PDA

View Full Version : என் நிலா!!!lenram80
13-11-2007, 10:36 PM
நாசாவின் புதிய கண்டுபிடிப்பு!
உலகமே ஒருகணம் வியப்பு!
நிலவின் மேற்பரப்பில் நீர் திவலைகளாம்!
அவர்களுக்கு எப்போது தெரிய போகிறது?
உன்னை நிலவென நினைத்து
உன் நெற்றி வியர்வையை தான்
செயற்கை கோள்கள் படமெடுத்து அனுப்பிவிட்டன என்று?

நிலவு மனிதர்களிடம் கேட்பது எல்லாம்
ஒரே ஒரு காது கேட்கும் கருவியை தான்!
உந்தன் குரலை கேட்க வேண்டுமாம் அதற்காக!
நேற்றிரவு நிலவுக்கு தெரியும்படி நான் இப்படி எழுதி வைத்ததால்!
"குழலினிது யாழினிது என்பர் -என்னவளின்
கொஞ்சு மொழி கேளாதார்"

இஸ்ரோவே! 2020-ல் நிலவுக்கு ஆள் அனுப்பும் போது
தண்ணீர் எல்லாம் குடிக்க எடுத்து செல்ல வேண்டாம்!
என்னவளின் புகைப்படத்தை எடுத்துச் செல்லுங்கள்!
அவளது முகத்தை நிலவு பார்த்து விட்டால்
ஆனந்த கண்ணீரில்* அதன் குண்டு குழிகள் எல்லாம் நிரம்பி விடும்!

கடல் வற்றினாலும் இனி கவலை இல்லை!
ஒருமுறை இவள் இரவில் வெளிவந்து வாசலில் நின்றால் போதும்!
"என்னை விட பேரழகி அதோ" என்று
நிலவு அழும் போது விடும் கண்ணீரால் கடலை நிரப்பி விடலாம்!

என் வீட்டு நாள்காட்டியில் நான் குறித்து வைப்பது இது தான்!
தினமும் காலை 7 முதல் மாலை 7 வரை பௌர்ணமி!
மாலை 7 முதல் காலை 7 வரை அமாவாசை!
உன்னை சந்திக்கும் அந்த தித்திக்கும் தருணங்களில் பௌர்ணமியாய்
பிரிந்து தத்தலிக்கும் தருணங்களில் அமாவாசையாகிறது என் நிலவு!

பூமிக்கு நிலவின் மீது கோபமாம்!
நான் போய் பூமியிடம் இப்படி சொன்னதால்!
"உன் அந்தரங்கங்கள் நிலவுக்கு தெரிந்து விட்டது"!
பூமிக்கு எங்கே புரியப் போகிறது?
நீ "புவியியல்" படித்ததை தான் நான் இப்படி சொன்னேன் என்று!

மனிதர்கள் உருவான பின்பு பூமிக்கும் வஞ்சக எண்ணம் வந்து விட்டதோ?
நிலவு அழகாய் இருப்பதை பொறுக்க முடியாமல்
உன்னை படைத்து, நிலவை பழிக்குப் பழி வாங்கி விட்டதே!

முதன் முதலாய் நிலவை மிதித்தவன் - அந்த இரக்கமே இல்லாத ஆம்ஸ்ட்ராங்!
அணுகுண்டை போட்ட நாட்டில் பிறந்தவனிடம் பிறகு என்ன எதிர் பார்க்க முடியும்?
முதன் முதலாய் நிலவின் கை பிடித்தவன் நான் தானே!
அஹிம்சை பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் பிறந்தவன் என்பதால்!
பொறுங்கள்!
நான் ஒன்றும் காந்தியின் அஹிம்சை பற்றி இங்கே சொல்லவில்லை!
அவளை தான் (இம்சை என்று... மன்னிக்கவும்...:-)
அஹிம்சை என்று அடை மொழிந்தேன்!

பூமியை சுற்றும் ஈயாய் அந்த நிலா!
என்னை சுற்றும் சேயாய் இந்த நிலா!
நான் சுற்றும் தாயாய் எந்தன் நிலா!

*ஆனந்த கண்ணீர் உப்பு கரிக்காதாம்.

அறிஞர்
13-11-2007, 11:41 PM
"குழலினிது யாழினிது என்பர் -என்னவளின்
கொஞ்சு மொழி கேளாதார்"

இஸ்ரோவே! 2020-ல் நிலவுக்கு ஆள் அனுப்பும் போது
தண்ணீர் எல்லாம் குடிக்க எடுத்து செல்ல வேண்டாம்!
என்னவளின் புகைப்படத்தை எடுத்துச் செல்லுங்கள்!
அவளது முகத்தை நிலவு பார்த்து விட்டால்
ஆனந்த கண்ணீரில்* அதன் குண்டு குழிகள் எல்லாம் நிரம்பி விடும்!

