PDA

View Full Version : மாற்றம்...



gans5001
09-11-2007, 12:03 PM
நேற்று வரை
பார்க்கும் பெண்கள் எல்லாம்
மனைவியின் சாயலில் தெரிந்தார்கள்..

இன்றோ
மகளாய் தெரிகிறார்கள்..

மருத்துவமனையிலிருந்து நேற்று காலையில் வந்த செய்தி..
"உங்களுக்கு பெண்குழந்தை"

mgandhi
09-11-2007, 12:06 PM
பேத்தியா!

தாமரை
09-11-2007, 12:26 PM
பிறந்த பொழுது
அனைத்துப் பெண்களும்
அம்மா

விளையாட்டுப் பொழுதில்
அக்கா

மீசை அரும்பிய காலத்தில்
கண்ட பெண்களெல்லாம் காதலி

மணமான பின்னர்
மனைவியின் சாயல்
மகள் பிறந்த பின்னோ
அனைவரும் குழந்தைகள்..

இது மனமாற்றமா?
வளர்சிதை மாற்றமா?

gans5001
09-11-2007, 12:35 PM
பேத்தியா!

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு.. வீடெங்கே சத்யராஜுக்கு பக்கத்திலேயா..

மனைவியைத் தாண்டி இப்போதுதான் மகளுக்கு வந்திருக்கிறேன்.. அதற்குள் தாத்தாவாக்கி விட்டீர்களே

அமரன்
09-11-2007, 01:58 PM
ஆண்களுக்குள் ஒளிந்திருக்கும்
பெண்களுக்குரித்தான தன்மை.
இதுவும் ஒருவித தாய்மை...
இது ஆண்களின் தனிதன்மை.



விமர்சனத்தில் மட்டுமல்ல
கவிதையிலும் கலக்குகின்றீர்கள்..!

பூமகள்
09-11-2007, 03:17 PM
பார்க்கும் கண்கள் வளர்வதில்லை..!
கால வளர்ச்சியில்... மனம் வளர்கிறது..!
பார்வையின் கோணம் திரும்புகிறது...!!

நல்லதொரு கவி..! பாராட்டுகள் கண்ஸ் அண்ணா.

பாரதி
09-11-2007, 03:45 PM
வாழ்த்துக்கள் கன்ஸ்.
இளசு அண்ணா பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார். உங்களை பல மாதங்களாக அவர் தேடிக்கொண்டிருந்தார்.
செல்வ மகளை சீராட்ட, தாலாட்ட புதுக்கவிதைகளை தாருங்கள்.

(நேற்று காலையே உங்களுக்கு சேதி வந்துவிட்டதே..! பின்னர் ஏன் இன்றிலிருந்துதான் இப்படி தோன்றுகிறது − நகைச்சுவைக்காக மட்டும்..)

அக்னி
09-11-2007, 09:56 PM
பிஞ்சுக்கால்களின் உதை கூட,
மனதை திருத்தும் இன்ப வதை...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கண்ஸ் அவர்களுக்கு...

gans5001
10-11-2007, 04:44 AM
(நேற்று காலையே உங்களுக்கு சேதி வந்துவிட்டதே..! பின்னர் ஏன் இன்றிலிருந்துதான் இப்படி தோன்றுகிறது − நகைச்சுவைக்காக மட்டும்..)

அவ்வளவு சீக்கிரத்தில் பிறவிக்குணம் மாறிவிடுமா.. (ஒரு நாள் என்பதே மிக விரைந்த ஞானோதயம்)..

ஹி.. ஹி.. இதுவும் தமாஷ்தான்

ஓவியன்
10-11-2007, 05:06 AM
பெண்மை என்றாலே "தாய்மை" தான் அது ஆரம்பத்தில் அன்னையிடமும் பின்னர் சகோதரியிடமும் தொடர்ந்து மனைவியிடமும் பின்னர் மகளிடமும் கிடைக்கும்....

உணர்வுகள் ஒன்றுதான் கிடைக்கும் இடம் தான் வித்தியாசம் அதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கையே வசந்தம் இல்லையெனின் சிக்கல் தான்...!!

இளசு
10-11-2007, 08:05 AM
அன்பு கண்ஸ்...

புதிய அகநானூறு பாதியில் ..
பின்னர் பணிமாற்றத்தால் நீண்ட இடைவெளி..

இப்போது மீண்டும் வசந்தம் - வரவு!

மகளைப்பெற்ற பின் மனிதனின் பெண்மை பற்றிய பார்வை
முழுமையாகிறது... இந்த மாற்றம் பற்றிய கருத்தில் மாற்றில்லை!

தொடரட்டும் கண்ஸின் சுகமான கவிமழையும், விமர்சன உரங்களும்..

ஆதவா
12-11-2007, 10:20 AM
முதல் பாரா இன்றைய நான்

நடுப் பாரா நாளைய நான்

இறுதி, நேற்றை சூரசம்ஹாரம் செய்யும் இன்று.

வாழ்த்துகள் கன்ஸ் அவர்களே

யவனிகா
12-11-2007, 10:32 AM
இது மனமாற்றமா?
வளர்சிதை மாற்றமா?

வ*ள*ர்ச்சிதை மாற்ற*மாக*த் தான் இருக்க*க் கூடும்...நானும் அப்ப*டித்தான் நினைக்கிறேன்.ந*ல்ல* பின்னூட்ட*க்க*விதை.

gans5001
12-11-2007, 12:06 PM
அன்பு கண்ஸ்...

புதிய அகநானூறு பாதியில் ..



மறக்க மாட்டீர்கள் போல.. முயற்சிக்கிறேன், உங்களுக்காகவாவது (என்ன ஒன்று... காதலிக்கும் வயது போய்விட்டதால் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் கவி வரும். ஏற்கனவே ஆதவா ஏதோ குறைகிறது என்கிறார்!)

பென்ஸ்
12-11-2007, 12:40 PM
நேற்று வரை
பார்க்கும் பெண்கள் எல்லாம்
மனைவியின் சாயலில் தெரிந்தார்கள்..

இன்றோ
மகளாய் தெரிகிறார்கள்..

மருத்துவமனையிலிருந்து நேற்று காலையில் வந்த செய்தி..
"உங்களுக்கு பெண்குழந்தை"
கண்ஸ்...
என்ன பயமா...!!?? பாதுகாப்பு உணர்வா...!!!
ஆண் குழந்தையாக இருந்தால்..?
புரியுது...
ஏற்றுகொள்ள நாளாகும் எனக்கும் :-)

gans5001
17-11-2007, 06:42 AM
பென்ஸ் ஆண் குழந்தையாக இருந்திருந்தால் ஒரு வேளை மனம் இன்னும் அலை பாயுமோ என்னவோ

meera
17-11-2007, 07:08 AM
அழகான மாற்றம்.பெண் பிறந்தால் மட்டுமே மாறுவேன் என்கிறது ஒரு கூட்டம்.என்ன பென்ஸ்???????????:lachen001::lachen001::aetsch013::aetsch013:

சிவா.ஜி
17-11-2007, 07:17 AM
ஒரு மகள் பிறந்து அனைத்து மகள்களுக்கும் அவரை அப்பாவாக்கிவிட்டதே...பார்வை மாற்றம்...பண்பில் ஏற்றம்.பரிசாகக் கிடைத்ததே...பரிசையும் கொடுத்ததே.
நல்ல கவிதை.வாழ்த்துகள் கண்ஸ்.