PDA

View Full Version : இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட்



அறிஞர்
14-11-2007, 03:46 PM
இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆன 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது....

அணிவீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது...

கம்பீர், பதான் அணியில் இல்லாதது.. ஏமாற்றமே...

ஜாகீர் கான் இன்னும் அணியில் தொடர்வது.. ஆச்சர்யமே...

அணிவீரர்கள்

கும்ப்ளே (தலைவர்), தினேஷ் கார்த்திக், வாசிம் ஜாபர், ராகுல் டிராவிட், டெண்டுல்கர், கங்குலி, லட்சுமண், டோனி, ஹர்பஜன், யுவராஜ், ஜாகீர் கான், ஸ்ரீசந்த், ஆர்பி சிங்க், முரளி கார்த்திக்

ஆட்டங்கள் நடைபெறும் இடம் தேதி...
__________________________________________________ ____________

நவ. 22 வியாழன் - 26 திங்கள். முதல் டெஸ்ட் போட்டி. டெல்லி.
__________________________________________________ ____________

நவ. 30 வெள்ளி - டிச. 4 செவ்வாய். 2 வது டெஸ்ட் போட்டி. கொல்கத்தா.
__________________________________________________ ____________

டிச. 08 சனி - 12 புதன். 3 வது டெஸ்ட் போட்டி. பெங்களூர்.
__________________________________________________ ____________

அமரன்
15-11-2007, 07:17 PM
தமிழ்நாட்டில் இருந்து இருவர்..இருவரும் கார்த்திக்.. கார்த்திகை மாதத்தில் போட்டி ..என்னே ஒரு பொருத்தம்..ஆனாலும் வருத்தம்.. மூன்று சுழல்கள், சுழலில் ஒன்றுக்கு தலைமை பதவி. முரளி கேலரியில்தானா? ஆஸ்திரேலியாவுடனான ஆட்டம் கைகொடுக்குமா?...தினேஸ் கூட சந்தேகம் போலுள்ளதே...! வெற்றிபெற முன்வாழ்த்துக்கள்...!

பகுருதீன்
26-11-2007, 04:07 AM
புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி.ஆட்ட நாயகனாக கும்ளே தேர்வு செய்யப்பட்டார்
நேற்றைய ஆட்டநேர இறுதியில் இந்தியா 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்திருந்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் 4ம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: பாகிஸ்தான்- 231 ரன்; 2 வது இன்னிங்சில் 247 ரன். இந்தியா முதல் இன்னிங்ஸ் - 276 ரன். 2 வது இன்னிங்சில் 203 ரன்.

பாகிஸ்தான் மட்டை வீச்சு முதல் இன்னிங்ஸ் 231 ரன்

சல்மான் பட் போல்டு (ஜாகீர் கான்) 1

யாசிர் ஹமீத் போல்டு (அனில் கும்ப்ளே) 29

யூனிஸ் கான் பி (முனாப் பட்டேல்) வீ (ஜாகீர் கான்) 7

முகமது யூசுப் எல்.பி.டபிள்யூ. (செளரவ் கங்குலி) 27

மிஸ்பா உல் ஹக் ரன் அவுட் ( தினேஷ் கார்த்திக்) 82

ஷோயப் மாலிக் பி (தோனி) வீ (முனாப் பட்டேல்) 0

கம்ரான் அக்மல் போல்டு (அனில் கும்ப்ளே) 30

சொகைல் தன்விர் எல்.பி.டபிள்யூ. (ஹர்பஜன் சிங்) 4

சொகைப் அக்தர் போல்டு (அனில் கும்ப்ளே) 2

முகமது சமி ஆட்டமிழக்கவில்லை 28

டானிஷ் கனேரியா போல்டு (அனில் கும்ப்ளே) 0

உபரி (எல்பி 12 , பி 6 , நோபால் 1 , வைடு 2 ) 21

மொத்தம் (96.2 ஓவர்) 231


இந்தியா மட்டை வீச்சு முதல் இன்னிங்ஸ் - 276 ரன்.

