PDA

View Full Version : சினிமாவிமர்சனம்-மாறுபட்டகண்ணோட்டம்-இறு&



பூமகள்
13-11-2007, 01:48 PM
முதல் பாகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13270)
இரண்டாம் பாகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=296450#post296450)
சினிமா விமர்சனம் - மாறுபட்ட கண்ணோட்டம் - இறுதிப்பகுதி


அரசியல், பொருளாதாரம், தத்துவம் எல்லாம் யாருக்கு?

அது ஆங்கிலம் படிக்கத் தெரிந்த மேட்டுக்குடிகளுக்கு, பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிய மற்றும் அனுப்ப விரும்புகிற வர்க்கத்திற்கு
உலகமயமாக்கம் குறித்த தத்துவஞான உபதேசம்! அன்றாட வாழ்விஒல் பார்ப்பனியச் சாதிய சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்துப் போராட முனையாத எல்.ஐ.சி. வர்க்கத்துக்கு வரலாற்றில் பார்ப்பனமயமாக்கம், பூகோளத்தில் சமஸ்கிருதமயமாக்கம் குறித்த ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்குகள்.

களத்தில் ந்திற்கும் அடிப்படை உழைக்கும் வர்க்கத்துக்கு தீக்கதிர் சார்பில் தீபாவளி மலர், திருவண்ணாமலை தீபம் சிறப்பிதழ்,; தொழிலாளி வர்க்கம் தம் அன்றாட வாழ்வில், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கு வழிகாட்ட தீக்கதிர் நாட்காட்டி, அதில் இந்து, கிறித்துஅவ, இசுலாமியப் பண்டிகைகளின் பட்டியல், ராகுகாலம், எமகண்டம், குளிகை, சூலம் இன்னபிற... இன்ன பிற...

இது இரட்டை அணுகுமுறை மட்டுமல்ல, இரட்டை வேடம்! மார்க்சிஸ்டு கட்சியின் இந்த அரசியல் இரட்டை வேடத்தை அறம் சார்ந்த இரட்டை வேடமாக வெளிப்படுத்துகிறான் நல்லசிவம்.

நண்பர் மதன் தன்னை விருந்துக்கு அழைத்த இடம் முதலாளியின் வீடு என்று தெரிந்த பின்னரும் உள்ளே நுழைகிறான்.(இதிலென்ன தப்பு தோழரே, நாம பேச்சு வார்த்தைக்கு முதலாளி விட்டுக்குப் போறதில்லையா, அறிவொளி இயக்கத் தோழர்கள் கலெக்டர் விருந்துல கலந்துக்கிறதில்லையா?)

முதலாளி மகள் கைத்தவறிச் சிந்திய ஐஸ்கிரீமினால் கோலம் போட்டுக் காட்டிப் பாராட்டைப் பெறுகிறார். (நம்ம எழுத்டஹளர்கள் குமுதத்தில் போட்டிக் கதை எழுதிப் பரிசு வாங்குறதில்லையா?)

அவள் 'சாரி' என்று சொன்ன 30 நொடிகளில் காதல் வயப்படுகிறார். (பி.ஜே.பி.யை ஆதரிச்சதுக்கு 'சார்' ன்னு ஜெயலலிதா சொன்னவுடனே நாம கூட்டணி வச்சுக்கிறலயா?)

இப்படி ஒரு பட்டியல் போடலாம். அன்பரசுவுக்கு அடுத்து நல்லசிவத்துடன் உறவு வைக்கும் முக்கியப் பாத்திரம் அவன் காதலி - அதாவது முதலாளியின் மகள். " தொழிலாளிகளுக்கெதிராக முதலாளி(காதலியின் அப்பா) செய்யும் சதியை அவளை வைத்தே வேவு பாக்கலாம்" என்று தொழிற்சங்கத் தோழர் கூறியவுடனே அதை நிராகரிக்கிறான் நல்லசிவம்.
இதற்கு அவன் கூறும் காரணம்: தன் காதலி நேர்மையானவள்; இரண்டாவது காரணம்: இது நேர்மையற்ற வழிமுறை.

"தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தை முதலாளி வர்க்கம் கூறிக் கொள்ளும் அறநெறிகளின்படி நடத்த வேண்டும்" என்று இலக்கணம் வகுக்கும் நபரைக் கடந்த காலத்தில் தேடினால் காந்தியிடம் பார்க்கலாம்; நிகழ்காலத்தில் அந்த தார்மீக ஆவேசத்தை சோம்நாத் சாட்டர்ஜியிடம் பார்க்கலாம்.

'புனிதமான' அரசியல் சட்டத்தின் மீதும் அது எழுந்தருளியுள்ள பாராளுமன்றக் கருவறையின் மீது சங்க பரிவாரத்தினர் காலைத் தூக்கி அலட்சியமாக ஒன்னுக்கடிக்கும்போது, சாட்டர்ஜியின் முகத்தில் ஒளிரும் தார்மீக ஆவேசத்தையும், வாஜ்பாயிடம் நீதி கேட்கும் போது துடிக்கும் அவருடைய உதடுகளையும் யாருக்கும் சொல்லிப் புரிய வைக்க முடியாது.

