PDA

View Full Version : பிளாஸ்டிக் பூக்கள்



ஆதி
12-11-2007, 02:59 AM
பிளாஸ்டிக் பூக்கள்


வேர்களின் தகிப்புக்கு
நீர் கேட்ட செடிகளை
ஊர்கடத்தி
பற்பல வண்ணங்குலைந்து
அறிவியலின் ஆக்கதில் பூக்கும்
'பிளாஸ்டிக்' செடிகளை
நுகர்வோர் அதிகம்.


வளர்த்த ஆசைக்கு
மலராத வருத்தத்தின் அதிர்வுகளாய்
வீட்டுள்,
அழகு பெயர வாங்கி
ஆற்றாமை தணிப்பர் சிலர்.


பருவத்தடை பழக்கி
உலர்வையும்
உதிர்வையும் மீறி
நிரந்திர பச்சை நுரைக்கும்
இலைகளின் நுனியில்
கனக்கும்,
காற்றில் முணகாத ஏக்கங்கள்.


மேசையில்
கண்ணாடி அலமாரியில்
தொலைக்காட்சியின் தலையில்
தேன் தாது நறுமணம்
அளவளாம்ல் விரியும்
இயற்கையைக் கடந்த இதழ்கள்.


வெளிறா நிறம் கொண்டும்
பூப்புணர் வண்டோ
மென்விரல் மாதரோ
வருடாமையால்,
வெறுமையே பூரிக்கும்
'பிளாஸ்டிக்' பூக்களின் புன்னகை..


-ஆதி

ஓவியன்
12-11-2007, 06:26 PM
அழகு தான்
வர்ண ஜாலம் தான்
ஆயினும்
ஆண்டவன் சன்நிதி
ஏக முடியாதே...??

நம்மில் பலரது வாழ்வும் இப்படி வெறுமையாகத் தானிருக்கின்றன..
பிளாஸ்டிக் பூக்களைப் போலவே...!!

வேறுபட்ட கோணத்தில் ஒரு அழகுக் கவி..!
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஆதி!!

யவனிகா
12-11-2007, 07:00 PM
பிளாஸ்டிக் பூக்களின் வேதனையைக் கவிபாடவும் ஒருவர். நல்ல கவிதை. உயிரற்ற பூக்களுக்காக உயிருள்ள கவிதையைத் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஆதவா
12-11-2007, 08:01 PM
நல்ல வித்தியாசமான கருக்களைத் தேர்ந்தெடுக்கும் உங்களை வரவேற்கிறேன் ஆதி.

கவிதையைப் பற்றி, : மிக அழகாக எளிமையாக செல்கிறது. வார்த்தைகள் அழகாக அமைந்து, அங்கங்கே கோலத்தில் வர்ணமிட்டவாறு இருக்கிறது. தலைப்பும் தேர்ந்தெடுத்த கருவும் மிக அருமை.. பிளாஸ்டிக் என்ற பிரபஞ்சத்தைக் கையில் எடுக்காமல் சற்றே நுணுக்கமாய் ஒரு பிலாஸ்டிக் பூமியை எடுத்தது அருமை.

அறிவியலின் ஆக்கதில் பூக்கும்
'பிளஸ்டிக்' செடிகளை
நுகர்வோர் அதிகம்.

இயற்கைப் பூக்களை இயல்பாகவே நுகரும் வாய்ப்பு குறைந்துவிடுமோ என்ற ஏக்கம்.... நுகர்வோர் என்ற இருதலைக் கொள்ளிகளால் வந்த கவிதை ஆக்கம்.... அருமை ஆதி.

வளர்க்க அதற்கு உயிரில்லை, இயற்கையாக அல்லாதிருந்தால்... அழகுக்கு அழுகும் இயற்கை அவசியமில்லை என்ற உதாசீனம் வந்தது எப்படி? இயற்கையின் மீதுள்ள அக்கறையின்மையின் அக்கறை.

ஆற்றாமை தணிக்க வேண்டுமே அன்றி தனிக்க அல்ல.

காற்றின் ஏக்கங்கள் வடிகாலாய் வடிந்து நிற்கிறது காற்றுக்கு ஆடா இலை நுனிகளிடம். நல்ல ஏக்கமே

பூப்புணர் வண்டு.. நல்ல தமிழ்ச் சொல். தேவையான இடத்தில்..

பிளாஸ்டிக் இன்றி வாழமுடியாதா மனிதனால்? நாளைய சமுதாயம் பிளாஸ்டிக்கினுள் பூமியை அதக்கப் பார்க்கிறது. இன்றைய கோஷங்கள் வெறும் கோஷங்களே. என்றாவது ஒருநாள் மனிதன் உணரக் கண்டாலும் அழிக்கக் கூட முடியாது அதனை...

எனக்கு இரு சந்தேகங்கள் இதில்..

1. பிலாஸ்டிக்கிற்கு தமிழ் அர்த்தமென்ன?

2. பிளாஸ்டிக்க ரீசைகில் பண்ண முடியாதா?

நல்ல கவிதை/ [பாராட்டுக்கள் ஆதி]

இளசு
12-11-2007, 08:38 PM
மெய்யழகின் பராமாரிப்பு கோரும் மென்மையும்
மெய்யழுகி மறுபக்கம் உதிரும் நிலையற்ற தன்மையும்..

மெல்ல தள்ளியதோ மனிதர்களை
மெய்நிகர் அழகுபிம்பங்களுக்கு.

பின்னாளில் ரோபோக்களை துணையாக்கும் காலத்துக்கு
இன்னாளில் கட்டியமோ இந்த செயற்கைப் பூக்கள் நுகர்வு?


