PDA

View Full Version : தீபாவளியில் ஒரு தீபாவளி.ஆதவா
09-11-2007, 08:01 AM
தீபாவளிக்கு என்னோட கட்டுரை இல்லாட்டி எப்படி? வந்துட்டேன்.....

இதுவரை வந்த இருபத்தி இரண்டு தீபாவளிகளிலும் இது ரொம்ப வித்தியாசமான தீவாளிங்கோ... எப்பவுமே வீட்டில் எண்ணைக் குளியல்
தடாபுடா பிரியாணி சமையல் உறவினர்களின் வருகை என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். இந்த முறை சற்று வரண்ட தீபாவளி எங்கள்
வீட்டில்... எனக்கு இல்லை.

காலை எழுந்ததும் வாக்கிங் செல்லலாம் என்று நினைத்தேன். அப்பறமாக ஒரு யோசனை. நான் எப்பவுமே லுங்கி கட்டிக் கொண்டு
செல்வதால் யாராவது செல்லும் பாதையில் ஆட்டம்பாம் வைத்து விட்டால்... சரி சரி,, காலையில எழுந்தவுடனே பெரியம்மா வீட்டுக்குப்
போய் கறி" அறிஞ்சுட்டு எங்க அக்கா ஊர்ல இருந்து வரதை வரவேற்த்துட்டு, மணி ஒன்பதாய்டுச்சு.... இன்னும் பல்லு விலக்கலை.
எல்லாரும் கோவிலுக்குப் போகலாம்னு சொன்னாங்க. சரி நானும் வரேன் (வேறெதுக்கு சைட் அடிக்கத்தான்) சொல்லி மேக்கப்
போட்டேன்... அட அப்பக் கூட பல்லு விலக்கலை. இருந்தாலும் என் பல்லு சுத்தமாத்தான் இருக்கும்.. நேரா கிளம்பி கோவிலுக்குப் போற
வழியில....

அடப்பாவமே எங்க ஏரியாவில இத்தனை பெண்களா? அதுவும் அழகழகா.... அய்யோ அய்யோ. மிஸ் பண்ணீட்டேனே.. எல்லாருமே
சுடிதார், தாவணி அப்படின்னு கலக்கிட்டாங்க.. (அன்னிக்கு மட்டும்தான் குளிச்சிருப்பாங்க. :D) கோவிலுக்குப் போய் சேர்ந்தாச்சு. அங்கே
ஒரே கூட்டம். எல்லாமே தாவணிங்களும் சேலைகளும் தான். என்னை உள்ளே வரக்கூடாதுன்னு சொல்லீட்டாங்க... அவங்க என்ன
சொல்றது? நானே உள்ளே போய் தனியா நின்னுகிட்டேன். எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்தாலும் அந்த கோவில்ல இருக்கறது எந்த
கடவுள்னே தெரியாததால எட்டி எட்டி பார்த்தேன். அட உண்மையாகவே சிலையைத்தான் பார்த்தேன். என்னவோ நான் பெண்ணுங்கள
எட்டிப் பார்க்கறதுக்குன்னு நினைச்சுடாதீங்க... (சில சமயத்தில பொய் பேசுவேன். சாக்கிரதை) எட்டிப் பார்த்தா ... அட! நம்ம விநாயகர்..

ஒரு பிரம்மச்சாரிக்கு இத்தனை பெண்கள் கூட்டமா? அட விநாயகா! உமக்கு லக்குய்யா! இத்தனை பேர் முன்னாடி நின்னும் அசராம
இருக்கிறாயே! நீ கிரேட் அப்படின்னு ஒரு சலாம் போட்டுட்டு. பக்கத்தில இருந்தவங்களை அப்படியே நோட்டம் வுட்டேன். அடாடா!!
இனிமே தினமும் எட்டு எட்டரைக்கு கோவில்ல ஆதவன் ஆஜர்... எங்க அக்கா மாருங்க வேற ஒரு பக்கம் நின்னுட்டு என்னைத் தேடிட்டு
இருக்க, நானோ ஏதாவது வலையில மாட்டுமான்னு தேடிட்டு இருந்தேன். ஆங்க்.... மாட்டிடுச்சு..

