PDA

View Full Version : vBulletin பிரச்சனை

பிரசாத்
15-11-2007, 04:42 AM
என் forum-ல் தலைப்பை ஆங்கிலத்தில் கொடுத்தால் சரியாக தெறிகிறது, அதேபோல் தமிழில் கொடுத்தால் மட்டும் இப்படி வருகிறதே,

அதாவது,

"தமிழ் தலைப்பு பிரச்சனை" - எப்படி தலைப்பு கொடுத்து சேமித்தால்

"தமிழ் தல&#" - இப்படித்தான் தெறிகிறது...?

தெறிந்தவர்கள் விளக்கினால் உதவியாக இருக்கும்.

அன்புரசிகன்
15-11-2007, 05:02 AM
உங்கள் தலைப்பு எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துப்பாருங்கள்... காரணம் ஆங்கிலத்தில் பார்த்தால் தமிழ் என்ற 3 எழுத்துக்களுக்குப்பின்னர் thamiz என்ற எழுத்துக்கள் வரும். இதை உங்கள் மன்றம் unicode ற்கு மாற்றும் போதும் பிரச்சனை வரலாம்.

மோகன் மற்றும் இராசகுமாரன் அண்ணா போன்றவர்களுக்கு இதுபற்றிய முழுவிளக்கம் தரக்கூடியதாக இருக்கும். என்வசம் vBulletin forum இல்லை. SMF மற்றும் phpbb என்றால் கூறலாம்.

பிரசாத்
15-11-2007, 05:40 AM

தலைப்பு எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அப்படியேதான் வருகிறது, மேலும் ஆங்கிலத்தில் எவ்வளவு எண்ணிக்கை வைத்தாலும் சரியாகவே வருகிறது. தமிழில் தான் பிரச்சனையே.

உங்கள் அறிவுரைக்கும் அன்பிற்கும் நன்றி அன்புக்கு ரசிகன் அவர்களே.

பிரசாத்

leomohan
15-11-2007, 07:22 AM
என் forum-ல் தலைப்பை ஆங்கிலத்தில் கொடுத்தால் சரியாக தெறிகிறது, அதேபோல் தமிழில் கொடுத்தால் மட்டும் இப்படி வருகிறதே,

அதாவது,

"தமிழ் தலைப்பு பிரச்சனை" - எப்படி தலைப்பு கொடுத்து சேமித்தால்

"தமிழ் தல&#" - இப்படித்தான் தெறிகிறது...?

தெறிந்தவர்கள் விளக்கினால் உதவியாக இருக்கும்.

முதலில் பிரசாத் அனைத்து database tables ல் Unicode UTF-8 database முறை அமைக்கவும். மேலும் யூனிகோட் அதிக இடம் எடுத்துக் கொள்வதால் நீங்கள் தலைப்பின் நீளத்தை 100ல் இருந்து 250 ஆக மாற்ற வேண்டும்.

Subject or Post Title என்பது fieldன் பெயராக இருக்கலாம்.

அன்புரசிகன்
15-11-2007, 07:33 AM
முதலில் பிரசாத் அனைத்து database tables ல் Unicode UTF-8 database முறை அமைக்கவும்.

அவ்வாறு UTF 8 ஆக மாற்றாவிட்டால் தலைப்பு தமிழில் வரவே மாட்டுதே.... காரணம் எனக்கும் இதே பிரச்சனை வந்து பின் சீர்செய்தேன். நான் சொல்வது சரியா மோகன்???

பிரசாத்
15-11-2007, 07:57 AM
DATABASE UTF-8 இல்லாவிடில் Partial Display வராதே, முழுவதுமாக வராது. மேலும் என் டைட்டில் ஃபீல்டு 250 ஆகத்தான் செட் செய்திருக்கிறேன்.

எதற்க்கும் மீண்டும் ஒருமுறை சரி பார்க்கிறேன்.

அன்புக்கு ரசிகன் அவர்களே நீங்கல் smf, phpbb யில் எப்படி சரி செய்தீர்கள் என்று சொன்னால், எதாவது ஐடியா கிடைக்குமா என பார்க்கலாம்.

பிரசாத்
19-11-2007, 03:38 AM
பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டேன்,

நேரடியாக டேடாபேலில் டைடிலுக்கான எண்ணிக்கையை கூட்டினேன்... சரியாகிவிட்டது.

அன்புக்குரசிகன் மற்றும் மோகன் அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.