PDA

View Full Version : காதல்



ஆதி
11-11-2007, 06:28 AM
காதல்


பல வண்ணம் தோய்ந்து
ஒரு பூ மலரும்.


கனக்கும் கால வெளி
கடந்து
ஐந்தாவது காலத்தில்
ஒரு உலகம் விரியும்.


தனிமை நறுமணக்கும்
நிமிடத்தை வட்டமிடும்
அந்நிய தேவதைகள்..


நினைவின் புள்ளிகள் வளர்ந்து
நிலவாய் பிரகாசிக்கும்.


விரும்பிய பாதையில்
விழுவது
பூக்களோ ?
சருகுகளோ?
பெருகும் ஞாபகங்கள் கொண்டு
நூற்றாண்டையும்
நூற்றாண்டையும் கடந்து
வாழும்....


-ஆதி

சாராகுமார்
11-11-2007, 07:33 AM
காதல் நினைவுகள் என்றும் மாறாக்காது.

உங்கள் நினைவு காதல் கவிதை அருமை.வாழ்த்துக்கள்.

இளசு
11-11-2007, 08:19 AM
காலத்தை வென்றது காதலோ இல்லையோ..? அறியேன்!
காதல் காவியங்கள் சாதுவதமானதை அறிவோம்!


வாழ்த்துகள் ஆதி..

ஐந்தாவது காலம் என்றால் ? தெரியவில்லை. எனக்கு.
விளக்குங்களேன். நன்றி.

கணக்கும்? கனக்கும்? - குழப்பம். தீருங்கள். நன்றி.

சூரியன்
11-11-2007, 08:38 AM
அழகான கவிதை வாழ்த்துக்கள் ஆதி.

ஓவியன்
11-11-2007, 08:47 AM
காதலில் நடந்து வந்த பாதை
பூக்களால் ஆசிர்வதிக்கப்பட்டாலும்
சருகுகள் நிரப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டாலும்
அந்தக் காதல் பாதையின் ஞாபக சுவடுகள்
காலத்தால் அழியாதது என்பது உண்மையே...

வித்தியாசமான வார்த்தைப் பிரயோகங்கள்...
வித்தியாசமான அணுகுமுறை
பாராட்டுக்கள் ஆதி...!! :)

காலை,மதியம், மாலை மற்றும் இரவு என்பதை நான்கு காலங்களாகக் குறிப்பிட்டு அந்தக் காலங்களிலும் அடங்காததை ஐந்தாம் காலம் எனக் குறிப்பிடுகின்றீர்களா...???

கொஞ்சம் விளக்குங்களேன்....???

அக்னி
11-11-2007, 12:33 PM
பல வண்ணம் தோய்வதிலும்,
இருவர் எண்ணம் நிறைவாய்ச் சேர்வதில்தான்,
காதல் பூ, அழகாய் விரியும்...

பூவாய் இருந்தாலும் தூவினாலும்,
காய்ந்து போனால்.., அது சருகு...
காதலாய் இருந்தாலும் இழந்தாலும்,
காலம் சென்றால்.., அது நினைவு...

ஐந்தாவது காலம்...
யுகங்களின் புது இணைப்பா?
பருவகாலங்களின் புது இயல்பா?

எதுவானாலும், எப்போதும்,
மாற்றமடையும் பச்சோந்தி..,
காதல்...

மனோஜ்
11-11-2007, 12:37 PM
நினைவின் புள்ளிகள் வளர்ந்து
நிலவாய் பிரகாசிக்கும்.
காதல் தோற்றாலும் காதல் நினைவுகள் தேற்பதில்லை என்பது உண்மையிலும் உண்மை நன்றி கவிதைவரிகளுக்கு

ஆதி
12-11-2007, 02:43 AM
நெருப்பு குமிழியாய் வெடிக்கிற அக்னி வார்த்தைகளுக்கு நன்றி...

காதலைப் பச்சோந்தி என நேரத்திற்கு தகுந்தாற்போல் நிறம் மாற்றும் உயிரியாய் வர்ணம் தீட்டியுள்ளீர்.. நிதர்சனம்.. ஆனால் பச்சோந்தி காதல் அல்ல.. காதலர்கள்.. சூழலுக்கு ஏற்றார்ப்போல் மாற்றுவார்கள் மாறுவார்கள் காதலையும் தங்கள் இணையையும்..

ஆதி
12-11-2007, 02:51 AM
அரூப பூமி காதல்.. மூரண்களே வரங்களாய் பெற்றது..

ஞானி போல் விழிப்புணர்வு கிட்டும்.. செயல்பாடுகள் பைதியக்காரன் போன்று இருக்கும்..

காதலில் ஊறும் இதயம் காலங்களுக்கு கட்டுப்பட்டதல்ல.. நான்கு காலங்களையும் கடந்தது.. அதனால்தான் ஐந்தாம் காலமென புனைந்தேன்..

ஆதி
12-11-2007, 12:53 PM
நன்றி அனைவர்க்கும்..

