PDA

View Full Version : மொழிபெயர்க்கும் கணினிகள்!



பகுருதீன்
14-11-2007, 12:54 PM
நீங்கள் பேசுவதை வேறொரு மனித மொழிபெயர்ப்பாளர் உதவி இன்றி அப்படியே இன்னொரு மொழியில் பெயர்க்க வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா? இது போன்று மொழிபெயர்க்கும் கணினிகள் விரைவில் சந்தைக்கு வரும் என்று நாஸா தெரிவிக்கிறது.

இது என்னய்யா பிரமாதம்? இப்போது தான் மொழி பெயர்க்கும் மென்பொருள்கள் பல உள்ளனவே என்று நீங்கள் நினைக்கும் முன் ஒரு சிறு தகவல். இவற்றை உபயோகித்துப் பார்த்தால் இவை உண்மையில் 'முழி' பெயர்ப்பது தெரியவரும். தற்போது சந்தையில் இருக்கும் மென்பொருள்கள் உங்கள் குரலின் ஏற்ற இறக்கங்களைக் கண்டறிய இவற்றை முதலில் பயிற்றுவிக்க வேண்டும். பின்னர் எந்த வேகத்தில் பயிற்றுவிக்கும் போது பேசினீர்களோ அதே வேகத்தில் தான் நீங்கள் மொழிபெயர்க்கத் தேவைப்படும் போதும் பேச வேண்டும்.

இவ்வளவு தலைவலிகள் இருந்தும் இவற்றின் கணினித் திறன் மிகக்குறைவே. முதலில் நீங்கள் பேசி கணினி அதைப் புரிந்து மொழிபெயர்க்கும் வரைக் காத்திருக்க வேண்டும். இவற்றைச் சரியாகப் புரிந்து பயன்படுத்தும் முன்னர் நீங்கள் பேசாமல் அந்தப் புதிய மொழியையே கற்றுக் கொண்டு விடலாம்.

ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ளப்பட்டு முதல் கட்ட வெற்றி ஈட்டியுள்ள மாதிரி (Prototype) மொழிபெயர்ப்புக் கணினி நீங்கள் உடன் எடுத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முகத்திலும் கழுத்துக் குரல்வளைப்பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ள மின்னிணைப்புகள் (Electrodes) மூலம் நீங்கள் சொல்லவரும் வார்த்தையையோ வாக்கியத்தையோ உள்வாங்கி மிகக்குறைந்த நேரத்திற்குள் உள்ளூர் மொழியில் செயற்கைக்குரல் மூலம் இது வெளியிடுகிறது. இதற்காக நீங்கள் சத்தமிட்டுப் பேச வேண்டியதில்லை.

இது போன்று இரு மாதிரிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மாதிரி ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிஷ் மொழிக்கும் இன்னொன்று சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இது சந்தையில் வரக்கூடிய நிலையை அடையவில்லை. மாதிரி நிலையில் இதில் பல தவறுகள் ஏற்பட்டுள்ளன எனினும் அவை விரைவில் களையப்படும் என நாஸா ஆராய்ச்சிமைய ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

தகவல்: அபூஷைமா
நன்றி:சத்தியமார்க்கம்.காம்

அறிஞர்
14-11-2007, 01:19 PM
ஆங்கில் மொழியில் இந்த வசதி உள்ளது தெரிந்ததே....

சில தொலைக்காட்சி நிறுவனங்கள்... அதை பரிசோதித்து வருகின்றன...

இங்கு தகவலை கொடுத்ததற்கு நன்றி நண்பரே..

சூரியன்
14-11-2007, 02:36 PM
நல்ல தகவல்.

mgandhi
14-11-2007, 04:33 PM
தகவலுக்கு நன்றி

நேசம்
14-11-2007, 06:30 PM
தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

அக்னி
14-11-2007, 11:10 PM
மனிதனின் அறிவை மழுங்கடிக்கச் செய்ய வைக்கும் விஞ்ஞானத்தின் ஒரு வழி...
இதனால் பாதிக்கப்படப் போவது படித்த ஏழைகளே...

பகிர்தலுக்கு நன்றி...