பொதுவா பொண்ணுங்ககிட்ட பேசறதுக்கு கூச்சம் இல்லை இப்பல்லாம்.. அதனால நானே ஆரம்பிச்சேன். கேளுங்க சம்பாஷனை

" ஏங்க, கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. " இது நான். அப்படி ஒண்ணும் அந்தப் பொண்ணூ முட்டிட்டு நிக்கலை

" ம்ம் " இவ்வளவுதான் அந்த பொண்ணூ....

" தினமும் கோவிலுக்கு வரேன், ஆனா உங்களைப் பார்த்ததில்லை " கடலை ஆரம்பிச்சுட்டது..

" ஓ! நானும்தான் உங்களைப் பார்த்ததேயில்லை " ஹி ஹி நம்ம முகத்தை அப்ப யாரும் போட்டா புடிக்கலை...

" இதுதான் உங்க தீவாளி ட்ரெஸ்ஸா? வெரி நைஸ்"

" தேங்க்ஸ். இந்த ஊர்லயே உங்க தீபாவளி ட்ரெஸ் தான் சூப்பர். " வழிக்கு வந்திடுச்சு..

அசடு வழிய நான்... பின்னே. தீபாவளிக்கு லுங்கிய கட்டிட்டு கோவிலுக்குப் போனா...

" அது சரி. நீங்க மட்டும் என்னவாம் தோ பாரு, அந்தப் பொண்ணு, நைட்டி போட்டுட்டு வந்து நின்னு சாமி கும்பிடுது... தலைகூட சீவலை."
ஒரு பொண்ணைப் பார்த்து சொன்னேன்.

" ம்கும், அது புது ட்ரெஸ்தான், நைட்டி இல்ல. (அதுக்கு என்னவோ பேர்... ஆனா நைட்டி இல்ல. மன்ற மகளிரணியே! என்ன
பேருங்கம்மா?) இப்பத்தான் குளிச்சுட்டு வந்து நிக்குது. அதான் தலை சீவலை. "

இப்படி சொன்னதுமே கொஞ்சம் விலகி நின்னுட்டேன். இன்னும் பல்லுகூட விலக்கலைன்னு தெரிஞ்சா பாவம் அந்தப் பொண்ணு ரொம்ப
வருத்தப்படும். கருமம் கருமம்.. முதல்ல போய் பல்லு விலக்கனும்...

விலக்கிட்டு, என்னோட தங்கச்சியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன்.

அங்க என்னடான்னா ஒரே நர்ஸுங்க கூட்டம். மலையாளிங்க வேற.. தங்கச்சிய சாக்கா வெச்சு நர்ஸுங்ககிட்ட பேசலாம்னு பார்த்தா
எல்லாருமே கூட்டம் கூட்டமா வராங்க, அப்படியோ போய்டறாங்க... ஒரு மனுசன் உட்கார்ந்துட்டு இருக்கறதைப் பார்த்துட்டு,
அடப்பாவமே அவன்கூட கடலை போடலாமேன்னு ஒரு எண்ணம் வந்ததா அவங்களுக்கு... சே! என்ன உலகமிது.... (ஏற்கனவே ஒருமுறை
நர்ஸுங்ககிட்ட கடலை போட்ட அனுபவமுண்டு..)

அப்பறமா நம்ம மன்ற நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லலாம்னு பார்த்தா, சிலபேருக்கு போன் பண்ணலாம்னு பார்த்தா, நாட் ரீச்சபள்.

ஒரே ஒருத்தர் மட்டும் போன் எடுக்கவே இல்லை. ஏதோ தலை தீபாவளி பிஸியா இருக்கும்.. :D

அப்பறம்??

ஊட்டுக்கு வந்து கவுந்தடிச்சு தூங்கிட்டேன். இதுக்கு அப்பறமும் எங்கிட்ட நீங்க கேள்வி கேட்க ஒரு கேள்வி இருக்கு? என்ன தெரியுமா?

(தெரிஞ்சவங்க சொல்லக்கூடாது. :D)

மதி
09-11-2007, 08:07 AM
யோவ் எப்ப தான்யா பல்லு விளக்குனீரு..?
தீபாவளி அதுவுமா லுங்கியோட பொண்ணுகிட்ட கடலை... ஹ்ம்ம்..
அப்புறம் சத்தியமா எனக்கு போன் வரவில்லை.. வந்திருந்தா எடுத்திருப்பேனே.. ஹிஹி..

