PDA

View Full Version : பட்டிமன்ற பேச்சாளர்களின் வாழ்வில்...



xavier_raja
10-11-2007, 05:24 AM
திண்டுக்கல் லியோனி

ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு ஊருக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு வீட்டில் என்னைத் தங்க வைத்தார்கள். அந்த வீட்டில் ஒரு நாய் இருந்தது. அதோட கழுத்துல இரண்டு தாயத்து, காலில் ஒரு தாயத்து கட்டியிருந்தார்கள். எனக்கு நாய்னாலே அலர்ஜி. Сஎன்னங்க நாய்க்கு தாயத்துலாம் கட்டி விட்டுருக்கிங்கТ என்று வீட்டுக்காரரிடம் கேட்டேன். Сஆமா சார், பாவம் அது. ஒரு திருடனைப் பார்த்து பயந்துடுச்சு. அதான் மந்திரிச்சு தாயத்து கட்டியிருக்கோம்Т என்று சாதாரணமாய்ச் சொன்னார்.

Сஎன்னங்க, திருடனைப் பிடிக்கதானே நாய் வளர்ப்பாங்க. நீங்க இப்படிச் சொல்றீங்களேТ என்றேன். Сநாங்க திருடனைப் பிடிக்க நாய் வளர்க்கலை. சும்மா அழகுக்குதான் வளர்க்கிறோம். இதை யாரும் திருடிட்டுப் போய்டக்கூடாதுன்னுதான் வீட்டுக்குள்ள வச்சிருக்கோம். ஏன்னா இதோட விலை முப்பதாயிரம் ரூபாய்Т என்றார். மனுஷங்களுக்கு நாய்ங்க காவல் இருந்த காலம் போய் இப்போ மனுஷங்க நாய்க்கு காவல் இருக்காங்கТТ
இது எப்படி இருக்கு

பேராசிரியர் ஞானசம்பந்தன்

ஒருமுறை ராயவரத்தில் ஒரு நிகழ்ச்சி. நான் எப்போதும் மேடை ஏறுவதற்கு முன்பு வேஷ்டி, சட்டைக்கு மாறிவிடுவேன். அதனால் நிகழ்ச்சி நடத்துபவரிடம் உடை மாற்ற ஒரு அறை வேண்டும் என்று கேட்டேன். அவரும் அந்த மண்டபம் முழுக்க தேடிப்பார்த்து ஒரு அறையில் கொண்டுபோய்விட்டார். மண்டப ஸ்டோர் ரூம் அது. பயங்கர இருட்டு. நான் கதவை மூடிக்கொண்டு உடை மாற்றிக்கொண்டிருந்தேன். வெளியிலிருந்து ஒரு குரல், Сஇன்னைக்கு ஆமைவடையா, உளுந்துவடையா?Т என்றது. நான், СஆமைவடைТ என்றேன்.

Сஅப்புறம் இன்னொரு குரல், Сபத்து படி போடவா, பதினைந்துபடி போடவாТ என்று கேட்க, நான் ஒரு நம்பரைச் சொன்னேன். தலைமை சமையல்காரர்தான் உள்ளே இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு என்னிடம் பேசியிருக்கிறார்கள். அன்று சமையல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான் நிகழ்ச்சி முடிந்ததும் கிளம்பிவிட்டேன்ТТ என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் பேராசிரியர் ஞானசம்பந்தன்.

நன்றி குமுதம்

рооройрпЛроЬрпН
10-11-2007, 12:42 PM
நல்ல சம்பவங்கள் தொடர்ந்து தாருங்கள் நண்பரே

роЕроХрпНройро┐
10-11-2007, 10:51 PM
முதலாவது ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது.
இரண்டாவதை ரசிக்க முடியவில்லை. நகைச்சுவை ரசிக்கவைக்க்க வேண்டுமே அன்றி, பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. அன்று அந்த தொழிலாளர்கள் என்ன பாடுபட்டார்களோ என்ற எண்ணம், எரிச்சல் பட வைக்கின்றது. மற்றவரின் அவஸ்தை நகைச்சுவையாகத் தெரிவது என்று மாறுமோ?
பகிர்தலுக்கு நன்றி நண்பரே...