PDA

View Full Version : கலை கழக போட்டி - நெஞ்சை நெகிழ வைத்த கனவு



leomohan
15-11-2007, 07:52 AM
கனவுகள் வராத தூக்கம் எனக்கு என்று சொல்லி சந்தோஷப்படுபவன் நான். மன்றத்திலும் பல முறை சொல்லியிருக்கிறேன். இவ்வாறு இருக்க கடுமையான பணி சுமையினாலும் சில மாற்றம் கண்டுள்ள உணவு, உறக்கம் பழக்கத்தினாலும் இன்று அதிகாலையில் ஒரு கனவு வந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு IT Open Minds 2007 எனும் Computer Seminar நடந்தது. அதற்கு பார்வையாளனாக சென்றிருந்தேன். அதில் திறவுமூல மென்பொருட்களை பற்றி பேசிய பேச்சாளர், சபையை பார்த்து Linux ல் பரிட்சயம் உள்ளவர்கள் மேடைக்கு வந்து பேசலாம் என்றார். நான் மேலே சென்று ஒரு பத்து நிமிடம் பேசினேன். பரிசாக ஒரு T-shirt ம் ஒரு புத்தகமும் கொடுத்தார்கள். பள்ளிப்பருவத்தில் மேடை பேச்சு அனுபவங்களை புதுமைபடுத்திச் சென்றது இந்த நிகழ்ச்சி.

பள்ளியில் வருடா வருடம் கலை கழக போட்டி நடக்கும். கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியர் ஏதாவது ஒரு பள்ளியில் கூடுவார்கள். பேச்சு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், இசை, வில்லுபாட்டு போன்ற பல போட்டிகள் நடக்கும். சுமார் 64 பள்ளிகள் பங்கு பெறும். பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கும். மாவட்ட ஆட்சியர், கல்வி துறை அதிகாரிகள் போன்றவர்கள் வந்து பரிச தருவார்கள். இது ஒரு பெரிய திருவிழா போலவே நடக்கும்.

வருடா வருடம் நான் மட்டும் பங்கு பெறாமல் மற்றவர்களையும் ஊக்குவித்து அவர்களை பங்கு பெறச் செய்து பரிசுகள் கிடைக்கவும் வாய்ப்பு செய்து தந்திருக்கிறேன். மேலும் பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளர் வேறு. போட்டிகள் எந்த வகுப்பறையில் நடக்கின்றன எந்த நேரத்தில் நடக்கின்றன என்று எழுதி ஒட்டிவிடுவார்கள். சில நேரங்களில் சுமார் 50 பேர் பேச காத்திருக்க நான் பேசி முடித்ததும் முடிவுகளுக்கு கூட காத்திருக்காமல் அடுத்த போட்டிக்கு சென்றுவிடுவேன். பிறகு மாலையில் தான் நான் வெற்றி பெற்றேனா இல்லையா என்று தெரியும். ஒரு மாணவர் அதிக பட்சம் மூன்று போட்டிகளில் தான் பங்கு பெற முடியும்.


சரி இப்போது கனவிற்கு வருவோம். நான் இப்போதைய நானாகவே இருக்க ஏதோ ஒரு பெரிய மேல் நிலை பள்ளியில் கலை கழக போட்டி நடைபெறுகிறது. நான் தமிழ் பேச்சுப் போட்டி, ஆங்கில பேச்சுப் போட்டி மற்றும் தமிழ் கட்டுரை போட்டிக்கு பெயர் கொடுத்திருக்கிறேன். தமிழ் பேச்சுப்போட்டி வழக்கப்படி சூடு பறக்க பேசிவிட்டு அடுத்த போட்டிக்கு கலந்துக் கொள்ள சென்றுவிட்டேன்.

இம்முறை சரியாக நிர்வாகிக்கப்படாததால் எந்த போட்டியில் யார் வென்றார்கள் என்று தெரியவில்லை. பரிசளிப்பு வழங்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்க என்னுடைய heart beat அதிகமாகிக் கொண்டிருந்தது.

சட்டென்று அந்த பள்ளியின் senior மாணவரை பிடித்து சார், எனக்கு போட்டிகளோட முடிவுகள் தெரியனும் என்று சொல்ல, வாங்க என்று அவர் என்னை தலைமை ஆசிரியரின் அறைக்கு அழைத்துச் செல்கிறார்.

ஒவ்வொரு registerஆக அவர் திறந்து தேட, சார் தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில பேச்சுப் போட்டி, தமிழ் கட்டுரை இது மூனுலேயும் தான் கலந்துகிட்டேன். கொஞ்சம் அதை பாருங்க என்று அவரை அவசரப்படுத்த, அவரும் சிரத்தையுடன் ஒவ்வொன்றாக தேடினார்.

