PDA

View Full Version : வள்ளல் கர்ணனை பற்றிய...

xavier_raja
09-11-2007, 09:34 AM
வள்ளல் கர்ணனை பற்றிய ஒரு கதை இது.

ஒருமுறை கிருஷ்ணனிடம் தர்மர், கிருஷ்ணா நான் கூட நிறைய தானதர்மங்கள் செய்கிறேன் ஆனால் எல்லோரும் கர்ணணைத்தான் புகழ்கிறார்கள் என்று கேட்டாராம். அதற்கு கிருஷ்ணர் சரி தர்மா நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் நீ வெற்றிபெற்றால் நீதான் சிறந்த தர்மவான் போட்டிக்கு தயாரா என்றாராம், தர்மரும் ஒத்துகொள்ள போட்டி தயாராயிற்று. போட்டி இதுதான். இரண்டு பெரிய பொக்கிஷ குவியல்கள் அதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும். அப்படி செய்த்துவிட்டால் நீதான் சிறந்த தர்மவான். காலையில் போட்டி துவங்கிற்று, தர்மரும் போவோர் வருவோருக்கெல்லாம் வாரிவாரி வழங்கினாராம் ஆனால் பொக்கிஷம் குறையவேயில்லை. ஆயிற்று இன்னும் சற்று நேரத்தில் சூரியன் அஸ்தமித்துவிடுவான். அப்பொழுது தர்மர் கிருஷ்ணனிடம் கிருஷ்ணா என்னால் முடியவில்லை ஆனால் இதே பரிட்சையை கர்ணணிடமும் வையுங்கள் அவன் ஜெயித்தால் நான் ஒத்துகொள்கிறேன் என்று கூற, கிருஷ்ணர் உடனே கர்ணணை கூப்பிட்டு கர்ணா இதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும் என்று கூற உடனே கர்ணணை இரண்டு பேரை கூப்பிட்டு ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டாராம். அப்பொழுது கிருஷ்ணர் தர்மரைபார்த்து இதை நீ கூட செய்திருக்கலாம் ஆனால் உன்னுடைய மனம் இவ்வளவு பொருளையும் இரண்டு பேருக்கு கொடுப்பதா என்று ஒர் எண்ணம் அதனால்தான் உன்னால் முடியவில்லை, ஆனால் கர்ணண்னுக்கு அந்த மாதிரி கிடையாது அதனால்தான் அவன் சிறந்த தர்மவான் என்றாறாம்.

அமரன்
09-11-2007, 09:39 AM
நல்ல பகிர்வு..
இருவரிடம் செல்வம் குவிந்து இருப்பதைக்காட்டிலும் பலரிடம் போதியளவுக்குப் பிரிந்து இருந்தால் நல்லது என்று நினைக்கும் தர்மன் எண்ணம் உயர்ந்ததாகவே எனக்குப் படுகிறது.

நேசம்
09-11-2007, 09:52 AM
கர்ணன் மற்றும் தர்மன் ஆகியோர் வள்ளல் குணம் உடையவர்கள்.ஆனால் கொடுக்கும் போது கணக்கு பார்க்க கூடாது என்று எடுத்து கொண்டால் கர்ணன் தான் சிறந்த தர்மவன்

ஆதவா
09-11-2007, 10:14 AM
இது நாமாய் உண்டாக்கிக் கொண்ட கதைதான்.. வியாசர் இப்படி பாடியிருப்பாரா என்பது தெரியாது... எனினும்

இருவருக்குக் கொடுத்தலைக் காட்டிலும் பலருக்குக் கொடுத்தலே தலைசிறந்த தானம். அவ்வகையில் மேற்கண்ட காட்சியில் தர்மரே சிறந்தவர்..

கர்ணனைப் பொறுத்தவரையிலும் தானம் என்று எதைக் கேட்டு நின்றாலும் கொடுத்துவிடுவாராம்... ஒருமுறை பாதி உயிரைத் தா என்று இந்திரனும் மறுமுறை மீதி உயிரைத் தா என்றூ கிருஷ்ணனும் கேட்டு கர்ணன் தந்துவிட்டபடியால், கர்ணன் இன்னும் புகழடைகிறார் என்பது என் கருத்து...

