PDA

View Full Version : வீடுபேறு



ஆதி
10-11-2007, 04:14 PM
வீடுபேறு

காவி போர்த்திய என்னுள்
காதலை உதிர்த்தாய்
ஆவி தேடிய முக்தி
அடைந்தது ஆயுள்!

பெருமைச் செருக்கில்
பிறப்பு ஓய்வு கொள்கிறது
உன் நினைவுகள் பூக்கும்
என் கல்லறையில்..

-ஆதி

சாம்பவி
10-11-2007, 08:56 PM
வீடுபேறு கிடைக்கட்டும்
விட்டு விடுங்கள் "ப்"-ஐ.... !

ஓவியன்
22-11-2007, 10:50 PM
பிறப்பு ஒன்று
உறங்கிக் கிடந்தாலும்
அது கொண்ட காதல்
இன்னும் இன்னும்
பல உள்ளங்களை
ஓய்வின்றி
ஓட வைக்கிறதே..!!

சுகந்தப்ரீதன்
26-11-2007, 08:40 AM
வீடுபேறு

உன் நினைவுகள் பூக்கும்
என் கல்லறையில்..

-ஆதி
மிகவும் ரசித்தேன்.. ஆதி.. வாழ்த்துக்கள்..!

ஆதி
28-11-2007, 09:33 AM
நன்றி சுகந்தப்ரீதன்

ஆதி
28-11-2007, 09:34 AM
பிறப்பு ஒன்று
உறங்கிக் கிடந்தாலும்
அது கொண்ட காதல்
இன்னும் இன்னும்
பல உள்ளங்களை
ஓய்வின்றி
ஓட வைக்கிறதே..!!


பின்னூட்ட கவிதை நன்று ஓவியன்..

நன்றி

-ஆதி