PDA

View Full Version : இரவு முடிவதற்குள் வந்துவிடு!!சிவா.ஜி
14-11-2007, 08:54 AM
காத்து நின்று கால்கள்
வேர்விட்டன...
பார்த்து நின்று கண்கள்
நீர்விட்டன....

உன்னையன்றி வேறைத்தொட
விருப்பமின்றி விரல்கள்
விரதமிருக்கின்றன..!
என் தேகமும் படாமல்
விலகியிருக்கின்றன..!

நீ வந்தால் ஒளிந்துகொள்ள
நிலா கருமேகத்தை
விலகாதிருக்க வேண்டுகிறது..!

வண்ணத்துபூச்சிகளெல்லாம்
வந்து வந்து விசாரித்துப் போயின
வரவில்லயா பூ என்று..!

செடி உதறிய பூக்களெல்லாம்
பாதையில் சிதறி
பார்த்திருக்கின்றன உன்
பாதம் தாங்க..!

குயில்களெல்லாம்
குரல் பயிற்சி செய்து
கூடியிருக்கின்றன
வெகு நேரமாய்
நீ வந்ததும் வாழ்த்துபாட..!

நீ வருவாய் அருகே அமர்வாயென
சுத்தம் செய்தேன்
உன் கொலுசொலி மட்டும் கேட்க வேண்டி
மற்ற சத்தம் தவிர்த்தேன்!

வின்மீன்கள் ஒளியின்றி ஒளிந்திருக்கின்றன...நீ
வந்ததும் ஒளி பெற்று வெளிவர!
தென்றலும் காதில் கிசுகிசுத்து கேட்கிறது...
குளிர் குறைகிறதே..வருவாளா அவளென்று!

இரவு முடிவதற்குள் வந்துவிடு
வரச்சொல்லிவிட்டு வராதிருக்காமல்
வந்தொரு பார்வை தந்துவிடு!

பகலில் நிலா வரும் பதிவில்லை
கேட்கும் இவைகளுக்கு
என்னிடம் பதிலில்லை!

யவனிகா
14-11-2007, 11:05 AM
அற்புதமான கவிதை அண்ணா!

அண்ணியை நினைத்துத் தானே எழுதினீர்கள். இல்லைன்னு சொன்னா அண்ணிகிட்ட போட்டுக் குடுப்பேன். ஊருக்குப் போய் வந்த பிரிவுத் துயரா? சோகம் வரும் போது தான் கவிதையின் ஆழமும் அதிகரிக்கிறது,வருவார்கள்..பொறுத்திருங்கள். வாழ்த்துக்கள் அண்ணா!

சிவா.ஜி
14-11-2007, 11:13 AM
நன்றிம்மா.அன்றிருந்த அண்ணியை வேண்டுமானால் சொல்லலாம்.எப்போதும் அருகிலிருக்கும் இப்போதைய அண்ணியை இப்படிக் கேட்கவேண்டியதில்லைதானே...?

அமரன்
15-11-2007, 09:50 AM
வானிலா உலாக்கண்ட நீலமேக கீலங்கள்
அடிப்பிடித்து இடம்பிடித்து நெருங்கி நின்று
கருநீலமாகி வெண்ணிலாவை வட்டமிட...
ஒளி கொடுத்து வெண்ணிலா வெண்வட்டமிட

கெஞ்சி நிற்பதுஎழில் கொஞ்சும் வான்பொட்டோ
"போகாதீர்..போர்வை ஆகுங்கள்..வான்மேகங்களே"..
எப்போதடி காட்டினாய் நிலவுக்கு உன்போட்டோ...!

சிறப்பான கற்பனை சிவா...கலக்கிடீங்க

மின்னும் விண்மீன்கள் வனவாசம் போயினவாம்..
கண்ணினால் நீ பாய்ச்சும் ஜோதியினால் ஒளிக்க
பவ்வியமாய், உறவாடாது ஒற்றுகிறது தென்றல்...
எப்போது நீ வரம்தருவாய். எது நீ வருந்தறுவாய்...