பாத்திரங்களை மிக நுட்பமாக ஆய்வு செய்து தனது நடப்புக்கு மெருகேற்றிக் கொள்ளும் கமலஹாசன் இந்தக் காட்சியைப் படமாக்குமுன் சிறிது நேரம் தூர்தர்சன் நேரடி ஒளிபரப்பைப் பார்த்திருந்தால் காட்சி வேறுவிதமாக மாறியிருக்கும். இப்படியொரு அறம் வழுவிய யோசனையைச் சொன்ன தோழரை ஓங்கி ஒரு அறை விட்டிருப்பான் நல்லசிவம்!

இதில் வேடிக்கை என்னவென்றால், முதலாளியின் வரவேற்பறையில் ஓவியம் வரைந்து கொடுத்துக் காசு வாங்கித் தொழிற்சங்கத்துக்குப் பயன்படுத்துவதை நல்லசிவத்தின் 'அறவுணர்வு' தடுக்கவில்லை. "கலை விலை போகலாம்; கலைஞன் விலை போகக் கூடாது" என்று அவன் சார்பாக அவனுடைய காதலி தத்துவ விளக்கம் தந்து விடுகிறாள்.

மேலும் சிவன் படத்திற்குள்ளேயே மார்க்சையும் அரிவாள் சுத்தியலையும் மட்டுமின்றி ரூ. 910 -ஐயும் நல்லசிவம் புகுத்தி விடுகிறானே, பாராளுமன்றத்திற்குள் 50 வருடமாகப் புரட்சியைப் புகுத்துவது போல!

மார்க்சிஸ்டு கட்சியின் அரசியலும் அவர்களது அழகியல் ரசனையும் துல்லியமாக ஒன்றுபடும் ஒரு காட்சியும் படத்திலிருக்கிறது. கமலஹாசனைக் கொலை செய்ய முதலாளி அனுப்பும் கூலிப்பட்டாளத்தைத் தன்னந்தனியே நின்று சமாளிக்கிறார் ஹீரோ. நகைச்சுவை நடிகர்களைப் போல தோழர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். பிறகு சண்டையே நகைச்சுவை போல மாறுகிறது.
"இந்த உதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா" என்று முழக்கமிட்டபடியே கமலஹாசனுக்குப் பின்னே அணுவகுக்கிறார்கள் தோழர்கள்.

"இந்தப் படை போதுமா...." என்று தி.மு,க., அ.தி.மு.க. வின் பின்னே மார்க்சிஸ்டுகள் கோஷம் போட்டுச் சென்ற காட்சிகளையும், சிரிக்கும் போராட்டம், ஒப்பாரிப் போராட்டம் எனத் தொழிலாளி வர்க்கத்திற்கு அவர்கள் கண்டுபிடித்துத் தந்திருக்கும் போராட்ட முறைகளையும் மனதில் ஓடவிடுங்கள். அந்த அரசியல் இந்தக் காட்சியின் அழகியலுக்குக் கனகச்சிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.

படத்தில் பரிதாபத்துக்குரியவர்களாக வந்துபோகும் பாத்திரங்கள் இரண்டு. முதலாவதாக, பிரளயனின் வீதி நாடகக்குழு. சகல கலா வல்லவனான ஹீரோவுக்கு அவர்கள் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள்.

இரண்டாவதாக, நாசர். வாய்க்கு வாய் "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று சொல்லிக் கொண்டே வில்லன் வேலை செய்யும் எம்.ஆர்.ராதா வகைப்பட்ட பாத்திரம் அவருக்கு. கமலஹாசன் கூறுகின்ற உலகமயமாக்க சகாப்தத்தின் வகைமாதிரி இவரல்ல. அது யார் என்பதை ஏற்கெனவே சொல்லிவிட்டோம்.

பேச்சில் கடவுளும், செயலில் கயமையுமான கதாப்பாத்திரங்களை அண்ணாத்துரை காலத்துச் சினிமாக்களே போதிய அளவு சித்தரித்து விட்டன. "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று கூறும் இந்த முதலாளிதான் "ஜெய் சீயாராம்" என்று அலறும் இந்துத்துவச் சக்திகளின் வகை மாதிரி என்று கருதிக் கொண்டு சிலர் புளகாங்கிதம் அடையலாம். குஜராத் படுகொலைக்கு 'பைனான்ஸ் பண்ணியவர்கள் என்.ஆர்.ஜ. யுப்பிகள் என்ற உலகறிந்த உண்மையை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

இந்த சூட்சுமம் புரிந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட இல.கணேசன் படத்தைப் பாராட்டிவிட்டார். நாசர் பாத்திரத்தைக் காட்டி "உங்களுக்குக் கோபம் வரவில்லையா?" என்று அவரிடம் கேட்டால் "நான் அவனில்லை" என்று பதில் சொல்லிவிடுவார்.

இத்தகைய தொலைநோக்கில்லாத ஓட்டைவாயான இராம.கோபாலன் படத்தை எதிர்க்கிறார். "யார் யாரு சிவம்" என்ற பாடல் காட்சியில் கன்னிகா ஸ்திரி சிலுவை போடுவது மட்டும்தான் அவரை அலைக்கழித்திருக்கும்.

இல.கணேசனைக் கேட்டிருந்தால் "கிறித்துவர்கள் சேவை செய்வதை நாங்கள் மறுக்கவில்லையே. அதை வைத்து மதமாற்றம் செய்வதைத்தானே கண்டிக்கிறோம்" என்ற மிகச் சுலபமாக இந்தக் காட்சிக்குள் நுழைந்து வெளியே வந்துவிடுவார்.

