PDA

View Full Version : மின்னல் வேக காமிரா !



நேசம்
14-11-2007, 07:08 PM
http://www.tamilmantram.com/photogal/images/2878/medium/1_Camera.jpg
ஜப்பான் நாட்டின் புதிய வரவாக் இருக்கும் இந்த காமிரா ஒரு வினாடியில் 60 படங்களை எடுக்கும்.அதே சமயம் துல்லியமாக இருக்கும் அளவுக்கு நவீன லென்சுகள் பொருத்தபட்டுள்ளன.அதை தவிர இதை பயன் படுத்தி வீடியோ கூட எடுக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது.

நன்றி : இளைஞர் மலர்

அறிஞர்
14-11-2007, 07:10 PM
வெறுமனே பதிவதற்கு பதில்...

இங்கு கேமரா பற்றி கொஞ்சம் விவரம் கொடுத்தால் நன்றாக இருக்குமே.. நண்பரே.....

மற்ற கேமராக்களை விட எவ்விதத்தில் இது வேறுபட்டது.

நேசம்
14-11-2007, 07:16 PM
ஒரு வினாடியில் 60 படங்கள் எடுக்கலாம் என்பது இதன் சிறப்பு.இது மற்ற காமிராக்களில் இது சாத்தியமில்லை.

அறிஞர்
14-11-2007, 07:20 PM
தகவலுக்கு நன்றி நண்பரே

1 வினாடியில் 60 படம் என்றால்.. அதிகம் தான். இது எப்படி சாத்தியம் என சிந்திக்கவைக்கிறது.

மன்மதன்
15-11-2007, 07:27 AM
கேமராவின் பெயர் Casioவா?

ஜோய்ஸ்
19-11-2007, 11:40 AM
ஒரு வினாடிக்கு 60 புகைப்படங்கள் என்பது சாத்தியப்பட வழியில்லை.

ஒரு நிமிடத்திர்க்கு 60 படங்கள் என்பதே சாத்தியப்படும்.அதுவும் இது எலக்ட்ரானிக்ஸ் முன்னோடிகளான காஸியோவின் அதி உண்னத புகைப்பட கருவியாகும்.
செய்திக்கு நன்றி.