PDA

View Full Version : கிழிசல்



ஆதி
13-11-2007, 04:52 PM
உடைந்த கண்ணாடியை
ஒட்டவைத்து பார்த்தேன்
கிழிந்திருந்தது
என் பிம்பம்..

-ஆதி

அறிஞர்
13-11-2007, 08:29 PM
அருமையான எளிய வரிகள்...

பார்க்கும் இடத்தை பொறுத்து...
தெரிவது... பிம்பத்தின் வெளிப்பாடு...

ஆதி
14-11-2007, 04:42 AM
நன்றி அறிஞர் ஐய்யா

பூமகள்
14-11-2007, 06:16 AM
"உடைபட்ட சில்களில்
சிதறிய பிம்பம்..
ஒன்றானாலும் பிரிந்தே..!!"

அட எனக்கும் குறுங்கவி எழுதப்பழக்கிவிட்டுவிட்டீரே... ஆதி..!
மிகுந்த நன்றிகள்..! நல்ல கவி..! பொருள் பொதிந்து உள்ளது..!
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!

கஜினி
14-11-2007, 06:24 AM
ஆஹா... அழகிய குறுங்கவிதை.

அமரன்
14-11-2007, 07:25 AM
உடைந்த கண்ணாடியை
ஒட்டவைத்து பார்த்தேன்
கிழிந்திருந்தது
என் பிம்பம்..


விரிசல் காரணமோ
பிம்பம் கா ரணமே?

பாராட்டுக்கள்...
கண்ணாடி குறியீடாகுதே
என்மனம்
பலகுறிகளை நாடுதே...!

ஆதி
14-11-2007, 07:28 AM
[QUOTE=பூமகள்;296814]"உடைபட்ட சில்களில்
சிதறிய பிம்பம்..
ஒன்றானாலும் பிரிந்தே..!!"

[COLOR=Blue]அட எனக்கும் குறுங்கவி எழுதப்பழக்கிவிட்டுவிட்டீரே... ஆதி..!

பூமகள் - பாமகளுக்கு பாட்டெழுத படிப்பிக்க வேண்டுமா என்ன ?

உங்கள் கவிதை மிக அருமை.. வாழ்த்துகள்..

சிவா.ஜி
14-11-2007, 07:45 AM
அழகான அர்த்தம் பொதிந்த வரிகள்.வாழ்த்துகள் ஆதி.

மனோஜ்
14-11-2007, 07:53 AM
பிம்பம் மட்டும் அல்ல மனதும் தான்
அருமை நண்பரே

யவனிகா
14-11-2007, 08:07 AM
பிம்பம் கிழிந்தால் என்ன? நிஜம் நேர்ப்பட இருக்கிறதல்லவா?கவலையை விடுங்கள்.ஆழமான கவிதைகளை, அழகிய வரிகளில் அளித்து வருகிறீர்கள்.பாராட்டுகள்.

ஆதி
14-11-2007, 10:13 AM
கிழிசலில் தையலிட்ட அனைவர்க்கும் நன்றி..

ஓவியன்
14-11-2007, 11:54 AM
வாழ்க்கையில் பலவியங்கள் இது போன்ற கண்ணாடி தான் உடைந்து ஒட்டினாலும் உடைந்து போன விம்பங்களை ஒட்ட வைக்க இயலாது...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஆதி..!!

ஆதி
14-11-2007, 03:22 PM
வாழ்த்துகளுக்கு நன்றி ஓவியன்