"மோசமான ஒரு முதலாளியை இந்து ஆன்மீகவாதியாகச் சித்தரித்ததன் மூலம் இந்துக்களின் மதவுணர்வைப் புண்படுத்திவிட்டீர்கள்" என்று கமலஹாசனைக் குற்றம் சாட்டிப் பாருங்கள். "நானே ஆன்மீகவாதிதான், நான் தான் கடவுள்" என்று கண் சிமிட்டுவார் நல்லசிவம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, 'இந்து மதவெறி' என்று பெயர் சொல்லிக் கண்டிக்காமல் "கடவுளின் பெயரால் கலவரம் எதற்கு?" என்று நைசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார்கள் மார்க்சிஸ்டுகள். "எங்கள் இந்துமத உணர்வைப் புண்படுத்திவிட்டீர்கள்" என்று குற்றம் சாட்ட முடியாமல் தவித்தார்களே ஆர்.எஸ்.எஸ். காரர்கள்! அதே உத்தி தான்!

படத்தில் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லையா என்று நல்ல சினிமாவின் ரசிகர்கள் யாரேனும் வருத்தப்பட்டால் அவர்களுக்குச் கூறிக் கொள்கிறோம்: "ஐயா, படத்தையே பாராட்டுகிறோம். மார்க்சிஸ்டு கட்சியின் திரை அவதாரத்தை இத்தனைத் துல்லியமாக யாரும் வழங்கியதில்லை. ஒருவேளை சி.ஐ.டி.யூவின் அறிவிப்புப் பலகையைக் காட்டாமல் இருந்திருந்தாலும் இது மார்க்சிஸ்டு கட்சிதான் என்று உண்மை காட்சிக்குக் காட்சி பொருத்தமான கலையம்சத்துடன் எடுத்தியம்பப்படுகிறது. அதற்காக மீண்டுமொருமுறை பாராட்டுகிறோம்."


+++++++++++++++++++++++++++++++++++++++++++++

(முற்றும்)

நன்றி:
சினிமா: திரை விலகும் போது.. (புத்தகம்)
கட்டுரையாளர்: தோழர். மருதையன்

பாரதி
13-11-2007, 04:39 PM
அன்பு பூமகள்,
உங்கள் பதிவிற்கு நன்றி.
நீங்களும் "அன்பே சிவம்" படத்தை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். படம் குறித்த உங்கள் பார்வை என்ன என்று சொல்லுங்கள்.
நன்றி.

பூமகள்
13-11-2007, 04:55 PM
அன்பு பூமகள்,
உங்கள் பதிவிற்கு நன்றி.
நீங்களும் "அன்பே சிவம்" படத்தை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். படம் குறித்த உங்கள் பார்வை என்ன என்று சொல்லுங்கள்.
நன்றி.
தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றிகள் பாரதி அண்ணா.

இங்கு இந்த கட்டுரையைப் பதிக்கும் முன்னும் இப்புத்தகத்தைப் படிக்க வாய்ப்பு கிடைக்கா முன்னும் பெரும்பான்மையான மக்களைப் போலவே என் சிந்தனையும் இருந்தது.

உண்மையை மட்டுமே சொல்லனும் எனில்,
அதாவது மசாலாப்படங்களுக்கு நடுவில் உலகமயமாக்கலையும், அன்பே சிவம் என்ற தத்துவ விளக்கத்தை உணர்த்துவதன் மூலமும் படம் மிகச்சிறந்தது என்ற எண்ணம் என்னுள் இருந்ததை மறுக்க விரும்பவில்லை.

இந்த கட்டுரையை வாசித்த பின், பார்வை மாறியது உண்மையே..!
இந்த படம் மட்டுமல்ல.. இன்னும் பலராலும் பாராட்டு பெற்ற அழகி, ரோஜா, ஹே ராம் இப்படியான படங்களின் விமர்சனங்களும் ஒரு மாறுபட்ட கோணத்தில் மக்கள் சார்ந்த ஒரு சிந்தனையாக என்னுள் எழுப்பியது என்பதையும் மறுக்க இயலாது.

இங்கு இந்த படத்தின் ரசிகர்கள் கோபமுற்று பதில் சொன்னாலும் உண்மையை ஆற அமர உட்கார்ந்து யோசித்தால் சொன்னவை தவறல்ல என்று புரியும்.

எந்த ஒரு கலைப்படைப்பும் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பெறுகிறது என்று ஒரு அடித்தள ரசிகருக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப் புரிய வைக்கும் சீரிய எண்ணத்தில் தான் இம்மாதிரி பதிவுகளும் படைப்புகளும் வருகின்றன.

ஒரு கலைப்படைப்பு மக்களுக்காக வருகையில் மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி, சமுதாயம் சார்ந்து விமர்சிப்பதே சிறந்தது என்பது என் தாழ்மையான கருத்து. அவ்வகையில் என்னைப் பொறுத்தவரையில் இந்த கட்டுரை சிறந்ததே.

நமது மக்களை கடிவாளமிட்ட குதிரைகளாக ஆக்க சினிமா துறை தான் பல காலமாக உதவிவருகிறது என்பது கண் கூடு. அதாவது ஒரு படைப்பின் மூலம் அதன் சார்ந்த உள் எண்ணத்தை வளர்த்து வருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இன்னும் சொல்லலாம். இன்னும் மேல் குறிப்பிட்ட படங்களுக்கான விமர்சனங்களும் தரலாம். ஆயினும் ரசிகர்கள் தெளிவாக விரும்பின் பணிவுடன் கொடுக்க தயாராக உள்ளேன்.

பதிலளிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் பாரதி அண்ணா.