ஆதவா
09-11-2007, 08:09 AM
யோவ் எப்ப தான்யா பல்லு விளக்குனீரு..?
தீபாவளி அதுவுமா லுங்கியோட பொண்ணுகிட்ட கடலை... ஹ்ம்ம்..
அப்புறம் சத்தியமா எனக்கு போன் வரவில்லை.. வந்திருந்தா எடுத்திருப்பேனே.. ஹிஹி..

அட.. போன் பண்ணினேங்க... போகலை. நிசமா...

அதுசரி/... உங்களுக்கு எப்படி தலைதீபாவளி ஆகும்? ஒருவேளை.....

மதி
09-11-2007, 08:45 AM
அட.. போன் பண்ணினேங்க... போகலை. நிசமா...

அதுசரி/... உங்களுக்கு எப்படி தலைதீபாவளி ஆகும்? ஒருவேளை.....

அட கால்கட்டு போட்டாச்சுங்க..:)
2 வாரமாகுமாம்..:icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

xavier_raja
09-11-2007, 08:53 AM
நீங்கள் அவருடைய இரண்டு கேள்விகளில், ஒரு கேள்விக்குதான் பதில் சொன்னிர்கள்,

முதல் கேள்வி.. நீங்கள் எப்பொழுதுதான் பல்விளக்கினீர்கள்?
எங்க சார் பதிலையே காணோம்? :)

பூமகள்
09-11-2007, 08:57 AM
ஆதவா....
நீ சொன்னதிலிருந்து இவை புரிஞ்சுது...!

1. தீபாவளி அன்று முழுதும் நீ பல்லு விலக்கலை..! :lachen001:

2. குளிக்கலை...:lachen001: அழுக்கு லுங்கியோடு கோவிலில் லூட்டி..! (இங்க இடிக்குது பா.... ஏன்னா... லுங்கி கட்டினா கோவிலுக்குள் விடமாட்டார்கள் என்று தான் அறிவேன்...:confused: உங்க ஊரில் விடுறாங்களா?? :sprachlos020: :eek:)

3. கடலை வறுத்து அது தீஞ்சிருச்சி...! ஆனா விடலை நீ....!! :rolleyes::cool:

4. தீபாவளி அன்னிக்கி... ஊரு சுத்திட்டு தூக்கம்...! கனவு...! etc..etc..!! :icon_b:

ஆக மொத்தம் தீபாவளி அன்று ஆதவா...!! அழுக்கு ஆழி பா..!! :aetsch013: :icon_rollout:

ஆதவா
09-11-2007, 08:58 AM
அட கால்கட்டு போட்டாச்சுங்க..:)
2 வாரமாகுமாம்..:icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

சொல்லவேயில்லை.....:icon_b::icon_b::icon_b:

வாழ்த்துகள்.. :D:D:D

ஆதவா
09-11-2007, 09:00 AM
நீங்கள் அவருடைய இரண்டு கேள்விகளில், ஒரு கேள்விக்குதான் பதில் சொன்னிர்கள்,

முதல் கேள்வி.. நீங்கள் எப்பொழுதுதான் பல்விளக்கினீர்கள்?
எங்க சார் பதிலையே காணோம்? :)

அட உண்மையிலேயே பல்லு விலக்கிட்டேங்க..... டைம் கணக்கெல்லாம் நோட் பண்ணலை...

மதி
09-11-2007, 09:02 AM
சொல்லவேயில்லை.....:icon_b::icon_b::icon_b:

வாழ்த்துகள்.. :D:D:D

ஹிஹி..டாங்க்ஸ்..

ஆதவா
09-11-2007, 09:03 AM
ஆதவா....
நீ சொன்னதிலிருந்து இவை புரிஞ்சுது...!

1. தீபாவளி அன்று முழுதும் நீ பல்லு விலக்கலை..! :lachen001:

2. குளிக்கலை...:lachen001: அழுக்கு லுங்கியோடு கோவிலில் லூட்டி..! (இங்க இடிக்குது பா.... ஏன்னா... லுங்கி கட்டினா கோவிலுக்குள் விடமாட்டார்கள் என்று தான் அறிவேன்...:confused: உங்க ஊரில் விடுறாங்களா?? :sprachlos020: :eek:)

3. கடலை வறுத்து அது தீஞ்சிருச்சி...! ஆனா விடலை நீ....!! :rolleyes::cool:

4. தீபாவளி அன்னிக்கி... ஊரு சுத்திட்டு தூக்கம்...! கனவு...! etc..etc..!! :icon_b:

ஆக மொத்தம் தீபாவளி அன்று ஆதவா...!! அழுக்கு ஆழி பா..!! :aetsch013: :icon_rollout:ஹி ஹி.... நாந்தான் சொன்னேனே அந்தளவுக்கு பிஸி...

