PDA

View Full Version : திருமண பதிவு கட்டாயம்: அரசு உத்தரவு



mgandhi
11-11-2007, 05:25 PM
திருமண பதிவு கட்டாயம்: அரசு உத்தரவு

திருமணமான மூன்று மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்வோர், திருமணத்தை பதிவு செய்கின்றனர். பெற்றோரால் நிச்சயிக் கப்படும் திருமணங்கள், முக்கிய காரணங்கள் இருந்தால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.தமிழக அரசு புதிய திருமண சட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில், திருமணமான மூன்று மாதத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். விண்ணப் பத்தில் கணவன், மனைவி பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.திருமண பதிவுக்கும், பதிவு சான்று பெறுவதற்கும் கட்டணமும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

lolluvathiyar
12-11-2007, 07:38 AM
வரவேற்க்க கூடிய சட்டம், தமிழக அரசுக்கு நன்றி செலுத்துகிறேன்

அமரன்
12-11-2007, 07:45 AM
நல்ல விடயம்.. வரவேற்போம்..

சுகந்தப்ரீதன்
12-11-2007, 08:09 AM
நீண்டநாளா இத ஏன் இன்னும் செய்யலன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்..செஞ்சுட்டாங்க..வாழ்த்துக்கள்...தமிழக அரசுக்கு உருப்படியா அப்பப்ப சில காரியங்கள் செய்வதற்க்கு..!

சிவா.ஜி
12-11-2007, 08:16 AM
பதிவாளர் அலுவலக அதிகாரிகளுக்கு இனிமே நல்ல வேட்டைதான்.கட்டாயமாக்கப்படும் எந்த சட்டமும் அரசு அதிகாரிகளுக்கு வருமான வாய்ப்புகள்தான்.மழைநீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டபோதுதான்....பார்த்தோமே....