அபாரமான கற்பனைக் கர்ச்சனை சிங்கமே...!

பூப்பாதம் உனக்குத்தந்து கரடுமுரடு நிலம்படைத்ததால்
கோபம்கொண்டு, இறைவனடி சேராமல் உன்னடி தாங்க
மலர்ச்சாலை அமைத்ததுள்ளது நறுமண மலர்ச்சோலை..
மலர்ச்சியோடு உன்னுடன் பேசக் காத்திருக்கிறது கோகிலம்..

அட...அட...அட..அழகு கொட்டிக்கிடக்குது சிவாவின் கவிதை வரிகளில்..சிலிர்க்கிறது என்மெய்..பொய்யல்ல இது மெய்..

உன்னை தீண்டாமல் புஷ்பங்களைத் தீண்டாதாம் விரல்கள்..
உன்பாதம் படாமல் பூக்களை கசக்காதாம் என்பாதங்கள்..
காற்று நின்றதில் உடலழ, காத்து நின்றதில் காலாழமாக..
எவ்வளவு நேரம்தான் இயற்கையிடம் சிறைபட்டிருப்பது..


சிறை மீட்க நீ வருவாயா..
இரவின் மடியில் உன்மடி தருவாயா?
இதை உனக்கு சொல்ல யாரை அனுப்ப..
வேலை நிறுத்தம் செய்கின்றனரே ஒன்றுகூடி..

சபாஷ்... சிவா..
பங்கிற்காய் காத்திருக்கும் அழகான தருணம்..
பாங்காக கவிதையில் நீங்கள் சொன்னவிதம்..
தருகுது எனக்கு சொக்கி நிற்கும் நேரம்..

சிவா.ஜி
15-11-2007, 10:05 AM
அட அட....என்ன ஒரு அருமையான பின்னூட்டம்..? பின்றீங்களே அமரன்.நல்ல ரசனைக்காரரய்யா நீங்கள்.ரசித்ததோடு அந்த ரசிப்பை ரசனையோடு சொல்ல நல்ல கவிஞனால்தான் முடியும்.நீங்கள் கவிஞன்..அபார ரசிப்புள்ள அழகுக் கவிஞன்.மிக்க நன்றிகள் அமரன்.

அமரன்
15-11-2007, 11:26 AM
சிவா...நீங்கள் சந்தனமரம் போன்றவர்..
நான் பக்கத்தில் மரம்போன்றவன்...

மழை நிரப்பிய குளங்கள் குட்டைகளாகலாம்
மழை ஒரு போதும் குறைவதோ, குறைவடைவதோ இல்லை.
நீங்கள் மழை..நான் குளம்..

சிவா.ஜி
15-11-2007, 11:46 AM
மனம் நிறைகிறது அமரன்.என்னைப் பொறுத்தவரை இந்த மன்ற வனத்தில் எல்லாமே சந்தனமரங்களே.

பூமகள்
15-11-2007, 02:46 PM
காத்து நின்ற தருணங்கள்..!
நெஞ்சில் உனை அதிகம் சுமந்த நிமிடங்கள்..!

என்னோடு சேர்த்து இயற்கையும்
காத்துக் கிடக்கின்றன...! - என்
ரகசிய பொக்கிசம் உனைக் காண வேண்டி..!

ஒளிந்திருக்கும் விண்மீன்கள்..!
ஓடிப்போகும் உனைக் கண்டால்..!
ஒளிவீசும் வெண்ணிலவும்..
ஒலியின்றி உடைந்துவிழும்..!

நீ எந்தன் அருகில் வந்தால்
நொடிப் பொழுதும் நெடிதாக்கும்
வரம் கேட்பேன்..!

வந்துவிட்டால் நீண்ட இரவு
பன்னீர் தூவிவிடும்.!
வராவிடில் என் நீண்ட ஈரவிழி
கண்ணீர் தூவி விழும்..!