பல்லு விலக்காம சாப்பிடமாட்டேன்.... சோ.... இது ஓகே.

எங்க ஊர் கோவில்ல பூசாரிங்களே இருக்கமாட்டாங்க.. இதுல லுங்கி கட்டிட்டு வரக்கூடாதுன்னு கட்டுப்பாடு வேறையா.... :icon_p:

ஆதவா
09-11-2007, 09:05 AM
ஹிஹி..டாங்க்ஸ்..
வேணா போட்டோ அனுப்பவா...
நல்ல பிங்க் கலர்.. இப்பவே ரொம்ப இறுக்கம்..:frown:

அனுப்புங்கோ அனுப்புங்கோ

அமரன்
09-11-2007, 09:13 AM
கடலை வறுத்து அது தீஞ்சிருச்சி...! ஆனா விடலை நீ....!!
பூமகள்...!
விடலை ஆதவா..விடலை கடலை என்கின்றீர்களா...

அமரன்
09-11-2007, 09:16 AM
எந்த கடவுள்னே தெரியாததால எட்டி எட்டி பார்த்தேன். அட உண்மையாகவே சிலையைத்தான் பார்த்தேன்.
ஆதவா...!
ஒத்துக்கொள்றேன் நீங்க சிலையைத்தான் எட்டிப்பார்த்து இருக்கீங்க...
'சிலை'களுக்கு மத்தியில் ஒரு சிலையை பார்க்க்கும் ஆர்வம் பொங்கியிருக்கு...

மதி
09-11-2007, 09:19 AM
அநேகமா அது எழுத்துப் பிழையா கூட இருக்கலாம்...
தாவணி சிலைகளுக்கு மத்தியில் சீலையையும் பாத்திருக்கலாம்..

அமரன்
09-11-2007, 09:21 AM
அநேகமா அது எழுத்துப் பிழையா கூட இருக்கலாம்...
தாவணி சிலைகளுக்கு மத்தியில் சீலையையும் பாத்திருக்கலாம்..
விடலைப்பையன் எழுதுப்பிழை விட்டு இருக்கலாம்....
இதத்தான் எதிர்பார்த்தேன்..
எந்தக் கன்னம் வீங்கியது..???

மதி
09-11-2007, 09:23 AM
விடலைப்பையன் எழுதுப்பிழை விட்டு இருக்கலாம்....
இதத்தான் எதிர்பார்த்தேன்..
எந்தக் கன்னம் வீங்கியது..???
அவர்கிட்ட தான் கேக்கணும்..
:D:D:D:D

அமரன்
09-11-2007, 09:25 AM
போய் கறி" அறிஞ்சுட்டு எங்க அக்கா ஊர்ல இருந்து வரதை வரவேற்த்துட்டு, மணி ஒன்பதாய்டுச்சு....
என்ன கறி அறி(ரி)ந்தீங்க...?
எப்படிக் கோயிலுக்கு போகலாம்...?
குளிக்காது போன எனக்கு இது மேட்டரே இல்லை என்று சொல்லக்கூடாது..?

யவனிகா
09-11-2007, 09:35 AM
இந்த் தீபாவளிக்கு நீங்க உருப்படியா பண்ணின ஒரே மேட்டர் கடலை மட்டும் தானா?சரி விடுங்க! அடுத்த தீவாளிக்கு பல்லு வெளக்கிக்கலாம்.

சூரியன்
09-11-2007, 09:44 AM
ஆதவா அண்ணா என்ன இப்படி பண்ணீட்டீங்க.

அதற்கு அப்பறமாவது பல்லு விளக்கினீங்களா?

நம்ம ஊருல லுங்கியோட எந்த கோயிலையும் விடமாட்டாங்களே?

மலர்
09-11-2007, 09:51 AM
இதுவரை வந்த இருபத்தி இரண்டு தீபாவளிகளிலும் இது ரொம்ப வித்தியாசமான தீவாளிங்கோ...