மற்றபடி இந்தக் கதையின் கருத்து, சிறார்களுக்குப் பொருந்துகிறமாதிரி தெரியவில்லை.....

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ராஜ்

யவனிகா
09-11-2007, 10:16 AM
குட்டிக்கதை...பெரிய விசயம்..தற்காலத்திற்குப் பொருந்துமா?கர்ணனுக்கென்னப்பா ராஜா! நாம கணக்குப் பாக்காம குடுக்க ஆரம்பிச்சா கஷ்டம் தான்!

xavier_raja
09-11-2007, 11:14 AM
இது நாமாய் உண்டாக்கிக் கொண்ட கதைதான்.. வியாசர் இப்படி பாடியிருப்பாரா என்பது தெரியாது... எனினும்
இருவருக்குக் கொடுத்தலைக் காட்டிலும் பலருக்குக் கொடுத்தலே தலைசிறந்த தானம். அவ்வகையில் மேற்கண்ட காட்சியில் தர்மரே சிறந்தவர்..
கர்ணனைப் பொறுத்தவரையிலும் தானம் என்று எதைக் கேட்டு நின்றாலும் கொடுத்துவிடுவாராம்... ஒருமுறை பாதி உயிரைத் தா என்று இந்திரனும் மறுமுறை மீதி உயிரைத் தா என்றூ கிருஷ்ணனும் கேட்டு கர்ணன் தந்துவிட்டபடியால், கர்ணன் இன்னும் புகழடைகிறார் என்பது என் கருத்து...
மற்றபடி இந்தக் கதையின் கருத்து, சிறார்களுக்குப் பொருந்துகிறமாதிரி தெரியவில்லை.....
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ராஜ்

இதுபோன்ற கதைகளின் நோக்கம், நம்மிடம் தேவைக்குமேல் இருப்பின் பிறருக்கு கொடுத்து உதவவேண்டும் என்பதுதான். சிறார்களுக்கு அவர்களுடைய சிறுவயதிலேயே இதுபோன்ற கதைகளையும் நீதிக்கதைகளையும் சொல்வதின் நோக்கம் அவர்கள் மனதில் நல்ல என்னதை விதைக்கவேண்டும் என்பதுதான் என்பது என்னுடைய தாழ்வான கருத்து.

xavier_raja
09-11-2007, 11:38 AM
நல்ல பகிர்வு..
இருவரிடம் செல்வம் குவிந்து இருப்பதைக்காட்டிலும் பலரிடம் போதியளவுக்குப் பிரிந்து இருந்தால் நல்லது என்று நினைக்கும் தர்மன் எண்ணம் உயர்ந்ததாகவே எனக்குப் படுகிறது.

நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் சரி, ஆனால் காலையிலிருந்து கொடுத்து கொடுத்தும் தீராத செல்வத்தை சூரியன் அஸ்தமிக்கும்பொழுதாவது இரண்டுபேருக்கு கொடுக்கவேண்டும் என்று தர்மருக்கு தோன்றவில்லை என்பதுதான் இங்கே முக்கியம், மற்றபடி இதில் விஷயம் ஒன்றுமில்லை.

அக்னி
11-11-2007, 10:39 PM
அமரன், ஆதவன் சொல்லுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் என்றாலும்..,
இது கர்ணனை மேன்மைப்படுத்தவும், தானதருமம் செய்யும்போது தயக்கம் கூடாது என்பதை உணர்த்தவும் சொல்லப்படுகின்ற கதை என்ற வகையில்,
ஏற்றுக்கொள்ளலாம்...

ஆனால், தேவையற்ற முறையில் செய்யப்படும் தானதருமம் பலனற்றது என்பதை அனைவரும் உணரவேண்டும்...

பகிர்தலுக்கு நன்றி...

நேசம்
12-11-2007, 02:35 AM
எப்படி தானம் செய்ய வேண்டும் என்பது இதில் இல்லை.ஏன் தர்மரை விட கர்ணன் அதிகமாக புகழப்பட்டார் என்பது தான் இதில் உள்ள விசயம்.அந்த வகையில் கர்ணன் மக்களால் புகழப்படுவது சரியே.
(அமரன்,ஆதவா மற்றும் அக்னி ஆகியோரின் பின்னூட்டம் அவர்களின் நல்ல நோக்கத்தை காட்டுகிறது− வாழ்த்துக்கள்)