PDA

View Full Version : இணையத்தி்ல் Yahoo, Hotmail, AOL போன்ற தளங்களில் மின்னஞ்ச&

சுட்டிபையன்
12-11-2007, 05:59 AM
இணையத்தி்ல் Yahoo, Hotmail, AOL போன்ற தளங்களில் மின்னஞ்சல்கள் வைத்திருக்கும் நண்பர்கள் அவதானம்

இன்று காலை மைக்கிரோசாப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும், நோட்ரான் நிறுவனத்திடரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்பட்டுகின்றது.

இதில் எந்தளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. எனினும் தற்கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகின்றது.
உங்களுக்கு (Power Point presentation) 'Life is beautiful.' என்ற தலைப்பில் ஏதாவது ஒரு் மின்னஞ்சல் வந்தால் தயவு செய்து எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் திறக்க வேண்டாம். உடனேயே அதை அழித்துவிடவும்.

அல்லாமல் இந்த மடல் தாங்கிவரும் இணைப்பை நீங்கள் திறப்பீர்களானால் உடனடியாக உங்கள் கணனியின் திரையில் பின் வரும் செய்தி வருகிறதாம்.
'It is too late now, your life is no longer beautiful.'

அந்தக் கணமே உங்கள் கணனி செயல்பாடற்றுப் போய்விடுவதுடன், உங்களுக்கு அம் மடலை அனுப்பிய கயவர்களால் உங்கள் கணனியை அவர்கள் இருந்த இடத்திலிருந்து இயக்கவும், உங்களுடைய கடவுச் சொற்களைக் கைப்பற்றவும் முடியும்.

இது ஒரு வகையான புதிய வைரஸ் சென்ற சனிக்கிழமை மதியத்திலிருந்து இணையத்தில் உலாவத் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

AOL நிறுவனத்தினர் ஏற்கனவே இச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்த வைரஸுக்கு மாற்று செயல் முறை எதுவும் தற்போதைக்கு கைவசம் இல்லையெனறும் சொல்கிறார்கள். இந்த வைரசை உருவாக்கிய கயவன் தன்னை 'life owner.' மடல்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

11 Nov 2007

மனோஜ்
12-11-2007, 07:37 AM
தகவலுக்கு நன்றி
சுட்டி நீங்கதானே அத உருவாக்கினது

praveen
12-11-2007, 08:38 AM
விவேக் ஒரு படத்திலே சொன்ன மாதிரி, டீக்கடையிலே பேப்பர் படிக்கிற வழக்கம் உள்ளவர்கள், பழைய 5 வருடத்திற்கு முந்தைய பேப்பரை படிப்பது போல சுட்டி இது என்ன செய்தி. :) ;)

இது ரொம்ப பழைய மெயிலாச்சே, இது எப்படி இப்ப உங்களுக்கு கிடைத்தது சுட்டி.

http://www.symantec.com/security_response/writeup.jsp?docid=2002-011511-0444-99&tabid=2

அந்த புரளி பற்றிய செய்தி ஆங்கிலத்தில் இருப்பதால் இங்கே அப்படியே கொடுக்கிறேன். தமிழ்படுத்தினாலும் மேலே சுட்டி செய்தியில் உள்ளதே அது. அப்படி ஒரு வைரசோ, அட்டாச்மென்ட் பைலோ இல்லை. சும்மா உடாண்சு.

Discovered: January 15, 2002
Updated: February 13, 2007 11:59:14 AM
Type: Hoax

This hoax was first circulated in Portuguese. English, French, Italian and German versions have also been recorded.

English
URGENT! VIRUS!

This information arrived this morning, from Microsoft and Norton. Please send it to everybody you know who accesses the Internet.
You may receive an apparently harmless email with a PowerPoint presentation called "Life is beautiful.pps."
If you receive it DO NOT OPEN THE FILE UNDER ANY CIRCUMSTANCES, and delete it immediately.
If you open this file, a message will appear on your screen saying: "It is too late now, your life is no longer beautiful", subsequently you will LOSE EVERYTHING IN YOUR PC and the person who sent it to you will gain access to your name, email and password.
This is a new virus which started to circulate on Saturday afternoon. WE NEED TO DO EVERYTHING POSSIBLE TO STOP THIS VIRUS.
UOL has already confirmed its dangerousness, and the antivirus Softs are not capable of destroying it. The virus has been created by a hacker who calls himself "life owner", and who aims to destroying domestic PCs and who also fights Microsoft in court!
That’s why it comes disguised with extension pps. He fights in court for the Windows-XP patent.

MAKE A COPY OF THIS EMAIL TO ALL YOUR FRIENDS.

=========================== =======================
Please ignore any messages regarding this hoax and do not pass on messages. Passing on messages about the hoax only serves to further propagate it.

Writeup By: George Koris

பின்னர் பதிந்தது.

அந்த சிவப்பு எழுத்துகளில் இருப்பதில் தமிழில் என்று இல்லை, நான் சைமண்டெக் நிறுவனத்திடம் சுட்டியின் இந்த செய்தியை காண்பித்து அவர்கள் தளத்தில் அதில் tamil என்பதையும் சேர்க்க சொல்லி விடுகிறேன். :)

ஆனால் அவர்கள் நம் மொழியில் இந்த செய்தி வர 5 வருடம் ஆகியுள்ளதே என்று ஆச்சரியப்படலாம்.

xavier_raja
12-11-2007, 09:02 AM
தகவலுக்கு மிகவும் நன்றி நண்பா..

சுட்டிபையன்
15-11-2007, 05:41 AM
விவேக் ஒரு படத்திலே சொன்ன மாதிரி, டீக்கடையிலே பேப்பர் படிக்கிற வழக்கம் உள்ளவர்கள், பழைய 5 வருடத்திற்கு முந்தைய பேப்பரை படிப்பது போல சுட்டி இது என்ன செய்தி. :) ;)

இது ரொம்ப பழைய மெயிலாச்சே, இது எப்படி இப்ப உங்களுக்கு கிடைத்தது சுட்டி.

http://www.symantec.com/security_response/writeup.jsp?docid=2002-011511-0444-99&tabid=2

அந்த புரளி பற்றிய செய்தி ஆங்கிலத்தில் இருப்பதால் இங்கே அப்படியே கொடுக்கிறேன். தமிழ்படுத்தினாலும் மேலே சுட்டி செய்தியில் உள்ளதே அது. அப்படி ஒரு வைரசோ, அட்டாச்மென்ட் பைலோ இல்லை. சும்மா உடாண்சு.

பின்னர் பதிந்தது.

அந்த சிவப்பு எழுத்துகளில் இருப்பதில் தமிழில் என்று இல்லை, நான் சைமண்டெக் நிறுவனத்திடம் சுட்டியின் இந்த செய்தியை காண்பித்து அவர்கள் தளத்தில் அதில் tamil என்பதையும் சேர்க்க சொல்லி விடுகிறேன். :)

ஆனால் அவர்கள் நம் மொழியில் இந்த செய்தி வர 5 வருடம் ஆகியுள்ளதே என்று ஆச்சரியப்படலாம்.

அண்ணே அது இந்த மாதம் 11ம் திகதி வெளியான செய்தி,