2007, 01:19 AM
உயிரழந்து.,
"உன்ன் என்க்க் ப்ட்க்க்வ்ல்ல்" ஆனாலும்
"என் உன்" அழியவில்லையே..... !
என் ஊனும் உனை மறப்பதில்லையே.... !
புரியலையே சாம்பவி...
விளக்கம் தாருங்களேன்...

ஷீ-நிசி
20-11-2007, 03:11 AM
நன்றி பெரியோர்களே!

நன்றி அக்னி!

ஓவியன்
22-11-2007, 10:34 PM
"உன்னை எனக்கு பிடிக்கவில்லை"
என்று நீ கூறியபோதே......
அந்த "உயிர்மெய்"
எழுத்துக்கள் யாவும்..
உயிர் அற்ற எழுத்துக்களாய் ஆகிவிட்டன...

உயிருடன் மெய் சேர்வதே உணர்வுள்ள தேகம்...
காதலின் பால் ஈர்க்கப்பட்டவர்களுக்கெல்லாம் காதல் தானே உயிர்..
அந்த காதல் என்னும் உயிர் இல்லையென்ற போது
மீதமுள்ளது உயிரற்ற தேகம் தானே....!!!

சின்ன, சின்ன வரிகள்
ஆனால்
அழகாகக் கோர்க்கப்பட்ட
அற்புதக் கவிதை....!!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஷீ-நிசியாரே..!!

ஷீ-நிசி
27-11-2007, 03:43 PM
நன்றி ஓவியன்!

சுகந்தப்ரீதன்
29-11-2007, 07:25 AM
கவிஞரே..கலக்கிட்டீங்க போங்க..!வாழ்த்துக்கள்..!
வெறும் மெய்யாக(உடலாக) இருந்தவன் அவள் வர உயிர் பெற்றான்..! அவள் கூறிய வார்த்தையில் உயிர் போனது.. ஆனாலும் மெய்யாக(உண்மை) இன்னும் இருக்கிறான் காதலுடன் உயிரற்று..! மன்னிச்சுக்குங்க...ஷீ-நிசியாரே..கவித்தனமா எழுத முயற்சி பன்னுனேன்..முடியலப்பா..!

ஷீ-நிசி
29-11-2007, 07:54 AM
கவிஞரே..கலக்கிட்டீங்க போங்க..!வாழ்த்துக்கள்..!
வெறும் மெய்யாக(உடலாக) இருந்தவன் அவள் வர உயிர் பெற்றான்..! அவள் கூறிய வார்த்தையில் உயிர் போனது.. ஆனாலும் மெய்யாக(உண்மை) இன்னும் இருக்கிறான் காதலுடன் உயிரற்று..! மன்னிச்சுக்குங்க...ஷீ-நிசியாரே..கவித்தனமா எழுத முயற்சி பன்னுனேன்..முடியலப்பா..!

நன்றி ப்ரீதன்... அதுக்காக இப்படி முகதத எல்லாம் மூடிக்கனுமா என்ன?;)