PDA

View Full Version : விரைவினிலே வந்துவிடு...!



வசீகரன்
14-11-2007, 11:46 AM
காத்திருக்கிறது என் வாசல்... நீ வந்து கோலமிட.....
பூத்திருக்கிறது என் கொல்லை பூக்கள்
நீ எடுத்து தலை சூடிட...!

வைகறையை பார்த்திருக்கிறது என் வானம்
வளம் கொழிக்க என் உலகில்
எப்போது வரும் உன் உதயம்....!

வாடைக்காற்றில் தோய்கிறது வாசம்...
வாட்டம் என்னை கொள்ளும்
முன்னே... வந்து விடுமா வசந்தம்.....!

வடிவம் கொள்ள பார்க்கிறது என் வார்ப்புகள்....
வளம் குன்றாமல் வடித்தித்திட கால்விழி
கொஞ்சம் கரிசனமாய் காட்டிடு....!

வனப்பு கொள்ள பார்க்கிறது என் ஓவியம்
வடிவழகை பேணிட வண்ணங்களுடன் வந்து மீட்டிடு....!

விரைவினிலே வந்துவிடு..... விடியல்பொழுதில் வந்துவிடு
சீக்கிரமே வந்துவிடு.... சின்ன புன்னகையை சிந்திவிடு...
கணநேரத்தில் வந்துவிடு.... கவிதைவடிக்க
களம் தந்துவிடு....!

கோலமயிலென வந்திடு கொலுசொலிகள் சப்திக்க
வந்துவிடு....! கோவைஇதழில் இதழ் பதிக்க
உன் கோபமும் கொஞ்சம் தந்துவிடு.....!



என்றும் நானிருந்தேன்......!

வசீகரன்

ஜெயாஸ்தா
14-11-2007, 11:50 AM
ஊருக்கு சென்ற மனைவியை எதிர்பார்த்து வடித்த கவிதை போலிருக்கிறது..... கடைசி வரி
"என்றும் நானிருக்கிறேன்" என்று வரவேண்டுமோ?

வசீகரன்
14-11-2007, 12:01 PM
ஊருக்கு சென்ற மனைவியை எதிர்பார்த்து வடித்த கவிதை போலிருக்கிறது..... கடைசி வரி
"என்றும் நானிருக்கிறேன்" என்று வரவேண்டுமோ?

மனைவியா...! ஐயகோ.. நான் இன்னும் கல்யாணமாகாதவன்....
இது எப்போதும்போல் என் அவளை நினைத்து எழுதியதுதான்..!

அமரன்
16-11-2007, 01:47 PM
கொல்லை நிரம்புது... பூவாடி
வாடை வாட்டுது..வா நீயாடி
வசந்த கோலம் தாடி..!

கண்டிப்பாக கிடைக்கும் வசீகரன்..

வசீகரன்
17-11-2007, 12:04 PM
மிக்க நன்றிகள்.... அமரரே.... தங்கள்
விமர்சனத்தை எதிர்பார்த்திருந்தேன்...!

வசீகரன்

ஓவியன்
21-11-2007, 05:42 AM
காத்திருத்தலும்
காதலைப் போன்றதே
சுகமும் சுமையும்
சேர்ந்தே இருக்கும்...

சுகமான காதலுக்காக
சுமையான காத்திருப்பில்
வசிகரனின் வரிகள்....

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வசிகரரே..!!

கஜினி
21-11-2007, 06:10 AM
சீக்கரம் எதிர்பாருங்கள். வந்துவிடுவார். இந்நேரம் புறப்பட்டிருப்பார்.:)

நேசம்
21-11-2007, 08:42 AM
காதலில் காத்து இருப்பது கூட சுகம் தானே வசீகரன்.அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்

வசீகரன்
21-11-2007, 02:04 PM
மிக்க நன்றி ஓவியன் அவர்களே.. தங்கள் விமர்சனம் நன்று,,!

என்றும் புன்னகையின் அருகில் நான்...!
வசீகரன்

ஆதி
22-11-2007, 10:05 AM
இரவு பனித்துளிகளாய் உதிர்கிறது
உன் கொள்ளைப் பூக்களில்..
உன்றன் விரல்களையேனும்
வருடும் விரகத்தில்..

விடிந்த பிறகும்
விண்மீன்களாய்
உன் குளித்த மேனியில்
நீர்துளிகள்..

வெம்மைக் கொண்டது
தென்றல்
அடுக்களையில் நீ
அனலினூடே

உச்சி வெளையில்
முகிலெடுத்து முகம்
மூடுகிறான் ஞாயிறு
ஓ! மொட்டை மாடியில்
நீ துணி உணத்த போடுகிறாய்..

எல்லா சம்பவங்களும்
உன் ஞாபகமாய் வருகையில்
விரைந்து வருவாய நீ..

வசீகரன் கவிதை
வசீகரமாய்..
வாழ்த்துக்கள் உம்மவள்
வருவாள் காதல் தருவாள்..

-ஆதி

வசீகரன்
23-11-2007, 11:59 AM
வசீகரன் கவிதை
வசீகரமாய்..
வாழ்த்துக்கள் உம்மவள்
வருவாள் காதல் தருவாள்..


மிக்க நன்றிகள் ஆதி....!தங்கள் பின்னூட்ட கவி அருமை....!

உன் அருகில் நான் புன்னகையே...!
வசீகரன்

சுகந்தப்ரீதன்
01-12-2007, 08:13 AM
விரைவினிலே வந்துவிடு..... விடியல்பொழுதில் வந்துவிடு
சீக்கிரமே வந்துவிடு.... சின்ன புன்னகையை சிந்திவிடு...
கணநேரத்தில் வந்துவிடு.... கவிதைவடிக்க
களம் தந்துவிடு....!


வசீகரன்
இது ஏக்கமா..? இல்லை வேகமா..? அழகாய் ஈர்க்கிறது உனது வரிகள் வசிகரமாய் என்னை.. வாழ்த்துக்கள் வசீகரா..? யார் அந்த உன் அவள்..?

வசீகரன்
01-12-2007, 08:53 AM
அதெல்லாம் ஒண்ணும் இல்லை சுகந்தா.... இந்த மாதிரி ஏதாவது
சொன்னால் தான் பொண்ணுங்க மூஞ்சில சிரிப்பே வருது.. இது நமக்கு தெரிஞ்ச சங்கதிதானே......!
பாராட்டியதற்க்கு நன்றி சுகந்தா.... எங்கே போய்ட்டீங்க ரொம்ப நாளா
மன்றத்துல உங்கள காணோம்...

வசீகரன்