PDA

View Full Version : மரணத்தை முன்கூட்டியே அறிந்து கொண்ட மனிதரxavier_raja
12-11-2007, 03:43 AM
அவினாசி என்ற ஊரில் உள்ள பழனிசாமி என்ற (75 வயது) பெரியவர் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்.அவினாசியில் தனது குடும்பத்துடன் வசித்துவந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார். சில நாட்களுக்கு முன் தனது மைத்துனரை அழைத்து தான் இறந்த பிறகு பத்திரிகையில் வரவேண்டிய விளம்பரத்தை தன்கைப்பட எழுதி கொடுத்தார். ஒருநாள் அதிகாலை 5.30 மணிக்கு தனது குடும்பத்தாரை அழைத்த பழனிசாமி தன்னை ஹாலில் படுக்க வைக்குமாறு கேட்டுகொண்டார், அவர்கள் மறுத்தபோதும் இல்லை தன்னுடைய இறுதிநேரம் நெருங்கிவிட்டதாகவும் அதனால் தன்னை படுக்க வைக்குமாறும் கேட்டுகொண்டார். பிறகு தன் தலைமாட்டில் விளக்கு ஏற்றுமாறும் கேட்டுகொண்டார். தனது நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு தன் தலைமாட்டில் திருநீறுபெட்டியை வைத்துகொண்டார்.தன் மனைவியின் மோதிரம் மற்றும் தன்னுடைய வாட்ச் ஆகியவ்ற்றை அணிந்துகொண்டார். சரியாக 8.00 மணிக்கு அவர் உயிர் துறந்தார்.

நன்றி: தினமலர்

தான் சாவதற்கு முன் தன்னுடைய குடும்பத்தாரை இதுபோன்ற செயல்களால் வாட்டி வதைத்தது சரியா நண்பர்களே?

நேசம்
12-11-2007, 04:01 AM
இதில் என்ன இருக்கு.தனக்கு மரணம் நெருங்குவதை அறிந்து தன் செய்ய வேண்டியது, எப்படி நடத்த பட வேண்டும் என்பதை அந்த பெரியவ்ர் சொல்லி இருக்கிறார்.இதனால் அவரது விருப்பத்தை நிறைவேத்தி இருக்கோம் என்று அந்த குடும்பம் சற்று நிம்மதி அடையலாம்..

தாமரை
12-11-2007, 04:03 AM
வாழ்நாட்கள் எண்ணப்பட்டு மருத்துவ மனைப் படுக்கையில் கிடந்து உழன்று எத்தனையோ பேர் மரணத்திற்காய் போராடுகின்றனர். மரணத்தை வீரமாய் எதிர்கொண்டு தன் சமாதியை தயார் செய்தார் கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்கள். எனவே அவரின் மனமுதிர்ச்சியும் அமைதியுடன் மரணத்தை எதிர்கொண்ட விதமும் தவறாய்ப் படவில்லை. நான் சாகப் போகிறேன் உனக்கு தூக்கம் ஒரு கேடா என மற்றவரை வதைக்கவில்லை அல்லவா! ராகவேந்திரர் சமாதியடையலாம் அது தவறில்லை ஏனெனில் அவர் தெய்வப் பிறவி என சொல்லுதல் தவறு. மரணத்தை அமைதியுடன் எதிர் கொள்ளும் எவருமே அந்தப் புகழுக்கு உரியவர்தான்.

அமைதியான மரணம் என்பது மிகப் பெரிய பேறு. அன்பு கொண்டவர்களின் மரணம் என்பது மிகப் பெரிய துக்கம் தான். ஆனால் மரணத்தை இவ்வளவு எளிதாய் அணுக முடியும் என்பதே நாளை அந்தக் குடும்பத்திற்ற்கு மிகப் பெரிய தைரியமாய் இருக்கும்.

