PDA

View Full Version : செய்யும் தொழிலே தெய்வம்



ஆதி
14-11-2007, 03:55 PM
சுடுகாட்டில் அலைந்தது
வெட்டியானின் ஆவி
எரியும்
பிணத்தைச் சுற்றி!!

-ஆதி

அமரன்
14-11-2007, 04:03 PM
ஆவிபிரிந்த கூட்டை
சுற்றி இருந்த கூட்டம்
அனலுக்கு இரை ஆக்கியபோது
சுற்றி எழுந்த ஆவி
ஆவியான வெட்டியானாவியோ...!
புதுசால்ல இருக்கு...

வெட்டியானின்
சரீரம் மட்டும் எங்கோ
சகலதும் இங்கோ...!
செய்யும் தொழிலே தெய்வம்தான்...!

சிவா.ஜி
15-11-2007, 03:30 AM
தொழில் செய்த இடத்தைப் பிரியாதிருக்கும் அந்த வெட்டியானின் ஆவி அழகாகக் காட்டுகிறது தொழிலின்மேலான நேசத்தை.புதிய சிந்தனை.வாழ்த்துகள் ஆதி.

gans5001
17-11-2007, 06:33 AM
ஒரு நிமிடம் ஜெயகாந்தனின் "நந்தவனத்தில் ஓர் ஆண்டியை" நினைவு படுத்தி விட்டீர்கள்

ஆதி
17-11-2007, 06:36 AM
நன்றி கனேஷ் அவர்கட்கு..

ஓவியன்
22-11-2007, 10:42 PM
சுடுகாட்டில் எரியும் பிணம் வெட்டியானுடையதா,
இல்லை வேறொருவருடையதா....???? :confused:

சுகந்தப்ரீதன்
26-11-2007, 08:44 AM
சுடுகாட்டில் சுற்றி திரிந்தது
வெட்டியானின் ஆவி!
பற்றியெறியும் பிணத்தை சுற்றி!

சும்மா..மாத்தி பாத்தேன்..நண்பரே.. கவிதைக்கு வாழ்த்துக்கள்..!

ஆதி
28-11-2007, 09:32 AM
நன்றி சுகந்தப்ரீதன்..