PDA

View Full Version : ஆடை



ஆதி
14-11-2007, 02:43 PM
ஒவ்வொரு முறையும்
சொன்ன நிறமில்லையெனும்
சொல்லோடுதான் வருவார்கள்
அம்மாவும்! அப்பாவும்!

பண்டிகை நாளில்
உடுத்துகையில்
விரும்பிய வர்ணத்தின்
வருத்தங்கள் கனக்கும்
எங்கோ ஒரு முலையில்..

எதிர்பாராமல் நண்பர்கள்
"எங்கடா வாங்குன
அம்சமா இருக்குடா" எனும்
வார்த்தைகளில்
ஆற்றாமையை சிலுப்பிவிட்டு
இதழ்களில் வந்து நிற்கும்
பெருமிதம்
குறுமுறுவலாய்...

-ஆதி

அமரன்
14-11-2007, 03:35 PM
ஆடை....
கண்சுவைஞர்களிடமிருந்து
உடலைக் காக்கும் தடை..!
இலட்சணமென்பது..
இரவல் கண்களுக்கான தேவை....

வருணங்கள் மறந்து, பெருமிதம் சுரந்து
இதழ்களில் மலர்ந்த குறுப்பூவில் வியப்பேது...

சின்ன சின்ன உணர்வுகளை கவியில் புதைத்து
வண்ண மத்தாப்பு சிதறல்களை மனதில் விதைத்து
மிதக்கவைக்கும் பாங்கான கவிதைக்கும் பாராட்டுக்கள் ஆதி..!

அறிஞர்
14-11-2007, 06:05 PM
வண்ண ஆடைகளுக்கு
இங்கு அழகான வரிகள்...

வாழ்த்துக்கள் ஆதி...

ஆதவா
14-11-2007, 06:06 PM
மகிழ்ச்சி,. எதிலும் மகிழ்ச்சி.. அதுதானே வாழ்க்கைக்கு அத்தியாவசியம்.

பிள்ளைகள் தம் விருப்பப்படி வளரவேண்டும் என்று நினைப்பவர்களே இம்மாதிரி வர்ணம் பிடிக்காத ஆடைகளை அள்ளி வருவார்கள். கூட வளரும் நண்பர்கள், சுவை அறிந்தவர்கள். பெற்றோர்கள் சில நேரங்களில் நிறம் அறிவதில்லை.

ஆடை.. மானம் என்ற சொல்லால் இயற்கையான உடலை மறைத்து காமத்திற்கு வித்தாகும் காரணிகள்.. அன்று ஆதாம் ஆடை அணிந்திராவிடில் இன்று மானபங்கம் என்ற சொல் மறைந்திருக்கலாம். ஆடையினுள் ஒளிந்திருக்கும் சபலம் தோன்றாமலிருந்திருக்கலாம்.. ஆடையற்ற மனிதன் அரை மனிதன்... அரைகுறை ஆடையுள்ள மனிதன்?

வார்த்தைச் சிக்கனமே கவிதையின் பிரதானம். வித்தியாசக் கரு. நிறைவான கவிதை.

வாழ்த்துகள் ஆதி.

அமரன்
14-11-2007, 06:17 PM
பிள்ளைகள் தம் விருப்பப்படி வளரவேண்டும் என்று நினைப்பவர்களே இம்மாதிரி வர்ணம் பிடிக்காத ஆடைகளை அள்ளி வருவார்கள். கூட வளரும் நண்பர்கள், சுவை அறிந்தவர்கள். பெற்றோர்கள் சில நேரங்களில் நிறம் அறிவதில்லை.


ஆதவா..
அவர்கள் பாசமில்லா மலைகளாகவும் இருக்கலாம்
பசை இல்லா பாசமலைகளாகவும் இருக்கலாம் அல்லவா.

அவை வெறும் பசப்பு வார்த்தைளாகவன்றி
வெறுமையின்
பசுமையான போர்வைகளாகவும் இருக்கலாம் அல்லவா..??,

ஆதவா
14-11-2007, 07:47 PM
ஆதவா..
அவர்கள் பாசமில்லா மலைகளாகவும் இருக்கலாம்
பசை இல்லா பாசமலைகளாகவும் இருக்கலாம் அல்லவா.

அவை வெறும் பசப்பு வார்த்தைளாகவன்றி
வெறுமை பசுமையான போர்வைகளாகவும் இருக்கலாம் அல்லவா..??,

அமரரே ! சிலசமயங்கள் எல்லாமே எல்லாமுமாய் நடப்பதில்லை..

பிள்ளைகளுக்கு இது நன்றாக இருக்கும் என்று எடுத்து வரப்படும் ஆடைகள் பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். பிள்ளைகளோ தம் சுதந்திரத்தில் இவர்கல் தலையிடுகிறார்கள் என்று நினைப்பதுமுண்டு..

எப்படியோ ஆடைகல் விசயத்தில் இம்மாதிரி சில பிரச்சனைகள் நிகழ்வதுண்டு

அக்னி
15-11-2007, 01:03 AM
ஒரு திரைப்படப் பாடல் வரிகள்...
"மாடி வீட்டு ஜன்னல் கூடச் சட்டை போட்டிருக்கு..."

பாலுக்கும் ஆடை உண்டு...
ஆனால்,
ஆடையில்லா பாலர் பலருண்டு...

நிறம் பார்த்து அணிவோரும்,
தரம் பார்த்து அணிவோரும்,
ஒருவகையில்,
விலை பார்த்து தவிர்த்தோரின்,
மிச்சங்கள்தானே...

இன்று நிறம் இல்லை
என்ற தவிப்பு.., நிரந்தரமில்லை...
ஆனால் நாளை,
உன் தவிப்பை ஒருவருக்கேனும் நீக்க,
வரம் தேவையில்லை...

பாலையும் உடலையும் மூடினால்தான் ஆடை...

ஆடை அழகு... ஆதிக்குப் பாராட்டுக்கள்...

ஆதி
15-11-2007, 09:52 AM
நிறமிலந்த என் வருத்தத்தில் வர்ணமிட்டவர் அனைவர்க்கும் நன்றி..