பதட்டத்துடன் தமிழ் கட்டுரை போட்டி பட்டியலில் தேட, வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை. பகீரென்றது. செய்யுட்கள் எல்லாம் கோடிட்டு எழுதினேனே என்று வருத்தம். ஆங்கில பேச்சுப் போட்டியின் பட்டியலிலும் என் பெயர் இல்லை. என்னால் நம்ப முடியவில்லை. அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.

சார், எனக்கு வயசாயிடுத்து. இருந்தாலும் கட்டாயம் ஒரு பரிசாவது எனக்கு கிடைக்கும். நீங்க தமிழ் பேச்சுப் போட்டி பாருங்க என்று சொல்ல, அவரும் பாவம் பெரிசு என்பது போல ஆறுதலாக பார்த்தார். முதல் 10 மாணவர்கள் மதிப்பெண்கள் 30, 32, 35 என்றிருக்க என் கண்கள் என்னை தேடி அவசரமாக ஓடின. ம.கி. மோகன் வரவில்லை என்று எழுதியிருந்தது. சார், சார், நான் வந்தேன். நான் பேசினேன் என்றேன் குழப்பத்துடன்.

இருங்க இருங்க ஒருவேளை முதல் தடவை கூப்பிடும்போது நீங்க வந்திருக்க மாட்டீங்க என்று ஆறுதல் அளித்தப்படியே இதோ உங்க பெயர் என்று கொஞ்சம் கீழாக என் பெயர் மீண்டும் தென்பட்டதை காட்ட, 85 என்று இருந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் மேலும் பட்டியலை படிக்க, 88, 89, 91 என்று என்னைவிட அதிகம் நடுவர்களால் மதிப்பளிக்கப்பட்ட மற்ற பேச்சாளர்களின் பெயர்களை கண்டதும் அண்டமே என் மேல் விழந்தது போல் இருக்க, கண்கள் இருட்ட, கண்களில் நீர் பனிக்க விட்டால் தேம்பி தேம்பி அழுதுவிடுவேன் போலிருந்தது. இளைஞர்கள் நம்மை மிஞ்சிவிட்டார்கள். நமக்கு வயதானதால் தான் நம்க்கு பரிசு கிடைக்கவில்லை போலும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அந்த மாணவருக்கு கரகர குரலில் நன்றி சொல்லி விடைபெற்றேன்.

விழித்தெழுந்ததும் கனவு என்னை உருக்கிவைத்திருந்தது. ஞானி சொன்ன கனவு அறிவுரையும் நினைவுக்கு வந்தது.

ஜெயாஸ்தா
15-11-2007, 09:27 AM
சில கனவுகள் இப்படித்தான் நம்முடைய பழைய நினைவுகளை கிளறிவிட்டுவிடும் லியோ. எனக்கும் பல முறை இது போல் கனவுகள் வந்திருக்கிறது. ஆனால் நிஜத்தைவிட எனக்கு கனவுகள்தான் மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் என்ன தெரியுமா? கலைந்துபோன என் காதல் நினைவுகள் கனவினில் நிஜமாகிறது. சில அற்புதமான வியபாரா சிந்தனைகளை கனவின் மூலம் பெற்றிருக்கிறேன். சில கவிதையின் கருக்கள் கூட கனவின் மூலம் உருவாகியிருக்கிறது. எப்போதாவது வரும் சில பயங்கரமான கனவுகளைத் தவிர்த்து, கனவுகளை மிகவும் விரும்புகிறேன் நான். ஒரு சில கனவுகள் அடிக்கடி வரும். அப்படிப்பட்ட சில கனவுகள் பலித்துவிடவும் செய்கிறது.

பகுருதீன்
15-11-2007, 10:07 AM
எனக்கும் இது போல் நிறைய கனவுகள் வரும் அது எனக்கு மிகவும் பிடிக்கும் நிஜ வாழ்க்கையை விட கனவில் அதிக சந்தொஷம் இருக்கும் கலையில் எழுந்தவுடன் இரவு என்ன கனவு கண்டோம் என்றுதான் யோசிப்பேன்

leomohan
15-11-2007, 12:20 PM
சில கனவுகள் இப்படித்தான் நம்முடைய பழைய நினைவுகளை கிளறிவிட்டுவிடும் லியோ. எனக்கும் பல முறை இது போல் கனவுகள் வந்திருக்கிறது. ஆனால் நிஜத்தைவிட எனக்கு கனவுகள்தான் மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் என்ன தெரியுமா? கலைந்துபோன என் காதல் நினைவுகள் கனவினில் நிஜமாகிறது. சில அற்புதமான வியபாரா சிந்தனைகளை கனவின் மூலம் பெற்றிருக்கிறேன். சில கவிதையின் கருக்கள் கூட கனவின் மூலம் உருவாகியிருக்கிறது. எப்போதாவது வரும் சில பயங்கரமான கனவுகளைத் தவிர்த்து, கனவுகளை மிகவும் விரும்புகிறேன் நான். ஒரு சில கனவுகள் அடிக்கடி வரும். அப்படிப்பட்ட சில கனவுகள் பலித்துவிடவும் செய்கிறது.

