PDA

View Full Version : வெளிநாடு செல்லும் மருத்துவ மாணவர்கள்.



mgandhi
11-11-2007, 04:51 PM
சிறந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்! படையெடுப்பு : படித்து சாதித்தது இங்கே; சேவை செய்து கொழிப்பது அங்கே

http://www.dinamalar.com/dinaadmin/PagePhoto/fpn04.jpg

இந்தியாவில் தலைசிறந்த அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் படித்து சாதித்த மாணவர்களில் பாதிக்கு மேல், மேற்கத்திய நாடுகளுக்கு ஓடி, பணம் கொழிக்கின்றனர்.



இவர்களில், பொதுப்பிரிவில் படித்த மாணவர்கள் தான் அதிகளவில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளில் குடியேறி உள்ளனர். ஒதுக்கீடு பெற்று படித்த மாணவர்கள் மிகக்குறைவான அளவில் தான் சென்றுள்ளனர்.

அமெரிக்க பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகம் மற்றும் டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், இப்படி திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 1989ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையுள்ள 12 ஆண்டுகளில், இந்த மருத்துவ கல்வி நிறுவனத்தில் படித்து வெளியேறிய மருத்துவர்கள் பற்றி ஆய்வு செய்தனர்.

ஆய்வில் தெரிய வந்துள்ள சில தகவல்கள்:

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில், இந்த 12 ஆண்டுகளில், படித்து பட்டம் பெற்ற 341 பேரில், 206 பேர் மேற்கத்திய நாடுகளுக்கு ஓடி, பணத்தில் கொழிக்கின்றனர்.

இவர்களில் பெண்களில் 78 பேரில் 39 பேரும் அடங்குவர்.

ஒதுக்கீடு பெற்று மருத்துவ படிப்பு படித்த 87 பேரில், 25 பேர் வெளிநாட்டுக்கு போய்விட்டனர்.

ஒதுக்கீடு பெற்ற பொதுப்பிரிவு மாணவர்களில் பட்டப் படிப்பில், விருது பெறாதவர்கள் மொத்தம் 375 பேர். அவர்களில் 201 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

ஒரு விருது பெற்ற 28 பேரில் 12 பேரும், இரு மற்றும் அதற்கு மேற்பட்ட விருது பெற்ற 25 பேரில் 18 பேரும் வெளிநாட்டில் மருத்துவ பணி செய்கின்றனர்.

சர்வே நடத்திய குழுவின் மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், சூவெளிநாட்டுக்கு அதிகளவில் பொதுப் பிரிவு மாணவர்கள் தான் சென்றுள்ளனர். ஒதுக்கீடு பிரிவில் போனவர்கள் குறைவு தான். அதனால், பொதுப்பிரிவு மாணவர்கள் வெளிநாடு போவதை தடுக்க, அவர்களுக்கு முழு அளவில் கட்டணம் வசூலிக்க வேண்டும். இந்தியாவில் சிறந்த பயிற்சியைப் பெற்று, வெளிநாடுகளில் பணி செய்யும் இவர்களை கட்டுப் படுத்த இது தான் வழி' என்று கூறியுள்ளனர்.

ஹார்வர்ட் ஆராய்ச்சி குழு தரப்பில் கூறுகையில், சூபடிப்பில் சிறந்த இவர்கள், ஏன் வெளிநாடு போய்விட்டனர் என்பது பற்றிய தெளிவான காரணம் தெரியவில்லை. மற்றவர்களை விட, அவர்களுக்கு சலுகைகள் இல்லாததோ, அவர்களின் திறமையை மதிக்காததோ காரணமாகக் கூட இருக்கலாம்' என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

நேசம்
11-11-2007, 05:03 PM
வேதனை அளிக்க கூடிய விஷயம்.நிண்ட நாட்களாக இதை பற்றி பலர் பேசினாலும் இதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.முழு அளவில் கட்டணம் வசூலித்தாலும் முழுமையாக வெளிநாடுகளுக்கு பணி புரிய செல்வதை தடுக்க முடியாது.தங்கள் நாட்டில் பணி புரிவதன் முலம் சேவை செய்கிறோம் என்று உணர்ந்தால் மட்டுமே முடியும்.

அக்னி
11-11-2007, 06:36 PM
படத்திற்கும் தகவலுக்கும் என்ன பொருத்தம் என்று விளங்கவில்லை...

பகிர்தலுக்கு நன்றி...