பாரதி
13-11-2007, 05:51 PM
எந்த ஒரு படைப்பையும் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் இயல்பே. அந்த வகையில் இந்தப்படைப்பு சரி. ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது எந்த மாதிரி படைப்புகளை எடுக்க வேண்டும் அல்லது எந்தப்படம் அவ்விதம் எடுக்கப்பட்டது? படம் எடுக்க எதை அளவுகோலாக கொள்ள வேண்டும் என்பதற்கும் கட்டுரைஆசிரியர் தீர்க்கமான பதில் அளித்திருக்கிறாரா என்பதையும் அறிய விரும்புகிறேன்.
உடன் பதில் தந்தமைக்கும் நன்றி பூமகள்.

ஆதவா
13-11-2007, 06:49 PM
மன்னிக்கவும் பதிலளிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு பதில்கொடுத்தமைக்கு...

நீங்கள் யோசியுங்கள்.... மூன்று திரிகள் அடங்கிய இந்தக் கட்டுரையே உங்களின் அன்பே சிவம் படத்துக் குண்டான பார்வையை மாற்றும் போது, ஒருவரை அமெரிக்க மோகத்திலிருந்து வீழ்த்தி கொண்டுவர இயலாதா? அவரிடன் உண்மை நிலை கூறி இறங்கவைக்க இயலாதா?

முடியும் பூமகள்.... பிரபலமான மூடநம்பிக்கை என்ரு ஆசிரிய சொல்கிறார்.. இப்படி ஒரு கட்டுரை எழுதினால் வரும்படி உண்டு என்ற நம்பிக்கையில்..


தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றிகள் பாரதி அண்ணா.

இங்கு இந்த படத்தின் ரசிகர்கள் கோபமுற்று பதில் சொன்னாலும் உண்மையை ஆற அமர உட்கார்ந்து யோசித்தால் சொன்னவை தவறல்ல என்று புரியும்.


.

இங்கே தவறல்ல என்று நீங்கள் நினைத்தவைகளை தயவு செய்து பட்டியலிடமுடியுமா?



எந்த ஒரு கலைப்படைப்பும் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பெறுகிறது என்று ஒரு அடித்தள ரசிகருக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப் புரிய வைக்கும் சீரிய எண்ணத்தில் தான் இம்மாதிரி பதிவுகளும் படைப்புகளும் வருகின்றன.



இதே கதைக்குண்டான கட்டுரையை வேறு பாதையில் செலுத்த எம்மால் முடியும்.... எழுத்தாளனின் திறமையின் நம்பிக்கை எதையும் உடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே! ஒரு படைப்பை சரியாக உணர்த்துகிறோம் என்ற பெயரில் தவறாக சொல்லும் எதுவுமே உண்மை என்று ஆகிவிடாதே! இக்கட்டுரையின் மாபெரும் ஓட்டைகளே அவைகள் தாம். \

rocky
10-01-2008, 08:10 AM
அன்புள்ள மன்றத்தோழி பூமகளுக்கு,

உங்களின் இந்த மாறுபட்ட கண்னோட்டம் திரியை முழுவதுமாக இப்பொழுதுதான் படித்து முடித்தேன். எந்த ஒரு கருத்திற்கும் ஒரு எதிர்கருத்து இருக்கத்தான் செய்யும், அந்த வகையில் எதிர்வாதம் செய்யும் போதுதான் முதலில் சொல்லப்படாத சில புதிய அர்த்தங்கள் நமக்குக் கிடைக்கும், ஆகவே உங்களின் இந்த திரியை பாராட்ட நாங்கள் நிச்சயம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் நீங்கள் இந்தத் திரியில் உங்களின் கருத்துக்களை விட தோழர் மருதையனுடைய கருத்தை அப்படியே பதித்திருக்கிறீர்கள், இருதியில் மட்டுமே உங்களின் கருத்து இருக்கிறது அதுவும் மிகவும் சுருக்கமாக, முதலில் நான் நம் மன்றத்தின் உறவு என்பதால் தங்களின் கருத்திற்கு மட்டுமே பதில் கூறலாம் என்று எண்னினேன், ஆனால் அவருடைய பதிப்பில் எந்தவித மாறுதலும் செய்யாமல் அப்படியே தாங்கள் பதித்திருப்பதால் அவருடைய கருத்தை தாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவே எனக்குத் தோன்றுகிறது, அதனால் நிச்சயமாக அவரிடம் கேட்க்கவேண்டியதாக எனக்குத் தோன்றிய சில கேள்விகளை அவர் சார்பில் தங்களிடம் கேட்க்கிறேன்.

( "சோமாலியா முதல் தஞ்சை வரையிலான பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் நம்மால் முன்னறிந்து சொல்ல முடியாத சந்தையின் விதிகள் தான்" என்று கூறும் உலக முதலாளித்துவத்திடம் இந்தச் சாவுகளுக்கக தார்மீகப் பொறுப்புணர்ச்சியை எப்படி எதிர்பார்க்க முடியாதோ, அவ்வாறே இந்த யுப்பி வர்க்கத்திடமும் அதை எதிர்பார்க்க முடியாது. "பட்டினிச் சாவா அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று அவர்கள் தோளைக் குலுக்குவார்கள். அவ்வளவுதான். ).


அப்படியானால் இவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகளுக்காக பதிக்கப்பட்டு சாகும் மக்களுக்காக பொருப்பேர்க்கக் கூட அவர்கள் மாட்டார்கள் பின் எதற்காக நீங்கள் அவர்களிடம் போய் கேட்க்கிறீர்கள் என்கிறாரா அவர். இதற்கான பதிலைத்தான் முதல் பாடலிலேயே கமல் அவர்கள் கூறிவிட்டாறே, " வாழ்க்கை புதையலப்பா வழுத்தவன் எடுத்துக்கப்பா அவனவன் வயித்துக்குத்தான் வாழ்வது தப்பா, அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா இளைச்சவன் பசிச்சிருந்தா இந்த மண்னு தாங்காதப்பா". ஆக வழுத்தவன் அனைத்தையும் எடுத்துக்கொள்வான் இளைத்தவன் செத்தால் அதற்கு அவன் பொருப்பள்ள "அவ்வளவுதான்" என்பதை ஆசிரியர் ஒப்புக்கொள்கிறாரா.

( ஆனால் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஓர் அன்பு ஊற்று இருப்பதாகவும் ஏதோ சில காரணங்களால் அது அடைப்பட்டிருந்தாலும் அதைத் தோண்டியோ, நோண்டியோ வெளியே கொண்டு வந்து விடமுடியுமென்றும் நம்மை நம்பச் சொல்கிறார் கமலஹாசன். இந்த பார்முலாவின்படி மாதவனுக்குள் இருக்கும் 'கடவுளை' நாலே நாளில் தோண்டி எடுத்து விடுகிறார். )


மனிதர்களுக்குள் கடவுள் இல்லை என்கிறாரா ஆசிரியர், சரி உங்களிடமே கேட்க்கிறேன் கடவுள் என்றால் யார், நம்மைப் பொருத்தவரை தேவைப்படும்போதும் கஷ்டப்படும்போதும் யார் உதவுகிறார்களோ அவர்களே கடவுள், உங்களுடைய தாய் உங்களுக்கு கடவுளாகத் தெரியவில்லையா? இந்த உலகில் பல மனிதர்களே கடவுளாக வாழ்ந்திருக்கிறார்களே, ஒரு அன்னை தெரேசாவோ அல்லது மகாத்மா காந்தியோ அல்லது ஏசு பிறானோ ஒரு கடவுள் நிலையை அடையவில்லையா, அவர்களைப்போல் அனைவருக்கும் மகாத்மாக்களாக ஆகாவிட்டாலும் ஒரு நல்ல மனிதனாக தன் சுற்றத்தாருக்காவது ஒருவன் நல்லவனாக கடவுளாக மாறமுடியாதா? அல்லது இன்னொறுவன் அவனுக்கு உணர்த்தி மாற்றமுடியாத?

( எல்லோருக்குள்ளும் ஒரு நடுநிலையான மனச்சாட்சி(கடவுள்) இருப்பதாகவும், அந்த மனச்சாட்சிக்கு விரோதமாகச் சிலர் நடந்து கொள்கின்ற காரணத்தினால்தான் சமூகத்தில் இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவென்றும், எல்லோரும் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளத் தொடங்கி விட்டால் உலகமே அன்புமயமாகிவிடும் என்றும் கருதுகின்ற பிரபலமான மூடநம்பிக்கையை வேறு வார்த்தைகளில் விற்பனை செய்கிறார் கமலஹாசன். )


இந்த வார்த்தைகளை மூடநம்பிக்கை என்று கூறும் ஆசிரியரை நீங்களும் ஆதரிக்கிறீர்களா பூமகள். ஒருவன் நல்லது செய்தால் அவனுக்கு நல்லது நடக்கும் தீமை செய்தால் தீமை நடக்கும் என்று கூறுவது உங்கள் ஆசிரியருக்கு ஒரு மூடநம்பிக்கை அப்படித்தானே? அப்படியானால் அவர் நம் பலமொழியையும் ஏன் வள்ளுவரையுமே மூடர்கள் என்கிறார். "தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினையருப்பான்" என்பதும் "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு" என்பதும் மூடநம்பிக்கை அப்படித்தானே பொருள்படும் அவர் கூறுவது, மேலும் இதைக்கூறி அவர் (கமல்) வியாபாரம் செய்வதாகச் சொல்கிறார். கமல் நினைத்தால் அவர் வியாபாரம் செய்து பணம் ஈட்ட இதுபோன்ற படங்களில் நடிக்கவேண்டியதே இல்லை, அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கும் திறமைக்கும் முக்கியமாக சம்பளத்திற்கும் இரண்டு மாததிற்க்கு ஒரு படம் என்று நடித்து சம்பாதித்து தள்ளிவிட முடியும் இப்படி "ஹேராம்", "விருமாண்டி", "மருதநாயகம்" என்று தன் சொந்த காசைப்போட்டு படம் எடுத்து நஷ்டமடைய வேண்டியதில்லை. மற்ற நடிகர்களைப்போல் தோட்டம், கல்யாண மண்டபம் என்று கட்டிவிடலாம். இப்படி தசாவதாரம் போன்ற ஒரு படத்திற்காக இரண்டு ஆண்டுகள் ஒருவர் தன்னை வருத்திக்கொள்ளவேண்டியதில்லை. இப்பொழுது நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் நான் சொல்வது உண்மையென்று புரியும்.