கனவுகளில் கிடைக்கும் கவிதை கருக்கள். நல்ல சுவாரஸ்யமான விஷயம் தான். நன்றி நண்பரே.

leomohan
15-11-2007, 12:21 PM
எனக்கும் இது போல் நிறைய கனவுகள் வரும் அது எனக்கு மிகவும் பிடிக்கும் நிஜ வாழ்க்கையை விட கனவில் அதிக சந்தொஷம் இருக்கும் கலையில் எழுந்தவுடன் இரவு என்ன கனவு கண்டோம் என்றுதான் யோசிப்பேன்

போதை பொருட்கள் உட்கொள்ளாமலே இன்பத்தை காண கனவுகள் கருவியாகின்றன.

நிஜத்திலிருந்து அதிக தூரம் அழைத்து செல்லாதவரை கனவுகள் நல்லதே.

நன்றி நண்பரே.

சிவா.ஜி
15-11-2007, 12:24 PM
எனக்கும் கனவுகள் வருவதுண்டு மோகன்.ஆனால் பெரும்பாலும் பறப்பதைப்போலத்தான் வரும்.ஆனால் உங்களின் இந்த கனவு எதையெதையோ சொல்கிறது.விசாலமான உங்கள் எண்ணங்கள் போலவே செய்தி தாங்கி வந்திருக்கும் கனவும் வித்தியாசமானதுதான்.

leomohan
15-11-2007, 08:59 PM
எனக்கும் கனவுகள் வருவதுண்டு மோகன்.ஆனால் பெரும்பாலும் பறப்பதைப்போலத்தான் வரும்.ஆனால் உங்களின் இந்த கனவு எதையெதையோ சொல்கிறது.விசாலமான உங்கள் எண்ணங்கள் போலவே செய்தி தாங்கி வந்திருக்கும் கனவும் வித்தியாசமானதுதான்.

பறப்பது போல கனவு சுகந்திரத்திற்கு ஏங்குவதை காட்டுகிறதோ?

நன்றி சிவா.

ஜெயாஸ்தா
16-11-2007, 06:19 AM
சில உளவியல் அடிப்படையில்தான் கனவுகள் வருகிறது. பொதுவாக நாம் கனவு காண்பது 'கருப்பு-வெள்ளை'யில்தான். கனவுகளில் வண்ணங்கள் வராது. அப்படி வண்ணகள் வருவதாக தோன்றுவதற்கு நமது எண்ணங்கள்தான் காரணம். நாம் காணும் கனவை பதிவு செய்வதற்காக, ஒரு கருவியை அறிவியலாளர்கள் உருவாக்கி உள்ளதாக முன்பே கேள்விப்பட்டுள்ளேன்.

பொதுவாக கனவில் திருமணம் நடப்போது போல் கண்டால் உறவினர்களுள் ஏதாவது இறப்பு நிகழும் என்றும், இறப்பை கனவில் கண்டால் திருமணம் நடக்கும் என்பதும் ஒருசிலரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பாம்பை கனவில் கண்டால் எதிரிகள் உள்ளனர் என்று பொருள். பாம்பு நம்மை தீண்டக் கண்டால் எதிரிகளால் நமக்கு பாதிப்பு ஏற்படும். பாம்பை நாம் அடித்துகொன்று விட்டால், எதிரிகளை வெல்வோம் என்று பொருள்.


கனவில் போலீஸ்காரரை கண்டால், நாம் ஒரு பொய்யனை சந்திக்க நேரும் என்றும் சொல்கிறார்கள்.

அதே போல் கனவில் யானையைக் கண்டால் நோய் தாக்கும் என்றும் சொல்வார்கள். இன்னும் நிறைய உள்ளன. நேரம் வரும் பொது சொல்கிறேன்.

(ஆமாங்க கனவுக்குள்ளேயே கனவு காண்கிற மாதிரி கனவு கண்டால் என்னங்க பொருள்?)

யவனிகா
16-11-2007, 06:28 AM
நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ...இது போன்ற கனவுகள் எனக்கும் அடிக்கடி வரும். பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் அதிகப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசு வெல்லும் மாணவி நான், வகுப்பிலும் பெரும்பாலும் முதலிடம் தான்.