அருமை சிவா அண்ணா. அமரன் அண்ணாவின் அசத்தல் கவிதையில் அசந்து போனேன்.
மறுமுறை படித்தால்தான் தெளிவேன். பின் ஒரு முறை படித்தால் தான் தமிழாற்றில் விழுவேன்..!
அழகோ அழகு..!

பாராட்டுகள் சிவா அண்ணா மற்றும் அமரன் அண்ணா.

இக்கவியை பாராட்டி சிவா அண்ணாவுக்கு 500 இ-பணம் அன்பளிப்பு.

வசீகரன்
15-11-2007, 03:17 PM
அழகான வார்த்தை வருடல்கள்.... உவமைகளும் உணர்வுகளும்
கவியின் வரிகளுக்கு மேன்மேலும் மெருகூட்டியிருக்கிறது

அருமை சிவா அண்ணா...!

வசீகரன்

அமரன்
15-11-2007, 04:48 PM
காத்து நின்ற தருணங்கள்..!
நெஞ்சில் உனை அதிகம் சுமந்த நிமிடங்கள்..!
தாமதமாக நான் போக, யாராச்சும் என்னைத் திட்டினால் பூமகளை நோக்கி எனது கைகள் நீளும்..

பூமகள்
15-11-2007, 04:57 PM
தாமதமாக நான் போக, யாராச்சும் என்னைத் திட்டினால் பூமகளை நோக்கி எனது கைகள் நீளும்..
அண்ணா.... தாமதமா போயிட்டு இப்படி சொன்னால் உங்க அலுவலகத்தில் அடிப்பாங்க..! :icon_p:


நான் எஸ்கேப் ஆயிடுவேன்.. :lachen001: :rolleyes: ஆனா நீங்க மாட்டிப்பீங்க...!! :D:D

அப்புறம் பூவை குறை சொல்லக் கூடாது....ஆமா..! :icon_ush::icon_ush:

அமரன்
15-11-2007, 05:01 PM
அண்ணா.... தாமதமா போயிட்டு இப்படி சொன்னால் உங்க அலுவலகத்தில் அடிப்பாங்க..! :icon_p::icon_ush::icon_ush:
இவங்க ஏன் என்னை நெஞ்சில் சுமக்கவேண்டும்.:D

பூமகள்
15-11-2007, 05:09 PM
இவங்க ஏன் என்னை நெஞ்சில் சுமக்கவேண்டும்.:D
அலுவலகம் = அலுவல் + அகம் அதாவது.... உங்களது வாழ்க்கை அலுவலின் அன்பு அகம். !!

உங்களின் அகத்தின் பாதி... !!

திரிகோணத்தின் நாயகி...! :cool::icon_ush::D:D

இப்போது சொல்லுங்கள்.... சுமப்பார்களா? இல்லையா?? :icon_b:

Shanmuhi
15-11-2007, 08:03 PM
சிறப்பான கவிதை வரிகள்.
இரவு முடிவதற்குள் வந்துவிடு என்று வண்ணத்துபூச்சி, நிலா கருமேகம் என எடுத்துக்கூறிய விதம் சிறப்பு.
பாராட்டுக்கள்.

சிவா.ஜி
16-11-2007, 04:30 AM
மனம் நிறைந்த நன்றி பூமகள்.இபண அன்பளிப்பை விட மிகப்பெரிதான பரிசு நீ எழுதிய பதில் கவிதை.அழகோ அழகு.வார்த்தைகளின் வசீகரம் மயக்குகிறது.

\\\"நீ எந்தன் அருகில் வந்தால்
நொடிப் பொழுதும் நெடிதாக்கும்
வரம் கேட்பேன்..!

வந்துவிட்டால் நீண்ட இரவு
பன்னீர் தூவிவிடும்.!
வராவிடில் என் நீண்ட ஈரவிழி
கண்ணீர் தூவி விழும்..!\\\"
மிக அருமையான வரிகள்.சந்தம் கொஞ்சுகிறது.பாராட்டுக்கள் தங்கையே.