அப்படின்னா ஆதவனுக்கு வயசு 23ஆ....
பொய் .... பொய்
உங்களுக்கு 45ன்னு சொன்னத மறந்திட்டு இப்படி ஆட்டம் போட்டிருக்கியே

அவங்க என்ன
சொல்றது? நானே உள்ளே போய் தனியா நின்னுகிட்டேன்.

நீயே போய் நின்னியா....
நீ பல் விளக்கலன்னு அவங்க நிப்பாட்டிட்டாங்களா...

எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்தாலும் அந்த கோவில்ல இருக்கறது எந்த கடவுள்னே தெரியாததால எட்டி எட்டி பார்த்தேன். அட உண்மையாகவே சிலையைத்தான் பார்த்தேன்.

நம்பிட்டோம்... மக்களே எல்லாரும் அப்படியே நம்பியிருங்க....

நானோ ஏதாவது வலையில மாட்டுமான்னு தேடிட்டு இருந்தேன்.

அவன்கூட கடலை போடலாமேன்னு ஒரு எண்ணம் வந்ததா அவங்களுக்கு... சே! என்ன உலகமிது.... (ஏற்கனவே ஒருமுறை
நர்ஸுங்ககிட்ட கடலை போட்ட அனுபவமுண்டு..)

அடப்பாவி நீ வறுத்த கடலையில தீஞ்சி.... திருப்பூரே நாறி போய் கிடக்கு...

சூரியன்
09-11-2007, 09:57 AM
அடப்பாவி நீ வறுத்த கடலையில தீஞ்சி.... திருப்பூரே நாறி போய் கிடக்கு...

அதுக்கு காரணம் இவர்தானா?
இப்பதான் தெரிஞ்சுது திருப்பூர் ......... காரணம்.

யவனிகா
09-11-2007, 11:30 AM
அட கால்கட்டு போட்டாச்சுங்க..:)
2 வாரமாகுமாம்..:icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

கல்யாணத்துக்கு கூப்பிடல, சாப்பாடு போடல,முகூர்த்தப் பை குடுக்கலே...இருந்தாலும் வாழ்த்துக்கள் மதி அவர்களே! கால்கட்டோடு, கடைசி வரி கட்டுண்டு பொறுத்திருங்கள்...
தருமத்தின் வாழ்வதனை கட்டிவைத்த தேவதை யாரோ?வாழ்க நீவிர்!

தாமரை
09-11-2007, 11:34 AM

அட நீங்க வேற.. மதி அப்பாவிங்க.

மதி
09-11-2007, 11:36 AM

அட..தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே..
உண்மையிலேயே கால்கட்டு தான் போட்டு இருக்கேன். பிரிக்க இரண்டு வாரமாகும். சின்ன ஃப்ராக்சர்..
சின்ன பில்டப் குடுத்தா..இப்படி தப்பு தப்பா நினைச்சிக்கிறாங்க.. :)

ஆதவா
09-11-2007, 11:36 AM
ஆதவா...!
ஒத்துக்கொள்றேன் நீங்க சிலையைத்தான் எட்டிப்பார்த்து இருக்கீங்க...
'சிலை'களுக்கு மத்தியில் ஒரு சிலையை பார்க்க்கும் ஆர்வம் பொங்கியிருக்கு...

இவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு கட்டுரையைப் போட்டா,:D நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க....

மதி
09-11-2007, 11:37 AM
அட நீங்க வேற.. மதி அப்பாவிங்க.

என்ன இருந்தாலும் என்னைப் பத்தி தெரிஞ்சவரில்லையா..?
ஹிஹி...டாங்க்ஸ்..
ஆமா...அப்பாவியெல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களா?

ஆதவா
09-11-2007, 11:37 AM
அநேகமா அது எழுத்துப் பிழையா கூட இருக்கலாம்...
தாவணி சிலைகளுக்கு மத்தியில் சீலையையும் பாத்திருக்கலாம்..

:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::sauer028: உண்மமயைச் சொன்னா ஒத்துக்கமாட்டேங்கிறீங்களே?

ஆதவா
09-11-2007, 11:39 AM
என்ன கறி அறி(ரி)ந்தீங்க...?
எப்படிக் கோயிலுக்கு போகலாம்...?
குளிக்காது போன எனக்கு இது மேட்டரே இல்லை என்று சொல்லக்கூடாது..?