வாசிம் ஜாஃபர் எல்.பி.டபிள்யூ. 32

தினேஷ் கார்த்திக் பி (கம்ரான் அக்மல்) வீ 9

ராகுல் திராவிட் போல்டு 38

சச்சின் டெண்டுல்கர் ரன் அவுட் 1

செளரவ் கங்குலி போல்டு 8

விவிஎஸ் லக்ஷ்மன் ஆட்டமிழக்கவில்லை 72

மகேந்திர சிங் தோனி பி (கம்ரான் அக்மல்) வீ (டானிஷ் கனேரியா) 57

அனில் கும்ப்ளே பி (யூனிஸ் கான்) வீ (டானிஷ் கனேரியா) 24

ஹர்பஜன் சிங் போல்டு 1

ஜாகீர் கான் வீ (டானிஷ் கனேரியா) 9

முனாப் பட்டேல் எல்.பி.டபிள்யூ. (டானிஷ் கனேரியா) 0

உபரி (எல்பி 8 , பி 11 , நோபால் 5 , வைடு 1 ) 25

மொத்தம் (78.4 ஓவர்) 276



பாகிஸ்தான் மட்டை வீச்சு 2 வது இன்னிங்சில் 247 ரன்

சல்மான் பட் பி (ராகுல் திராவிட்) வீ (அனில் கும்ப்ளே) 67 140

யாசிர் ஹமீத் பி (விவிஎஸ் லக்ஷ்மன்) வீ (அனில் கும்ப்ளே) 36

யூனிஸ் கான் எல்.பி.டபிள்யூ. (அனில் கும்ப்ளே) 23

முகமது யூசுப் பி (ஹர்பஜன் சிங்) வீ (ஹர்பஜன் சிங்) 18

ஷோயப் மாலிக் போல்டு (ஹர்பஜன் சிங்) 11

கம்ரான் அக்மல் பி () வீ (ஜாகீர் கான்) 21

மிஸ்பா உல் ஹக் பி (தினேஷ் கார்த்திக்) வீ (செளரவ் கங்குலி) 45

சொகைல் தன்விர் பி (ஹர்பஜன் சிங்) வீ (ஜாகீர் கான்) 13

முகமது சமி பி (வாசிம் ஜாஃபர்) வீ (செளரவ் கங்குலி) 5

சொகைப் அக்தர் ஆடுகிறார் 0

டானிஷ் கனேரியா ரன் அவுட் ( ) 0

உபரி (எல்பி 6 , பி 0 , நோபால் 2 , வைடு 0 ) 8

மொத்தம் (83.1 ஓவர்) 247

இந்தியா மட்டை வீச்சு 2 வது இன்னிங்சில் 203 ரன்

தினேஷ் கார்த்திக் பி (கம்ரான் அக்மல்) வீ () 1

வாசிம் ஜாஃபர் பி () வீ () 53

ராகுல் திராவிட் போல்டு () 34

சச்சின் டெண்டுல்கர் * ஆட்டமிழக்கவில்லை 56

செளரவ் கங்குலி பி () வீ () 48



உபரி (எல்பி 3 , பி 1 , நோபால் 1 , வைடு 0 ) 5

மொத்தம் (61.1 ஓவர்) 203

அறிஞர்
26-11-2007, 07:06 PM
இந்தியாவின் ஆட்டம் வெகு சிறப்பு என சொல்ல இயலாது.. இன்னும் பல துறைகளில் முன்னேற்றம் வேண்டும்.

நேசம்
26-11-2007, 07:08 PM
செத்த பாம்பை அடிப்பது போல் தான் இருக்கிறது.இதை வைத்து இந்தியா அணியை வலிமையான அணி என்று சொல்லி விட முடியாது.

leomohan
26-11-2007, 07:38 PM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

அமரன்
26-11-2007, 08:27 PM
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்களின் மட்டைச்சாகசம் பரவாயில்லைப்போல இருக்கே..பகுருதீனுக்கு நன்றி. தொடர்ந்து இத்திரியிலேயே நிலைவரங்களைக் கொடுங்கள்