PDA

View Full Version : மன அழுத்தம் போக வேண்டுமா? : கண்பார்வையை பரி&#



mgandhi
15-11-2007, 05:14 PM
மன அழுத்தம் போக வேண்டுமா? : கண்பார்வையை பரிசோதியுங்கள்



நியுயார்க் : மன அழுத்ததால் பாதிக்கப்படுவோரை, அவரது தோல், நகம், தலைமுடி போன்றவை காட்டிக் கொடுக்கிறது. பெரும்பாலும் வயதானவர்கள், கண்பார்வை குறைவால், மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அவர்கள் கண் கண்ணாடி அணிந்தால் போதும்; புத்துணர்வு பெறலாம்.

இது தொடர்பாக அமெரிக்க டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்கள்:மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர், மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தம் ஏற்படுவோருக்கு, உடலில் கார்டிசால் என்ற சுரப்பி நீர் சுரக்கிறது. இந்த சுரப்பி நீர், தோல் சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.இந்த சுரப்பிநீர் அதிகளவில் சுரக்கும் போது, தோலில் அதிக எண்ணெய் தன்மை ஏற்படுகிறது. முகப்பருக்கள் தோன்றுகின்றன. நகம் உடையும். சிலருக்கு தலைமுடி கொட்டும். இதுவரை ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், உடல் ரீதியாகவும் பிரச்னை ஏற்படும் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது தான் இது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது, அவர்களின் கண் பார்வையைச் சரி செய்தால் மன அழுத்தம் குறையும் என்று தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு கண் கண்ணாடி அணிவித்தால், புத்துணர்வு பெறுகின்றனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நன்றி தினமலர்