PDA

View Full Version : வீர்சிங்கின் முதல் விமானப்பயணம்

mania
23-06-2003, 04:53 AM
வீர்சிங்கின் முதல் விமானப்பயனம் அது. நான் அவருடன் சென்றிருந்தேன்.விமானத்தி ஏறி அமர்ந்த
உடன் காதில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டார். கன்களையும் நன்றாக மூடிக்கொண்டார்.
(யாரோ நிறைய பயமுறுத்தி விட்டிருந்தார்கள்) ஒரு 20 நிமிடம் கழித்து கண் விழித்தார். கண்ணாடி
வழியாக வெளியே எட்டிப்பார்த்தார் உடனே ஒரே ஆச்சர்யத்துடன் ," ஆஹா எத்த்னை உயரத்தில் போகிறது !
மனிதர்களே இப்பிடி எறும்பு மாதிரி தெரிகிறார்களே !!"" என்றார் . நான் மெதுவாக வெளியே எட்டிப்பார்த்துவிட்டு,
''விமானம் இன்னும் கிளம்பவே இல்லை. நீங்கள் பார்ப்பது எல்லாம் நிஜமாகவே எறும்புகள் தான்!!" என்றேன்
மணியா.

prabha_friend
23-06-2003, 03:45 PM
மணியா... ஒரு பிரபலத்துடன் சேர்ந்து பயணித்துவிட்டீர் . வாழ்த்துக்கள் . வீர்சிங் வேற என்ன சொன்னார்?

poo
23-06-2003, 04:14 PM
20 நிமிடமாகவா விமானம் கிளம்பவில்லை?!!.. மணியா நன்றாக கவனித்தீர்களா விமானம் அடுத்த நாட்டு விமான தளத்தில் நின்றிருந்ததோ?!!!...

பாரதி
23-06-2003, 05:46 PM
விமானத்தில் ஏறி அமர்ந்த
உடன் காதில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டார்

மணியா.. உங்களைப் பற்றி வீர்சிங்குக்கு யாரோ சொல்லி இருக்கக் கூடுமோ..?

poo
23-06-2003, 06:30 PM
பாரதியின் நக்கல் தூக்கல்...

இளசு
23-06-2003, 06:56 PM
மணியா- பாரதி
சின்னதம்பி- பெரியதம்பி?
பாராட்டுகள் தம்பிகளுக்கு

prabha_friend
23-06-2003, 07:54 PM
மணியா இப்பதான் "நளதயந்தி" படம் பார்த்திட்டு வரேன் . அதில் ஒரு காட்சியில் இந்த மாதிரி மனிதர் வருகிறார் . அவரை பார்த்தவுடன் . எனக்கு நம்ம வீர்சிங் ஞாபகம்தான் வந்தது . உங்களால் யாருமே சிரிக்காத அந்த காட்சிக்கு நான் மட்டும் குபிரென சிரித்து எல்லோரும் என்னை வேடிக்கை பார்பதுபோல் ஆயிற்று .

முத்து
24-06-2003, 02:53 AM
பிரபாநண்பரே... நானும் இப்போதுதான் அந்தப்படம் பார்த்தேன்(இணையத்தில்தான் )...நீங்கள் சொல்வதுபோல் அந்தப் படத்தில் ஒருவர் வருகிறார்...ஆனால் அவர் குடித்துவிட்டு சொல்வதை நம் வீர்சிங் குடிக்காமலேயே சொல்கிறார்...

mania
24-06-2003, 04:02 AM
அன்பு பாரதிக்கு, உங்கள் நகைச்சுவை உணர்வை பாராட்டாமல் இருக்க முடியாது. ஆமாம்....அது எப்பிடி நேரில் பார்க்காமலே
எப்பிடி இவ்வளவு சரியாக..........
அன்புடன்
மணியா

mania
24-06-2003, 04:09 AM
நண்பர் பிரபாவுக்கு , நன்றி . என் நண்பர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்த போது
இந்த ஜோக் நினைவு வந்து ஒரேடியாக சத்தம் போட்டு சிரிக்க (அக்கம் பக்கம் எல்லாம் ஒரு மாதிரியாக
பார்த்து), ஒரு 5 நிமிடன்களில் அவர் தனியாக (செளகரயமாக) பயணம் செய்ய நேர்ந்ததாம்
நன்றி
மணியா

poo
25-06-2003, 04:51 PM
நானும் இப்போதுதான் அந்தப்படம் பார்த்தேன்([b]இணையத்தில்தான் [/b..

எந்த இணையமென சொன்னால்.... (நாங்களும் மகிழ்வோம்!!)

முத்து
25-06-2003, 05:54 PM
நானும் இப்போதுதான் அந்தப்படம் பார்த்தேன்([b]இணையத்தில்தான் [/b..
எந்த இணையமென சொன்னால்.... (நாங்களும் மகிழ்வோம்!!)

அந்த இணையத்தளம் பணம் செலுத்திப் பார்க்கக்கூடிய ஒன்று...( www.indiamoviezone.com ).. ஆனால் நீங்கள் விரைவில் இசைத்தமிழ்.காம் -ல் இலவசமாகப் பார்க்கமுடியும் என்று நினைக்கிறேன்... ஆனால் பூ அவர்களே...எங்களுக்குத்தான் வேறு வழியில்லை..புதுவையிலிருக்கும் நீங்கள் இன்பமாகத் திரையரங்கிலேயே பார்க்கலாமே..

விகடன்
11-08-2007, 08:30 AM
வீர்சிங்கின் முதல் விமானப்பயணம்

--------------------------------------------------------------------------------

வீர்சிங்கின் முதல் விமானப்பயனம் அது. நான் அவருடன் சென்றிருந்தேன்.விமானத்தி ஏறி அமர்ந்த
உடன் காதில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டார். கன்களையும் நன்றாக மூடிக்கொண்டார்.
(யாரோ நிறைய பயமுறுத்தி விட்டிருந்தார்கள்) ஒரு 20 நிமிடம் கழித்து கண் விழித்தார். கண்ணாடி
வழியாக வெளியே எட்டிப்பார்த்தார் உடனே ஒரே ஆச்சர்யத்துடன் ," ஆஹா எத்த்னை உயரத்தில் போகிறது !
மனிதர்களே இப்பிடி எறும்பு மாதிரி தெரிகிறார்களே !!"" என்றார் . நான் மெதுவாக வெளியே எட்டிப்பார்த்துவிட்டு,
''விமானம் இன்னும் கிளம்பவே இல்லை. நீங்கள் பார்ப்பது எல்லாம் நிஜமாகவே எறும்புகள் தான்!!" என்றேன்
மணியா.
உண்மையிலேயே நீங்கள்தான் சொன்னீர்களா அல்லது உங்களுக்கு சொல்லப்பட்டதா அண்ணா.

துணுக்கு தூக்கல்