PDA

View Full Version : மாரடைப்பை விரட்டும் விரதம்: ஆய்வு



mgandhi
09-11-2007, 05:37 PM
மாரடைப்பை விரட்டும் விரதம்: ஆய்வு

மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது.

ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாதம் ஒருமுறை விரதம் இருந்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்பதுதான் இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.

விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சால்ட் லேக் சிட்டியில் உள்ள உடா பல்கலைக்கழக பயோ மெடிக்கல் இன்பர்மேட்டிக்ஸ் துறையைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் ஹார்ன் என்பவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழு,
லேட்டர் டே இயேசு கிறிஸ்து துறவிகள் சபையைச் சேர்ந்தவர்களிடம் இந்த ஆய்வை நடத்தியது.

இந்த சபையைச் சேர்ந்தவர்கள் மாதம் ஒரு முறை விரதம் இருப்பது வழக்கம். இவர்கள் விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதயம் சம்பந்தமான நோய்களும் இவர்களுக்குக் குறைவாகவே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மாதவர்
11-11-2007, 01:26 PM
விரதம் எப்படி இருக்கவேண்டும்?விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்குமே!!

இளசு
11-11-2007, 01:57 PM
தகவலுக்கு நன்றி காந்தி அவர்களே..


நம் ''குண்டு'' அரசியல்வியாதிகள் அடிக்கடி இருக்கலாம். இருநன்மை கிடைக்கும்.

(சால்ட்லேக் சிட்டி, உட்டா எல்லாம் வட அமெரிக்கா)