PDA

View Full Version : முளைக்கீரை



mgandhi
10-11-2007, 06:27 AM
முளைக்கீரை

நம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண், சொறி சிரங்கு, கண் கோளாறுகள் போன்றவற்றுக்கும், ஜீரண சக்தியை வளர்த்துப் பசியைத் தூண்டு-வதற்கும், சீரான உடல் வளர்ச்சிக்கும் முளைக்-கீரை சிறந்தது. தலை-முடியை நரைக்காமல் கருமை-யாகவே வைத்திருக்கும் ஆற்றலும் இந்தக் கீரைக்கு உண்டு.

முளைக்கீரையில் அதிகமான கால்ஷியம், பீட்டா கரோட்டீன் (வைட்டமின் ஏ), வைட்டமின் பி&1, பி&2, சி மற்றும் இரும்புச் சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தன்மை முளைக்-கீரைக்கு உண்டு. இது எளிதில் ஜீரணமாகி-விடுவ-தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆவியில் வேக வைத்தோ, எண்ணெய், நெய்-யில் வதக்கியோ சூட்டோடு சாதத்தில் சேர்த்துச் சாப்-பிட்டால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

இனிப்புச் சுவை உள்ள ஒரே கீரை வகை இதுதான். முளைக்கீரை சாப்பிடுவது உடலுக்குக்

குளிர்ச்சியைக் கொடுக்கும். தலைவலி இருக்கும் சமயத்தில் மட்டும் முளைக்கீரை சாப்பிடக் கூடாது.

முளைக்கீரை பச்சை நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் கிடைக்கிறது. பீட்டா கரோட்டீன் அதிகம் இருப்பதால்தான் இந்தச் சிவப்பு நிறம் என்கிறார்கள் மருத்துவர்கள். முதுமையை விரட்டி, என்றும் இளமை-யாக வைத்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இதில் அதிகம் உள்ளது. இப்போது சொல்லுங்கள்... முளைக்கீரை நமக்கு வரப்-பிரசாதம்-தானே?
நன்றி விகடன்

யவனிகா
11-11-2007, 12:06 PM
உபயோகமான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

இளசு
11-11-2007, 01:19 PM
முளைக்கீரை மருத்துவ குணங்கள் இருக்கட்டும்..
அதன் சுவை இருக்கே....ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆஆஆ!

நன்றி காந்தி!

மாதவர்
11-11-2007, 01:25 PM
மிக அருமையான தகவல்