ஹி ஹி.... எத்தனையோ நாள் கடவுளே குளீக்காமத்தாங்க இருக்கு....:D

ஆதவா
09-11-2007, 11:40 AM
இந்த் தீபாவளிக்கு நீங்க உருப்படியா பண்ணின ஒரே மேட்டர் கடலை மட்டும் தானா?சரி விடுங்க! அடுத்த தீவாளிக்கு பல்லு வெளக்கிக்கலாம்.

நானாச்சு தீபாவளிக்கு அந்த மேட்டரையாவது உறுப்படியா பண்ணினேங்க... ஓவியனை மாதிரி ஆளுங்க அதைவிட மோசம்...

தாமரை
09-11-2007, 11:40 AM
என்ன இருந்தாலும் என்னைப் பத்தி தெரிஞ்சவரில்லையா..?
ஹிஹி...டாங்க்ஸ்..
ஆமா...அப்பாவியெல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களா?

அப்படியில்லை.. கல்யாணம் ஆகியிருந்தா கூட இல்லைன்னுதான் சொல்வாங்களாம்.;););)

அமரன்
09-11-2007, 11:41 AM
என்ன இருந்தாலும் என்னைப் பத்தி தெரிஞ்சவரில்லையா..?
ஹிஹி...டாங்க்ஸ்..
ஆமா...அப்பாவியெல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களா?

அப்படியில்லை.. கல்யாணம் ஆகியிருந்தா கூட இல்லைன்னுதான் சொல்வாங்களாம்.;););)

புரிஞ்சுபோச்சுங்கோவ்...

மதி
09-11-2007, 11:42 AM
அப்படியில்லை.. கல்யாணம் ஆகியிருந்தா கூட இல்லைன்னுதான் சொல்வாங்களாம்.;););)

ஓஹோ...:icon_ush::confused::confused:

ஐயோ...குழப்பத்தை உண்டு பண்ணிடாதீங்க...:icon_ush::icon_ush:

ஆதவா
09-11-2007, 11:45 AM
அப்படின்னா ஆதவனுக்கு வயசு 23ஆ....
பொய் .... பொய்
உங்களுக்கு 45ன்னு சொன்னத மறந்திட்டு இப்படி ஆட்டம் போட்டிருக்கியே

இன்னும் இருபது வருஷம் கழிச்சு சொல்றேன் எனக்கு 45னு...

நீயே போய் நின்னியா....
நீ பல் விளக்கலன்னு அவங்க நிப்பாட்டிட்டாங்களா...

ஏன்!!! நானேதான்....அடப்பாவி நீ வறுத்த கடலையில தீஞ்சி.... திருப்பூரே நாறி போய் கிடக்கு...

நீ இருக்கிற சென்னையை விடவா?:D

மலர்
09-11-2007, 11:52 AM
நானாச்சு தீபாவளிக்கு அந்த மேட்டரையாவது உறுப்படியா பண்ணினேங்க... ஓவியனை மாதிரி ஆளுங்க அதைவிட மோசம்...

அடடா... பல விஷயங்கள் வெளிய வரும் போலிருக்கே...

அக்னி
09-11-2007, 10:33 PM
கடைசியாக செய்ததை முதலாவதாகச் செய்திருந்தால்,
இந்த தீபாவளி சிறப்பாக இருந்திருக்கும்...
ஆதவன் பார்வை பட்டவர்களுக்கு...

lolluvathiyar
10-11-2007, 06:26 AM
ம் நானும் தான் கோவிலுக்கு போனேன், ஆனா ஆதவா மாதிரி அல்ல, பல்லு விளக்கி புது டிரெஸ் எல்லாம் போட்டுட்டு தான் போனேன். நிரைய புது சேலை தாவனிக வந்தது, நானும் ஆதவா மாதிரி சிலையை தான் எட்டி பாத்தேன், கோவில்ல் நல்லா தான் பொழுது போச்சு ஆனா வீட்டுக்கு வந்ததும், எட்டி பாத்ததுக்கு சம்சாரம் டின்னு கட்டிட்டா.

மலர்
10-11-2007, 07:03 AM
நானும் ஆதவா மாதிரி சிலையை தான் எட்டி பாத்தேன், கோவில்ல் நல்லா தான் பொழுது போச்சு ஆனா வீட்டுக்கு வந்ததும், எட்டி பாத்ததுக்கு சம்சாரம் டின்னு கட்டிட்டா.

