PDA

View Full Version : ஏன் வலிக்கிறது?



gans5001
09-11-2007, 12:31 PM
நண்பரின் கண்களில் சோகம்..

உறவினர் ஒருவரின்
விபத்து குறித்து விளக்குகையில்
என்னிலும் ஏனிந்த வலி...

மரித்து போன உயிரின் வலி
ஏன் என் மறத்துபோன இதயத்திலும்...

கலைந்து போன கனவுகள்
ஏன் கனத்து போக செய்கிறது என்னையும்..

எனக்காய் அழுதவர்களை
நினைத்ததும்
ஏன் யாருக்காகவோ
கண்ணின் ஓரத்தில் ஈரம்..

சில கேள்விகட்கு
பல நேரங்களில்
ஏனோ விடை கிடைப்பதில்லை..

அமரன்
09-11-2007, 02:31 PM
இது மட்டுமா...!
தொலைகாட்சி திரைகளை நிரப்பும் அவலக்காட்சிகளால் விழிகள் நிரம்பும்...
வழி அமைத்து வழிந்தோடி நெஞ்சில் விழும்போது உள்ளுக்குள் பாரமாகும்..

ஏனிப்படி......
இப்படி இருக்குமோ..?

எனக்காக ஒருத்தன் வாழ்ந்தான் என்னும் நினைப்பு
யாருக்காகவோ இவன் அழுதிருப்பான் என்று நினைத்து
யாரென்று தெரியாமல் விம்முகிறதோ மறைவை நினைந்து .....!

அல்லது
அடுத்தவனில் என்னைகண்ட சோகமோ..
நட்பு என்பதே பகிர்தல் என்ற சாபமோ,
இதுபோல எத்தனை விடைதெரியாக் கேள்விகள்
நெடிய பயணத்தை வழிநடத்திக்கொண்டு எம்முள்.

பாராட்டுகள் கண்ஸ் அண்ணா..!

பூமகள்
09-11-2007, 03:05 PM
யாரோ ஒருவருக்காய்
கண் விடும் நீர்த்துளி..

மாண்டுவிடவில்லை இன்னும்
மனித நேயம் என்றுணர்த்தும்...!!

பதறித்துடித்து ஓடி உதவும்
குணம் இன்னும் மனிதரில்
சாகவில்லை என்றுணர்த்தும்..!!

விடை தெரியா பல கேள்விகள்
பிறந்தாலும் விடைகளாக
வாழ்வது மானிட அன்பு மட்டுமே..!!

அக்னி
09-11-2007, 07:02 PM
மனக்கண்களில் விழுந்து உறுத்தும்,
கனதித் துகள்கள்..,
சோக சம்பவங்கள்...

நினைவில் அறையும்
சாட்டைகள்...

வலித்தால்.., மரணிக்காத மனிதம்...
வலிக்காவிடின்.., மரத்துப்போன இதயம்...

பாராட்டுக்கள் கண்ஸ் அவர்களே...

அறிஞர்
10-11-2007, 01:53 AM
சில கேள்விகட்கு
பல நேரங்களில்
ஏனோ விடை கிடைப்பதில்லை..




விடை தெரியா பல கேள்விகள்
பிறந்தாலும் விடைகளாக
வாழ்வது மானிட அன்பு மட்டுமே..!!

மானிட வாழ்வில்..
பல வலிகள்.....

அருமையான வரிகள் கன்ஸ்... பூ...

இளசு
10-11-2007, 08:21 AM
சில சுரப்பிகளை பிறருக்காக
சிந்த விடுவதில்தாம் மனிதம் வாழ்கிறது!

புன்கணீர் பற்றிய கண்ஸ் கவிதை
மனிதம் வாழ்வதைச் சொல்கிறது!

தொடரட்டும் நண்பனே உன் சுகமான பகிர்வுகள்!

ஆதவா
12-11-2007, 10:18 AM
நீங்க ரொம்ப இளகிய மனதுக்காரர் என்று நினைக்கிறேன். சிலசமயங்களில் இப்படித்தான். நமக்கு இரு மூளை உண்டாம். மனது அதிலொன்று.

இப்படி பல முறை அழுததுண்டு. ஏன் என அறியாமல்

gans5001
12-11-2007, 11:38 AM
வழக்கமாக என்னை வம்பன் என்பார்கள் நண்பர்கள்... ஆனாலும் உங்கள் கூற்று உண்மையே.. பிறர் துன்பம் காணும் போது தானாகவே விழிகள் ஈரமாகி விடும்

"புன்கணீர்" நல்ல வார்த்தை பிரயோகம் இளசு..

நன்றி.. பாராட்டிய மற்ற அனைவருக்கும்..

ஓவியன்
12-11-2007, 07:33 PM
சில கேள்விகட்கு
பல நேரங்களில்
ஏனோ விடை கிடைப்பதில்லை..

இல்லை பல கேள்விகளுக்கு
நம்மிடமே விடை கிடப்பதுண்டு
நாம் தான் தேடிப்பார்பதில்லை...

இங்கு உங்களுக்கு உதித்த
வினாவுக்கு காரணம்
உங்கள் உள்ளே
ஊறிக் கிடக்கும்
உயர்ந்த மனிதாபிமானமல்லவா...!! :)