பாராட்டுகள் ஆதி..

தணிப்பர், கனக்கும் - பிழைகளைக் களைய வேண்டுகோள்.

ஆதவா

பிளாஸ்டிக் - தமிழீடு அறியேன்.
ரீ-சைக்கிள் - மறு சுழற்சி, பயன் சுழற்சி ?

ஆதி
13-11-2007, 10:43 AM
எனக்கு இரு சந்தேகங்கள் இதில்..

1. பிலாஸ்டிக்கிற்கு தமிழ் அர்த்தமென்ன?

2. பிளாஸ்டிக்க ரீசைகில் பண்ண முடியாதா?




இரு கேள்விக்கும் தற்பொழுது விடை என்னிடமில்லை.. முடிந்த மட்டில் துரிதமாய் தரமுயற்சிக்கிறேன்..

அருளி ஐய்யா எழுதியுள்ள அகரமுதலியில் கிடைக்குமென நம்புகிறேன்..

ஆதி
26-11-2007, 07:32 AM
1. பிலாஸ்டிக்கிற்கு தமிழ் அர்த்தமென்ன?

2. பிளாஸ்டிக்க ரீசைகில் பண்ண முடியாதா?



அன்பின் ஆதவா,

பிளாஸ்டிக்கின் தமிழீடு - நெகிழி, நெகிழ்மம் என்பதாம்..

- அருங்கலைச்சொல் அகரமுதலி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய இயலுமா ?

முடியும், ஆனால் அனைத்து வகையான நெகிழ்மங்களையும் மறுசுழற்சி செய்தல் இயலாதது..

உங்கள் கேள்விகளுக்கு பொருத்தமான பதில் கொடுத்தேன அறியேன்.. இன்னும் கேள்விகள் இருப்பின் தொடுங்கள் பதில் முடிந்த மட்டும் தோண்டி எடுக்க முயல்கிறேன்..

அன்பன் ஆதி

சிவா.ஜி
26-11-2007, 08:12 AM
வாசமில்லா பூக்கள் வாசம் செய்கிறது வீட்டில் அங்கெங்கினாதபடி எங்கும்.
நுகர்வோர் விரும்பும் நுகர முடியாப் பூக்கள்.எத்தனையோ அர்த்தங்கள் பேசுகின்றன.வித்தியாசக் கருவுக்கு அழகான கவிதை.ஆக்கிய ஆதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ஷீ-நிசி
27-11-2007, 04:01 PM
நல்லதொரு வித்தியாசமான கரு!

காலமாற்றத்தில் எதையுமே தவிர்க்கமுடியாதது! இப்படி நம் எண்ணங்களை கவிதையில் வடித்துவைத்துக்கொள்வதுதான் கடைசியில் மிஞ்சும்...

சிறப்பம்சம்.. உங்கள் கவிதையில் சில புதிய வார்த்தைகள் கூறியிருக்கிறீர்கள்..


பருவத்தடை பழக்கி


பூப்புனர் வண்டோ

தொடருங்கள்! வாழ்த்துக்கள் ஆதி!

ப்ளாஸ்டிக் - நெகிழி - அழகிய தமிழ் வார்த்தை!

ஆதி
27-11-2007, 04:12 PM
வாசமில்லா பூக்கள் வாசம் செய்கிறது வீட்டில் அங்கெங்கினாதபடி எங்கும்.
நுகர்வோர் விரும்பும் நுகர முடியாப் பூக்கள்.எத்தனையோ அர்த்தங்கள் பேசுகின்றன.வித்தியாசக் கருவுக்கு அழகான கவிதை.ஆக்கிய ஆதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

பின்னூட்டத்திற்கு நன்றிகள் சிவா..

-ஆதி

ஆதி
27-11-2007, 04:18 PM
காலமாற்றத்தில் எதையுமே தவிர்க்கமுடியாதது! இப்படி நம் எண்ணங்களை கவிதையில் வடித்துவைத்துக்கொள்வதுதான் கடைசியில் மிஞ்சும்...
ப்ளாஸ்டிக் - நெகிழி - அழகிய தமிழ் வார்த்தை!

மிக்க நன்றிகள் ஷீ..

ஆதி
10-02-2011, 12:06 PM
இந்த கவிதையை பற்றி, தன் ப்ளாகில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்..

//நீண்ட நாள் கழித்து, ஒரு நிரை வயிறு வேட்டை........ //

http://ooraan-veetu-nei.blogspot.com/2008/11/blog-post.html


2008-லேயே அவர் போட்ட பதிவு என்றாலும் நான் சமீபத்தில் தான் பார்த்தேன், முதன் முதல் இந்த கவிதை ஆரங்கேறிய நம் தமிழ்மன்றத்திற்கே இந்தச் சொற்ப பெருமையும் உரித்தாகுக..

lenram80
10-02-2011, 12:52 PM
வேறு இடத்தக்கு போவும் பூவென்பதால் தான் நாங்கள் பெண் சிசுவைக் கொள்கிறோம்!

வாடி விடும் என்பதால் தான் இயற்கை பூவை வாங்க மறுக்கிறோம்!

வாடாத பூ கொடு! அல்லது
இலவச பூ கொடு!
இல்லையேல்
அதுவரை பிளஸ்டிக் பூ தான்!


வாழ்த்துகள் ஆதன்!

கலாசுரன்
12-02-2011, 09:57 AM
இலைகளின் நுனியில்
கனக்கும்,
காற்றில் முணகாத ஏக்கங்கள்.

அருமையான வரிகள் ...:)
பிரம்மிப்பு..!!