அண்ணி நல்லா டின்னு கட்டினாங்களா ஹா..ஹா....:D:D
என் சார்பாக என்னுடைய வாழ்த்தை அவங்களுக்கு சொல்லியிருங்க...:icon_rollout::icon_rollout:

அமரன்
10-11-2007, 07:35 AM
ம் நானும் தான் கோவிலுக்கு போனேன், ஆனா ஆதவா மாதிரி அல்ல, பல்லு விளக்கி புது டிரெஸ் எல்லாம் போட்டுட்டு தான் போனேன். நிரைய புது சேலை தாவனிக வந்தது, நானும் ஆதவா மாதிரி சிலையை தான் எட்டி பாத்தேன், கோவில்ல் நல்லா தான் பொழுது போச்சு ஆனா வீட்டுக்கு வந்ததும், எட்டி பாத்ததுக்கு சம்சாரம் டின்னு கட்டிட்டா.
விடுங்க மன்னரே...!
குளிர்காலத்துக்கு அடுத்தது வியர்வைக் காலம்தானே..

மலர்
10-11-2007, 07:49 AM
விடுங்க மன்னரே...!
குளிர்காலத்துக்கு அடுத்தது வியர்வைக் காலம்தானே..

அமரண்ணா...
அநுபவம் பேசுதோ....

sarcharan
10-11-2007, 08:05 AM
என்ன இருந்தாலும் என்னைப் பத்தி தெரிஞ்சவரில்லையா..?
ஹிஹி...டாங்க்ஸ்..
ஆமா...அப்பாவியெல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களா?

என்ன மதி உங்களுக்கும் சங்க ஊதீட்டாங்களா??

மனோஜ்
10-11-2007, 08:16 AM
ஆதவா இப்படி தீபாவளி தீ ப(ல்)ா வளியாயிடுச்சா

என்ன மதி கட்டுக்கு காரணம் ஏனே ?

சாம்பவி
10-11-2007, 09:10 AM
முதல்ல போய் பல்லு விலக்கனும்...

விலக்கிட்டு, என்னோட தங்கச்சியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன்.விளக்கி இருந்தால்
விளங்கி இருக்கலாம்...!
விலக்கியதால் எவருக்கும்
விளங்கவில்லையோ.... !

அதெல்லாம் சரி.,
விலக்கியது பல்லானால்....
இப்போதிருப்பதென்ன
பல் செட்டோ.... ! ;)

ஷீ-நிசி
10-11-2007, 02:16 PM
ஆதவா... எனக்கு புடிச்ச மேட்டரே!

நீ கடலை போட்ட மேட்டர்தான்.. லுங்கிய கட்டிட்டு சைட் அடிக்கவே நாங்கலாம் கூச்சபடுவோம்.. நீ என்னடான்னா இந்த வழி வழிஞ்சிருக்கே... எனக்கு என்ன தோனுதுன்னா.... நீ அந்த பொன்னுகிட்ட கடலை போட்டதவிட எதோ நைட்டி மாதிரி போட்டிடுருந்துச்சுன்னு சொன்னியே அதுகிட்ட கடலை போட்டிருக்கலாம்...

லுங்கி = நைட்டி.... என்ன கணக்கு கச்சிதமா இல்ல...

ஓவியன்
11-11-2007, 08:09 AM
ஆமா இவரு காலையில் எழுந்து வாங்கிங் போக நினைச்சிட்டு
லுங்கியோட கோயிலுக்கு போனாராம்....!!
அங்கே
பல்லு கூட விளக்காம கடலை போட்டாராம்...!!
அதைக் கேட்டு ஒரு பொண்ணு வழிஞ்சிச்சாம்...!! :)

எனக்கு என்ன தலையெழுத்தோ இப்படியான
பதிவுகளை எல்லாம் நம்ப வேண்டி இருக்கே...!! :frown:

ஓவியன்
11-11-2007, 08:13 AM
அட கால்கட்டு போட்டாச்சுங்க..:)
2 வாரமாகுமாம்..:icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

அட, அட..!!
அடிக்கடி லீவு எடுத்ததெல்லாம் இதற்குத் தானா........???

மாட்டிக்கிட்டீங்களா.......?? :D
வாழ்த்துக்கள் மதி..!!:)

ஓவியன்
11-11-2007, 08:16 AM
கடைசியாக செய்ததை முதலாவதாகச் செய்திருந்தால்,
இந்த தீபாவளி சிறப்பாக இருந்திருக்கும்...
ஆதவன் பார்வை பட்டவர்களுக்கு...

