PDA

View Full Version : எப்படி முடிந்தது?



Hayah Roohi
15-11-2007, 10:14 AM
நீ
மிச்சம் வைத்த
எச்சில் தேநீர்.....

நாம்
ஒன்றாய் வாங்கிய
இரட்டைக் கட்டில்....


இனியவனே!
கடைசி கடைசியாய்
நீ உதிர்த்த
முத்தம்....


ஊசி ஊசியாய்
உறை பனி
பெய்யும்
மார்கழி இரவுகள்....

உனக்காய்...
தாகிக்கும்
என்
இதயம்....

இத்தனையும்
மறக்க
உன்னால்
எப்படி முடிந்தது?

சிவா.ஜி
15-11-2007, 10:24 AM
கணவனால் மறக்கப்பட்ட ஒரு மனைவியின் கண்ணீர் நினைவுகள் கவிதையாய் பதிவாகியுள்ளது. வரிகளில் வலி தெரிகிறது. வலியில் கவிதை தெரிகிறது.சின்னச் சின்னதான வார்த்தைகள் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.
அருமையான கவிதை ஹயா ரூஹி. வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள்.

ஆதி
15-11-2007, 10:28 AM
குறுந்தொகையின் இப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது..

கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
செல்லாது ஏகல் வல்லுவோரே.

அருமை.. வாழ்த்துக்கள்..

IDEALEYE
15-11-2007, 04:40 PM
இத்தனையும்
மறக்க
உன்னால்
எப்படி முடிந்தது?
இதயம் வலிக்கிறது
உயிருள்ள வார்த்தைகள்
வாழ்த்துக்கள் ரூஹி

Saravanan.S
16-11-2007, 08:27 AM
அவனுக்காய் தாகிக்கும் இதயத்தைக்கூட மறந்த அவன் மானிடனா???

யவனிகா
16-11-2007, 09:34 AM
எப்போதும் போல, இப்போதும் வலியுடன் ஹயாவின் கவிதை. மறந்து விட்டுப் போனவனுக்காக மருகி...கோழிக்கால் குப்பையாய் நினைவு கிளறி...ர*ணங்களைப் புதிதுபடுத்தும் கவிதை....

வாழ்த்துக்கள் ஹயா...வார்த்தைகள் உள் வரை ஊடுருவும் தன்மை இருக்கிறது உங்கள் கவிதைக்கு.

இளசு
20-11-2007, 07:33 PM
நிராகரிப்பால் விழிகரித்து கருகும் இதயக்குமுறல்
நன்றாக வடித்த விதத்துக்குப் பாராட்டுகள் ஹயாத்ரூஹி அவர்களே!

நண்பர் ஆதி அவர்களுக்கு வேண்டுகோள்:
அந்த குறுந்தொகைப் பாடலுக்கு பொழிப்புரை கொடுங்களேன். நன்றி.

ஆதவா
21-11-2007, 01:52 PM
காதல் கடந்த காமத்தை மறக்க முடிபவன் மனிதனல்ல, மந்தி.

பலவகை நினைவுகளைப் படித்து எப்படி மறந்தாய் என்று கேட்ட கவிதைகளுள் சற்றே வித்தியாசமாய் இந்த காம உணர்வுகளையும் எப்படி மறந்தாய் என்று கேட்பது நன்றே!

விவாகரத்து கேஸா? இல்லை பிரச்சனையால் ஒதுங்கி நிற்கும் கேஸா?

எனக்கென்னவோ இது ஒரு பெண் எழுதியதைப் போலத்தான் தோன்றுகிறது? மற்றவர்களுக்கு???

வாழ்த்துகள்.... தொடர்ந்து எழுதுங்கள்.

அமரன்
21-11-2007, 05:00 PM
இனியவனே!கடைசி கடைசியாய்
நீ உதிர்த்த
முத்தம்....

எனக்கென்னவோ இது ஒரு பெண் எழுதியதைப் போலத்தான் தோன்றுகிறது? மற்றவர்களுக்கு???
.
எல்லாருக்கும் அப்படித்தான் தெரிகிறது ஆதவா:)

அக்னி
23-11-2007, 11:55 AM
பிரிவு...
காதலின் சிறு சிறு
அசைவுகளையும்
நினைவில்
விஸ்வரூபமாக்கும்...

எளிமை வரிகளில் அழகுக்கவி... பாராட்டுக்கள்...

வசீகரன்
23-11-2007, 12:19 PM
பிரிவின் வழியை உணர்வு பூர்வமாக சொல்லீஇருக்கீர்கள் ஹாயா....!
நல்ல ஆக்கம்... தொடர்ந்து பதிவுகளை இடுங்கள்....!

வசீகரன்

ஆதி
24-11-2007, 03:30 AM
நண்பர் ஆதி அவர்களுக்கு வேண்டுகோள்:
அந்த குறுந்தொகைப் பாடலுக்கு பொழிப்புரை கொடுங்களேன். நன்றி.

பாலை - தலைவி கூற்று

கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
செல்லாது ஏகல் வல்லுவோரே.

- குடவாயிற் கீரத்தனார்

பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது



தோழி! யான் பிரிவதற்கு ஒத்துக் கொள்ளேன் என்று சொன்ன தவற்றினால் நம்மிடம் சொல்லாமற் சென்று விட்ட வன்மையுடைய தலைவர், காட்டு யானையால் பட்டையை விரும்பி உண்ணப்பட்ட பொரிந்த அடியை உடைய ஓமை மரத்தின் காற்றடிக்கும் நெடிய கிளையினது அசைதலை உடைய வற்றல் கொம்பில் அமர்ந்து, "ஒய்" என்று தனிமை வருத்தத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆண்புறா பெட்டைப் புறாவை அழைக்கும் பாலை நிலத்தின் வழியே உள்ள அழகிய குடிகளை உடைய சிற்றூரில் தங்கி விட்டாரோ ?

குறிப்பு:
ஆண்புறா பெட்டைப் புறாவை அழைக்கும் பாலை நிலத்தின் வழியே உள்ள அழகிய குடிகளை உடைய சிற்றூரில் தங்கி விட்டாரோ ? என்றது
தான் பிரிவதற்கு உடன்படாமையைத் தவறாக நினைத்து சினந்து அங்கேயே தங்கி விட்டாரோ என்பது அவள் ஐயம்


இளசு அவர்களே, நீங்கள் பொழிப்புரைக் கேட்டிருந்ததி இன்றே பாந்த்தேன், தாமதத்திற்கு மன்னிக்கவும்

நன்றி..

அன்பன் ஆதி

ஓவியன்
25-11-2007, 08:58 PM
உலகில் மறக்க சிரமானது
அன்பும், காதலுமுமே....!!
வரிகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரி...!!
_________________________________________________________________________________________________________
ஆதி..!!

உங்கள் பின்னூட்டக் குறுந்தொகையும், அதற்கான விளக்கமும் அருமை தொடருங்கள் சகோதரரே..!! :icon_b: