PDA

View Full Version : BIOS

yaarokartik
12-11-2007, 11:44 AM
என்னுடைய கணினி விஸ்டாவில் இயங்கும் போதுintel.com ல் உள்ள Bios uptade software உபயோகித்து BIOS அப்டேட் செய்துவிட்டேன். பிறகு hard disk format செய்துவிட்டு xp நிறுவ முயன்றேன் முடியவில்லை. இப்போது எப்படி மீண்டும் பழைய BIOS version கொண்டு வருவது.. (intel motherboard 915GAV).. தயவு செய்து உதவுங்கள் தோழர்களே.....

praveen
12-11-2007, 11:52 AM
நீங்கள் என்ன பிழைச்செய்தி பெற்றீர்கள், அந்த சிஸ்டம் நிலை தற்போது என்ன என்று சொன்னால் தான் இயலும்.

நீங்கள் இன்டெல் வெப் சைட் சென்று இது சம்ப்ந்தமாக தேடி பாருங்கள் தெரியவரும்.

தாமரை
12-11-2007, 11:55 AM
ஒரு ஃப்ளாப்பியில் DOS மூலம் BOOT செய்து, பழைய BIOS பதிவிறக்கம் செய்து அப்டேஏட் செய்யலாம்.

yaarokartik
12-11-2007, 12:05 PM
எப்படி பழைய Bios version மீண்டும் பெறுவது

praveen
12-11-2007, 12:06 PM
ஒரு ஃப்ளாப்பியில் DOS மூலம் BOOT செய்து, பழைய BIOS பதிவிறக்கம் செய்து அப்டேஏட் செய்யலாம்.

நண்பர் தாமரைக்கு, அவர் என்ன செய்தார்?, தற்போது என்ன நிலைமை என்று தெரியாமல் இதை சொல்ல கூடாது என்று பார்த்தேன். நீங்கள் கூறியதை விட மிகவும் மோசமான நிலையில் (கம்ப்யூட்டரே டிஸ்பிளே எதுவும் இல்லாமல், ஒரு ஆக்டிவிட்டியும் ஆன் செய்த பின் இல்லாமல்) இருந்தாலும் கீழே கண்டது வேலை செய்யும். இருந்தாலும் நீங்கள் சொன்னமுறையில் கம்ப்யூட்டர் டாஸ்-ல் பூட் ஆகும் தண்மையில் இருந்தாலும் மாற்று வழி உள்ளது.

எச்சரிக்கை
இதெல்லாம் கைப்பிடி இல்லாத இரண்டுபக்கமும் கூர்மையான கத்தியை கையாள்வது போல, சிறிது அஜாக்கிரதையாக இருந்தாலும் மொத்தமும் போய்விடும்

இண்டெல் வெப் தளம் சென்று பையாஸ் அப்டேட் பக்கம் சென்று அல்லது இந்த பக்கம் சென்று பாருங்கள். அதில் உள்ளபடி செய்யுங்கள்.
http://downloadcenter.intel.com/Detail_Desc.aspx?agr=N&Inst=Yes&ProductID=1673&DwnldID=10140&strOSs=38&OSFullName=OS%20Independent&lang=eng

மேலும் நான் சொன்ன எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

yaarokartik
12-11-2007, 01:01 PM

நண்பரே அந்த கணினியில் தற்போது விஸ்டா இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் xp install செய்ய Bios ஒத்துழைக்கவில்லை.

praveen
12-11-2007, 01:14 PM
நண்பரே அந்த கணினியில் தற்போது விஸ்டா இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் xp install செய்ய Bios ஒத்துழைக்கவில்லை.
நீங்கள் பழைய பயசுக்கு மாறினால் விஸ்டா இயங்காமல் போக கூடும்.

அன்புரசிகன்
12-11-2007, 03:36 PM
உங்கள் Board ற்கான தகவல்கள் இதோ...

இங்கே சென்று உங்கள் OS ஐ தெரியுங்கள்.
Intel Desktop Board D915GAV (http://downloadcenter.intel.com/Product_Filter.aspx?ProductID=1673&lang=eng)

Intel Desktop Board D915GAV downloads supported for Windows* XP Professional (http://downloadcenter.intel.com/filter_results.aspx?strTypes=all&ProductID=1673&OSFullName=Windows*+XP+Professional&lang=eng&strOSs=44&submit=Go%21)

இதில் முதலாவதாக இருப்பது நீங்கள் கேட்ட Bios ற்கான தகவல் தான்...

yaarokartik
13-11-2007, 04:53 AM

இந்த சுட்டியில் upgrade version மட்டுமே உள்ளது. இதன் மூலம் தான் upgrade செய்துள்ளேன் அதில் தான் தற்போது பிரச்சனை.

அன்புரசிகன்
13-11-2007, 04:59 AM
பிரவீன்... எனக்கு ஒரு சந்தேகம்... BIOS ன் மின்கலத்தை கழற்றி 20 மணித்துளியிலிருந்து 1 நிமிடம் வரை வைத்துவிட்டு மீள இட்டால் இது சரிவராதா? இதனால் BIOS ல் சில மாற்றங்கள் வரும் எனக்கேள்விப்பட்டுள்ளேன். (நேரங்களில் இருந்து பல settings) ஆனால் பழைய நிலைக்கு செல்லுமா என்று தான் எனக்கு தெரியவில்லை....

விகடன்
13-11-2007, 07:29 AM
BIOS இலும் நிரந்தரமான நினைவகம் இருக்கிறது அன்பு. அவற்றை வாசித்தே அது தன் செயற்பாட்டை நடத்துகிறது. இங்கே அன்பர் மாற்றி இருப்பது அந்த நிரந்தர நினைவகத்தில் அடங்கியிருப்பதையே. அதற்கு பிளப்பியில் பழைய பதிப்பில் இருந்த BIOS இற்குரிய மென்பொருளை மீள பூட் செய்தாலே எக்.பி இயங்கும். அதேவேளை விஸ்ட்டா இயங்காது போய்விடும். ஏதாவது ஒன்றைத்தான் அவருடைய கணினியில் இயக்க முடியும். ஏனெனில் நண்பர் சொல்வதிலிருந்து அது இரண்டுவகையான ஒப்பிரேற்டிங் சிஸ்டத்திற்கும் ஒத்துழைக்காதது என்பது தெளிவாகிறது.

praveen
13-11-2007, 08:37 AM
பிரவீன்... எனக்கு ஒரு சந்தேகம்... BIOS ன் மின்கலத்தை கழற்றி 20 மணித்துளியிலிருந்து 1 நிமிடம் வரை வைத்துவிட்டு மீள இட்டால் இது சரிவராதா? இதனால் BIOS ல் சில மாற்றங்கள் வரும் எனக்கேள்விப்பட்டுள்ளேன். (நேரங்களில் இருந்து பல settings) ஆனால் பழைய நிலைக்கு செல்லுமா என்று தான் எனக்கு தெரியவில்லை....

அது அந்த கம்ப்யூட்டர் பையாஸில் பேக்டரி (டிபாட்ல் ) செட்டிங்க்ஸ் செய்ய ஏதுவாக இருக்கும். பொதுவாக ஏதாவது தவறான செட்டிங்க்ஸ் செய்து கணினி ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் இம்மாதிரி செய்வர்.

ஆனால் எல்லோரும் இதை பாஸ்வேர்டு மறந்து விட்டால் ரீசெட் செய்ய செய்வதுன்டு..

yaarokartik
13-11-2007, 02:09 PM
அது அந்த கம்ப்யூட்டர் பையாஸில் பேக்டரி (டிபாட்ல் ) செட்டிங்க்ஸ் செய்ய ஏதுவாக இருக்கும். பொதுவாக ஏதாவது தவறான செட்டிங்க்ஸ் செய்து கணினி ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் இம்மாதிரி செய்வர்.

ஆனால் எல்லோரும் இதை பாஸ்வேர்டு மறந்து விட்டால் ரீசெட் செய்ய செய்வதுன்டு..

நண்பரே பேக்டரி டிபால்ட் எப்படி செய்வது என்பது பற்றி விளக்குங்களேன்.....

praveen
13-11-2007, 02:50 PM
நண்பரே பேக்டரி டிபால்ட் எப்படி செய்வது என்பது பற்றி விளக்குங்களேன்.....

பிரவீன்... எனக்கு ஒரு சந்தேகம்... BIOS ன் மின்கலத்தை கழற்றி 20 மணித்துளியிலிருந்து 1 நிமிடம் வரை வைத்துவிட்டு மீள இட்டால் இது சரிவராதா? இதனால் BIOS ல் சில மாற்றங்கள் வரும் எனக்கேள்விப்பட்டுள்ளேன். (நேரங்களில் இருந்து பல settings) ஆனால் பழைய நிலைக்கு செல்லுமா என்று தான் எனக்கு தெரியவில்லை....

அது அந்த கம்ப்யூட்டர் பையாஸில் பேக்டரி (டிபாட்ல் ) செட்டிங்க்ஸ் செய்ய ஏதுவாக இருக்கும். .

மேலே சொன்னபடி மற்றும் அந்த மதர்போர்டில் உள்ள பையாஸ் அருகில் உள்ள ஜம்பரை இடம் மாற்றி செய்தால், அந்த கம்ப்யூட்டரில் உள்ள பயாஸ் டிபால்ட் (பேக்டரி) செட்டிங்க்ஸ்க்கு செல்லும். இதற்கு மேல் அந்த பயாஸ் பற்றி செட்டிங் செய்யும் பக்கத்தில் (கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது F2 அழுத்தி சென்றும் இறுதியில் இருக்கும் செட்டிங்க்ஸ் மூலம் செய்யலாம்) உள்ளது.