சிவா.ஜி
16-11-2007, 04:32 AM
அழகான வார்த்தை வருடல்கள்.... உவமைகளும் உணர்வுகளும்
கவியின் வரிகளுக்கு மேன்மேலும் மெருகூட்டியிருக்கிறது

அருமை சிவா அண்ணா...!

வசீகரன்
மிக்க நன்றி வசீகரன்.வசீகரமான வரிகளைப் பிரசவிக்கும் உங்கள் விரல்கள்,இந்த வரிகளைப் பாராட்டி எழுதியமைக்கு நன்றிகள் பலப்பல.

சிவா.ஜி
16-11-2007, 04:33 AM
சிறப்பான கவிதை வரிகள்.
இரவு முடிவதற்குள் வந்துவிடு என்று வண்ணத்துபூச்சி, நிலா கருமேகம் என எடுத்துக்கூறிய விதம் சிறப்பு.
பாராட்டுக்கள்.

மிக்க நன்றி ஷன்முகி.

கஜினி
16-11-2007, 05:47 AM
காதல் தவழ்கிறது உங்கள் கவிதையில். மலைத்து நின்று வேடிக்கை பார்க்கிறேன். அற்புதமான கவிதை அண்ணா.

சிவா.ஜி
16-11-2007, 07:27 AM
மிக்க நன்றி கஜினி.

நேசம்
16-11-2007, 09:56 AM
எளிமையாகவும்,அழகான வரிகளை கொண்டு படைக்கப்பட்டதாக இருந்தது சிவா அண்ணா.வாழ்த்துக்கள்.இப்போ அருகில் இருக்கும் அண்ணியை நினைத்து சொல்ல வில்லையென்றால் அப்ப யாருக்கு ? தப்பு.போட்டு கொடுத்து தான் மத்த வேலையை பார்க்கனும்

சிவா.ஜி
17-11-2007, 03:12 AM
பழைய நெனப்புடா...பேராண்டி பழைய நெனப்புடாங்கற பாட்டை நினைவு படுத்திக்கொள்ளுங்கள் நேசம்.வாழ்த்துக்கு நன்றி.(போட்டுக் குடுத்தாலும் நாங்க மாட்டமாட்டோமில்ல...)

ஓவியன்
21-11-2007, 06:06 AM
காத்து நின்று கால்கள்
வேர்விட்டன...
பார்த்து நின்று கண்கள்
நீர்விட்டன....
வேர்விட்ட கால்கள்
வாடாதிருக்கவா
நீர் விட்டன கண்கள்..??

உன்னையன்றி வேறைத்தொட
விருப்பமின்றி விரல்கள்
விரதமிருக்கின்றன..!
என் தேகமும் படாமல்
விலகியிருக்கின்றன..!
நீ வேண்டுமென்று
விரதமிருந்த என் தேகம்
இன்று மீள வாவென
விரதமிருக்கின்றனவே..!!

நீ வந்தால் ஒளிந்துகொள்ள
நிலா கருமேகத்தை
விலகாதிருக்க வேண்டுகிறது..!
நிலவு ஒளிய கருமேகம்
நான் ஒளிய உன் தேகம்
எனக் காத்திருக்கின்றேன்
உன் வருகைக்காக...

வண்ணத்துபூச்சிகளெல்லாம்
வந்து வந்து விசாரித்துப் போகின்றன
வரவில்லயா பூ என்று..!
வந்த பின் வண்ணாத்துபூச்சி
கேட்குமோ ஏன் இந்த பூ
அசைகிறதென்று...!!

செடி உதறிய பூக்களெல்லாம்
பாதையில் சிதறி
பார்த்திருக்கின்றன உன்
பாதம் தாங்க..!
இல்லை வண்ணாத்துபூச்சிகள்
உதாசீனம் செய்த பூக்கள்
காத்திருக்கின்றன
உன் மேற் கோபம் கொண்டு....