ஆதவா
12-11-2007, 08:12 PM
காதல்.. அது காதலர்களின் சாபவரம். நீங்கள் பட்டியலிட்டவைகள் அனைத்தும் சாபங்கள்.. :)

அழகான கரு. அலுக்காத அமைப்பு. கவிதையின் ஒட்டுமொத்த சரமும் 'ஆதி'த்தனத்தை விட்டு அகன்று புதுமையாகவே இருக்கிறது.... சில இடங்களைத் தவிர்த்து.

இளசு அண்ணா குறிப்பிட்ட கணக்கு இன்னும் உதைக்கிறது.. சீக்கிரமே கனக்க வையுங்கள்.. அல்லது கவனியுங்கள்.

இரு நூற்றாண்டுகள் அவசியமல்ல என்பது என் கருத்து. அல்லது வேறர்த்தம் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

நல்ல தொடக்கம்... நல்ல புள்ளி. நிலவாகட்டும் பிரகாசமாக.

ஆதி
13-11-2007, 06:07 AM
காதல் ஒரு நூற்றாண்டுடன் முடிவதா ?

காலக்காலங்களையும் கடந்து வாழ்வது.. வாழப்போவது..

அதனால்தான் நூற்றாண்டையும்.. நூற்றாண்டையும்.. கடந்து வாழும்..

இருமுறை நூற்றாண்டை இட்டேன்..

-ஆதி

அமரன்
13-11-2007, 07:20 AM
விரும்பிய பாதையில்
விழுவது
பூக்களோ ?
சருகுகளோ?
பெருகும் ஞாபகங்கள் கொண்டு
நூற்றாண்டையும்
நூற்றாண்டையும் கடந்து
வாழும்....

கவியரசர் எதைபற்றியும் பாடல்(ம்) சொல்லும் தகுதி கொண்டது என் குருதி..
எங்கும்.எதிலும் முக்கி முத்தெடுத்து, தவித்து, தவிர்த்தவன் நான்...
அந்த சாகரங்களில் சாகசம் நிகழ்த்த காதல் யாகம் செய்தேன்..தோற்றேன்..
அதனால் பிறந்த பாக்கள் அழிந்ததா.. கண்ணதாசனின் மனக்கண் அசைகள்தான் அமிழ்ந்ததா..
காலத்தை வென்றது அவனும்,, அவன்பாவு(கு)ம்... காதலும் அப்படித்தானோ...???

கவிப்பேரரசு சொன்னது...
சருகாக இருப்பவர்களுக்கு காதல் தீ பட்டால் புகை கிளம்பும்.
தங்கமாக இருப்பவர்களுக்கு காதல் தீ பட்டால் புடம் போடும்..
புகை கலையலாம்...தங்கம்??????

ஆதி
13-11-2007, 08:20 AM
அமரன் அவர்களே.. கவியரசரின் பெரும் ரசிகன் நான்..
"என் அம்மா சொல்வார்கள் கண்ணதாசன் என்றால் நீ உயிரையும் கொடுத்துவிடுவாய்" என

ஆமாம் அந்த அளவிற்கு கவியரசர் மீது எனக்கு அதிக ஈடுபாடு..

கவிப்பேரரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான் இவர்களை எனக்கு ஆதிகம் பிடித்து போனதற்கு காரணம் கூட கவியரசர்தான்..

கவிக்கோப் பற்றி கவியரசர் - நான் கலில் ஜிப்ரானைப் படிங்கும் போதெல்லம் தமிழில் இது போல் எழுத ஆளில்லையே என ஏங்குவதுண்டு, இனி அந்த கவலை இல்லை.. இப்போதுதான் அப்துல் ரகுமான் வந்துவிட்டாரே.. என்பார்..


கலில் ஜிப்ரானுக்காக தனி இழைத்துவங்கி அவரின் படைப்புகளை பதித்தால் கூட அருமையாகத்தான் இருக்கும்..

கவியரசரின் வார்த்தைகள் என் கவிதைகளுக்கு பதிலாய் வந்தது கவிதைகளுக்கு கௌரவம்தான்.. நன்றி அமரன்

ஆதி
17-11-2007, 03:32 PM
அனைவரி தொடர் ஊக்கதிற்கும் நன்றி..

ஆதவா
21-11-2007, 09:39 AM
காதல் ஒரு நூற்றாண்டுடன் முடிவதா ?

காலக்காலங்களையும் கடந்து வாழ்வது.. வாழப்போவது..

அதனால்தான் நூற்றாண்டையும்.. நூற்றாண்டையும்.. கடந்து வாழும்..

இருமுறை நூற்றாண்டை இட்டேன்..
-ஆதி

பென்ஸ், இங்கே கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்...

பென்ஸ்
21-11-2007, 11:41 AM
பென்ஸ், இங்கே கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்...

ஆதவா....
குரு நேரமின்றி இருக்கும் நேரத்தில் தன் சிஷ்சியர்களை அழைத்து கவனிக்க சொல்லுவது வழக்கம்...
உங்கள் தலைமை சிஷ்யன் நானோ...!!!.. நன்றியும் பெருமையும்....

