PDA

View Full Version : இதயத்தின் எடை..!



கஜினி
14-11-2007, 04:35 AM
என் இதயத்தின்
எடை ஐம்பது கிலோ..!
ஆம்
என் இதயத்திற்குள்
அவள்..!

யவனிகா
14-11-2007, 04:38 AM
அது சரி...அம்பது கிலோ தானா? உங்க ஆளக் கொஞ்சம் ஓவர் வெயிட் போடாமப் பாத்துக்குங்க! இல்லன்னா நீங்க இதயத்த தூக்கீட்டு நடக்கச் சிரமமாயிருக்கும். கின்னஸ் புக்குக்குத் தகவல் குடுத்துட்டீங்களா? கலக்குறீங்க கஜினி.

கஜினி
14-11-2007, 04:52 AM
ஹாஹா... நன்றி அக்கா.

ஓவியன்
14-11-2007, 05:28 AM
அப்போ உங்கள் மனங்கவர்ந்தவளின் இதயத்தின் எடை என்ன நூறு கிலோவா...???

அது தாங்க உங்க நிறை...??? :D:D:D

----------------------------------------------------------------------------------------

பாராட்டுக்கள் கஜனி வித்தியாசமான சிந்தனைக்கும் அழகுக் குறுங்கவிதைக்கும்...!! :)

கஜினி
14-11-2007, 05:36 AM
என் மொத்த எடை நூறு கிலோதான். அதாவது என் எடை மற்றும் என் இதயத்தின் எடை இரண்டும் சேர்த்து. ஹிஹி.

பூமகள்
14-11-2007, 07:03 AM
"இதயத்தில் நீ..!!
சரிசமம் இதிலுமா?
இப்போது என் எடை
நூறு கிலோ!!

ஒன்று மட்டும் புரியவில்லையே..!
என்னுள் நீ என்றால்..!
என்னில் பாதி நீ என்றால்..!
எடை மட்டும் எப்படி இரட்டிப்பாகும்??
பாதியல்லவா ஆகவேண்டும்??"


பாராட்டுகள் கஜினி..!! நல்லதொரு கவி..!!

அமரன்
14-11-2007, 07:17 AM
என் இதயத்தின்
எடை ஐம்பது கிலோ..!
ஆம்
என் இதயத்திற்குள்
அவள்..!

எடை அதிகமானால்
இறக்கி வைப்பீரோ.
எடைபோட்டால் தெரியும்
அடைகாப்பின் வீரியம்

அக்கினி:- ஏனுங்கோ நம்ம இதயத்தின் எடை 50 கிலோவா..
ஓவியன்:-ஆ...ஆ....ஆ...ஆ....(எக்கோ இல்லை அதிர்ச்சி..)

மனோஜ்
14-11-2007, 07:47 AM
கஜீனி உங்க இதயம் அவ்வளவு பெரியதா
நல்ல யோசுக்கிறீங்க அருமை

கஜினி
14-11-2007, 08:16 AM
மிக்க நன்றி நண்பர்களே.

நேசம்
14-11-2007, 08:43 AM
வாழ்த்துக்கள் கஜினி சுமப்பதற்கு !

ஓவியன்
14-11-2007, 11:52 AM
வாழ்த்துக்கள் கஜினி சுமப்பதற்கு !

சுமப்பதும் சுகம் தான்
சுமப்பது சுகமான
சுமையானால்...!!

gans5001
17-11-2007, 06:36 AM
என்னைக் கேட்டால் எடையற்றது என்றே சொல்வேன்... அவள் திருடி சென்று விட்டதால்