PDA

View Full Version : சிறந்த தொழில் நுட்ப பட்டியலில் இந்தியா



mgandhi
14-11-2007, 05:19 PM
சிறந்த தொழில் நுட்ப பட்டியலில் இந்தியா

லண்டன் : சர்வதேச அளவில் சிறந்த தொழில் நுட்பக் கழகங்களில், முதல் 50 இடங்கள் பட்டியலில் டில்லி ஐ.ஐ.டி., மற்றும் மும்பை ஐ.ஐ.டி.,க்கள் இடம் பிடித்துள்ளன.

மும்பை ஐ.ஐ.டி., 33வது இடத்தையும், டில்லி ஐ.ஐ.டி., 37 வது இடத்தையும் பிடித்துள் ளன. சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் இந்த பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.உலகில் உள்ள சிறப்பான 200 பல்கலைக்கழகங்களில் சீனாவின் ஏழு பல்கலைகழகங்கள் இடம்பிடித்துள்ளன.மொத்தம் 28 நாடுகளை சேர்ந்த பல்கலைக் கழகங்கள்,தொழில் நுட்ப கழகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. முதல் 10 இடங்களை அமெரிக்கா அல்லது பிரிட்டன் நாட்டு பல்கலைகளே பிடித்துள் ளன. முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலையும், இரண்டாவது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலையும் மூன்றாவது இடத் தை ஆக்ஸ்போர்டு பல்கலையும் பிடித்துள்ளன.இந்த பட்டியலில் கடந்த மூன்றாண்டுகளாக இடம்பிடிக்க முடியாமல் வெளியேறிய இந்தியாவைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) இம்முறை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இது பல்கலையின் தரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்படவில்லை; ஐ.ஐ.டி., பட்டம் பெற்றவர்களின் தனிப்பட்ட தரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழு ஐ.ஐ.டி.,களும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் பகுதியளவே, ஐ.ஐ.டி., இடம் பெற்றுள்ளது.

நன்றி தினமலர்

அறிஞர்
14-11-2007, 06:02 PM
தகவலுக்கு நன்றி.. இன்னும் இந்தியா வளரட்டும்...

ஐஐஎஸ்சி பெங்களூருக்கு எந்த இடம் எனத்தெரியுமா...

உலகின் சிறந்த முதல் இரண்டு தொழில் நுட்ப கழகங்கள் எங்கள் ஊரில் இருப்பது.. பெருமையாக உள்ளது...

நேசம்
14-11-2007, 06:16 PM
எப்படி இருந்தாலும் ஐ.ஐ.டி யில் முடித்தவர்கள் எந்த விதத்திலும் குறைந்த்வர்கள் இல்லை.பகிர்ந்து கொண்ட காந்தி அவர்களுக்கு நன்றி