பூமகள்
12-11-2007, 05:04 AM
எத்தனை பேருக்கு தனது கடைசி நிமிடங்களில் தாங்கள் இப்படித்தான் இருந்தோம் என்ற பிரஞை இருக்கும்??
அந்த வகையில் தனது இறப்பு இப்படித் தான் நிகழ வேண்டும் என்று அந்த பெரியவரின் விருப்பத்தை குடும்பத்தார் நிறைவேற்றியதாக எண்ணி அமைதியும் நிம்மதியும் அடையலாம்.
குடும்பத்தாரின் வருத்தம் அவர் மேல் கொண்ட அன்பு தானே ஒழிய அது அவர் அவ்வாறு கூறியதால் ஏற்பட்ட மனத்தாக்கம் என்று சொல்ல முடியாது.
அவரது இறுதி நிமிடங்கள் தான் இப்படியான நிலையில் தான் உயிர் பிரிய வேண்டுமென்ற அந்த எண்ணம் குடும்பத்தாருக்கு அந்த சூழலில் வருத்தமளிக்க வைப்பது என்பது அவரது இறுதி நெருங்கிவிட்டதே என்று தான் இருக்குமென்பது என் கருத்து.
தெளிவாய் பின்னூட்டமிட்ட தாமரை அண்ணாவுக்கும் நேசம் அண்ணாவுக்கும் நன்றிகளும் பாராட்டுகளூம்.

lolluvathiyar
12-11-2007, 07:04 AM
நல்ல மரனம் அமைதியாய் சிவபதம் அடைந்தார். இறக்கும் தருவாயில் நெற்றியில் திருநீரு பூசி மரனமடந்தார். அவரின் பக்தி அவரை படபடப்பில்லாமல் கடைசிவரை சந்தோசமாக கழித்தார். இந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?
அமைதியாக வாழ்பவர்கள் தங்கள் இறுதி நாளை கனிக்க முடியும்.
அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திகிறேன்

பென்ஸ்
12-11-2007, 07:21 AM
தான் சாவதற்கு முன் தன்னுடைய குடும்பத்தாரை இதுபோன்ற செயல்களால் வாட்டி வதைத்தது சரியா நண்பர்களே?
சுவையான சம்பவங்கள் பகுதியில் இது கொடுக்க கூடிய நிகழ்ச்சிதான், ஆனால் இந்த கேள்வி விவாத பகுதிக்கானதோ?????
இந்த செய்தி தினமலரில் வந்ததால் இது செய்தி சோலையில் வரவேண்டுமோ????
எப்படியோ..!!!
தான் இறக்க போகிறேன் என்று தெரிந்தால் அதை சொல்லி அடுத்தவர்களை இது போன்ற செயல்கள் செய்து மனவருத்தமும், உளச்சலும் கொடுப்பதற்க்கு பதில்,
தன் ஈகோ-வை பிடுங்கி எறிந்து விட்டு தான் யாருக்காவது தவறு இழைத்திருந்தால் மனமாற மன்னிப்பு கேட்டு இருந்திருக்கலாம்... தன் அன்பை வேளிப்படுத்த மறந்த நிமிடங்களை வேளிகொண்டுவந்து , தன் அன்பை அடுத்தவர்களிடம் சொல்லி இருந்திருக்கலாம்... என்பது என் கருத்து...
ஆனால் அவர் ஏன் அப்படி செய்தார் என்பது "கவன ஈர்ப்புகாக இருக்கலாம்", இருந்தாலும் அவர் சொல்லமால் , நாமே ஆவர் ஏன் இப்படி செய்தார் என்பது சரியாகுமா????

xavier_raja
12-11-2007, 09:00 AM
சுவையான சம்பவங்கள் பகுதியில் இது கொடுக்க கூடிய நிகழ்ச்சிதான், ஆனால் இந்த கேள்வி விவாத பகுதிக்கானதோ?????
இந்த செய்தி தினமலரில் வந்ததால் இது செய்தி சோலையில் வரவேண்டுமோ????நான் தவறாக இதில் போஸ்ட் செய்து இருந்தால் மன்னிக்கவும்

பென்ஸ்
12-11-2007, 09:17 AM
நான் தவறாக இதில் போஸ்ட் செய்து இருந்தால் மன்னிக்கவும்
தவறில்லை...
நண்பர்கள் சரியான பகுதிக்கு மாற்றியுள்ளார்கள்....

அன்புரசிகன்
12-11-2007, 09:38 AM
இது போன்ற சாவுக்கு ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும். அமைதியான சாவு... சிலர் நித்திரையில் அப்படியே மறைந்திருக்கின்றார்கள்.

இதுபோன்ற சாவு எனக்கும் வரவேண்டும் என்பது தான் எனது விருப்பம்....

யவனிகா
12-11-2007, 10:23 AM
செய்ததெல்லாம் சரிதான்...விளம்பரம் வேற குடுக்கச் சொல்லியிருக்கிறார்? விளம்பரப் பிரியரா?வாட்ச் எதுக்கு அணிந்தார் மோட்சத்துக்கு நேராப் போக நல்ல நேரம் பார்க்கவா?