குயில்களெல்லாம்
குரல் பயிற்சி செய்து
கூடியிருக்கின்றன
நீ வந்ததும் வாழ்த்துபாட..!
அதன்பின்
உன் பின்னாலேயே
வரப் போகின்றன
அந்த குயில்கள்
உன்னிடம்
இசை பழக..!!

நீ வருவாய் அருகே அமர்வாயென
சுத்தம் செய்தேன்
உன் கொலுசொலி மட்டும் கேட்க வேண்டி
மற்ற சத்தம் தவிர்த்தேன்!
உன் ஒற்றைக்
கொலுசொலிக்காக
ஊமை உலகில்
எத்தனை நாள்
தவம் இயற்றினேனோ..??

விண்மீன்கள் ஒளியின்றி ஒளிந்திருக்கின்றன...நீ
வந்ததும் ஒளி பெற்று வெளிவர!
தென்றலும் காதில் கிசுகிசுத்து கேட்கிறது...
குளிர் குறைகிறதே..வருவாளா அவளென்று!
குளிர் குறையுமா
இல்லை
உஸ்ணம் கூடுமா
உன் வருகையால்...??
புரியாமல்
நானும் தென்றலும்..!!

இரவு முடிவதற்குள் வந்துவிடு
வரச்சொல்லிவிட்டு வராதிருக்காமல்
வந்தொரு பார்வை தந்துவிடு!
வந்துவிடு அன்பே
வந்து
தந்துவிடு ஒரு வார்த்தை
இனி ஒரு பிரிவு
வந்து விடாதென...!!

பகலில் நிலா வரும் பதிவில்லை
கேட்கும் இவைகளுக்கு
என்னிடம் பதிலில்லை!
உங்களிடம் மட்டுமில்லை சிவா, என்னிடமும் தான்
அழகு கவியில்
பிரிவுத்துயரில் என்னுள்ளத்தையும்
இளகச் செய்துவிட்டன
உங்கள் வரிகள்...!! :icon_b:

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சிவா..!! :)

சிவா.ஜி
21-11-2007, 06:11 AM
பின்னூட்டக் குறுங்கவிகளில் பின்னிவிட்டீர்கள் ஓவியன்.சிறிது சிறிதாய் அடுக்கிய அழகு வரிகளில் ஆனந்தமாய் திளைத்தேன்.பாராட்டுபவரையே பாராட்ட வைத்துவிட்டீர்கள்.நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

ஓவியன்
21-11-2007, 06:16 AM
நன்றி சிவா!!

சமீபகாலமாக உங்கள் படைப்புக்கள் பலவற்றில் என் பின்னூட்டமில்லை என்றொரு குற்றவுணர்வெனக்கு....!! :frown:

மன்றில் அதிகரித்து வரும் படைப்புக்களின் எண்ணிக்கையும், முதற்கண் புதியவர்களை கவனித்து ஊக்கமூட்ட வேண்டுமென்ற எண்ணத்தாலும் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்....
இருந்தாலும், மீள தவற விட்டவற்றை தேடி தேடிப் பின்னூட்டம் இட முயன்று கொண்டிருக்கின்றேன்..!! :)

இளசு
21-11-2007, 06:44 AM
காத்திருந்தால் வருவேன் வெண்ணிலாவினில்...
வார்த்தை தவறிவிட்டாய்...

நம்பிக்கையின் அந்தப்பக்கம் போய்விட்டான் பாரதி..

துடைத்த இடம்.. இறைத்த விழி..
நிலைத்த கால்.. துடிக்கும் இதயம்..
இயற்கை எல்லாம் துணையாக..
இளைக்காத நம்பிக்கையுடன்..

சிவா தந்தது அழகுக்கவிதை!

அழகுக்கு அழகு சேர்த்தார் - அமரன், பூமகள், ஓவியன்!

நாலு பேருக்கும் நன்றி!

சாராகுமார்
21-11-2007, 06:56 AM
சிவா அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.அருமையான காதல் கவிதை.மன்றத்தின் முலம் உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.அருமையான கவிதைகள் படிக்க முடிகின்றது.