ஆதி...
கவிதைகள் வாசிக்கும் போது பல பொருள்பட எழுதுவது ஒரு திறமை... கடினமான வார்த்தைகள் இதற்கு உதவும். இவற்றை இங்கு இடும் போது வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம்...
ஆனால் கவிதையில் நாம் சொல்லவந்தது நேராக புரிந்துகொள்ளபடும்போது கிடைக்கும் சந்தோசம்... அடடே....

இந்த கவிதையில் நான் மாணவனாக கேட்கிறென்...
கவிதையை வரி வரியாக விளக்குங்கள்,
நாங்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்... (அப்பதானே தைரியமாக பதில் போட முடியும்)

ஆதி
21-11-2007, 12:31 PM
பென்ஸ் அவர்கட்காக


காதல்


பல வண்ணம் தோய்ந்து
ஒரு பூ மலரும்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும், அந்த நாளைப்பற்றி யோசித்துப் பார்த்தால், அன்றைக்கு நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு உணர்ச்சிகள் இருக்கும், காதலும் அதுப் போன்றதே.. ஆசை, இன்பம், பூரிப்பு, புன்னகை, அழுகை, துயரம், வேதனை, பாரம், தூரோகம்.. இப்படி பல உணர்சிகள் நிறைந்தது காதல், அதனால்தான் பல வண்ணம் தோய்ந்த மலராய் ஒப்பிட்டேன்


கனக்கும் கால வெளி
கடந்து
ஐந்தாவது காலத்தில்
ஒரு உலகம் விரியும்.

கணக்கும் என்பது வேற்றுமை, ஆதவது வெற்றியே பெற்றிருந்தாலுன் தன் இணைதன்னுடன் இல்லையே என்கிற வேற்றுமை.. அதனால்தான் கணக்கும் காலவெளி என்றேன்

ஐந்தாம் காலம் என்பது..

கடவுள் இரவும் பகலும் சேர்ந்தது ஒரு நாள் என்றார் விவிலியம் ஆதியாகமம்..

பகல் நீலும் - காதலித்துப்பார் வைரமுத்து - இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல..

ஒரு நாள் பகல், மதியம்,மாலை,இரவு என பிரிக்க பட்ட நான்கு காலங்கள் கொண்டது..

பகலிலும் தூக்கமின்றி இரவிலும் தூக்கமின்றி சதா தன் இணையையே நினைத்துக்கொண்டு, மற்றவர் சொல்வதை கவனிக்காமல் தனக்குதானே பேசிக்கொண்டு வாழும் தனத்தை என்ன என்று சொல்வது தான் காலத்துக்கு அடங்காத நாளை காதலால் காணலாம் அது ஐந்தாம் காலம்..

தனிமை நறுமணக்கும்
நிமிடத்தை வட்டமிடும்
அந்நிய தேவதைகள்..

தனிமை மிக பிடிக்கும் வெற்றியிலும் தோல்வியிலும்.. அந்த தருணத்தில் வட்டமிடும் ஒவ்வொன்றும் புது புது அனுபவங்களே.. அதுவே அந்நிய தேவதைகள்

நினைவின் புள்ளிகள் வளர்ந்து
நிலவாய் பிரகாசிக்கும்.
நினைவுகள் வலரும் ஆனால் தேயாது.. அதான் நிலவு

விரும்பிய பாதையில்
விழுவது
பூக்களோ ?
சருகுகளோ?
பெருகும் ஞாபகங்கள் கொண்டு
நூற்றாண்டையும்
நூற்றாண்டையும் கடந்து
வாழும்....

வெற்றியானலும் தோல்வியானலும் நடந்த சம்பவங்கள் ஒவ்வொரு ஞாபங்கலாய் அன்றே அலர்ந்த பூப்போல் புன்னகைக்கும்.. அழியாத நினைவுகளாய் காலகாலங்களையும் கடந்து கூடவரும்..

-ஆதி

படித்துவிட்டு பின்னூட்டங்கள் தருவீர் என்கிற நம்பிக்கையுடன் ஆதி

ஆதவா
21-11-2007, 01:18 PM
ஆதவா....
குரு நேரமின்றி இருக்கும் நேரத்தில் தன் சிஷ்சியர்களை அழைத்து கவனிக்க சொல்லுவது வழக்கம்...
உங்கள் தலைமை சிஷ்யன் நானோ...!!!.. நன்றியும் பெருமையும்....



நீங்கள்தான் குருவை மிஞ்சிய சிஷ்யராச்சே!! :)

பென்ஸ்
23-11-2007, 03:32 AM
நல்ல கவிதை ஆதி...
விளக்கத்திற்கு நன்றி....
ஐந்தாம் காலம் - புதிய முயற்சி..
பாராட்டுகள்....
எழுத்துபிழைகளை கவிதையில் வராமல் பார்த்து கொள்ளவும்....