சுவையான செய்திதான்.ஞானிகள் ஜீவ சாமாதி அடைந்தது...சாம்பலை மட்டும் எஞ்ச விட்டு உயிர் நீத்ததும்..மரண சேதியை முன்கூட்டியே அறிவித்ததும் நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.இவரு ஞானியா?இல்லை இ.எஸ்.பி.பவர் எதாச்சும் இருந்துச்சா தெரியலையே?

lolluvathiyar
12-11-2007, 10:45 AM
விளம்பரப் பிரியரா?


விள*ப்ம்ப*ர*ம் அவ*ருக்க*ல்ல*, இற*ந்த* செய்தியை ந*ன்ப*ர்க*ள் அறி ந்து கொள்ள*. இ ந்த* கால*த்தில் அது பேச*னாகிவிட்ட*தேஇவரு ஞானியா?இல்லை இ.எஸ்.பி.

எதுவும் இல்லை. இயற்கை மரனம் ஏய்துபவர்களுக்கு மரனம் வரும் நேரம் தெரிந்து விடும். உடலில் உள்ள மாற்றங்களை வைத்தே அவற்றை உனர முடியும். அதனால் சிலருக்கு பதற்ற வரும் துடித்து விடுவார்கள், ஆஸ்பத்திரி செலவும் வைத்து விடுவார்கள். இவர் அப்படி செய்யவில்லை.

நுரையீரல்
12-11-2007, 10:56 AM
நல்லவேளை சன் டி.வியில் விளம்பரம் கொடுக்கச் சொல்லவில்லை. குடும்பத்தாருக்கு பணம் மிச்சம். பிரபலமாவதற்கு என்னென்ன பித்தலாட்டம் பண்றாய்ங்க படுபாவிங்க.........

தான் சாகப்போகிறோம் என்று முன்கூட்டியே யாருக்குமே தெரியாது. அதுக்கு ஏகப்பட்ட மெடிக்கல் காரணங்கள் இருக்கு. இது ஒரு டுபாக்கூர் நியூஸ் மக்களே நம்பாதீங்க.......

நுரையீரல்
12-11-2007, 11:02 AM
எதுவும் இல்லை. இயற்கை மரனம் ஏய்துபவர்களுக்கு மரனம் வரும் நேரம் தெரிந்து விடும். உடலில் உள்ள மாற்றங்களை வைத்தே அவற்றை உனர முடியும். அதனால் சிலருக்கு பதற்ற வரும் துடித்து விடுவார்கள், ஆஸ்பத்திரி செலவும் வைத்து விடுவார்கள். இவர் அப்படி செய்யவில்லை.
இப்படியெல்லாம் நம்புறீங்களா வாத்தி...........

ஒரு இயற்கையான மரணம் எப்படி இருக்கும் என்று இதுவரை யாராலும் தெளிவாக கூற முடிந்ததில்லை. தான் சற்று நேரத்தில் இறக்கப் போகிறேன் என்று தான் அனுபவித்த விஷயங்களையெல்லாம் அருகிலுள்ளவரிடம் சொல்வார்கள், ஆனால் badluck அன்னைக்கு இறக்கமாட்டார்கள். ஆகவே, அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் ?????

சரி வாத்தியாரே... ஏதோ உடல் மாற்றங்கள் என்று சொன்னீர்களே....... அது என்னென்ன மாற்றங்கள் என்று சொல்ல முடியுமா????

யவனிகா
12-11-2007, 11:12 AM
சரி வாத்தியாரே... ஏதோ உடல் மாற்றங்கள் என்று சொன்னீர்களே....... அது என்னென்ன மாற்றங்கள் என்று சொல்ல முடியுமா????

இது கொஞ்சம் அதிகம்...முன்னப் பின்ன செத்தாத் தான் சுடுகாடு தெரியும்? வாத்தியைப் பாத்து இப்படிக் கேக்கிறீங்களே புள்ளி ராஜா?

நேசம்
12-11-2007, 01:25 PM
இது கொஞ்சம் அதிகம்...முன்னப் பின்ன செத்தாத் தான் சுடுகாடு தெரியும்? வாத்தியைப் பாத்து இப்படிக் கேக்கிறீங்களே புள்ளி ராஜா?
சும்மா போனாலே தெரியும்.எதுக்கு போய் புள்ளி ராஜாவை பார்த்து இப்படி கேட்கணூம்