PDA

View Full Version : 100CC பைக் ரூபாய் 19,999 க்கு.தங்கவேல்
12-11-2007, 12:07 AM
செனிடிஸ் என்ற கம்பெனி, 100சிசி பைக்கை ரூபாய் 19,999க்கு விற்பனை செய்ய அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், சைனா கம்பெனியுடன் இணைந்து பைக் தயாரிப்பதாகவும் பிசினஸ் லைனில் படித்தேன். இதர கம்பெனிகள் இதே சிசி பைக்கை விற்பனை செய்வது 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை. மற்ற கம்பெனிகாரர்களிடம் கருத்து கேட்டபோது மார்க்கெட்டுக்கு வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லி இருக்கின்றார்கள்.
பைக்கின் இணையதளச்சுட்டி கீழே..
http://xenitisgroup.com

சைனாவில் உருவாக்கப்படும் செல்போன்கள் மிகவும் விலை குறைவு என்ற ஆதாரத்துடன் ஒரு கட்டுரையினை முன்பு எழுதியிருந்தது நண்பர்களுக்கு நினைவுக்கு வரலாம். அதே போல் தான் பைக் தயாரிப்பாளர்களும் கொள்ளை காசு பார்த்து இருக்கின்றனர் போலும். சில கார்பொரேட் கம்பெனிகள் இணைந்து எப்படி எல்லாம் மார்க்கெட்டை தன் கையில் வைத்து உள்ளனர் என்பது வெட்டவெளிச்சம்.

ஒரு லட்ச ரூபாய் கார் வந்தால் பைக் விற்பனை படுத்து விடும் என்று சொல்லுகின்றார்கள். 2008-ல் சில உண்மைகள் வெளிவரக்கூடுமென நினைக்கின்றேன்.

புதிதாக பிளை என்ற செல்போன் மார்க்கெட்டில் கிடைக்கின்றது. மிகவும் விலை குறைவு. வசதிகள் அதிகம். இதே வசதிகள் கொண்ட மற்ற கம்பெனிகளின் செல் போன்கள் விலையினை ஒப்பிட்டால் தலை கிறுகிறுக்கின்றது.
பிளை போனின் இணைய தளச்சுட்டி கீழே.

www.flyphone.in

படிக்காதவர்களை எப்படியெல்லாம் சில டீலர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்று நேரில் கண்டேன். ஒரு டிஸ் ஆன்டனா கம்பெனியின் டீலர் சர்வீஸ் செய்ய வந்து இருந்தார். எனது பக்கத்து வீட்டுக்காரருக்கு எழுத்து வாசனை கிடையாது. உதவிக்கு என்னை அழைத்தார். சிக்னல் செட் செய்து விட்டு செட்டாப் பாக்ஸை உயிர்ப்பித்து பார்த்தால், இலவச சானல்கள் கிடைக்கின்றன ஆனால் கட்டண சானல்கள் கிடைக்க வில்லை. சன், சன் நியூஸ், ஜெயா, கலைஞர், பொதிகை மற்றும் சில எப் எம் ரேடியோக்கள் இலவசமாய் கிடைக்கின்றது. இதே அவருக்கு போதுமானது. அந்த சர்வீஸ் நபர், வீட்டுக்காரரிடம் இதெல்லாம் உங்க கேபிள் டிவி சிக்னலில் இருந்து வருகிறது. உடனடியாக நீங்கள் உங்கள் இணைப்பை புதுப்பிக்க வேண்டும் என்று சொன்னார். இலவச சானல்கள் இலவசமாக கிடைக்கும் போது ஏன் பணம் கட்ட வேண்டும் என்றேன். சார் அது எப்போ வேண்டுமானாலும் கட் ஆகும் என்று கதை சொன்னார். கொஞ்சம் விபரமாக கிண்டினேன். அடங்கி விட்டார்.