( எந்த முதலாளியும் தன் மனச்சாட்சிக்கு விரோதமாகத் தொழிலாளியைச் சுரண்டுவதில்லை; மனச்சாட்சிப்படித்தான் சுரண்டுகிறான். இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஐ.ஐ.டி.யில் படித்துத் தேறிய யுப்பி வர்க்கம் "இந்த நாட்டில் என் திறமைக்கு மரியாதை இல்லை" என்று திட்டிவிட்டு விமானமேறும்போது அது தன் மனச்சாட்சிப்படிதான் நடந்து கொள்கிறது. )



இந்த வரிகளின் மூலம் இந்த எளுத்தாளர் எந்த முதலாளியிடமும் வேளைபார்த்ததில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியும் நான் இருப்பது திருப்பூரில் நான் இதுவரை அதிகமான முதளாளிகளிடம் வேளை செய்யாவிட்டாலும் இதுவரை செய்ததில் சுரண்டும் முதலாளிகளையே கண்டிருக்கிறேன், மற்றவர்களைப் பார்த்தும் இருக்கிறேன். இதற்கு என்னால் உதாரணம் கூட கூறமுடுயும், தற்போதைய டாலர் வீழ்ச்சி அனைவரும் அறிந்ததே, இதனால் திருப்பூரில் முதலாளிகல் பாதிக்கப்பட்டதைக் காட்டிலும் தொழிளாளிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த முதளாலியும் இந்த டாலர் வீழ்ச்சியால் தங்கள் லாபத்தை இழக்க விரும்பவில்லை மாறாக தொழிளாளிகளின் சம்பளத்திலும் எங்களைப் போன்ற சிறு தொழில் செய்வோரின் பணத்தில் மட்டுமே கைவைத்தனர், இதை யாராலும் மறுக்க முடியாது. இது அனுபவ உண்மை. அதேபோல் படித்துவிட்டு நாட்டைத் திட்டிவிட்டுச் செல்லும் இளைஞர்களையும் கூட நாங்கள் நீ வெளிநாட்டிற்கு செல்லாதே என்று சொல்லவில்லை சென்றாலும் தேவைக்குச் சம்பாதித்துவிட்டு மீண்டும் நம் நாட்டிற்கு வாருங்கள் என்றுதான் அழைக்கிறோம்.

( "ரத்ததானம் கொடு, ஏழைகளுக்குச் சின்ன உதவி செய், இரண்டு சொட்டுக் கண்ணீர் விடு - முடிந்தது கதை. நீ தான் கடவுள்" என்று மாதவனைத் தயார்ப்படுத்துகிறார் கமலஹாசன். மஞ்சள், வேப்பங்கொட்டை, பாசுமதி, எம்.என்.சி., எலும்புத்துண்டு.... என்று தன் அறிவின் மேன்மையை மாதவன் மீது நிலைநாட்டுகிறார். பட்டினத்துக் கதாநாயகியைப் பட்டிக்காட்டு கதாநாயகன் சீண்டுவது போலக் கொஞ்சம் சீண்டுகிறார். இப்படியாக யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதியிடம் குற்றவுணர்வு தோற்றுவிக்கப்பட்டு விட்டது. மாதவனின் வர்க்கத்தைப் "பன்னாட்டு நிறுவனத்தின் கூலி" என்று நல்லசிவம் சாடுகிறார். )


அந்த இரயில் நிலையக் காட்சியை அந்த ஆசிரியர் நன்றாக கவனித்திருந்தால் நிச்சயமாக கமல் தன்னுடைய மேதாவித்தனத்தை மாதவன் மேல் தினிப்பதாகக் கூறமாட்டார், காரணம் அந்தக் காட்சியில் மாதவன்தான் பணம் கொடுத்தாலும் வசதிகள் கிடைக்காத நாடு உங்கள் இந்தியா என்று கூறுவார், பிறகே இந்த உறையாடல் வளரும், உடனே ஆசிரியர் கேட்கலாம் உங்கள் கமல்தானே திரைக்கதையாசிரியர் அதனால் அவர் அமைப்பதுதானே காட்சியென்று, அனால் சிந்தித்துப் பாருங்கள் அந்தக் காட்சியில் மாதவந்தான் தன்னை அறிவாளியென்று காட்டிக்கொள்வதற்க்காக பேசுவார் ( எல்லாப் படித்தவர்களையும் போல ). அதற்கு கமல் பதில் தருவதாகவே காட்சி அமையும். சரி நீங்கள் கூறுவதைப்போல் கமல் தானாகவே தன் மேதவித்தனத்தால் அந்தக் கேள்வியை கேட்பதாக வைத்துக்கொள்வோம், அதை மறுக்கும் நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்ற பதிலைக் கூறுங்கள், அவனுடைய பொருட்களை இங்கே கூவி விற்பதனால் பலனடைவது சிலரே, ஆனால் பாதிக்கப்படுவது எத்தனைபேர்? நீங்கள் சொல்லும் பெப்ஸி யையே எடுத்துக்கொள்வோம், வெறும் அறுபது காசுக்குத் தயாராகும் பெப்ஸியை பதிமூன்று ரூபாய்க்கு விற்கும் அந்த வெளிநாட்டிக் கம்பெனியின் வருமானத்திற்கு நம்மவர்களே ஏன் துணைபோகவேண்டும். அத்ற்கு பதிலாக நம் ஊரில் உள்ள இளநீரையும், கரும்புப்பாலையும், கம்மங்கூலையும், ஏன் குளிர்பானத்திலே கூட நம் தயாரிப்புகளுக்கு ஏன் உங்கள் ஆதரவைத் தரக்கூடாது? நம் மக்கள் இந்தப் பொருட்களை மிகக் குறைந்த லாபத்திற்கு விற்றாலும் வாங்க ஆ
ளில்லை, ஆனால் அனியாய இலாபத்திற்கு விற்கும் அந்த பானங்களை வாங்குமாறு ஏன் நீ கூறுகிறாய் என்று கேட்டால் மூக்கில் குத்துகிறார் மாதவன்(ஆசிரியரும்தான்). இதில் கமல் அந்த வர்கத்தினரிடம் குற்ற உணர்வைத் தோற்றுவிக்கவில்லை, எடுத்துக்காட்டவே செய்கிறார்.

