PDA

View Full Version : ஹைக்கூ 06 - மழை



meera
11-11-2007, 02:05 PM
வான தேவதை
பெற்றெடுத்த
கண்ணீர் மழலை.
- மழை

இளசு
11-11-2007, 02:10 PM
வான்மகள் அழுகையில்தான்
பூமகளின் புன்னகை!

வாழ்த்துகள் மீரா..

(கிளி ஹைக்கூ போல் இதுவும் வளரட்டும்!

meera
11-11-2007, 02:17 PM
வான்மகள் அழுகையில்தான்
பூமகளின் புன்னகை!

வாழ்த்துகள் மீரா..

(கிளி ஹைக்கூ போல் இதுவும் வளரட்டும்!


மழை மகள் வளர வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணா.

அக்னி
11-11-2007, 02:19 PM
வான தேவதை
பெற்றெடுத்த
கண்ணீர் மழலை.
- மழை
ரசித்தேன்... பாராட்டுக்கள்...

வனதேவதை
தடுத்துப் பெற்ற
பன்னீர் - மழை

தாமரை
11-11-2007, 04:32 PM
வான தேவதை
பெற்றெடுத்த
கண்ணீர் மழலை.
- மழை

கருத்து
கருத்தரித்து
பெற்று வெளுத்தது
முகில்
பாராட்டுகள்
பிண்ணனியில் இருந்த
நீலி வானுக்கா?

மன்மதன்
11-11-2007, 08:50 PM
அழகான கவி.. தொடர்ந்து எழுதுங்க..

பூமி தேவதை
தத்தெடுத்த மழலை
மழை..

தாமரை
12-11-2007, 03:36 AM
சாக்கடைகளில் மழைநீர்
கடைகளில்
குப்பிகளில் குளிர்பானங்கள்
சாவுகளுக்கிடையில்

அமரன்
12-11-2007, 08:38 AM
ரசித்தேன்... பாராட்டுக்கள்...
வனதேவதை
தடுத்துப் பெற்ற
பன்னீர் - மழை
வனதேவதை
தத்துக்கொடுத்த மழலை
மலை போல் மழை..

கிளிக்குமட்டுமல்ல
மழைக்கும் அதிகம்தான்
வரவேற்பு...!
பாராட்டுக்கள் அனைவருக்கும்..!

மதி
12-11-2007, 08:43 AM
ஒரு துளியில் இத்தனை கவிதை மழையா?
கலக்குங்க நண்பர்களே..!
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க கற்பனைக் குதிரைக்கும்.

அமரன்
12-11-2007, 08:48 AM
சாக்கடைகளில் மழைநீர்
கடைகளில்
குப்பிகளில் குளிர்பானங்கள்
சாவுகளுக்கிடையில்
குடிநீர்
என்பதுவும் சரியாகுமோ.
காவு கொடுக்கிறோமே
சாவுக்கு.

சிவா.ஜி
12-11-2007, 08:53 AM
நிலவின் கறையை
கழுவ முயற்சி....
வீணாகும் நீர் வெளியேறும்
மண்ணுக்கு மழையாக!

ஆதவா
12-11-2007, 09:26 AM
வான தேவதை
பெற்றெடுத்த
கண்ணீர் மழலை.
- மழை

வாவ் வாவ்.... மீராவின் கவிதை.....

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.. (என்னை ஞாபகம் இருக்கிறதா?:D) எப்படி இருக்கிறீர்கள் சகோதரி?

மீண்டுமொரு அழகிய ஹைக்கூ. மழை தவழும் கைகளில். நல்ல கருத்து.... ஆனால் ஆழமின்றி..

வாழ்த்துகள்.:)

அடிக்கடி வாருங்கள்.

தாமரை
12-11-2007, 10:47 AM
சாக்கடைகளில் மழைநீர்
கடைகளில்
குப்பிகளில் குளிர்பானங்கள்
சாவுகளுக்கிடையில்.



குடிநீர்
என்பதுவும் சரியாகுமோ.
காவு கொடுக்கிறோமே
சாவுக்கு.

குப்பிகளில் உள்ள நீர்
குடிக்கத் தகுந்ததுதானா?

அமரன்
12-11-2007, 10:49 AM
குப்பிகளில் உள்ள நீர்
குடிக்கத் தகுந்ததுதானா?
தகுந்ததல்ல...
புரிந்தது எனக்கு.

தாமரை
12-11-2007, 10:50 AM
நிலவின் கறையை
கழுவ முயற்சி....
வீணாகும் நீர் வெளியேறும்
மண்ணுக்கு மழையாக!

நீ முகம்துடைத்து
பிழிந்த பின்
கறுப்புக் கைக்குட்டையும்
வெண்மையானது
நிலவே!

அமரன்
13-11-2007, 08:06 AM
நீ முகம்துடைத்து
பிழிந்த பின்
கறுப்புக் கைக்குட்டையும்
வெண்மையானது
நிலவே!
வெண்மையானபின்னும்
முகம் போர்த்திக் கொள்கிறதே
வெண்ணிலா...
வெக்கையா..வெக்கமா..

தாமரை
15-11-2007, 04:15 AM
வெண்மையானபின்னும்
முகம் போர்த்திக் கொள்கிறதே
வெண்ணிலா...
வெக்கையா..வெக்கமா..


அவள் முகம் தொட்ட
கைகுட்டைக்கும்
விலக மனமில்லை

சிவா.ஜி
15-11-2007, 04:19 AM
அவள் முகம் தொட்ட
கைகுட்டைக்கும்
விலக மனமில்லை

விலக மனமில்லா
கைக்குட்டைக் கண்டு
தாங்களும் அதுவாக
வானத்தில் வரிசையாய்
மேகங்கள்

அமரன்
15-11-2007, 06:53 AM
அவள் முகம் தொட்ட
கைகுட்டைக்கும்
விலக மனமில்லை
கைகுட்டைக்கு
அவள் முகம் மேல் மோகம்..
அவளுக்கு
யார் மேல் மோகம்..
அடிக்கடி ஒதுங்குகிறாளே...!

ஓவியன்
22-11-2007, 10:46 PM
ஹைக்கு மீரா
தொட்டெழுதிய
அழகு கவிதை.
- மழை

அருமை மீரா அருமை...
இன்னும் இன்னும் எழுதுங்க..!!

IDEALEYE
23-11-2007, 05:33 AM
நல்ல கவிதை மீரா...
வாழ்த்துக்கள்,
சூரியன்
குடிக்கும் உப்பு நீர்
கொப்பளிக்கும் பன்னீர்
மழை...
என் கணக்குக்கு சேர்த்துக்கொள்ளுங்கள்
ஐஐ

சுகந்தப்ரீதன்
26-11-2007, 08:36 AM
வான தேவதை
பெற்றெடுத்த
கண்ணீர் மழலை.
- மழை
அதனாலத்தான் இப்பயெல்லாம் அடிக்கடி மழை வரல போலிருக்கு.. நல்ல கற்பனை..வாழ்த்துக்கள் மீரா..!