சிவா.ஜி
21-11-2007, 07:03 AM
மன்றில் அதிகரித்து வரும் படைப்புக்களின் எண்ணிக்கையும், முதற்கண் புதியவர்களை கவனித்து ஊக்கமூட்ட வேண்டுமென்ற எண்ணத்தாலும் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்....
:)

மிக மிக நல்லது ஓவியன்.புதியவர்களுக்குத்தான் ஊக்கப் பின்னூட்டங்கள் மிக அவசியம்.அதை செவ்வனே செய்துவரும் உங்களை மனதார பாராட்டுகிறேன்.

சிவா.ஜி
21-11-2007, 07:05 AM
நன்றி இளசு.அதென்னவோ காதல் கவிதையென்றாலே கற்பனைக் குதிரை இரட்டை வேகத்தில் பறக்கிறது.(வர்னனைகளுக்கு வானமே எல்லை என்பதாலா...?)

சிவா.ஜி
21-11-2007, 07:10 AM
மிக்க நன்றி சாராகுமார்.சிறிது நாட்களாக உங்களை அதிகம் காணமுடியவில்லை.மீண்டும் மன்ற உலாவுக்கு வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

பென்ஸ்
21-11-2007, 10:07 AM
நல்ல கவிதை சிவா....
இந்த முறை கவிதையில் குறை மட்டும் கூறி செல்கிறேன் (ஆதிக்கு அதுதான் பிடிக்குதாம் :) )
இரவுமுடிவதற்க்குள் வந்துவிடு...
"விடியும்முன் " என்றோ அல்லது "இருட்டும் முன்" எல்லோரும் சொல்லும் போது முன்னதாகவே வேண்டி நிற்க , இரவு முடிவதற்குள் என்ற போது ... ஆதவன் வரும் போதுதானே தனிமையிரவு விடியும் ..
கவிதைக்கு வருவோம்....
நடையும் சாரமும் அருமை... கவிதையும் அருமை...
இரவில், இரவின் நிலவையும், நிலா கொஞ்சும் நச்சத்திரங்களையும் பேசும் போது , பகலின் வண்ணாத்து பூச்சியையும், பூவையும், குயிலையும் சேர்த்திருக்க வேண்டாமோ????


இது நான் உங்கள் கவிதைக்கு எழுதிய முதல் பின்னூட்டம்....

பகலில் நிலா வரும் பதிவில்லை
கேட்கும் இவைகளுக்கு
என்னிடம் பதிலில்லை!

ஆனால் , இந்த வரிகளை பார்த்த பிறகு...

"யூ நாட்டி பாய்...!"

சிவா.ஜி
21-11-2007, 10:16 AM
ஆதிக்கு மட்டுமல்ல பென்ஸ் எனக்கும் இதுதான் பிடிக்கிறது.அது இருக்கட்டும் இரவில் வண்ணத்துப் பூச்சியும்,குயிலும் வராதா...இது எனக்கு புதிய செய்தி.தெரிவித்ததற்கு மிக்க நன்றி.கூடவே ஒரு சப்பைக்கட்டு.....இவன் மதியத்திலிருந்தே காத்திருக்கிறான்(காதலி வரச் சொன்னா 5 மணி என்றால் 2 மணிக்கே வந்து தேவுடு காப்பார்களே நம் காதலர்கள்)..அப்போது கேட்ட குயில்களின் கீதத்தையும்,அப்போது பார்த்த வண்ணத்துபூச்சிகளையும் இரவிலும் நினைவுகூர்கிறான்.
அப்புறம் அந்த \"பதிலில்லை\"சத்தியமாய் உங்களுக்கில்லை.நன்றி பென்ஸ்.

பென்ஸ்
21-11-2007, 10:23 AM
ஹி ஹி... நல்லவேளை தாமரை பார்க்கலை...
நிலவை குறித்து சொல்லுபோதும் நிகழ்காலத்தில் சொல்லிவிட்டு, குயிலை பற்றி சொல்லும் போதும் நிகழ்காலத்தில் சொல்லுகிறீர்களே...!!!!!