( உலகமயமாக்கத்தைச் சாடுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு திரைப்படம், அதை உண்மையிலேயே எதிர்த்துப் போராடக் கூடிய உழைக்கும் வர்க்கத்தையோ அதன் பிரதிநிதியையோ மையப் பார்த்திரமாகத் தெரிவு செய்யவில்லை. மாறாக உலகமயத்தால் ஆதாயமடைகிற, அதை ஆதரிக்கிற ஒரு விளம்பர சினிமாத் தயாரிப்பாளனை, அதாவது யுப்பி வர்க்கப் பிரதிநிதியை வம்படியாக இழுத்து வைத்துக் கொண்டு அவனிடம் மூச்சைக் கொடுக்கிறது; அவன் மீது தன் மேதாவிலாசத்தைப் பொழிகிறது. )


என்ன கொடும சார் இது, எவனிடம் பிரச்சனையோ அவனிடம்தானே அதைப்பற்றி பேசமுடியும், நீங்கள் சொன்ன யுப்பி வர்கத்தாரிடம்தானே பிரச்சனை அப்போது அவனிடம்தானே பேசவேண்டும், இண்னொன்று நீங்கள் சொன்ன உழைக்கும் வர்கத்தையோ அதன்பிரதினிதியையோதானே மையப்பாத்திரமாக வைக்கவேண்டும் என்றால் இந்தப் படத்தில் கமலின் பாத்திரம் வேறு எது? அவர் யாருக்காக பாசுகிறார்? இந்த அளவிற்கு உன்னிப்பாக படத்தைப் பார்த்துவிட்டுத்தான் இந்த ஆசிரியர் இப்படியொரு விமர்சணம் எழுதினாரா?.

( முதலாளி மகள் கைத்தவறிச் சிந்திய ஐஸ்கிரீமினால் கோலம் போட்டுக் காட்டிப் பாராட்டைப் பெறுகிறார். அவள் 'சாரி' என்று சொன்ன 30 நொடிகளில் காதல் வயப்படுகிறார். )


மறுபடியும் அதுவே, என்ன கொடும சார் இது, " தினமும் பஸ்ல வர்ர பொண்னு பின்னாடியே போனா காதல் வரலாம் ( பார்த்தேன் ரசித்தேன் ), நீயூ இயர் அன்னைக்கு வாழ்த்து சொன்னா காதல் வரலாம் ( திருமலை ), அட புடவை கட்டுனு சொன்னாக்கூட காதல் வரலாமாம் ( சிவகாசி ), ஆனா ஒருத்தன் புரட்சிக்காரனா, நல்ல ஓவியனா, சிந்திக்கிறவனா, கேள்வி கேக்குறவனா, கமல் மாதிரி அழகாவும் இருக்கிற ஒருத்தன பாத்தவுடனே மட்டும் காதல் வரக்கூடாதா? இதுல முதலாளி பொண்னை ஏன் கமல் காதலிக்கிறார்னு கேள்வி வேறு. காதலுக்குத்தான் கண்னில்லையேப்பா அது உங்களுக்குத் தெரியாதா?.



இன்னும் இந்தப் பதிப்பில் எனக்குக் கேள்வி கேட்க பல விஷயங்கள் இருந்தாலும் மேற்கோள் காட்டாமல் ஒன்றை மட்டும் கேட்டுவிடுகிறேன். இந்த விமர்சணம் எழுதுவதற்காக வேறு வெறும் பேனாவும் ஒரு பேப்பரையும் மட்டுமே வைத்துக்கொண்டு எழுதிய தாங்களே உங்களுடைய தனிப்பட்ட அரசியல் கருத்துக்களையும், அரசியல்வாதியைப் பற்றியும் ( சோம்நாத் சாட்டர்ஜி ) இதில் தினிக்கும் போது, பல கோடி ரூபாய்களைப் போட்டு பல நாட்கள் கடுமையாக உழைத்து ஒரு திரைப்படத்தை வெளியிட்டிருக்கும் கமலுக்கு தன் கருத்தைக் கூறுவதில் உறிமையில்லையா? நான் தான் இருதியில் இது நல்ல படம் என்று கூறிவிட்டேனே என்று நீங்கள் நலுவ முடியாது, பல பக்கங்கள் தேவையற்ற குறை கூறிவிட்டு ஒரே ஒரு வரியில் அதுவும் கடைசியில் நல்ல படம் என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது எப்படியிருக்கிறதென்றால் ஒரு முழுப்படமும் தவறுகளாகக் காட்டிவிட்டு ( விரசமோ, வன்முறையோ, எந்த ஒரு தவறான கருத்தையோ ) கடைசியில் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதைப்போல் இருக்கிறது. மேலுமொரு சந்தேகம் இந்த எழுத்தாளரின் மற்ற விமர்சணங்களாக சொன்ன படங்கள் அனைத்துமே கமல், மணிரத்னம், தங்கர்பச்சான், போன்ற தமிழ் சினிமாவில் இருக்கும் சில நல்ல பெரிய இயக்குனர்களையே சாடுகிறார் என்றால் பெரிய ஆட்களுடன் மோதி தன்னைப் பிரபலமாக்கிக் கொள்ளவே செய்கிறார் என்றுதான் தோன்றுகிறது. உங்களுக்கு? இத்துடன் முடிக்கிறேன்.



