PDA

View Full Version : ஜனனம்



gans5001
09-11-2007, 12:41 PM
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிதான்
கவி பாடுமா..

உன் கண்ணை ஒருமுறை
பார்க்கச் சொல்..

நிமிடத்தில் கவிஞர்கள்!

அமரன்
09-11-2007, 02:06 PM
கம்பனின் கைதறியே கவிபாடும்போது
கவிதையின் கவிபாடும் கண்களின்
கவித்தீண்டல் ஆக்காதோ கவி....!

நிமிடங்கள் நெடிய நேரம் நொடிகளே போதும்...!

அறிஞர்
10-11-2007, 01:50 AM
ஒரு முறை பார்த்தால்...
பல காவியங்களே பிறக்கும்...

அருமை... கன்ஸ்...

ஓவியன்
10-11-2007, 02:47 AM
என்னைக்
காதலனும், கவிஞனுமாக்கும்
கண்களை எங்கே
வாங்கி வந்தாய்.....???

புரியாமல்
ஓவியன்..

gans5001
10-11-2007, 04:36 AM
நன்றி.. கருத்து சொன்ன அனைவருக்கும்

இளசு
10-11-2007, 08:09 AM
விழியீர்ப்பு விசையா?
கவியீர்ப்பு விசையா?

கண்களால் கவி பாடும் ''கவி''நிலை தொடர்க கண்ஸ்!

சூரியன்
10-11-2007, 10:12 AM
நல்ல குறுங்கவிதை.

ஆதவா
12-11-2007, 09:55 AM
எனக்கென்னவோ சின்னதாக ஏதோ ஒன்று குறைந்துள்ளதாக நினைக்கிறேன்.

ஒப்பிடுதலில்..

gans5001
12-11-2007, 11:27 AM
எனக்கென்னவோ சின்னதாக ஏதோ ஒன்று குறைந்துள்ளதாக நினைக்கிறேன்.

ஒப்பிடுதலில்..

கொஞ்சம் விளக்குங்களேன்.. திருத்திக்கொள்கிறேன்

ஆதவா
12-11-2007, 05:32 PM
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிதான்
கவி பாடுமா..

உன் கண்ணை ஒருமுறை
பார்க்கச் சொல்..

நிமிடத்தில் கவிஞர்கள்!

00000000000000000000000

மன்னிக்கவும் கண்ஸ்> எனக்கு மனதில் பட்டதைச் சொன்னேன். முதல் பாராவில் கேள்வி அமைத்ததுதான் பிரச்சனை என்று நினைக்கிறேன். ஒருவேளை எனக்குச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக சின்ன பிழையிருப்பதாக மனம் கூறுகிறது. (மீண்டும் மன்னிக்கவும்)

கம்பன் வீட்டுத் தறிக்கு பாட மட்டுமே தெரியும். உன் கண்ணைப் பார்த்துவிட்டால் நிமிடத்தில் கவிதை என்ன கவிஞர்களே தோன்றுவார்கள் இதுதானே நீங்கள் சொல்லவந்தது? ஒருவேளை எனக்குப் புரிதலில் குறைபாடு இருக்கலாம்... (ஆண்டவா என்னை ஏன் கவிஞனாய் பிறக்க வைத்தாய்?)

நண்பர்கள் உதவுவார்கள் என்று நினைக்கிறேன்

ஆதவா
12-11-2007, 05:33 PM
கம்பனின் கைதறியே கவிபாடும்போது
கவிதையின் கவிபாடும் கண்களின்
கவித்தீண்டல் ஆக்காதோ கவி....!

நிமிடங்கள் நெடிய நேரம் நொடிகளே போதும்...!


ரொம்ப நேரம் படிச்சுப் பார்த்தேன்... முடியலை..... நீங்களே வந்து சொல்லுங்கோ சாமி.