இரவில வரும் நிலவை , பகலில் அனுப்பிவிடுவீரோ.... ???!!!!

சிவா.ஜி
21-11-2007, 10:27 AM
இரவில வரும் நிலவை , பகலில் அனுப்பிவிடுவீரோ.... ???!!!!

அனுப்பாம வெச்சிருந்தா வூட்ல தேடுவாங்க...ஹி..ஹி..(ஆமா நெஜமாவே தப்பிச்சேன் தாமரை பாக்கல)

ஆதவா
21-11-2007, 12:29 PM
அபாரம் சிவா,அண்ணா.

முதல் வரிகள் படித்தவுடன் ஏனோ எனக்கு ஷீ-நிசி ஞாபகம். அந்த சந்தங்கள் எனக்கு நினைவுறுத்தின.

உன்னையன்றி வேறைத்தொட
விருப்பமின்றி விரல்கஉன்ள்
விரதமிருக்கின்றன..!

விரதம் என்பது இருந்தும் இல்லாமல் இருப்பது. அதேபோலத்தான், வேறு பலர் இருந்தாலும் விரல்கள் விரதமிருக்கின்றன. ஏனெனில் விரதமுக்தி அவளிடம் இருக்கிறது. நன்றாக யோசித்து எழுதியதைப் போல இருக்கிறது... (எனக்கு மிகவும் பிடித்த இடம்)

ஒவ்வொரு பத்திகளும் சிறு சிறு குறுங்கவிதைகளை அடக்கிய மலர்க்கொத்தாக..

கொலுசொலிக்கு மற்றைய சப்தங்களை தவிர்த்தலும்
மேகச் செறிவில் மீன்கள் மறைந்திருத்தலும்
சொல்லிய விதத்திலும் அடுக்கிய விதத்திலும் அருமையோ அருமை.

நிலவு எல்லா கவிஞர்களின் பொதுக் காதலி. சிலர் வம்பிழுக்கக் கூடும். அத்தகைய ஒருவருள் நீங்களும்.

வாழ்த்துகள் அண்ணா.

சிவா.ஜி
21-11-2007, 12:33 PM
வாங்க ஆதவா....கடைக்காரர் புதுப்பண்டம் செய்ததும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ஒன்றிரண்டு கட்டித் தனியே எடுத்து வைத்தீருப்பதைப் போல நானும் காத்துக்கொண்டிருந்தேன் இந்தக் கவிதை பொட்டலத்துடன்.வாங்கியவர் வாயார பாராட்டும்போது...நிறைவாக உணர்கிறேன்.நன்றி ஆதவா.

ஆதவா
21-11-2007, 12:58 PM
வாங்க ஆதவா....கடைக்காரர் புதுப்பண்டம் செய்ததும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ஒன்றிரண்டு கட்டித் தனியே எடுத்து வைத்தீருப்பதைப் போல நானும் காத்துக்கொண்டிருந்தேன் இந்தக் கவிதை பொட்டலத்துடன்.வாங்கியவர் வாயார பாராட்டும்போது...நிறைவாக உணர்கிறேன்.நன்றி ஆதவா.

ருசித்தெடுத்த அளவுக்கு
ரசித்தெழுத வில்லையே!!!
நான்

சிவா.ஜி
21-11-2007, 01:04 PM
கிள்ளி வாயில் போட்டவுடன் கடைக்காரரைப் பார்ப்பாரே வாடிக்கையாளர் ஒரு பார்வை...அதுவே சொல்லுமேஅவருடைய மொத்த பாராட்டையும்.

ஆதவா
21-11-2007, 01:47 PM
கிள்ளி வாயில் போட்டவுடன் கடைக்காரரைப் பார்ப்பாரே வாடிக்கையாளர் ஒரு பார்வை...அதுவே சொல்லுமேஅவருடைய மொத்த பாராட்டையும்.

என்னை புரிந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா.... :)