ஆனால் எனக்கு வரும் கனவுகளில் நான் தேர்வுக்கு லேட்டாகப் போவது போலவும்...ஹால் டிக்கெட் மறந்து விட்டுப் போவது போலவும்...கேள்விகளுக்கு விடையெல்லாம் மறந்து போனது போலவும்...மைக் பிடித்து பேசும் போது இடையில் தயங்கி நிற்பது போலவும் ...தான் இருக்கும். என் அம்மா கனவில் வந்தால் சண்டை போடுவது போல் தான் கனவு முடியும்.

இதில் என்ன விசேசம்னா கனவில் நான் பேசும் தலைப்புகள் அருமையாக இருக்கும் அதோடு பேசும் விசயங்களும் நன்றாக இருக்கும்.

சமீபத்தில் இது குறித்து ஒரு மருத்துவ நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு இது போலக் கனவு வருவது இயல்பு. படிப்பு மற்றும் போட்டிகள் குறித்த மன அழுத்தம் இது போன்ற கனவுகள் வாயிலாக வெளிப்படும் என்றும், அவருக்கும் இது போன்ற கனவுகள் வரும் என்றும் கூறினார்.

மேலும் அவருக்கு ஒரு விசேசக் கனவு வருவதாகவும் அது அவருக்கு மிகவும் பிடித்த கனவு என்றும் கூறினார். நானும் ஆவல் தாங்காமல் என்ன அது என்றேன்? அது அவரது மனைவியை அவர் அறைவது போன்ற கனவாம்,
இப்போது நீங்கள் எழுதியதைப் படிக்கும் போது...வெற்றி காணக், கனா காண்பர்கள் மத்தியில்...தோல்விகளை கனவாகக் காணும் நாம் வித்தியாசமானவர்கள் என்று தோன்றுகிறது. என்ன ஒன்று கனவு முடிந்தும், பழைய வெற்றிகள் மீண்டும் அசை போடப் படுகின்றன.


அழகாக உங்கள் கனவை எங்களின் கண்களில் காண வைத்துள்ளீர்கள். அடுத்த கனவில் உங்களுக்கு முதல் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.

lolluvathiyar
16-11-2007, 09:32 AM
கனவை பற்றி லியோமாகனும் பலரும் சுவைபட சொல்லி இருந்தார்கள். தூங்கும் அனைவருக்கும் கனவு வரும், கட்டாயம் வரும் ஆனால் ஆழ்ந்து தூங்கிவிட்டு நிதானமாக விழிப்பு வந்தால் நாம் கண்ட கனவு நினைவில் இருக்காது. அரை குரை தூக்கத்தில் இருக்கும் போது வரும் கனவு தான் நினைவில் இருக்கும்.
மோகன் ஓர் அளவுக்கு அமைதியாக* தூங்கும் போது கண்ட கனவு அதனால் தான் பரபரப்பு குரைவாக இருகிறது.
நான் ஸ்டெடியாக தூங்கும் குணம் இல்லாதவன். அடிகடி எழுந்திருப்பவன், அதனால் எனக்கு நல்ல கனவே வராது.
போலீஸ் துரத்துவது போல்
அப்பா (இப்பொழுது மனைவி) அடிப்பது போல்.
திருடன் அல்லது பாபும் தீண்ட வந்தது போல்

இப்படி ஒரே குழப்பமான கனவுதான் அடிகடி வரும்.

leomohan
16-11-2007, 10:18 AM
ஜெயாஸ்தா சொன்ன கனவு பலன்கள் வியப்பாக இருக்கின்றன.

யவனிகாவின் கனவு அனுபவங்களும் அருமை. படிக்கற புள்ளையா நீங்க, பலே.

வாத்தியாரே, கனவுலேயும் அடிவாங்கறீங்க. ஹா ஹா.

அக்னி
17-11-2007, 06:21 AM
கன அனுபவங்கள்... கனவில்...
ஒவ்வொருவரினதும் கனவுகள் சுவையாக இருக்கின்றன...

எனக்கு கனவுகள் வருவது குறைவு... வந்தால் ஒரே இரத்தக்க(கி)ளறியாகத்தான் இருப்பதுண்டு...

leomohan
17-11-2007, 07:37 AM
கன அனுபவங்கள்... கனவில்...
ஒவ்வொருவரினதும் கனவுகள் சுவையாக இருக்கின்றன...

எனக்கு கனவுகள் வருவது குறைவு... வந்தால் ஒரே இரத்தக்க(கி)ளறியாகத்தான் இருப்பதுண்டு...

ஐயோ வயலென்ஸா? எனக்கு ஒரே அலர்ஜி.