அட, அட !!

என்னெ ஒரு தீர்க்கதரிசனமான விமர்சனம்...!!

சிவா.ஜி
11-11-2007, 08:52 AM
ஆதவா...இதுதானா அந்த போன்ல சொன்ன மேட்டரு....நல்லாத்தான் கடலை போட்டுருக்கீங்க....ஆனா...எங்கேயோ தீஞ்ச வாசனை அடிக்குதே...\"ஓவியன்\' என்னவோ சொல்றாரே....கொஞ்சம் பொறுத்துப் பாக்கலாம்....இப்பெல்லாம்..ஓவியன் நல்ல பிள்ளையாயிட்டாராம்.(கூடிய சீக்கிரம் இவரோட ரிமோட்-ஐ ஒருவர் கையில் கொடுக்கப்போகிறார்களாம்.)

மதி
11-11-2007, 09:04 AM
அட, அட..!!
அடிக்கடி லீவு எடுத்ததெல்லாம் இதற்குத் தானா........???

மாட்டிக்கிட்டீங்களா.......?? :D
வாழ்த்துக்கள் மதி..!!:)

அட இதுங்கர மேட்டரே ஒன்னும் இல்லீங்க...
லீவு போட்டது வேற மேட்டருங்கோ...
உண்மைய சொன்னா நம்ப யாரும் இல்லே...ஹ்ம்ம்..:eek::eek:

ஓவியன்
11-11-2007, 09:05 AM
கூடிய சீக்கிரம் இவரோட ரிமோட்-ஐ ஒருவர் கையில் கொடுக்கப்போகிறார்களாம்.

ஹீ,ஹீ!!

நாம எல்லாம் ரீமோட் கொன்ரோலிலே இயக்கபட முடியாதவர்கள்...
எல்லாமே மனுவல் ஒபரேட்டிங் சிஸ்டம் தான்......!! :)

ஓவியன்
11-11-2007, 09:07 AM
உண்மைய சொன்னா நம்ப யாரும் இல்லே...ஹ்ம்ம்..:eek::eek:

அதுக்காக இப்படி பொய் சொல்லலாமா...??? :)

மதி
11-11-2007, 09:10 AM
அதுக்காக இப்படி பொய் சொல்லலாமா...??? :)
சரி விடுங்க..
மெய் பொய்யாவது சகஜம் தான்..

ஓவியன்
11-11-2007, 09:23 AM
மெய் பொய்யாவது சகஜம் தான்..

ஆமாம் "மெய்"யே ஒரு பொய்தானே
இதனைத் தான் பெரியவர்கள்
காயமே வெறும் பொய்யடா என்று கூறியுள்ளார்கள்...!! :)

அக்னி
11-11-2007, 03:15 PM
(கூடிய சீக்கிரம் இவரோட ரிமோட்-ஐ ஒருவர் கையில் கொடுக்கப்போகிறார்களாம்.)
அட, கால்கட்டுக்கு நவீன வரைவிலக்கணம்...

மனுவல் ஒபரேட்டிங் சிஸ்டம் தான்......!! :)
ஓவியர் மாறிச் சொல்லிவிட்டார்... அது...
மனைவி ஒபரேட்டிங்க் சிஸ்டம்.

மன்மதன்
11-11-2007, 09:42 PM
ஆதவா... எனக்கு புடிச்ச மேட்டரே!

நீ கடலை போட்ட மேட்டர்தான்.. லுங்கிய கட்டிட்டு சைட் அடிக்கவே நாங்கலாம் கூச்சபடுவோம்.. நீ என்னடான்னா இந்த வழி வழிஞ்சிருக்கே... எனக்கு என்ன தோனுதுன்னா.... நீ அந்த பொன்னுகிட்ட கடலை போட்டதவிட எதோ நைட்டி மாதிரி போட்டிடுருந்துச்சுன்னு சொன்னியே அதுகிட்ட கடலை போட்டிருக்கலாம்...

லுங்கி = நைட்டி.... என்ன கணக்கு கச்சிதமா இல்ல...

எனக்கு புடிச்ச மேட்டரும் இதே.. எப்படி ஆதவா இப்படி..?? சேப்பாக்கம் கிரவுண்டல உங்கள சுத்தி வந்த பொண்ணுங்களையே கண்டுக்காம இருந்த நீங்க... எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே..??:D