தோழி பூமகளுக்கு இந்தப் பதிவின் மூலம் தங்களுடன் சண்டையிடவோ, உங்களைப் புண்படுத்தவோ எனக்கு சத்தியமாக எள்ளளவும் எண்னமில்லை. நீங்கள் கூறிய அதே மாற்றுக்கருத்து எனக்கும் இதில் தோன்றியது, ஆகவே தாங்கள் இதை ஒரு ஆரோக்கியமான விவாதமாகவே எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்? இதற்கு நீங்கள் நிச்சயம் பதிலில்லை என்று கூறாமல் உங்கள் கருத்தைக் கூறவேண்டும். மற்றவர்களின் கருத்தையும் எதிபார்க்கிறேன். (ஆதவனிடமிருந்து பதில் வரும் என்று நினைக்கிறேன் காரணம் நேற்றுத்தான் அன்பே சிவன் படத்தின் குறுந்தகட்டைக் கொடுத்துவிட்டு வந்தேன்). அனைவருக்கும் நன்றி.

ஆதவா
12-01-2008, 06:05 PM
தோழி பூமகளுக்கு இந்தப் பதிவின் மூலம் தங்களுடன் சண்டையிடவோ, உங்களைப் புண்படுத்தவோ எனக்கு சத்தியமாக எள்ளளவும் எண்னமில்லை. நீங்கள் கூறிய அதே மாற்றுக்கருத்து எனக்கும் இதில் தோன்றியது, ஆகவே தாங்கள் இதை ஒரு ஆரோக்கியமான விவாதமாகவே எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்? இதற்கு நீங்கள் நிச்சயம் பதிலில்லை என்று கூறாமல் உங்கள் கருத்தைக் கூறவேண்டும். மற்றவர்களின் கருத்தையும் எதிபார்க்கிறேன். (ஆதவனிடமிருந்து பதில் வரும் என்று நினைக்கிறேன் காரணம் நேற்றுத்தான் அன்பே சிவன் படத்தின் குறுந்தகட்டைக் கொடுத்துவிட்டு வந்தேன்). அனைவருக்கும் நன்றி.

டேய்!! ரொம்ப தேறிட்டடா!!! முழுவதும் படித்தேன்... வியந்தேன்... ராக்கிக்குள் இப்படி ஒரு ஆள் இருக்கிறானா?

அதெல்லாம் சரிதான்... அன்பே சிவம் பார்த்து முடித்துவிட்டேன்.. சிடியை வந்து பெற்றுக்கொள்.. படம் நன்றாக இருந்தது.. பார்க்க உதவி செய்தமைக்கு நன்றியப்பா..

ஆதவன்

rocky
20-01-2008, 01:51 PM
புரிதல் இல்லாத பதில்கள்..!
புரிய விரும்பாத மனங்கள்..!

இவர்களுக்கு புரிய வைக்கவே இந்த பதிவு..!

இதுவும் புரியவில்லையெனில்..
விளங்க வைக்க அடுத்த விமர்சனத்தைத் தான் தர வேண்டும்..!

முயற்சிப்பது என் பணி..!
நல்லவற்றை சொல்லிப் போகிறேன்..!

புரியும் மனநிலை உங்களுக்கு வந்ததாயின்
படித்து பின்னூட்டமிடுங்கள்..!

மண்னிக்க வேண்டும் இது நீங்கள் கூறியதுதான், இருந்தாலும் இதை நான் உங்களுக்கு நினைவுருத்துகிரேன், பதிலுக்காக காத்திருக்கிரேன்

பூமகள்
20-01-2008, 02:03 PM
மண்னிக்க வேண்டும் இது நீங்கள் கூறியதுதான், இருந்தாலும் இதை நான் உங்களுக்கு நினைவுருத்துகிரேன், பதிலுக்காக காத்திருக்கிரேன்
ராக்கி..!
உங்க பதிவு பார்த்தேன்.
பதிலிடாமல் இருந்தமைக்கு காரணம், இந்த கட்டுரையை நான் எழுதவில்லை என்பது தான். இங்கு கட்டுரையாளர் சொன்னது அவர் கருத்து. அவர் எதை நினைத்து அப்படி எழுதினார் என்பதும் அது பற்றி சொல்வதற்கும் அவர் தான் சரியான நபர்.

பூமகள்
19-05-2008, 07:55 AM
எனது பதில் பதிவுகள் இனி இப்பதிவில் பதிக்க நான் விருப்பவில்லை.. மேலும், இது பற்றி யாரும் தேவையற்ற இடங்களில்.. உதாரணப்படுத்தவும் அவசியமில்லையென நம்புகிறேன்..

இலக்கியங்கள்/புத்தகங்கள் பகுதியில் இப்பதிவு இருப்பதே சிறந்தது.. யாருடனும் வாதிடவோ.. தர்க்கம் செய்யவோ.. எனக்கு அவசியமோ.. அவகாசமோ இல்லை.

தெளிவாக கூறிவிட்டேன். புரிதலுக்கு நன்றி.