PDA

View Full Version : இப்படியும் ஒரு காதல்...



rambal
03-04-2003, 10:26 AM
இப்படியும் ஒரு காதல்...

மரியாதைக்குரிய மஹாராட்சசிக்கு...
உன் திமிர்பிடித்த ராஸ்கல் எழுதுவது...

உன்னைப் பிரிந்த
இந்த ஓராண்டில்தான்
நான் உன்னைப்பற்றி
அதிகமாய் சிந்திக்கிறேன்...

உன்னிடம் நான்
சொல்லாமல் வந்த
காதல்,
கனவில்
உன் உருவில் வந்து
பயமுறுத்திய பின்புதான்
எனக்கே தெரிந்தது...

நான் உன்னை காதலிக்கிறேன் என்று...

எப்படி இது சாத்தியம்?

கருங்கல்லாலான
என் இதயமும்
உனக்காக உருகுகிறது....

உன் திமிர்ப்பேச்சு...
ஆணவப்பார்வை...
அலட்சியப்போக்கு...

உன்னைப்பற்றி
இப்படித்தான் கூறமுடியும்...

இந்தக் கண்றாவிகளைக்கூட
நான் காதலிக்கிறேனடி...

காதலுக்கு கண்கள் இல்லை
என்பது என் விஷயத்தில்தானென்று
நினைக்கிறேன்...

சரிடி...
எல்லாத்தையும் விட்டுத்தள்ளு...

இப்பொழுது சொல்கிறேன்...

நான் உன்னைக்காதலிக்கிறேன்...

வழக்கம் போல் கூச்சல் போடாமல்
அமைதியாக படித்து விட்டு சொல்...

என் மீதான உன் காதலை...
அதுவரை....
நான் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
உன் திமிர் பிடித்த ராஸ்கல்....

Narathar
03-04-2003, 10:36 AM
அழகான ராட்ஷசி....
காதல் பிசாசு............
காதல் திமிர் பிடித்த ராஸ்கல்!!!!

நாராயனா!!! காதல் ஒருவரை என்னென்னவாக மாற்றுகிறது!!!!

gankrish
03-04-2003, 10:51 AM
காதல் காதல் என்று பேச ராம்பால் வந்தானா... அருமை

anushajasmin
03-04-2003, 01:20 PM
காதலிக்கு எழுதும் கடிதத்தில் காதலையைப் பற்றி திட்டி எழுதுதல் என்பதே
ஒரு சுவையான கவிதை. அதை சுவைபட கவிதையில் சொன்ன நண்பருக்கு
பாராட்டுகள்

rambal
04-04-2003, 07:36 AM
அழகான ராட்ஷசி....
காதல் பிசாசு............
காதல் திமிர் பிடித்த ராஸ்கல்!!!!

நாராயனா!!! காதல் ஒருவரை என்னென்னவாக மாற்றுகிறது!!!!

நாரத குணம் கொண்ட நாயகி..
இப்படி கூட இனிமேல் எழுதலாம்..

kavitha
28-02-2004, 04:50 AM
கருங்கல்லாலான
என் இதயமும்
உனக்காக உருகுகிறது....

உன் திமிர்ப்பேச்சு...
ஆணவப்பார்வை...
அலட்சியப்போக்கு...
நல்ல பொருத்தம் ஐயா!