PDA

View Full Version : கும்ப்ளே - புதிய அணித்தலைவர்



அறிஞர்
10-11-2007, 02:07 AM
இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்விக்குறி.. அனைவரிடமும் இருந்தது...

டிராவிடிற்கு பின்.. டெண்டுல்க்கரிடம் பதவியேற்க கேட்டுக்கொண்டனர்... ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

டோனிக்கே பதவி கிடைக்கும் என்று சிலர் கருதினர். ஆனால் டோனி மிகக்குறைந்த அளவிலே.. டெஸ்ட் உள்ளதால்.. அனுபவம் போதாது என கருதினர்.

பல டெஸ்டுகளில் விளையாடி, அனுபவமுள்ள கும்ப்ளே புதிய... தலைவராக அறிவிக்க பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்...

இந்தியா தொடரை கைப்பற்றுமா...

ஓவியன்
10-11-2007, 02:40 AM
அனுபவமுள்ள ஒரு நல்ல மனிதர் அணித்தலைவராக வருவதில் மகிழ்ச்சி...!!

தனது அனுபவத்தாலும் ஆற்றலாலும் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு நெறிப்படுத்த கும்ளேக்கு என் வாழ்த்துக்களும்.....!!

ஷீ-நிசி
10-11-2007, 03:41 AM
கும்ப்ளேவிற்கு மிக தாமதமாக கிடைத்த கெளரவம்..

வாழ்த்துக்கள்!!!

ஓவியன்
10-11-2007, 04:05 AM
கும்ப்ளேவிற்கு மிக தாமதமாக கிடைத்த கெளரவம்!!!

உண்மைதான் கும்ளேதான் இனி அடுத்த அணித்தலைவரென எண்ணி இருந்த பல சந்தர்பங்களில் வேறு அணித்தலைவர் தெரிவுசெய்யப் பட்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளதே....!

ராஜா
10-11-2007, 04:37 AM
கும்ப்ளேக்கு கொடுக்கப்பட்டுள்ள பதவி... "சீக்கிரம் ஓய்வு பெற்றுக்கொள் ..!" என்று மறைமுகமாகக் கொடுக்கப்பட்டுள்ள செய்தி.

அமரன்
10-11-2007, 08:06 AM
யாரென்று நினைவில்லை...சொன்னது மட்டும்...
அணித்தலைவராக இருப்பதுக்கு அவருக்கு பந்துவீச்சு பற்றி ஓரளவு தெரிந்து இருக்கவேண்டும். மட்டையாளர்களை விட பந்துவீச்சாளர்களால் அணித்தலைவர் பதவியில் நன்றாக சோபிக்க முடியும்.
கும்ளே பொருத்தமான தேர்வாகக் கருதுகிறேன்..

நேசம்
10-11-2007, 11:04 AM
என்னை கேட்டால் கும்ப்ளெ இந்த பதவியை ஒத்து இருக்க கூடாது

சூரியன்
10-11-2007, 11:05 AM
இது அவருக்கு தாமதமாக கிடைத்த பதவி.

aren
11-11-2007, 03:35 PM
கும்ளேக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய அனுபவம் இளைஞர்களை ஊக்குவிக்க நிச்சயம் உதவும். புதிய தலைவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.

பாகிஸ்தானுடன் ஆடும் ஆட்டத்தில் இரண்டு ஸ்பின்னர்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது, ஆகையால் ஹர்பஜனுக்கு பிரச்சனையிருக்காது. ஆனால் கும்ளே ஆஸ்திரேலியா போட்டிக்கும் தலைமை தாங்கினால் ஹர்பஜனுக்கு வாய்ப்பிருக்காது என்றே நினைக்கிறேன்.

மன்மதன்
11-11-2007, 09:14 PM
கும்ப்ளேவுக்கு இதனால் ரொம்ப மகிழ்ச்சி.. இது தனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறார். ஓய்வு பெற்றாலும் 'முன்னாள் இந்திய கேப்டன்' என்று கௌரவம் கிடைக்கும்... ஆல் த பெஸ்ட் கும்ப்ளே...

xavier_raja
13-11-2007, 10:41 AM
ஆனால் ஏந்தான் இந்த கிரிக்கெட் போர்டு ஒரு நிரந்தரமான தலைவரை தேர்ந்தெடுக்க மாட்டேன் என்கிறது, கும்ளே இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார். தேவை ஒரு நல்ல நிரந்தரமான தலைவர். (கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும்தான் :)

அறிஞர்
13-11-2007, 09:05 PM
இளைஞர்களை அணித்தலைவர்களாக நியமித்தால்.. அவர்களின் வளர்ச்சி பாதிக்கும்....

குறுகிய காலத்தில் அணித்தலைவர் பதவி பெற்றவர்களில் டோனியும் ஒருவர்...

ஓவியன்
13-11-2007, 09:28 PM
இளைஞர்களை அணித்தலைவர்களாக நியமித்தால்.. அவர்களின் வளர்ச்சி பாதிக்கும்....

குறுகிய காலத்தில் அணித்தலைவர் பதவி பெற்றவர்களில் டோனியும் ஒருவர்...

உண்மைதான் ஆனால் நீண்ட கால நோக்கில் ஒரு அணித்தலைவர் அமைவதும் அவசியம்...

அவுஸ்திரேலியர்கள் அவ்வாறே செயற்படுகின்றனர்...
அவர்கள் இப்போது தங்களது எதிர்காலத் தலைவரை வளர்த்து வருகின்றனர் - அது மைக்கல் கிளார்க்..!

அதுபோன்று தென்னாபிரிக்க அணித் தேர்வாளர்கள் எடுத்த அதிரடி முடிவில் அப்போது அனுபவ முதிர்சி குறைவாக இருந்த ஸ்மித் அணித் தலைவரானார்...

இவர்களெல்லாம் நீண்ட கால நோக்கிலேயே தெரிவு செய்யப் பட்டவர்கள், அதுவும் அவர்களது அணிகளில் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம்...

நேசம்
14-11-2007, 02:19 AM
உண்மைதான் ஆனால் நீண்ட கால நோக்கில் ஒரு அணித்தலைவர் அமைவதும் அவசியம்...




உங்கள் கருத்துப்படி கும்ப்ளே சரியான தேர்வு இல்லை.அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய நேரத்திலும் கொடுக்கப் படவில்லை.நீண்ட கால நோக்கில் ஒரு அணித்தலைவர் தேர்த்து எடுக்க வேண்டுமென்றால் தோனியை தேர்த்து எடுத்து இருக்கலாம்.

உதயா
17-11-2007, 03:46 AM
இந்தியா தொடரை கைப்பற்றுமா...
கைபற்றவேண்டும். அதானே ஒவ்வொரு இந்தியனின் ஆசை.