கடல் வற்றினாலும் இனி கவலை இல்லை!
ஒருமுறை இவள் இரவில் வெளிவந்து வாசலில் நின்றால் போதும்!
"என்னை விட பேரழகி அதோ" என்று
நிலவு அழும் போது விடும் கண்ணீரால் கடலை நிரப்பி விடலாம்!

என் வீட்டு நாள்காட்டியில் நான் குறித்து வைப்பது இது தான்!
தினமும் காலை 7 முதல் மாலை 7 வரை பௌர்ணமி!
மாலை 7 முதல் காலை 7 வரை அமாவாசை!
உன்னை சந்திக்கும் அந்த தித்திக்கும் தருணங்களில் பௌர்ணமியாய்
பிரிந்து தத்தலிக்கும் தருணங்களில் அமாவாசையாகிறது என் நிலவு!லெனின் கலக்கலாக எழுதியிருக்கிறீர்கள்...

நாசாவில் ஆரம்பித்து.. இஸ்ரோவை வழியில் இழுத்து... நிலவுக்கு புது வடிவம் கொடுத்துவிட்டீர்கள்...

உம் புது மொழி.. அருமையோ அருமை...

விரைவில் தண்ணீர் பஞ்சம் தீர...
தங்களின் நிலா போட்டோவை... நிலவிடமும் (எங்களிடமும்) காட்டுங்கள்....

lenram80
14-11-2007, 01:12 PM
அறிஞரே, ஏற்கனவே இது மழை காலம். கோடை காலம் வரும் போது, நான் நிலாவின் புகைபடத்தை தருகிறேன். :PP

சிவா.ஜி
14-11-2007, 01:47 PM
என் வீட்டு நாள்காட்டியில் நான் குறித்து வைப்பது இது தான்!
தினமும் காலை 7 முதல் மாலை 7 வரை பௌர்ணமி!
மாலை 7 முதல் காலை 7 வரை அமாவாசை!
உன்னை சந்திக்கும் அந்த தித்திக்கும் தருணங்களில் பௌர்ணமியாய்
பிரிந்து தத்தலிக்கும் தருணங்களில் அமாவாசையாகிறது என் நிலவு!

மிக அழகான,அருமையான வரிகள்.நிலவுக்கு புதுவடிவம் கொடுத்து...அவளாக்கி அழகுபார்த்த கவிதையும் அழகோ அழகு.
வாழ்த்துகள் லெனின்.

பூமகள்
14-11-2007, 02:34 PM
மிக அழகான கவி கற்பனை.
நிஜத்தை புனைத்து கற்பனை கலந்து கொடுக்கும் பாங்கு அழகாய் வருகிறது லெனின் அண்ணா.
சன் டீவியின் அசத்தப் போவது யாரு? நிகழ்ச்சியில் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவரிடம் "கவிதை எப்படி இருக்கனும்? " என்று கேட்டதற்கு "மக்களுக்கு புரியும் எளிமையாக இருக்கனும்" என்று சொன்னார்.

அந்த வகையில் உங்களின் கவிதைகள் இமாலய கருத்துகளை எளியவரும் புரியும் விதத்தில் தந்து கலக்குகிறீர்கள்..!
பாராட்ட வார்த்தைகள் இல்லை.

நிலவுப் பெண்ணாளின் முகத்தை சீக்கிரம் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ;) :)
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அன்பர் லெனின்.

சூரியன்
14-11-2007, 02:49 PM
லெனின் அண்ணா மிகவும் கவிதை மிகவும் அழகாக உள்ளது.

இந்த வரிகள் இன்னும் அழகு:

நிலவு மனிதர்களிடம் கேட்பது எல்லாம்
ஒரே ஒரு காது கேட்கும் கருவியை தான்!
உந்தன் குரலை கேட்க வேண்டுமாம் அதற்காக!
நேற்றிரவு நிலவுக்கு தெரியும்படி நான் இப்படி எழுதி வைத்ததால்!
"குழலினிது யாழினிது என்பர் -என்னவளின்
கொஞ்சு மொழி கேளாதார்"

ஓவியன்
21-11-2007, 06:36 AM
அன்பு லெனின்!!

ஒவ்வொரு வரிகளிலும்
இளமையுடனும் இனிமையுடனும்
காதல் பொங்கி வழிகிறது...

மனதாரப் பாராட்டுகிறேன் ஓர் அற்புதக் கவிதைக்கு...
பாராட்டுக்கள் நண்பரே, நீங்கள் காதல் தேவதையின் பூரண அனுக்கிரகம் பெற்றவர்...!! :icon_b:

lenram80
21-11-2007, 02:18 PM
மிக்க நன்றி சிவா.ஜி, பூமகள், சூரியன் & ஓவியன்