PDA

View Full Version : நடந்து வந்த பாதை



பகுருதீன்
13-11-2007, 04:10 PM
நடந்து வந்த பாதைகளில் பூக்கள் இல்லை
முட் படுக்கைதான் இருந்தது!
கடந்து வந்த நாட்கள் எல்லாம் தென்றல் வீசவில்லை
வாடை காற்றுகளே!
துரத்துகின்ற துரோகங்கள்!
விரட்டுகின்ற ஏமாற்றங்கள்!
ஒதுங்கிவிட்ட நட்புகள்!
விலகிவிட்ட உறவுகள்!
இருந்த போதிலும்!!!
இரும்பினால் செய்யப்பட்ட பாதங்களும்
நரம்பினால் பின்னப்பட்ட நம்பிக்கைகளும்
என்னுடன் இருக்கும் வரை
தோல்வி என்னை தொடுவதாகவும் இல்லை
வெற்றி என்னை விடுவதாகவும் இல்லை.
(இறைவன் நாடினால்)

மனோஜ்
13-11-2007, 04:55 PM
தோல்வி படியாக்கி
துன்பத்தை கைல் ஆக்கி
வெற்றி என்றும் உண்கையில் அடையும் ஒரு நாள்
கவிதை அருமை வாழ்த்துக்கள்

ஆதி
14-11-2007, 02:57 AM
அழகிய வரிகள்.. நல்ல கரு.. நல்ல கவிதை..

இதை படித்த பொழுது எனக்கு இரண்டு கவிதைகள் ஞாபகத்துக்கு வருகின்றன..

"எந்த தேவதையாலும் அவன் ஆசீர்வதிக்கப்படவில்லை
ஆனால்
எல்லாச் சாத்தான்களாலும்
இஷ்டம் போலச் சபிக்கப்பட்டிருக்கிறான்"

- மு.மேத்தா
கண்ணீர்ப்பூக்கள்


என் பாதைகள் பூக்களால் நிரப்பபட்டது இல்லை
முட்களே நிறைந்து இருந்தன்
என் நிர்வாணத்தை ஒரு கையில் மறைத்துக்கொண்டு
இன்னொறு கையால் எனக்கான ஆடையை
நான் நெய்துகொண்டேன்..

-வைரமுத்து
"இதுவரை நான்" முகப்புரையில்

யவனிகா
14-11-2007, 03:20 AM
நல்ல கவிதை தான் கடைசியில் "இறைவன் நாடினால்" தான் நெருடுகிறது.

சிவா.ஜி
14-11-2007, 03:41 AM
தோல்வியால் துவளாத மனம் என்றுமே ஜெயிக்கும்.வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில்..கடந்துவந்த பாதையின் சோகம் தாக்காதிருந்தாலே வெற்றி இலக்கை அடையமுடியும்.நல்ல கருத்துடன் வந்திருக்கும் உங்கள் முதல் கவிதைக்கு வாழ்த்துகள்+பாராட்டுக்கள்.

பகுருதீன்
14-11-2007, 04:05 AM
நல்ல கவிதை தான் கடைசியில் "இறைவன் நாடினால்" தான் நெருடுகிறது.

நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன; மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்து விடுவான்.

எந்த ஒரு நிகழ்ச்சியும் நம்மை படைத்த இறைவனின் நாட்டப்படிதன் நடக்கிறது

மனிதன் விசுவாசத்தின் பொருட்டாலும், அல்லாஹ்வின் திருநாமங்கள், அவனுடைய தன்மை (ஸிபாத்து) கள் பொருட்டாலும் வேண்டப்படும் பிரார்த்தனைகள் அனைத்துமே அங்கீகரிக்கப் படுவதற்குக் காரணமாகின்றன. இறைவன் தன் திருமறையில் இதை சுட்டிக்காட்டும் போது:
விசுவாசங் கொண்டு நற்கருமங்கள் செய்தோர்களின் பிரார்த்தனைகளை அவன் அங்கீகரித்து அவர்களுக்கு தன்னுடைய அருளை மேலும் அதிகப் படுத்துகின்றான் எனக் கூறினான்.
(அல் குர்ஆன்-42:26)
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றை அவன் படைக்கின்றான். அவன் நாடியவர்களுக்கு பெண்மக்களை அன்பளிப்புச் செய்கின்றான். தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அன்பளிப்புச் செய்கின்றான். அல்லது ஆண்மக்களையும், பெண்மக்களையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கு அறிந்தவன். மிக்க ஆற்றல் உடையவன்.
(அல்-குர்ஆன் 42 : 49,50)
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.

(திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 5 : வசன எண் :08)

17-54 உங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்;
(திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 17: வசன எண் :54)
"செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன" என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூற்கள்: புகாரி,முஸ்லிம்

இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம்
என்பதை நன்கு விளங்கலாம். நம்முடைய எண்ணத்தின் அடிப்படையிலே தான்
நம்முடைய அமல்களுக்கு அல்லாஹ் மறுமையில் கூலி வழங்குகிறான்.


"நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ
பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே
பார்க்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்

மேழும் தகவல் அறிய இதை சொடுக்கவும்
http://goodpage.blogspot.com/2006/05/blog-post_06.html
நன்றி :ஜாபர் சஃபாமர்வா