படித்தவர்களாகிய நம்மையே பிராண்டு பேர் சொல்லி, அவற்றுக்கு அடிமையாக்கி ஏமாற்றுகின்றார்கள். இதைப்போல என்னென்னவோ ஏமாற்றும் வேலைகள்

உலகம் எங்கு செல்கின்றது ? மனிதனின் மனிதம் மறத்து விட்டதா ? ஒன்றும் புரியவில்லை. மர்மம்தான் வாழ்க்கையில் ? சுற்றி இருப்போர் திருடராய் இருக்கும்போது, நல்லவன் மட்டும் எப்படி நல்லவனாகவே வாழ்வது ? இன்னும் கேள்விகள் ? ஆனால் விடை மட்டும் இல்லை .

அக்னி
12-11-2007, 12:17 AM
சந்தைப்படுத்தலில் ஏற்படும் போட்டிகள் நுகர்வோருக்கு அனுகூலமானவையாக இருந்தாலும்,
தரம் என்ற வகையில் சில பல பிரதிகூலங்களும் ஏற்படலாம்.
கவனமாயிருக்க வேண்டியது நுகர்வோரே...

உலகம் எங்கு செல்கின்றது ? மனிதனின் மனிதம் மறத்து விட்டதா ? ஒன்றும் புரியவில்லை. மர்மம்தான் வாழ்க்கையில் ? சுற்றி இருப்போர் திருடராய் இருக்கும்போது, நல்லவன் மட்டும் எப்படி நல்லவனாகவே வாழ்வது ? இன்னும் கேள்விகள் ? ஆனால் விடை மட்டும் இல்லை .
இது உங்களுக்கு மட்டும் ஏற்படும் ஆதங்கமல்ல.
அதிகளவான நடுத்தர மக்களுக்கு ஏற்படும் ஆதங்கமே...
வசதிகள் பெருகப் பெருக ஏமாற்றுவோரும் விதவிதமாக உருவெடுக்கின்றார்கள்.
தீர ஆராய்ந்தறிதலே, பிரச்சினைகளிலும், வீண் செலவுகளிலுமிருந்து எம்மைக் காக்கும்.

பகிர்தலுக்கு நன்றி...

நேசம்
12-11-2007, 02:22 AM
சந்தையில் ஏற்படும் போட்டியால் நுகர்வோருக்கு பயன் ஏற்படுவது போல் தோன்றினாலும் அக்னி அவர்கள் தரத்தை பரிசலிக்க வேண்டும்.அப்படி தரமாக இருக்கும் பட்சத்தில், ஏன் நம் நாட்டிலே இவற்றை தயாரித்து அந்த அளவுக்கு விற்பனை செய்ய முடியவில்லை.
உலகம் எங்கு செல்கிறது என்று ஆதங்க படுகிர்.அதற்கு காரணம் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் அதாவது உலகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி தான் மனிதனின் அத்தைகைய நிலைக்கு கொண்டு செல்கிறது.

lolluvathiyar
15-11-2007, 06:15 AM
தரம் என்ற வகையில் சில பல பிரதிகூலங்களும் ஏற்படலாம்.
கவனமாயிருக்க வேண்டியது நுகர்வோரே...


அதிக விலையில் விற்கபடும் பொருட்களில் மட்டும் சொல்லி கொள்ளும் அளவுக்கு தரம் இருப்பதில்லை. (அதாவது சர்வீஸ்). சோனி மாடல் 15000 போன் வசதிகள் கொண்ட சீன மாடல் 5000 க்கு கிடைகிறது.
எப்படியும் நோக்கியா சோனி மாடல் போன் 3 வருடம் தான் உழைக்கும்.
அதே காலகட்டத்தில் இது போல விதவிதமாக 4 போன் வாங்கிவிடலாம் தரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.


அப்படி தரமாக இருக்கும் பட்சத்தில், ஏன் நம் நாட்டிலே இவற்றை தயாரித்து அந்த அளவுக்கு விற்பனை செய்ய முடியவில்லை.


குரைந்த விலையில் வெளியில் கிடைப்பதால் நம் நாட்டில் இதை தயாரிக்க முடியாது. தற்பொழுது இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களில் விலை ஏறுமுகத்தில் தான் இருகிறது. மேலும் இந்தியாவில் அசெம்பளிங் மட்டுமெ செய்ய அனுமதிப்பார்கள் சிப் தொழில் நுட்பம் வளர யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.